Thursday, November 5, 2009

நியாயங்கள் எங்கு கிடைக்கும்!! பகுதி - 2

முதல் பகுதி படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கவும்.....

திரும்பிப் பாராமல் சென்று விட்ட முதலாளி குடும்பம் போலீஸ்காரர்களிடம் என்ன கூறிச் சென்றிருப்பார்கள் என்று சங்கருக்கு புரியாத போதும் தங்கள் குடும்பத்திற்கு சாதகமாக பேசி இருப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது.

உள்ளே சென்று தங்கள் குடும்பத்தை விடுவிக்குமாறு அப்பாவியாய் கேட்டு இருக்கிறார் சங்கர். என்ன உங்க ஆளுங்களை விடுறதா? என்னா கேட்கறே நீ? உங்கள் முதலாளி வீட்டுலே இருந்து வந்தவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? உங்க மேலேதான் அவர்களுக்கு முழுச் சந்தேகமாம்.எப்படியாவது நகைகளை வாங்கித்தருமாறு மனு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அடுத்த குற்றம் நீங்க அவங்க வீட்டுலே போய் மிரட்டி விட்டு வந்திருக்கீங்க! அதுக்கும் உங்க மேலே நடவடிக்கை எடுக்கப் போறோம்.

இப்போ நீங்க போலாம். உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம். அதுவரை நீங்க எங்களை தொந்தரவு பண்ணக் கூடாது. அதற்கு "சங்கர் தனது மனைவி மற்றும் மகளையாவது விட்டுங்க. பெண்கள் இரவில் காவல் நிலையத்தில் தங்குவது எப்படிங்க நியாயமாகும். இப்போதே மணி ஆறு ஆகப்போகுது. அதனாலே இப்போ விட்டுடுங்க காலையிலே அழைத்து வந்து விடுகிறேன் என்று மன்றாடி இருக்கிறார்" அதற்கும் ஒன்றும் சரியான பதில் இல்லை.

இந்த சூழ்நிலையில்தான் சங்கரின் நிலைமை எங்களின் காதில் விழுந்தது. உடனே நானும் எனது சகோதரி மற்றும் நண்பர் மூவரும் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தோம். எங்களின் குடும்ப சட்ட வல்லுனரை சந்தித்து விவரத்தை கூறினோம். பெண்கள் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டவுடனே தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தார். நானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தேன். ஆனால் எனது சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் வக்கீலை பார்த்தவுடன், காவல் நிலைய மேலதிகாரி நீங்க ஏன் இதில் தலை இடுகிறீர்கள் நாங்களே கவனித்துக் கொள்கிறோம். பாருங்க, அந்த வக்கீல் சீனியர் வக்கீல் மிகவும் பிரபலமானவர், அவர் பெயர் எல்லாருக்கும் தெரியும். எல்லா விததிதிலும் சலுகைகள் அதிகம். அதுவும் அவைகளை நேர்மையான முறையில் பெற்றிருப்பவர். அந்த விவரமும் காவல் துறை அதிகாரிக்கு தெரிந்த போதிலும், எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

வக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். வக்கீலும் பெண்களை முதலில் விடுவிக்க பாடு பட்டிருக்கிறார். "நீங்க செல்லுங்கள், நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அனுப்பி விடுகிறோம்" என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். சீனியர் வக்கீல் தனது ஜூனியர் வக்கீலை காவல் நிலையத்திலயே இருக்குமாறு கூறிவிட்டு எங்களுக்கும் விவரம் கூறினார். இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அனைவருக்கும் பெண்களுக்கும் சேர்த்துத்தான் அடி பின்னிருக்காங்க. வேறு எதுவும் முன்னேற்றம் இல்லை.

ஜூனியர் வக்கீலும், சங்கரும் அங்கேயே கொட்ட கொட்ட இரவு பூரா தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

காவல் துறையினர் மாற்றி மாற்றி செய்த விசாரணையில் அந்த பெண் மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டாள். இரவு முழுவதும் இருப்பு கொள்ளாமல் எப்போது விடியும் என்று காத்திருந்தோம். அடுத்த நாள் எங்களின் வக்கீலை தலயிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இந்த நிலையில் வக்கீலும் அவரின் கேசை கவனிக்க நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். சங்கர் காவல் நிலையத்திலயே பலியாக கிடந்தார். எங்களுக்கும் எந்த வேலையும் ஓட வில்லை யாரோ எவரோ இருந்தாலும் தவறு செய்யாத மனிதர்கள் என்று தெரிந்து விட்டது. எதற்கு இந்த நாடகம் என்றுதான் புரியவில்லை.

அதற்குள் எல்லா உறவினர்களும் வந்துவிட அவர்களை சாமாளிப்பது மிகவும் கஷ்டமாகிப் போனது சங்கருக்கு. பணம் தண்ணீராக கரைந்தது. கோவிலுக்குச் செல்ல வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணம் முழுவதும் காலியானது. காவல் நிலையத்தில் இருப்பவர்களுக்கு காபி, டீ, டிபன் மற்றும் சாப்பாடு வரை வெளியே இருந்து சங்கர் வாங்கி கொடுப்பார். அப்போது அங்கே இருக்கும் அனைவருக்கும் சங்கர் வாங்கி தரவேண்டுமாம். அதனால் பணம் கண்ணா பின்னாவென்று செலவானது. செலவானாலும் உள்ளே இருப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வக்கீலையும் தலையிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். என்ன நடக்கும் என்பதே யாருக்கும் விளங்க வில்லை. FIR போடப்படவில்லை. பயங்கரமான சூழ்நிலை என்று மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. நாங்கள் மூன்று பேரும் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.

ஆனால் என் சகோதரி காவல் நிலையத்திற்கு செல்லாமல் அதன் அடுத்த தெருவில் காரை நிறுத்திவிட்டு, சங்கருக்கு போன் போட்டு உடனே வருமாறு அழைத்தார்கள். வந்தவரை பார்த்ததும் எங்களுக்கே அழுகை வந்து விட்டது. முதல் முறை பார்க்கும் போது கூட கொஞ்சம் தைரியமா நல்லா இருந்தாரு. இரெண்டே நாட்களில் உருக்குலைந்து மிகவும் பாவாமா காட்சி அளித்தார்.

சரி என்னாதான் சொல்றாங்க என்று வினவினால் பேரம் பேசி இருக்கிறார்கள். ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் என்று அழ மாட்டாத குறையாக சொன்னார். அவ்வளவு பணத்திற்கு நான் எங்கேம்மா போவேன்.

இருந்தது பூரா செலவு பண்ணிட்டேனே. நீங்க யாரோ எவரோ என்னோட கஷ்டத்துலே இவ்வளவு நல்லது நடக்கனம்னு முயற்சி பண்றீங்க. ஆனா இங்கே இருப்பவங்களுக்கு மனதே இல்லையே. இதை சங்கர் கூறும்போது மனது வலித்தது. யாரா இருந்தால் என்னாங்க கஷ்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே! நீங்க மனதை தளர விடாமல் தைரியமா இருங்க. எதுவானாலும் பார்த்துக்கலாம் என்று நாங்கள் சமாதானப் படுத்தினோம். குலுங்கி அழுத அந்த தந்தையை பார்க்க மனதை என்னவோ செய்தது.

சரி எதுவானாலும் முதலில் எல்லாரையும் வெளிய எடுக்க முயற்சி செய்வோம் பிறகு என்னா செய்யலாம்னு யோசிக்கலாம் என்று நான் கூர்நேன். ரத்தம் கொத்திக்குது. நியாயம் கிடைக்க ஏதாவது செய்யனும்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது.

ஏதோ எங்களாலான பண உதவியாவது செய்யலாம் என்று அழைத்துப் போய் ATMஇல் எடுத்துக் கொடுத்தோம். அதற்குள் மேலதிகாரி சங்கரை அழைத்திருக்கிறார். சங்கர் மேலதிகாரியை சந்தித்து பேசி இருக்கிறார். எந்த தவறும் செய்யாத என்னோட குடும்பத்தை இப்படி அலைக்களிக்கரீங்களே! இது நியாயமா? நான் வேறே யாரு கிட்டேயாவது முறை இடனுமா? என்று கேட்டு இருக்கிறார். பார்த்தார் அந்த அதிகாரி சங்கரையும் தூக்கி உள்ளே போட்டு விட்டார்கள். இந்த விவரம் எங்களுக்கு வந்தவுடன் மறுபடியும் வக்கீல் வீட்டுக்கு படை எடுத்தோம்.அவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. பேரம் விவரம் சொன்னவுடந்தான் அந்த கோணத்தில் யோசிச்சு மறுபடியும் அவர்களை சந்திக்க சென்றார்.

வக்கீல் வருவதை விரும்பாத காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், மறுபடியும் அவரின் தலையீட்டை தடை செய்திருக்கிறார்கள். சங்கரும் உள்ளே சென்றதினால் இந்த முறை பல விதத்திலும் முயற்சி செய்து அதிகாரிகளை தவறே செய்யாமல் அடைபட்டிருக்கும் அந்த ஏழைகளை விடுவிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.

பேசியபடி எல்லாமே கொடுக்கப் பட்டது. மூன்றாம் நாள் நள்ளிரவு சங்கரின் மனைவி மற்றும் மகளை விடுவித்து வக்கீல் அழைத்து வந்து விட்டார். மீதி உள்ளவர்களை அடுத்த நாள் அனுப்புவதாகக் கூறி விட்டனர். இவர்கள் வந்த செய்தி கேட்ட பிறகு தான் எங்களுக்கு பசிக்கவே ஆரம்பித்தது.

அடுத்த நாள் அனைவரையும் விட்டு விட்டார்கள். திருடியது யாரு என்று இதுவரை இந்த பக்கம் யாருக்கும் தெரியாது. கேட்டும் கூறவில்லை.

ஆனால் தவறாக அல்லது வேண்டுமென்றே அழைத்துச் சென்ற அந்த ஏழைகளின் உடல் பலம், மனோபலம், தேவையற்ற கடன், உறவினர்கள் முன்னே ஏற்பட்ட அவமானங்கள், அக்கம் பக்கம் ஏற்பட்ட தீரா கரைகள் இவற்றிற்கெல்லாம் யார் பதில் கூறப் போகிறார்கள்? சம்பத்தப் பட்டவர்களா! இல்லே முதலாளியம்மாவா?

இதில் சங்கரின் மாப்பிள்ளையின் அண்ணனையும் அழைத்துச் சென்றார்கள் அல்லவா? தினம் தினம் நடத்திய நூதன விசாரிப்பில் புத்தி பேதலித்து விட்டது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் பதில் கூறப் போகிறார்கள்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பதினெட்டே வயது நிறைந்த அந்த பெண்ணின் மனநிலையை யோசித்தார்களா? சித்தப் பிரமை பிடித்து அப்படியே அமர்ந்து இருந்தாளே! அந்த காட்சியை பார்க்கும் அந்த ஏழை தந்தை கதறிய கதறல்களுக்கு யார் பதில் கூறப் போகிறார்கள்?

எல்லாவற்றிகும் முத்தாய்ப்பு வைப்பது போல் அந்த குடும்பத் தலைவர் ஒரு முடிவு எடுத்த்தார், அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம்என்று முடிவெடுத்தும் விட்டார்.

அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் மனம் அமைதியை அடைந்தாலும், சங்கரின் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பார் என்ற பயம் மனதில் கவ்வ சங்கர் ஏதேனும் தவறான முடிவு எடுத்து விடுவாரோ என்று எனக்கு வந்த பயத்தை என் சகோதரியிடம் தெரிவித்தேன். அவர்களும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தொலைபேசியில் அழைத்து சகஜமாகப் பேசி காலையில் வீட்டுக்கு வருமாறும் கூறினார்கள். தவறான எந்த முடிவிற்கும் செல்லக் கூடாது என்று நேராகவே கூறி விட்டார்கள். அதை கேட்டவுடன் சங்கர் அழுதாராம்.

சிலதினங்கள் இப்படியே சென்றன. அவர்கள் இல்லத்தில் யாரும் சகஜ நிலைக்கு வரவில்லை. என் கவனம் முழுவதும் பதினெட்டு வயது நிரம்பிய பெண்ணின் நிலைதான் கவலைக்கிடமாக தோன்றியது.

மறுபடியும் நானும் சகோதரியும் கலந்து ஆலோசித்து அவளை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியயே கொண்டு வரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை சங்கரிடம் தெரிவித்தோம்.

அதற்கு சங்கர் கூறினார் , நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல் படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். பிறகு தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள். ஆனால் அந்த குடும்பம் இன்னும் நிமிரவில்லை.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் நிறைய கசப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறி விட்டன. யாரால்தான் என்ன செய்ய முடியும். விதியின் வில்லத்தனமா இல்லே அவர்கள் கூறுவதுபோல் கெட்ட நேரமோ எதுவோ, இது போல் நிகழ்வுகள் நிகழாமல் இருக்க மனதார வேண்டுகிறேன்.

எங்கள் சட்ட வல்லுனரும் கூறினார். இந்த காவல்துறை அதிகாரிகள் செய்த செயல்கள் எதுவுமே விதிகளுக்குள் இல்லை. அதனால் எல்லா நிலையிலும் சென்று நீதி கேட்கலாம் என்றார். ஆனால் அந்த ஏழைத் தந்தையோ வேண்டாம் சாமி, இனி நான் எங்கேயும் வரமாட்டேன். என்னையும் என் குடுபத்தாரையும் இப்படியே விட்டுடச் சொல்லுங்க என்று கூறி விட்டார். எங்க வக்கீலும் "பாவம் மனதாலும் பொருளாதார நிலையிலும் மிகவும் பலவீனப் பட்டு இருக்கிறார்; அப்படியே விட்டுடலாம்" என்று கூற நாங்களும் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் மனதை அரித்துக் கொண்டிருந்த இந்த உண்மையை உங்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன். என் மனதும் சற்றே லேசாகிப் போனது.

இந்த இடுகை எழுதியதின் நோக்கம், இந்த பயங்கர சூழ்நிலையில் நாங்களும் எங்களின் சகஜ வாழ்க்கையை மறந்து இந்த நிகழ்வில் அமிழ்ந்து போனோம். இனி இது போல் ஒரு கெட்ட சம்பவங்கள் யார் வாழ்க்கையிலும் நடக்க கூடாது என்று மனது நினைத்தாலும் அந்த எண்ணங்கள் ஜெய்க்குமா?? ஆனால் இது போல் சில நிகழ்வுகள் சாதாரன மக்களை எப்படி பாதித்து விடுகிறது?

டிஸ்கி: காவல் துறையில் நேர்மையான பல அதிகார்கள் இருக்கிறார்கள் அதே போல் நேர்மையான காவல் நிலையங்களும் இருக்கின்றன. நேர்மையானவர்கள் தவிர்த்து தவறு செய்பவர்களைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

நிறைவுற்றது.....

36 comments :

Romeoboy said...

எவ்வளவுதான் ஊடக துறை முன்னேறி கொண்டு சென்றாலும் இது போன்ற சம்பவங்கள் அவர்கள் கண்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டே தான் இருக்கிறது .


கருப்பு ஆடுகள் போலீஸ் உடுப்பில்.

எதிர் கொள்ளும் மனப்பான்மையை அந்த இரண்டு நாட்களில் அவர்கள் சிதைத்துவிட்டார்கள், நீங்கள் செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். அந்த குடும்பம் இப்பொது எந்த சுழ்நிலையில் இருக்கிறது ?

Romeoboy said...

பிடித்தது & பிடிக்காதது தொடர் பதிவை எழுத உங்களை அழைத்து உள்ளேன். நேரம் இருப்பின் எழுதவும் .

dondu(#11168674346665545885) said...

காவல் அதிகாரிகளின் பெயர், காவல் நிலையத்தின் பெயர், முதலாளியின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை எழுதுங்கள்.

கண்டிப்பாக அவர்கள் மேல் கேஸ் போடலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பித்தனின் வாக்கு said...

ரொம்ப கொடுமையான சூழ்னிலை, இதுபோல படிக்கும்போது தான் இரத்தம் கொதிக்கின்றது. பின் ஏன் வீரப்பன்,மம்பட்டியான் கள் உருவாகமால் இருப்பார்கள். குறைந்த பட்சம் இந்த இழிந்த கேவலமான நாய்களை கடளாவது தண்டிப்பாரா?

உருகிவிட்டது மனது. உங்களின் ஆதரவான செயலுக்கு நன்றி. உங்கள் சகோதரி சொன்ன மாதிரி காவல் நிலையத்திற்கு எல்லாம் போகாதீர்கள். இப்ப எல்லாம் படித்தவர்கள் தான் பதவிக்கு வருகின்றார்கள். ஆனாலும் குடும்ப பெண்கள் செல்லும் நிலைக்கு இன்னமும் வரவில்லை. நன்றி.

ராமலக்ஷ்மி said...

அந்தக் குடும்பம் மனதளவில் இதை மறப்பது என்பது மிகக் கடினமே. பிரார்த்திப்போம். அவர்கள் மீண்டு வர உதவிய உங்களுக்கும் சகோதரிக்கும் பெரிய சல்யூட். அந்த காவல் அதிகாரிகளுக்கு:(???

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ரம்யா, அப்பரம் வந்து படிக்கின்றேன்

Unknown said...

எல்லோரும் அவரவர் வேலை என்று இருக்கும் போது நீங்களும் உங்கள் சகோதரியும் அந்த குடும்பத்தினை காவல் நிலையத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தோடல்லாமல் அவர்கள் மனதளவி்லும் நலம் பெற வேண்டும் என்று செயல் படுவதற்கு உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும் சகோதரி ராமலஷ்மி சொன்னது போல் ஒரு ராயல் சல்யூட்.காலம் எல்லா ரணங்களையும்,வடுக்களையும் மாற்றட்டும்.

S.A. நவாஸுதீன் said...

மனதை ரொம்பவும் பாதித்துவிட்டது ரம்யா. நீங்களாவது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது ரொம்ப நல்லது.

Ungalranga said...

நிச்சயம் ஒரு இந்த நாட்டிற்கு மீண்டும் ஒரு மாற்றம் வரும்..

ஆனால் அந்த மாற்றத்திற்கான விலை மிகவும் மோசமானதாய் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

இந்தியர்கள் 100 கோடி பேரின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் அந்த தீ .. வெளி வர காத்திருக்கிறேன்.

இங்கே வல்லரசாவதை விட நல்லரசு ஆவதே முக்கியம்.

சங்கரய்யாவுக்கு என் ஆறுதல் .
அய்யா கவலைப்படாதீங்க..! ஆண்டவன் இருக்கான். கண்டிப்பா கூலி உண்டு...!!
அழும்போதே ஆறுதல் தயாராகிறது.
திருடும்போதே தண்டனை தயாராகிறது.

மனசில் வெச்சிக்கோங்கய்யா..தெம்பா இருங்க..!!

அ.மு.செய்யது said...

டோண்டு அவர்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த இயலுமா ??

ஜெயந்தி said...

இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்களிடம் சென்றால் இது போன்ற பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்பார்கள்.

R.Gopi said...

//உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம்.//

இதுலேயே இவர்களின் யோக்கியதை தெரிந்து விட்டதே....

//வக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். //

இதுதானே அவர்களின் வேலையே...

//ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் //

இரக்கமற்ற கொடியவர்கள்...

//அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம் என்று //

ஓஹோ... இது என்ன கொடுமை....

//தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள்.//

வாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல மனது பாராட்டதக்கது...

டோண்டு சாரோட உதவியோ, இல்லேன்னா ஜெயந்தி சொல்ற மாதிரியோ முயற்சிக்கலாமே ரம்யா...

ரங்கன் அவர்களின் கூற்று மெய்ப்பட வேண்டும்...

உதவி தேவையிருப்பின் தெரிவிக்கலாம் ரம்யா...

வால்பையன் said...

காவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது!

ஒருவரை FIR போடாமல் லாக்கப்பில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், முதல் நாள் இருந்தபோதே வக்கில் அந்த கேஸ் பைல் பண்ணியிருக்கலாம்!

ஆனால் போலிஸின் துணை வக்கிலுக்கு தேவையென்பதால் பலர் அம்மாதிரி செய்வதில்லை!

Rajalakshmi Pakkirisamy said...

//அழும்போதே ஆறுதல் தயாராகிறது.
திருடும்போதே தண்டனை தயாராகிறது.//

hmm.

Parattukkal ungalukku

லெமூரியன்... said...

முழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போச்சுங்க...! உங்கள மாதிரி கொஞ்ச பேர் நாட்ல இருக்றதால் தான் மழை கொஞ்சம் பெய்ஞ்சிற்றுக்கு. உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க ரம்யா.!

நசரேயன் said...

ம்ம்ம்ம்

सुREஷ் कुMAர் said...

ஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..
நடுத்தர மக்களால இந்தமாதிரி ஆட்களஎதிர்த்து என்ன பண்ண முடியும் பாவம்..

ஏதாவது பெரிய ஆட்களின் உதவியோட அந்த காவல்துறை அதிகாரிங்கமேல நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பிறகு வேறு பல வழிகளில் பிரச்சனைக்கு ஆளாக்கப்படுவார்கள்..

என்ன பண்ண.. :-(

RAMYA said...

கருத்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிங்க!

RAMYA said...

//
Romeoboy said...
எதிர் கொள்ளும் மனப்பான்மையை அந்த இரண்டு நாட்களில் அவர்கள் சிதைத்துவிட்டார்கள், நீங்கள் செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். அந்த குடும்பம் இப்பொது எந்த சுழ்நிலையில் இருக்கிறது ?
//

நன்றி Romeoboy.

இன்னும் மீளவில்லைங்க :(

RAMYA said...

//
பிடித்தது & பிடிக்காதது தொடர் பதிவை எழுத உங்களை அழைத்து உள்ளேன். நேரம் இருப்பின் எழுதவும் .
//

எழுதிட்டேனுங்க! அழைப்புக்கு நன்றிங்க!

RAMYA said...

//
dondu(#11168674346665545885) said...
காவல் அதிகாரிகளின் பெயர், காவல் நிலையத்தின் பெயர், முதலாளியின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை எழுதுங்கள்.

கண்டிப்பாக அவர்கள் மேல் கேஸ் போடலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

ராகவன் அப்பா!! அவர்களுக்கு எல்லா தைரியமும் கூறினாலும் சங்கர் பயப்படராறு கால்ல விழுறேன் இனிமேல் எனக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம்.

என் பொண்ணுக்கு கல்யாணம் நல்ல முறையில் பண்ண வேண்டும். அதுக்கு நீங்க பக்க பலமா இருங்க போதும் என்கிறார்.

இது வரை நாங்கள் பட்ட கஷ்டம் போதும் என்று கூறி விட்டார்.

என்ன செய்ய :((

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
ரொம்ப கொடுமையான சூழ்னிலை, இதுபோல படிக்கும்போது தான் இரத்தம் கொதிக்கின்றது. பின் ஏன் வீரப்பன்,மம்பட்டியான் கள் உருவாகமால் இருப்பார்கள். குறைந்த பட்சம் இந்த இழிந்த கேவலமான நாய்களை கடளாவது தண்டிப்பாரா?

உருகிவிட்டது மனது. உங்களின் ஆதரவான செயலுக்கு நன்றி. உங்கள் சகோதரி சொன்ன மாதிரி காவல் நிலையத்திற்கு எல்லாம் போகாதீர்கள். இப்ப எல்லாம் படித்தவர்கள் தான் பதவிக்கு வருகின்றார்கள். ஆனாலும் குடும்ப பெண்கள் செல்லும் நிலைக்கு இன்னமும் வரவில்லை. நன்றி.
//


ரொம்ப கொடுமைதான் சரியான முறையில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்
நன்றிங்க.

உங்களின் அனைவரின் ஆறுதல் சொற்களைக் கூறுகிறேன்.

உங்களின் ஆசிகள் இருந்தால் போதும். மீண்டு வந்து விடுவார்கள்!

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
அந்தக் குடும்பம் மனதளவில் இதை மறப்பது என்பது மிகக் கடினமே. பிரார்த்திப்போம். அவர்கள் மீண்டு வர உதவிய உங்களுக்கும் சகோதரிக்கும் பெரிய சல்யூட். அந்த காவல் அதிகாரிகளுக்கு:(???
//

ஆமாம் சகோதரி!!

இன்னும் செய்ய நிறைய இருக்கின்றது.

உங்களைப் போன்றவர்களின் நல்ல உள்ளங்களின் துணை கொடுக்கும் தைரியம் ஒன்றே போதும் இன்னும் பல நல்ல காரியங்களை செய்யலாம் என்ற உத்வேகம் வேகமாக வருகிறது சகோதரி.

உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி!

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் ரம்யா, அப்பரம் வந்து படிக்கின்றேன்
//

நிதானமா படிங்க ஆ.ஞானசேகரன்!

RAMYA said...

//
Siva said...
எல்லோரும் அவரவர் வேலை என்று இருக்கும் போது நீங்களும் உங்கள் சகோதரியும் அந்த குடும்பத்தினை காவல் நிலையத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தோடல்லாமல் அவர்கள் மனதளவி்லும் நலம் பெற வேண்டும் என்று செயல் படுவதற்கு உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும் சகோதரி ராமலஷ்மி சொன்னது போல் ஒரு ராயல் சல்யூட்.காலம் எல்லா ரணங்களையும்,வடுக்களையும் மாற்றட்டும்.
//

நீங்கள் கூறி இருப்பது சரிதான் சிவா!
காலங்கள் மாற்றங்களை கண்டிப்பாக
ஏற்படுத்தும் என்பது உறுதிதான் சிவா!

நன்றி சிவா வரவுக்கும் கருத்துக்கும்.

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
மனதை ரொம்பவும் பாதித்துவிட்டது ரம்யா. நீங்களாவது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது ரொம்ப நல்லது.
//

ஆமாம் S.A. நவாஸுதீன் உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தைகள் அனைத்தையும் அவர்களிடம் கொண்டு செல்கிறேன்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

RAMYA said...

//
ரங்கன் said...
நிச்சயம் ஒரு இந்த நாட்டிற்கு மீண்டும் ஒரு மாற்றம் வரும்..
//

கண்டிப்பா வரணும் ரங்கா!!

//
ஆனால் அந்த மாற்றத்திற்கான விலை மிகவும் மோசமானதாய் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
//

விளைவுகள் மோசமானதாயின் அதையும் மாற்றும் சக்தி உருவாகவேண்டும் ரங்கா!

//
இந்தியர்கள் 100 கோடி பேரின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் அந்த தீ .. வெளி வர காத்திருக்கிறேன்.
//

வரணும் இதையேதான் நானும் விரும்புகிறேன்.

//
இங்கே வல்லரசாவதை விட நல்லரசு ஆவதே முக்கியம்.
//

அருமையான எதிர்பார்ப்பு காத்திருப்போம்.

//
சங்கரய்யாவுக்கு என் ஆறுதல் .
அய்யா கவலைப்படாதீங்க..! ஆண்டவன் இருக்கான். கண்டிப்பா கூலி உண்டு...!!
அழும்போதே ஆறுதல் தயாராகிறது.
திருடும்போதே தண்டனை தயாராகிறது.

மனசில் வெச்சிக்கோங்கய்யா..தெம்பா இருங்க..!!
//

ரங்கா உங்களின் இந்த தேவையான ஆறுதல் வார்த்தைகளை நான் சங்கரின் குடும்பத்தாருக்கு கூறுகிறேன்.

ஆறுதல்களுக்கு ஈடு இணை ஏதுப்பா??

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
டோண்டு அவர்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த இயலுமா ??
//

நடைமுறை படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தோம்.
ஆனால் சங்கர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஏழை தகப்பனை விட்டுடும்மா என்கிறார்.

RAMYA said...

//
ஜெயந்தி said...
இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்களிடம் சென்றால் இது போன்ற பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்பார்கள்.
//

நடைமுறை படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தோம்
ஆனால் சங்கர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஏழை தகப்பனை விட்டுடும்மா என்கிறார்.

RAMYA said...

//
R.Gopi
வாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல மனது பாராட்டதக்கது...

டோண்டு சாரோட உதவியோ, இல்லேன்னா ஜெயந்தி சொல்ற மாதிரியோ முயற்சிக்கலாமே ரம்யா...

ரங்கன் அவர்களின் கூற்று மெய்ப்பட வேண்டும்...

உதவி தேவையிருப்பின் தெரிவிக்கலாம் ரம்யா...
//

இல்லே கோபி அவர்கள் இதுபோல் நடவடிக்கை எடுக்க ஏற்றுக்கொள்ளவில்லை
உங்களின் உதவும் குணம் படைத்த நல்ல மனதிருக்கு எனது நன்றிகள் கோபி.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

RAMYA said...

//
வால்பையன் said...
காவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது!
//

ஆமாம் கண்டிப்பாக கண்டிக்கத்தக்க செயல்தான்!

//
ஒருவரை FIR போடாமல் லாக்கப்பில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், முதல் நாள் இருந்தபோதே வக்கில் அந்த கேஸ் பைல் பண்ணியிருக்கலாம்!
//

முக்கியமான் தடயம் எங்களிடிம் இருக்கிறந்து அது உறுதி ஆனவுடன் FIR போட்டு விடுவோம்
என்று கூறி இருக்கின்றனர். அதை காட்டச் சொன்னதிற்கு
எங்கள் மேலதிகாரி யாரிடமும் விவரிக்க வேண்டாம் என்று
கூறி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

//
ஆனால் போலிஸின் துணை வக்கிலுக்கு தேவையென்பதால் பலர் அம்மாதிரி செய்வதில்லை!
//


இந்த வக்கீல் அது போல் குணம் உடையவர் இல்லை வாலு.
அவர்கள் இழுத்து அடிப்பதை தெரிந்துதான், எல்லா தேவையான
முயற்ச்சிகள் எடுத்து அவர்களை வெளியே கொண்டு வந்தார்.

மேலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருந்தார்.
சங்கர் எதற்கும் ஒத்து வரவில்லை என்பதால் முயற்சி கைவிடப்பட்டது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

RAMYA said...

//
Rajalakshmi Pakkirisamy said...
//அழும்போதே ஆறுதல் தயாராகிறது.
திருடும்போதே தண்டனை தயாராகிறது.//

hmm.

Parattukkal ungalukku
//

ஆமாம் Rajalakshmi Pakkirisamy உண்மையான வார்த்தைகளை ரங்கா கூறி இருக்கிறார்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

RAMYA said...

//
லெமூரியன் said...
முழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போச்சுங்க...! உங்கள மாதிரி கொஞ்ச பேர் நாட்ல இருக்றதால் தான் மழை கொஞ்சம் பெய்ஞ்சிற்றுக்கு. உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க ரம்யா.!
//

வாங்க லெமூரியன்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

RAMYA said...

//
நசரேயன் said...
ம்ம்ம்ம்
//

வாங்க நசரேயன் என்ன ம்ம்ம்...
ஒண்ணுமே புரியல, புரியறமாதிரி சொல்லுங்க.

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
ஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..
நடுத்தர மக்களால இந்தமாதிரி ஆட்களஎதிர்த்து என்ன பண்ண முடியும் பாவம்..

ஏதாவது பெரிய ஆட்களின் உதவியோட அந்த காவல்துறை அதிகாரிங்கமேல நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பிறகு வேறு பல வழிகளில் பிரச்சனைக்கு ஆளாக்கப்படுவார்கள்..

என்ன பண்ண.. :-(
//

ஆமாம் சுரேஷ் இதற்குத்தான் சங்கர் பயப்படுகிறார்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

கபீஷ் said...

:-(((