என்ற தொடர் பதிவிற்கு அழைத்த ஜீவன் மற்றும் நிலாவும் அம்மாவும் இருவருக்கும் மறுபடியும் நன்றி!!
சென்ற முறை தவறுதலாக கவர்ந்தவர்கள் என்று எழுதி விட்டேன்.
அதனால் கவர்ந்தவர் ஒருவர்தான் என்பதை என் நண்பர்களுக்கு கூறிக் கொள்கின்றேன்.
நம் விதி நம் கையில் பரமக்குடியில் பேசியது
வரவேற்புரைக்குப் பதிலுரை
நீங்கள் மிகுந்த அன்போடும் கனிவோடும் எனக்களித்த வரவேற்பிற்கு நன்றி சொல்வது என்பது இயலாத காரியம்.நீங்கள் அனுமத்தித்தால் நான் ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் என்னை பேரன்புடன் வரவேற்றாலும் சரி அல்லது இந்த நாட்டைவிட்டு உதைத்துத் துரத்தினாலும் சரி, என் நாட்டின்மீது எனக்குள்ள அன்பு, முக்கியமாக, என் நாட்டு மக்களின்மீது எனக்குள்ள அன்பு ஒன்றுபோலவே இருக்கும், கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், வேலைக்காகவே வேலை செய்ய வேண்டும், அன்பிற்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
மேலை நாடுகளில் என்னால் செய்யப் பட்டிருக்கும் வேலை மிகவும் சிறியது. நான் செய்ததைப்போல், மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும். இந்தியாவின் காடுகளிலிருந்து தோன்றிய, இந்திய மண்ணுக்கு மட்டுமே சொந்தமான ஆன்மிகம், தியாகம் ஆகியவற்றை உலகம் முழுவதற்கும் போதிப்பதற்குத் தயாரான, வெல்ல முடியாத ஆன்மீக ஆற்றலோடு கூடிய மனிதர்கள் தோன்றும் நாளை நான் மிகுந்த ஆர்வத்தோடு எதிபார்க்கிறேன்.
உலக வாழ்வில் இருவிதமான சோர்வினால் பீடிக்கப்படுவது போன்ற சில காலகட்டங்களை உலக நாடுகள் ஒவ்வொன்றும் சந்திப்பதை மனிதகுல வரலாற்றில் நாம் காண்கிறோம்.
அப்போது அவர்களுடைய திட்டங்கள் எல்லாம் கைநழுவிப் போகின்றன, அவர்களுடைய சமுதாய அமைப்புகளும் முறைகளும் தூள் தூளாகிப் புழுதியில் வீழ்கின்றன.
அவர்களுடைய நம்பிக்கை எல்லாம் இருண்டு போகின்றன. எல்லாமே சூன்யமாகின்றன.
சமுதாய வாழ்வை உருவாக்க இந்த உலகத்தில் இரண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன: ஒன்று, மதத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு முயற்சி, ஆன்மீகத்தின் மீது எழுதப்பட்டது.
மற்றொன்று லௌகீகத்தின்மீது. ஒன்று, போகப் பொருட்களினால் ஆன இந்தச் சின்னஞ்சிறிய உலகத்திற்கு அப்பால் துணிச்சலாகப் பார்ப்பதும் அங்கேயும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையைத் துவக்குவதும் ஆகும்; மற்றொன்று, உலகப் பொருளிலேயே திருப்தி அடங்துவிடுவதும் அங்கேயே நிலைத்து வாழ நினைப்பதும் ஆகும். ஆச்சிரியப்படும் வகையில் சிலவேளைகளில் ஆன்மீகமும், சில வேளைகளில் லௌகீகவும் உச்சத்திற்கு வருகின்றன.
இரண்டும் அலையலையாக ஒன்றையொன்று தொடர்வதுபோல் உள்ளது. ஒரே நாட்டில் இத்தகைய பல்வேறு அலைகள் நிலவும். ஒரு சமயம் லௌகீக அலை அடித்துப் பரவும்; அப்போது அதிக இன்பமும் அதிக உணவும் தருகின்ற செல்வம், அத்தகைய கல்வி போன்ற இந்த வாழ்க்கையைச் சேர்ந்த அனைத்தும் பெருமை பெறும்.
பின்னர் கீழான நிலைக்குச் சென்று இழிநிலையை அடைந்துவிடும். செல்வத்தின் வளர்ச்சியோடு மனித இனத்துடனேயே தோன்றிய எல்லா வகையான பொறாமைகளும் வெறுப்புகளும் உச்சநிலையை அடையும்.
அந்தக் காலகட்டத்தில் போட்டிகளும் இரக்கமற்ற கொடுமைகளும் நிலவியே தீரும். பிரபலமான ஆனால் அவ்வளவு சிறந்ததல்லாத ஒர் ஆங்கில பழமொழி கூறுவதுபோல், 'ஒவ்வொருவரும் தனக்காகவே வாழ்கிறார்கள், பின்னால் வருபவனைச் சாத்தான் பிடித்துவிட்டுப் போகட்டும்' என்பது அந்த நாளின் நோக்கமாக அமையும்.
வாழ்க்கைமுறையின் திட்டமே தோற்றுவிட்டது என்றே மக்கள் நினைப்பார்கள். அப்போது ஆன்மிகம் வந்து, மூழ்குகின்ற அந்த உலகிற்கு உதவிக்கரம் நீட்டி அதை காப்பாற்றவில்லை எனில் உலகமே அழிந்து போய்விடும்.
அதன்பிறகு உலகம் புதிய நம்பிக்கையைப் பெறும்; புதிய வாழ்க்கை முறைக்கான புதிய அடித்தளத்தைக்கானும். பிறகு மற்றோர் ஆன்மீக அலைவரும்; காலப்போக்கில் அதுவும் அழியத் தொடங்கும். பொதுவாகச் சொல்வதானால், சில விஷேச ஆற்றல்களுக்கு தனிப்பட்ட உரிமை கொண்டவர்களான ஒரு பிரிவினரை ஆன்மிகம் உருவாக்குகிறது. இதனுடைய உடனடி விளைவு என்னவென்றால் சாதாரண வாழ்க்கையை நோக்கி மீண்டும் சுழலுதல்.
சுவாமி விவேகானந்தர் பேசியதை எழுதினால் முடிவே இல்லை. எழுதிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன. அவரின் பதிலுரையில் ஒரு பகுதி மட்டுமே எழுதி உள்ளேன்.
இத்துடன் முடிக்கின்றேன்.
இந்த தொடர் பதிவிற்கு நான் அழைப்பது யார் என்றால்??
உங்கள் எல்லாருக்கும் இவர்கள் அறிமுகம் ஆனவர்கள்தான் இருந்தாலும் நான் மீண்டும் உங்களுக்கு அறிமுகப் படுத்தயுள்ளேன்.
2. pappu
3. பலசரக்கு
4. அன்பு மதி
5. ஜீவா
32 comments :
தோழமை ரம்யா அவர்களுக்கு
நலமறிய ஆவல்
மிகுந்த சந்தோசம் ,என்னை உங்களின் பிளாக் குடும்பத்தில் சேர்த்துக்கொண்டதற்கு.மன்னித்துக்கொள்ளுங்கள்.உங்களின் தொடர் பதிவிற்கு என்னால் உங்களின் நட்பு வட்டத்தோடு சேர்ந்து வரமுடியாமல் போனதற்கு.
எனது தளத்தில் எழுதிய அத்தனை வார்த்தைகளும் (கவிதைகள் என்று சொல்ல முடியாது ) என்னை ஏதோ ஒரு நேரத்தில் பாதித்தவை மற்றும் என்னோடு தொடர்புள்ளவைகள் மட்டுமே.இப்பொழுது என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள முயற்சிக்கையில் எனது வார்த்தைகள் பலம் இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.மேலும் மனதோடு சின்ன சின்ன காயங்களும் கூட.
பார்ப்போம் மீண்டும் எனது வார்த்தைகள் என்னோடு வருகையில் மீண்டு வருகிறேன் உங்களோடு
உங்களின் தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
தோழமையுடன்
ஜீவா
//சென்ற முறை தவறுதலாக கவர்ந்தவர்கள் என்று எழுதி விட்டேன்.
அதனால் கவர்ந்தவர் ஒருவர்தான் என்பதை என் நண்பர்களுக்கு கூறிக் கொள்கின்றேன். //
எப்படியோ எஸ்கேப்பாயிட்டிங்க!
இங்கே கும்மி அடிச்சா விவேக்கு கோவிச்சுகுவாரு
அதனால அடுத்த பதிவுல வச்சிகுவோம்!
//நீங்கள் என்னை பேரன்புடன் வரவேற்றாலும் சரி அல்லது இந்த நாட்டைவிட்டு உதைத்துத் துரத்தினாலும் சரி, என் நாட்டின்மீது எனக்குள்ள அன்பு, முக்கியமாக, என் நாட்டு மக்களின்மீது எனக்குள்ள அன்பு ஒன்றுபோலவே இருக்கும்,//
இந்த மாதிரி உரையாற்ற வேறு யாராலங்க முடியும்?
இது போன்ற பதிவுகளை பாதுகாத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்.மிகவும் அருமை
மிகவும் அருமை
பதிவு நன்று!
விவேகானந்தரின் ஞான தீபம் (முதல் புத்தகம்) படித்திருக்கிறேன்.. அவரின் எண்ணங்களைக் கண்டு சிலாகித்திருக்கிறேன்... உங்கள் பதிவும்.... அப்படித்தான்..
பாராட்டுக்கள் சகோதரி
நீங்கள் மிகுந்த அன்போடும் கனிவோடும் எனக்களித்த வரவேற்பிற்கு நன்றி சொல்வது என்பது இயலாத காரியம்.நீங்கள் அனுமத்தித்தால் நான் ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் என்னை பேரன்புடன் வரவேற்றாலும் சரி அல்லது இந்த நாட்டைவிட்டு உதைத்துத் துரத்தினாலும் சரி, என் நாட்டின்மீது எனக்குள்ள அன்பு, முக்கியமாக, என் நாட்டு மக்களின்மீது எனக்குள்ள அன்பு ஒன்றுபோலவே இருக்கும், கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், வேலைக்காகவே வேலை செய்ய வேண்டும், அன்பிற்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.///
நல்ல தத்துவமான வரிகள் ரம்யா!!
விவேகாநந்தர் மிகப்பெரிய ஞானி
"நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய....," விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவில் ஆற்றிய உரையில் சில வரிகள்.
இன்றும் நமக்கு பொருந்தகூடியவை.
விவேகானந்தர் ஓர் ஞான ஒளி.
அவரது வாசகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவாசகம்
ARISE,
AWAKE,
STOP NOT
TILL THE GOAL IS REACHED.
ஒரு தனிமனிதனும் புரிந்து கொள்ள வேண்டிய வாசகம்.
மிகவும் அருமை....
சின்ன வயசுல விவேகானந்தர் புத்தகத்தை கீதை மாதிரியே கூட வைத்திருப்பேன்...
அவரைப் போலவே இருக்கணும்னு எல்லாம் முடிவு பண்ணிருக்கேன் நிறைய தடவை..
ஒரே ஒரு ஆளுன்னாலும் நச்ன்னு ஒரு ஆள் ரம்யா....
கலக்கல்
//இந்திய மண்ணுக்கு மட்டுமே சொந்தமான ஆன்மிகம், தியாகம் ஆகியவற்றை உலகம் முழுவதற்கும் போதிப்பதற்குத் தயாரான, வெல்ல முடியாத ஆன்மீக ஆற்றலோடு கூடிய மனிதர்கள் தோன்றும் நாளை நான் மிகுந்த ஆர்வத்தோடு எதிபார்க்கிறேன்.//
வெல்ல முடியாத ஆன்மீக ஆற்றலோடு கூடிய மனிதர்கள் தோன்றும் நாளை நூறு ஆண்ண்டுகளுக்கு பின்,நாமும் எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
வேதனையான விசயம்
//மேலை நாடுகளில் என்னால் செய்யப் பட்டிருக்கும் வேலை மிகவும் சிறியது. நான் செய்ததைப்போல், மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும்.//
உண்மைதான், விவேகாநந்தரை விட நூறு மடங்கு அதிகமான வேலையை வெளிநாடுகளில் நாங்கள் செய்கிறோம் ஆனால் எதற்க்காக? அதனால் பலன் யாருக்கு?
பதிவு நன்று!
//நம் விதி நம் கையில் பரமக்குடியில் பேசியது//
பாமரருக்கு பகுத்தறிவூட்டிய வார்த்தைகள்...
//நான் செய்ததைப்போல், மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும்.//
எவ்வளவு அருமையான நம்பிக்கையூட்டும் பதிலுரை...விவேகானந்தர் ஆன்மீகம் தாண்டி அனைவருக்கும் பொதுவானவர் என்பதை மறுப்பதற்கில்லை...பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் ரம்யா...
நல்ல பதிவு. வாழ்த்துகள்! உங்களுக்கும், அடுத்து தொடரப்போகிறவர்களுக்கும்...
நல்ல பதிவு. வாழ்த்துகள்
என்னை அழைத்து நன்றி, எழுதுகின்றேன்.
மிக நல்ல பகிர்ந்தல் ரம்யா. நன்றி!
ஓஹ்...என்னை கவர்ந்தவரிலே அடுத்த பாகமா..கலக்குரீங்க டீச்சர்..
கால் செஞ்சுரி..
//ஒன்று, மதத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு முயற்சி, ஆன்மீகத்தின் மீது எழுதப்பட்டது. //
ஆழ்ந்த கருத்துக்கள்..பகிர்தலுக்கு நன்றி..
பரமகுடியில் நடாத்திய பேச்சு, நம்விதி நம் கையில்,வரவேற்புரைக்கு பதிலுரை என்பன வாசித்து அறிந்து கொண்டேன்...
தகவலுக்கு நன்றி...
http://jsprasu.blogspot.com/2009/03/10.html
நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...
:-)
//
ஜீவா said...
தோழமை ரம்யா அவர்களுக்கு
நலமறிய ஆவல்
மிகுந்த சந்தோசம் ,என்னை உங்களின் பிளாக் குடும்பத்தில் சேர்த்துக்கொண்டதற்கு.மன்னித்துக்கொள்ளுங்கள்.உங்களின் தொடர் பதிவிற்கு என்னால் உங்களின் நட்பு வட்டத்தோடு சேர்ந்து வரமுடியாமல் போனதற்கு.
எனது தளத்தில் எழுதிய அத்தனை வார்த்தைகளும் (கவிதைகள் என்று சொல்ல முடியாது ) என்னை ஏதோ ஒரு நேரத்தில் பாதித்தவை மற்றும் என்னோடு தொடர்புள்ளவைகள் மட்டுமே.இப்பொழுது என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள முயற்சிக்கையில் எனது வார்த்தைகள் பலம் இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.மேலும் மனதோடு சின்ன சின்ன காயங்களும் கூட.
பார்ப்போம் மீண்டும் எனது வார்த்தைகள் என்னோடு வருகையில் மீண்டு வருகிறேன் உங்களோடு
உங்களின் தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
//
நன்றி ஜீவா !!
எதற்கும் கலங்காதீர்கள், நம்மை சோதனை அடையும் போதுதான் நாம் நிமிர்ந்து நிற்கவேண்டும். அதில் தான் எல்லா சோதனைகளையும் வெற்றிக்கு அடிகல்லாக அமைத்துக் கொள்ளவேண்டும்.
எதற்கும் கலங்காதீர்கள். நல்லாவே எழுதறீங்க. ஏன் உங்களுக்கு உங்கள் மீதே சந்தேகம்??
நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
முடியாது என்றால் எதுவுமே முடியாது. முடியும் என்றால் எல்லாமே முடியும். எல்லாவற்றிற்கும் வானமே எல்லை என்று நினையுங்கள்.
அடுத்த முறை நீங்க நல்ல நம்பிக்கையுடன், சந்தோஷத்துடனும் எனக்கு பின்னூட்டம் போடணும் சரியா ஜீவா??
உங்கள் கலக்கம் நீங்கி மகிழ்ச்சியுடன் இருக்க இந்த அன்புச் சகோதிரியின் வாழ்த்துக்கள் ஜீவா!!
நன்றி வால்பையன்
நன்றி Rajeswari
நன்றி கடையம் ஆனந்த்
நன்றி ஜோதிபாரதி
நன்றி ஆதவா
நன்றி thevanmayam
நன்றி sollarasan
நன்றி நசரேயன்
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி நிலாவும் அம்மாவும்
நன்றி muru
நன்றி பிரியமுடன் பிரபு said
நன்றி புதியவன்
நன்றி குடந்தைஅன்புமணி
நன்றி அண்ணன் வணங்காமுடி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி அ.மு.செய்யது
நன்றி வேத்தியன்
//
muru said...
//மேலை நாடுகளில் என்னால் செய்யப் பட்டிருக்கும் வேலை மிகவும் சிறியது. நான் செய்ததைப்போல், மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும்.//
உண்மைதான், விவேகாநந்தரை விட நூறு மடங்கு அதிகமான வேலையை வெளிநாடுகளில் நாங்கள் செய்கிறோம் ஆனால் எதற்க்காக? அதனால் பலன் யாருக்கு?
//
உங்கள் வேதனையும் அதனால் ஏற்பட்ட வலியும் எனக்கு புரிகின்றது முரு.
கவலைப் படாதீர்கள் விடியலை நோக்கி நாம் வீர நடை போடும் நாட்கள் வெகு தூரம் இல்லை.
நம்பிக்கையுடன் காத்திருப்போம். நாளைய வெற்றி நமதே!!
aruimai ramya, thangalin pani menmelum sirakka enathu manamarntha vazhthukal. vazhka valamudan.
aruimai ramya, thangalin pani menmelum sirakka enathu manamarntha vazhthukal
Post a Comment