ஒரு பெண் சிங்கத்தை பற்றி ஒரு கதை உண்டு. ஒரு சமயம் அது கருவுற்று இருந்தது. அது ஒரு நாள் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஓர் ஆட்டு மந்தையைப் பார்த்தது. உடனே அதன்மேல் பாய்ந்தது. அந்த முயற்சியில் சிங்கம் இறந்துவிட்டது. இறப்பதற்கு முன் அது ஒரு குட்டியை ஈன்றது. தாயற்ற அந்தச் சிங்கக்குட்டியை ஆடுகள் வளர்த்தன.
அந்தச் சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது. புல்லைத் தின்றது. ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்தச் சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து, பெரிய சிங்கமாக மாறியது. ஆனால் அது தன்னை ஒரு ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது.
ஒருநாள் வேறொரு சிங்கம் இரை தேடிக்கொண்டு அங்கு வந்தது. அங்கே ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதைக் கண்டு வியப்படைந்தது. அது அந்த ஆட்டுச் சிங்கத்தை நெருங்கி, நீ ஆடல்ல, சிங்கம் என்று சொல்ல முயன்றது. ஆனால் ஆட்டுச் சிங்கம் புதிய சிங்கம் தன்னை நெருங்கும் போதே தலை தெறிக்க ஓடியது. ஓட்டத்தில் பயம்தான் அதிகம் காணப்பட்டது. ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து புதிய சிங்கம் காத்திருந்தது.
ஒருநாள் ஆட்டுச் சிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதைப் புதிய சிங்கம் பார்த்தது. உடனே அதை நெருங்கி, நீ ஒரு சிங்கம் என்று கூறியது.
அஞ்சி நடுங்கிய அந்த ஆட்டுச் சிங்கம், புதிய சிங்கம் சொல்வதை நம்பாமல் 'நான் ஆடுதான்' என்று சொல்லிக் கொண்டே ஆட்டைபோல் கத்தியது.
புதிய சிங்கம் ஆட்டுச் சிங்கத்தை ஓர் ஏரிக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அது ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்து, 'தண்ணீரில் பார். நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தெரிகின்றன' என்று கூறியது.
ஆட்டுச் சிங்கம் ஏரி நீரில் தென்பட்ட இரண்டு பிரதிபிம்பங்களையும் ஒத்துப் பார்த்தது.
பின்னர் புதுச் சிங்கத்தையும் தன்னுடைய பிம்பத்தையும் பார்த்தது. அடுத்த கணமே, தான் ஒரு சிங்கம் என்ற எண்ணம் அதற்கு வந்துவிட்டது. உடனே அது கர்ஜித்தது. ஆடுபோல் கத்துவது மறைந்துவிட்டது.
பின் குறிப்பு
==========
ஆட்டு மந்தையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்பது தெளிவான கருத்து. சில வருடங்கள் தன் நிலை மறந்திருந்தாலும், தனது இனம் தன்னை உணரவைத்தவுடன் சிங்கமானது தனது குரலே மாறும்படி கர்ஜிக்கின்றது.
எனவே, நாம் இதிலிருந்து அறிவது என்னவென்றால், நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், மனித நேயமிக்க மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.
40 comments :
அழகா சொல்லியிருக்கீங்க! வாழ்த்துகள்!
me the 2nd
\\தனது இனம் தன்னை உணரவைத்தவுடன் சிங்கமானது\\
நல்ல கருத்து.
//நீங்கள் சிங்கங்கள் !!//
தலைப்பே தன்னம்பிக்கை கொடுக்கிறதே ரம்யா...
//'தண்ணீரில் பார். நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தெரிகின்றன' என்று கூறியது.//
இப்படித் தான் நம்மில் பலர் தன் சுயம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
//ஆட்டு மந்தையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்பது தெளிவான கருத்து.//
இது போன்ற சிறுவர்களுக்காண கதைகள் கேட்க்கும் போது நாமும் அந்த வயதிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது...
இன்றைய கதையின் கருத்தும் அருமை...
சிங்கம்ன்னு சொன்ன உடனே வந்துட்டேன் பார்த்தீங்களா
சிங்கமுல...........................
கதை நன்றாக இருந்தது.
கிட்ட தட்ட இதே மாதிரி கதையை நான் இங்கே எழுதி இருக்கிறேன்.ஆனா சிங்கம் கதை இல்ல..கழுகு கதை..
http://moodupani.blogspot.com/2009/03/82009.html..
வந்து படிச்சு பாருங்க
இதுதான் சரியான லின்க் http://moodupani.blogspot.com/2009/03/82009.html
இந்த கதையெல்லாம் எங்க இருந்து கொண்டு வர்றீங்க...
கைவசம் நிறைய இருக்கோ !!!!!!
ஒரு புதிய டிரெண்ட் செட் பண்ணியிருக்கீங்க..கருத்தும் அருமை !!!!!
கடையில யாராவது கீறீங்களா ??
நான் வரும் போது ஒருத்தரும் இருக்க மாட்டீங்களே !!!!!
அட போங்கப்பா .....
சிங்கத்தை வச்சு மனிதநேயம்.,
நல்ல முயற்சி.
ஆனா முடியலை., ஏன்னா எங்க தலைவருங்கள்ளாம் என்னைப்பாத்து.,
சினம் கொண்ட சிங்கமே வா...
வெறி கொண்ட வேங்கையே வா...
மதம் கொண்ட யானையே வா...
என்று கூப்பிட்டு அதற்க்கு நான் வந்துதான் பழக்கம்.
யாருமே மனித நேயம்மிக்க மனிதனே வா என்று கூப்பிட்டதில்லை.அதன் குழப்பம்.
hey kathi rompa nalla irunthuchipa
lostla neega sonna karthum nalla iruku
Eppadi??
Ippadi??
Super!!!!
ஆடு ஆடுதான் சிங்கம் சிங்கம் தான்... சிங்கம ஆடக முடியாது.. ஆடு சிங்கம் ஆகா முடியாது... சரி திட்டாதிங்க .. மேட்டேர்கு வரேன் ... அனைத்து விலங்குகளாக மாறகூடிய அனைத்து விலங்குகளின் குணாதிசயம் தன்னுள் வைத்திருக்கிற ஒரே இனம் மனித இனம் மட்டுமே... உண்மை தானே?
கருத்துள்ள கதை, உங்கள் எழுத்து நடையில் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.:-)
அப்புறம் ஒரு சந்தேகம். நீங்க உண்மையிலேயே டீச்சர் ஆவா இருக்கீங்க? :-)
கிளைமாக்ஸ் சொல்லாம கதைய முடிச்சிட்டீங்களே?
கடைசியில் கூட இருந்து வளர்த்த ஆடுகளின் கதி இனி என்னவாகும் என்பதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே? :-)
அந்தச் சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது. புல்லைத் தின்றது. ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்தச் சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து, பெரிய சிங்கமாக மாறியது. ஆனால் அது தன்னை ஒரு ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது.////
வாழும் சூழ்நிலையின் தாக்கம் எவ்வளவு முக்கியம் என்று கதை உணர்த்துகிறது!
பிறந்த குணம் மாறாது என்பதா கருத்து!
கதையின் சாரமும், அதிலுள்ள கருத்துக்களும் நன்று என்றாலும் உங்களின் கதை சொல்லும் திறன் அருமையோ அருமை. அனேகமாக எப்பொழுதும் உங்களைச் சுற்றி ஒரு குழந்தை பட்டாளம் இருக்கனுமே ரம்யா?
கடைசியில் இனம் இனத்தோடுதான் சேரும்
அக்கா, சிறுகதைகள் நல்லா வருது. தொடருங்கள்.
நீங்க அக்கா இல்ல..
பாட்டி..
//
சரி.. அடுத்து என்ன.., ஒத்த கண்ணு மந்திரவாதி கதையா..?
///RAD MADHAV said...
கிளைமாக்ஸ் சொல்லாம கதைய முடிச்சிட்டீங்களே?
கடைசியில் கூட இருந்து வளர்த்த ஆடுகளின் கதி இனி என்னவாகும் என்பதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே? :-)
////
அப்புறம் அந்த ஆட்டுச் சிங்கம் தன் ஆட்டு நண்பர்களை சிங்கத்திற்கு அறிமுகப்படுதியது.ஆடு - சிங்கம் புதிய கூட்டணி உருவாகியது.பெரும் வெற்றி பெற்றது.(சத்தியமா அரசியல் இல்லேங்க...).
nalla pathivu akkaa..
super story singam singam than ramya ramya than ... seri daily oru kathai podunga .. nangalum ellarukkum soluvom
apprum attu singam poi atta saptucha illaiya ?
///நாம் இதிலிருந்து அறிவது என்னவென்றால், நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், மனித நேயமிக்க மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.///
அய்யோ அய்யோ அரசியல்வாதிகிட்ட சொல்லவேண்டியதை என் கிட்ட சொன்னா எப்படிங்க ரம்யா.... plz... அவுங்க காதுல கொஞ்சம் சொல்லுங்க ரம்யா.....
நல்லாயிருக்கு.....பாராட்டுகள்
indha kadai la ivlo artham irundhu irukku.. naan ivlo naala gavanikkave illaye.. super :)
சூப்பரா கதை சொல்றீங்க. நல்லா இருக்கு.
யம்மா தாயே.. இன்னும் கதை முடியலையா?
கும்மி அடிக்க கை அரிக்குது, ஒரு பதிவு போடுங்க தாயீ
நிறைய கதை போடுங்க. ஆனா அதே நேரம் மத்த பதிவுகளும் போடுங்க!
நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!
நன்றி --> சந்தனமுல்லை
நன்றி --> அண்ணன் வணங்காமுடி
நன்றி --> நட்புடன் ஜமால்
நன்றி --> புதியவன்
நன்றி --> கார்க்கி
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> Rajeswari
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> gayathri
நன்றி --> உருப்புடாதது_அணிமா
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> KISHORE
நன்றி --> RAD MADHAV
நன்றி --> thevanmayam
நன்றி --> Syed Ahamed Navasudeen
நன்றி --> SK
நன்றி --> சுரேஷ் குமார்
நன்றி --> தத்துபித்து
நன்றி --> Poornima Saravana kumar
நன்றி --> Suresh
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> வருங்கால முதல்வர்
நன்றி --> நசரேயன்
நன்றி --> pappu
நிறைய மனிதர்கள் மனிதத்தை மறந்து வளரும் கதையை தானே சிங்கத்தை வச்சி சொல்லிருக்கிங்க!
அசத்திறீங்க போங்க! உங்க பள்ளி மாணவர்கள் குடுத்து வைத்தவர்கள். இப்போ நாங்களும்!
இதைத் தான் சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோன்னு கவியரசர் பாடினாரா?
நீங்க Born to Live என்ற ஆங்கிலப் படம் பார்த்திருக்கீங்களா?? அதில் ஒரு தம்பதி ஒரு சிங்கக்குட்டியை எடுத்து வளர்த்து, அது ஒரு நாய்க்குட்டி மாதிரி ஆகிடும். வேட்டையாடக் கூட தெரியாது. நல்லா இருக்கும். முடிந்தால் பாருங்க.
நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!
நன்றி --> வால்பையன்
நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> விஜய்
Post a Comment