Wednesday, March 25, 2009

பரந்த மனம் வேண்டும் !!!

நான் கேள்விப் பட்ட ஒரு சிறு கதை!!


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.


அந்த தவளை நாள்தோறும் நீரில் இருந்த புழுபூச்சிகளையும், கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றி சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராயிச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.

கிணற்றுத் தவளை: நீ எங்கிருந்து வருகிறாய்??

கடல் தவளை: கடலில் இருந்து

கிணற்றுத் தவளை: கடலா? அது எவ்வளவு பெரியது?? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா? என்று கூறி, ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குத் தாவிக் குதித்தது .

கடல் தவளை: நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படி கடலை ஒப்பிட முடியும் என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை: மறுபடியும் ஒரு குதி குதித்தது, உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா? என்று கேட்டது.

கடல் தவளை: ச்சேச்சே! என்ன இது முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?

கிணற்றுத் தவளை: நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலங்காலமாக இருந்து வருகின்ற கஷ்டம் இதுதான்

இந்த கஷ்டத்திற்கு விவேகானந்தர் கூறிய ஒரு கூற்று என் நினைவிற்கு வருகிறது அதை பார்ப்போம்:


நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.







55 comments :

வினோத் கெளதம் said...

ஆமாங்க கண்டிப்பா..

வினோத் கெளதம் said...

விவேகனந்தர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை..

உங்கள் ராட் மாதவ் said...

//
நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன். //

Sema touching.... Super :-)

Arasi Raj said...

மொத போடலாம்னு வந்தேன் :(

ஆணி என்னான்னு பார்த்துட்டு அப்புறம் படிக்குறேன்

coolzkarthi said...

உண்மையோ உண்மை விவேகானந்தர் சொன்னது....

உங்கள் ராட் மாதவ் said...

//ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது.

நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது//

இது ரெண்டுக்கும் என்னங்க வித்தியாசம் ???? :-))

rose said...

கருத்துள்ள கதை

rose said...

முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.

asthavfirlahulalim

Arasi Raj said...

RAD MADHAV said...
//ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது.

நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது//

இது ரெண்டுக்கும் என்னங்க வித்தியாசம் ???? :-))



kilambittaanya kilambittaanya

உங்கள் ராட் மாதவ் said...

// நிலாவும் அம்மாவும் said...

RAD MADHAV said...
//ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது.

நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது//

இது ரெண்டுக்கும் என்னங்க வித்தியாசம் ???? :-))



kilambittaanya kilambittaanya//

மகா ஜனங்களே, பாருங்க நல்லா பாருங்க, உண்மைய கேட்டா எப்படி கோபம் வருதுன்னு :-)))))

கோவி.கண்ணன் said...

ஆமாங்க ! மதம் தான் மனிதர்களை பிரித்துப்பார்க்கிறது.

நல்ல பதிவு !

உங்கள் ராட் மாதவ் said...

//அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.//


புரியலேயே .....தல சொரியுது.......
அங்கேயே பிறந்து அங்கேயே வளந்துருச்சு????
அப்புறம் எப்படி 'சின்னஞ்சிறியது'???

அத்திரி said...

கத நல்லாஇருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ரம்யா, எப்போதோ படித்த ஒன்று ( நித்தியானந்தா சுமாமிகள் எழுதிய மனசே ரிலாக்ஸ் நினைக்கின்றேன்) இருப்பினும் மீண்டும் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் நன்றிகள்

வேலன். said...

கதை நன்றாக இருந்தது. ஆனால் வந்த தவளை கடலில் இருந்து வரவில்லை. மற்றோரு கிணற்றில் இருந்து வந்தது என மாற்றிக்கொள்ளுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டியவரை கடலில் தவளைகள் வாழ்வதில்லை.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

இந்த கதையை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். கற்றது கைமண் அளவு. கல்லாது உலக அளவு. தெரிந்தது கையளவு. தெரியாதது உலக அளவு. இதாங்க நீதி. நிறைகுடம் தளும்பாது. குறைகுடம் தளும்பும் இப்படியும் சொல்லாம். மொத்த்தில் அருமையான பதிவு சகோதிரி. இது போல் நிறைய எழுதுங்கள்.

அபி அப்பா said...

சூப்பர்டா பொண்ணே!

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா இருக்கு கதை

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா இருக்கு கதை

ஆளவந்தான் said...

அதானே பாத்தேன்.. இதுக்கெல்லாம் எப்படி கும்ம முடியும் சொல்லுங்க :))

நல்ல கதை :)

நட்புடன் ஜமால் said...

பறக்கனுமா!

வால்பையன் said...

ஒரு ஆச்சர்யம் சொல்லட்டுமா!
இந்த கதையை விவேக்கின் அதாங்க உங்க விவேகானந்தரின் குரலிலேயே நான் கேட்டிருக்கிறேன்.

லிங்க் மறந்து போச்சு கிடைத்தால் கொடுக்கிறேன்!

வால்பையன் said...

ஆன்மீகத்தில் இந்த மாதிரி நிறைய கதைகள் இருக்கு!

சூஃபி கதைகள் என்ற தொகுப்பு தான் இன்றைக்கு ஆன்மீக வியாபாரிகளான
ஜக்கிக்கும், நித்திக்கும் உதவுகிறது.

எனக்கும் கதை தெரியும்!
ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிச்சிரலாமா?

நட்புடன் ஜமால் said...

அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.\\

வளர்ந்துச்சா இல்லியா!

நட்புடன் ஜமால் said...

சிறிது பருத்தும் விட்டது.\\

எப்படி

வேத்தியன் said...

நல்ல பதிவு அக்க...
:-)

நட்புடன் ஜமால் said...

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.\\

வழுக்கியா!

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.\\

வளர்ந்துச்சா இல்லியா!//

அதானே...
குட் கொஸ்டியன் தல...
:-)

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.\\

வழுக்கியா!//

ஆஹா...
எப்பிடியோ வுழுந்துச்சு மாஸ்டர்...
எப்பிடித் தான் உங்களால மட்டும் முடியுதோ???
:-)

டவுசர் பாண்டி said...

பழய் கதிக்கு புச்சா நீ ஒரு வளக்கம்

கொடுத்தா இன்னோ இந்த கத ஜோரா

இருக்கும்பா !!

குடுகுடுப்பை said...

இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.

மதங்களை ஒழிப்பாரா இறைவன்.

கலை அக்கா said...

//"வருங்கால முதல்வர் said...
இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.

மதங்களை ஒழிப்பாரா இறைவன்.//"


மதங்களை ஏற்படுத்திய மனிதன்தான் அவற்றை ஒழிக்கவேண்டும்

கலை அக்கா said...

அன்பு ரம்யா,
இது போன்று நிறைய நீதிக்கதைகளை எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இராகவன் நைஜிரியா said...

மதம் மனிதனை மதம் பிடிக்க வைக்கிறது...

இராகவன் நைஜிரியா said...

மதத்தை வைத்துதான் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையே ஓடிகிட்டு இருக்கு..

மதம் பிறந்தது அரசியல்வாதிகளுக்கு ஒரு வரப்பிராசாதம்.

இராகவன் நைஜிரியா said...

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்,
எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான்..

உங்க பதிவைப் படித்தவுடன், இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

ஆளவந்தான் said...

//
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்,
எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான்..
//
எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல் இது.. சிவாஜி சைக்கிளை ஓட்டிகிட்டே பாடும் அருமையான் பாடல்.. நினைவூட்டியதற்கு மிக்க நன்றி :))

நசரேயன் said...

நல்லா இருக்கு பூலான் தேவி

Suresh said...

என்ன மேடம் ஆளே காணோம்
//ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. //

ஒன்னு தானா ? அவங்க அம்மா அப்பா எங்கே ? உட்டார் உறவினர் எல்லாம் எங்கே ?

//நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது.//
நீண்ட காலமான சும்மார எதுன்னு வருஷம் இருக்கும்

அப்படி இருக்கும் பொது நீங்க எப்படி இத பொய் சாரி போய் சின்ன சிறு தவளை என்று சொல்லலாம் :-) லோல்
//அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.//

அதான் வளந்துடுச்சுனு சொல்றிங்க அப்பரும் எப்படி சின்ன சிறிய ?

எனக்கு புரியல ஹி ஹி ஹி

Vijay said...

பரந்த மனம் வேண்டும் என்பதை விட பிற நம்பிக்கைகளையும் ஏற்க திறந்த மனம் வேண்டும் என்பது என் கருத்து.

அப்பாவி முரு said...

வணக்கம் ரம்யா!

நல்ல பதிவு.,

குழந்தை இருப்பவர்கள், குழந்தையிடம் உங்கள் கதையை காண்பித்து,ரம்யா ஆண்டி உனக்காகவே கதை எழுதியிருக்காங்க பாருன்னு படிச்சு காமிக்கலாம்.

அ.மு.செய்யது said...

கொஞ்ச நாளாவே நீங்க ஏதோ ஒரு மரத்தடில உக்காந்து யோசிக்கறீங்கனு புரியுது.

அது எந்த மரமுங்கோ ?

அ.மு.செய்யது said...

கிணற்று தவளைக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குனு எனக்கு இன்னிக்கு தான் தெரிஞ்சது.

நன்றி டீச்சர் !!!!!!

நாளைக்கு சந்திப்போமா ??

அ.மு.செய்யது said...

//RAD MADHAV said...
//ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது.

நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது//

இது ரெண்டுக்கும் என்னங்க வித்தியாசம் ???? :-))
//

பழமொழி சொன்னா ஆராயக் கூடாது.அனுபவிக்கணும்.

மேவி... said...

நல்ல கருத்து....

ஏன் இந்த பதிவுக்கு மட்டும் யாரும் கும்மி அடிக்கலா????

மேவி... said...

இந்த மாதிரி நான் நிறைய புக்ஸ் படிச்சு குழம்பி போய் இருக்கிறேன்

புதியவன் said...

//நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.//

நாமும் இதையே நம்புவோம்...

இந்த கதையை நானும் முன்பு படித்திருக்கிறேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி ரம்யா...

குடந்தை அன்புமணி said...

நல்ல கதை. நானும் படித்திருக்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

50

பயனுள்ள தகவல்கள் said...

சகோதரே ! போகிற போக்கில் தவறான தகவலைத் தந்துவிட்டுப் போகிறீர்கள். இஸ்லாம் ஒரு போதும் அப்படிச் சொல்லவில்லை.
சிந்திக்கத்தான் சொல்கிறது. இஸ்லாம் சொல்வதற்க்கும், இன்றய முஸ்லீம்களின் நடைமுறைக்கும் ஏராளமான வித்யாசம் காணப்படுகிறது. இன்றய முஸ்லீம்கள் சொல்வது,செய்வது எல்லாம் இஸ்லாம் அல்ல. இறைவனின் வேதமான குர்ஆனும் அவ்னுடைய தூதர் முஹமது நபி அவர்களின் சொல்,செயல், அங்கீகாரம் மட்டுமே இஸ்லாம் என்று அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிரார்கள். என‌வே இஸ்லாத்தைப் பற்றி எதை எழுதுவதாக இருந்தாலும் அது என்ன சொல்கிறது என்று தெரிந்து கொண்டு தயவு செய்து எழுதவும்

सुREஷ் कुMAர் said...

//
"பரந்த மனம் வேண்டும் !!!"
//
யக்கா.. யாராச்சும் கிக்க ஹெல்ப் கேட்டு பண்ணாம போய்ட்டதால அவங்களுக்காக எழுதி இருகின்களோ..

Rajeswari said...

கருத்துள்ள கதை..அருமையாய் இருக்கு ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன். //

அதுக்காக நாம எல்லோரையும் ஒரே கேணியில பிடிச்சு தள்ளி விட வேண்டியதில்லை. நாம எப்பவுமே ஒரே கேணிக்குள்ள தானே இருக்கிறோம், அதான் இந்த உலகத்துல. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மேல வர்றதுக்கு பார்ப்போம்!

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு

படிக்கவேண்டியது

RAMYA said...

நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

நன்றி --> vinoth gowtham
நன்றி --> RAD MADHAV
நன்றி --> நிலாவும் அம்மாவும்
நன்றி --> coolzkarthi
நன்றி --> rose
நன்றி --> கோவி.கண்ணன்
நன்றி --> அத்திரி
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> வேலன்.
நன்றி --> கடையம் ஆனந்த்
நன்றி --> அபி அப்பா
நன்றி --> உருப்புடாதது_அணிமா
நன்றி --> ஆளவந்தான்
நன்றி --> வால்பையன்
நன்றி --> வேத்தியன்
நன்றி --> டவுசர் பாண்டி
நன்றி --> வருங்கால முதல்வர்
நன்றி --> கலை அக்கா
நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> நசரேயன்
நன்றி --> சுரேஷ்
நன்றி --> விஜய்
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> MayVee
நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> புதியவன்
நன்றி --> A NICE WAY OF LIFE said
நன்றி --> சுரேஷ் குமார்
நன்றி --> ஸ்ரீதர்கண்ணன்
நன்றி --> MayVee said
நன்றி --> Rajeswari
நன்றி --> ஜோதிபாரதி
நன்றி --> அபுஅஃப்ஸர்