ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!
அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.
அவர்கள் ஊருக்கு போகிறேன் என்று கூறிவிட்டு வால்ப்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில், மாட்டியவர் ரம்யா".
இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள். (ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க??)
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க.
வால்பையனின் கேள்விகள், ரம்யாவின் பதில்கள்.
அந்த அக்காவின் -- மறு விமரிசனம்
===================================
1.இங்கே முதல் ரசனை வால்பையனுக்கு போகின்றது. 2.இரண்டாவதாகத்தான் அவர்களின் சபாஷ் எனக்கு.
3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.
5.இதை நானும் வரவேற்கின்றேன்.
3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.
5.இதை நானும் வரவேற்கின்றேன்.
6.ஜெயித்தது என் நண்பர்தானே. (உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) சேச்சே இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட பாட்டு. ஹி ஹி ஹி.
அப்பா ஒரு வழியா முன்னுரை முடிந்தது.
இப்போ வாங்க உள்ளே போகலாம்.
=========================
ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர்களை பார்த்தவுடன், இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன். நல்ல முடிவுதானே!! என்னப்பா சிரிக்கறீங்க?? போங்கப்பா சிரிச்சவங்க எல்லாம் ஒன்னும் சரி இல்லை...
சரி வாங்க மீதியை படிக்கலாம்
======================
அவங்க வந்தப்போ எங்க வீட்டுலே நான் தனியா தான் இருந்தேன். விட்டுலே இருந்தவங்க ஊருக்கு போய் இருந்தாங்க.
வந்தாங்க வந்தவுடன் சில விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் மறுபடியும் ஏன் வந்தாங்க என்கின்ற விஷயத்தை சொன்னாங்க.
அக்கா: ஒன்னும் இல்லைப்பா!!
ரம்யா: ஏதோ விஷயம் என்று தானே சொன்னீங்க, அப்புறம் என்ன ஒன்னும் இல்லை??
அக்கா: இல்லேடி அப்படித்தான் பேச்சை ஆரம்பிக்கணும் இல்லையா??
ரம்யா: ஓ!! ஆரம்பமா?? அது சரி
அக்கா: என்னாடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்க ஏதோ பேசிகிட்டே இருக்கே?? முக்கியமான் ஒரு விஷயம் அன்னைக்கி வந்த போது மறந்து விட்டேன். அதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.
ரம்யா: இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.
அக்கா: பத்தியா கடைசியிலே என்னையே நீ வாருரே?? பரவா இல்லையாடி??
ரம்யா: இல்லேக்கா நான் கடைசியிலே இல்லே மொதல்லே இருந்தே உங்களை வாரிக்கிட்டு தான் இருக்கேன்.
அக்கா: தனியா இருக்கியே அப்படின்னு யோசிச்சு சரி இந்த பிள்ளை கூட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்னு வந்தா நீ என்னை வச்சி காமெடியா பண்ணறே??
ரம்யா: சேச்சே, நான் உங்களை வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலைக்கா!! சரி, சரி நான் அடங்குறேன், நீங்க இப்போ சொல்லுங்க.
அக்கா: ஏய் குறுக்கே ஒன்னும் பேசக் கூடாது என்ன புரிஞ்சி போச்சா??
ரம்யா: இல்லேக்கா, நான் குறுக்கே பேசவே மாட்டேன். ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல விரும்பறேன். எனக்கு உங்க பிரச்சனை புரிஞ்சிடுச்சு, ஆனா போகலை சரியா??
அக்கா: ஏண்டி என்னைய போய் இப்படி டார்ச்செர் பண்ணறே ?? உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான். குறையவே இல்லை.
ரம்யா: இல்லேக்கா, போன வாரம் டாக்டர் கிட்டே போனேன், நின்னா, நடந்த மயக்கம் வருதுன்னு. டாக்டர் சொன்னாரு உடம்பு ரொம்ப அனிமிக்கா இருக்கு, நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவா எடுத்துக்கோன்னு சொன்னாரு. ஆனா என்னக்கா நீங்களும் அந்த துறைலே தானே இருக்கீங்க. நீங்க மட்டும் என்னக்கா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க??
நான் டாக்டர் சொன்னதை அப்படியே எடுத்துகிட்டு என் உணவு பழக்கங் வழக்கங்களை இப்போ தான் மாற்றிக் கொண்டு வருகின்றேன். உங்க கிரகம் அந்த நேரமா பார்த்து என் கிட்டே மாட்டிடீங்க போல இருக்கு. சரி சரி, கோச்சுகாதீங்க. இப்போதில் இருந்து நான் ஒழுங்கா கேக்கறேன் சரியா??
அக்கா: இல்லேடி நம்ப தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கோம்.
ரம்யா: அது நம்ப தம்பி இல்லே, உங்களுக்கு தம்பி, எனக்கு அண்ணா சரியா?
அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க.
ரம்யா: அக்கா எப்படி வர்றது ??
அக்கா: ரயிலுக்கு டிக்கெட் வாங்கிடுங்க. ரயில்லே ஏறினவுடனே ரெண்டு கிலோமீட்டரில் வலது பக்கமா திரும்பி பார்த்தால், சர்ச் தெரியும். உடனே ஏறங்கிடுங்க.
ரம்யா: ரெண்டு கிலோமீட்டரிலா?? என்னாக்கா சொல்லறீங்க?? இல்லையே, வீரபாண்டிபட்டினம் ரொம்ப தூரமாச்சே, ரெண்டு கிலோ மீட்டரா?? அதுக்கு எதுக்கு ரயிலு?? எங்க காரிலேயே வந்துடுவொமே?? ஒரே குழப்பம்ஸ். இல்லேக்கா நீங்க சொல்லறமாதிரி ரெண்டு கிலோமீட்டரில் சேத்துப்பட்டே தாண்டாது ரயிலு, எப்படி அது வீரபாண்டிபட்டினம்னு சொல்லறீங்க??
அக்கா:வேண்டாம்டி நான் ஊருக்கு போய் பத்திரிகை அனுப்பறேன்.மரியாதையா வாயை மூடிகிட்டு வந்து சேரு. இப்போ நான் தூங்கப் போறேன், பேசிகிட்டே இருக்காமே தூங்கு சனியனே. எதைப் பேசினாலும் நொண்டு பேசறே!
ரம்யா: இந்த அக்காவை ரொம்ப கடுப்பேத்திட்டோமோன்னு ரொம்ப யோசனையா இருந்திச்சு. சரி சரி இனிமேல் இவங்களை ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டு அப்படியே கொஞ்சம் லேசா தூங்க ஆரம்பிச்சுட்டேன். திடீர்ன்னு ஒரே சத்தம்.
"என்னங்கடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, நல்லா அழுந்த தேச்சு கழுவுங்கடி" அப்படீன்னு அமானுஷ்யக் குரல் கேட்டுச்சு.
எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் தனியா தானே இருந்தேன். இந்த அக்கா இருப்பது நினைவிற்கு வரலை.
ரொம்ப பயந்துட்டேன். எழுந்து விளக்கு போடக் கூட பயம். வீட்டுக்குள்ளே யாரோ பூந்துட்டாங்க, இப்போ என்னா நடக்கப் போகுதோ,ஐயோ பயந்து வருதேன்னு நினைக்கும்போதே அழுகையா வருது.
கொஞ்சம் நேரம் விழித்திருந்தேன். அப்புறம் ஒன்னும் சத்தம் இல்லை. பயந்தபடியே தூங்கிட்டேன். மறுபடியும் ஒரு குரல்,
"நான் சொல்லிகிட்டே இருக்கேன் உன்னாலே கேக்க முடியலை இல்லே??" இந்த முறை கோவம் குரலில் அதிகம் தெரிஞ்சுது. சரி இன்னைக்கு தூக்கத்திற்கு சங்குதான் தெரிஞ்சி போச்சு. சரி, கொஞ்சம் புத்தியா யோசிக்கலாம்னு நினைச்சேன் (அதெல்லாம் எங்கே உனக்குன்னு கேக்கறது காதிலே விழுது, என்ன செய்ய அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா) எங்கே இருந்து இந்த சத்தம் வருதுன்னு உன்னிப்பா கவனிச்சேன். தொடர்ந்து பேச்சுக் குரல் கேட்ட வண்ணம் இருந்தது.
அட நம்ப அக்காதான் இவ்வளவோ அமர்க்களம் பண்ணறாங்க. ஓ!! இவங்களுக்கு தூக்கத்திலே பேசற பழக்கம் போல இருக்கு. தெரிஞ்சாலும் பயத்தோட தான் படுத்திருந்தேன். எப்பபோ விடியும்ன்னு காத்திருந்தேன், காலையிலே என்னாக்கா! ராத்திரி தூக்கத்திலே பேசினீங்கன்னு கேட்டா, இல்லேடி நான் பேசமாட்டேன், ஆனா அந்த ஜெயா அக்கா இல்லே அவங்க தான் தூக்கத்திலே பேசுவாங்க....
ரம்யா:இங்கே பாருங்க நேத்து ராத்திரி இங்கே படுத்து இருந்தது நீங்க தான், நீங்க தான் பேசினீங்க, ஏனக்கா ஜெயாக்கவை சொல்லறிங்க??
அக்கா:சரிடி இப்போ என்னா அதுக்கு, நான் கிளம்பறேன், கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிட்டு.
கிளம்பிட்டாங்கையா!! கிளம்பிட்டாங்க!!
151 comments :
part 2vaaaaaaaaaaaaaa
அந்த அக்கா வந்தாங்க இல்லே\\
ஹையோ! ஹையோ!
இனி யாரும் வரமாட்டாங்க போல
வந்தா மாட்டுனாங்க
என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க
ரொம்ப தகிரியம் தான் ...
மன நிறைவோடு சென்று விட்டார்கள்\\
மெய்யாலுமா ...
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க. \\
நம்புறோம்
இல்லாங்காட்டி மீள் பதிவு போட்டு நம்மளையே படிக்க வச்சிட்டாங்கன்னா
ஹையோ பயந்து வருதே !
ஹா ஹா வாங்க ஜமால்
வாங்க!!
//
நட்புடன் ஜமால் said...
அந்த அக்கா வந்தாங்க இல்லே\\
ஹையோ! ஹையோ!
இனி யாரும் வரமாட்டாங்க போல
வந்தா மாட்டுனாங்க
//
நீங்க எங்க வீட்டுக்கு வந்தாலும் நான் பதிவை படிக்க சொல்லுவேனாக்கும் :)
இப்போ வாங்க உள்ளே போகலாம்\\
இப்பதானா அது ...
//
நட்புடன் ஜமால் said...
என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க
ரொம்ப தகிரியம் தான் ...
//
ஆமா சோகமும் கூட!!
\\ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க.\\
ஹையோ ஹையோ!
//அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.//
நம்பவே முடியல.... உங்களுக்கு தூக்கத்துல நடக்குற திறமை இருக்கா???? :-)
\\ போங்கப்பா சிரிச்சவங்க எல்லாம் ஒன்னும் சரி இல்லை... \\
சரியா சிரிக்கலைன்னு சொல்லுதியளா
தூக்கத்துல நடக்குற வியாதியா
ஹையோ! எனக்கு பயந்து வருதே
//அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க. //
தேனி கம்பம் பக்கத்துல அந்த வீரபாண்டியா???
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் இருக்குறாங்க:-)
\\சரி வாங்க மீதியை படிக்கலாம்\\
இன்னமுமாஆஆஆஆஆஆஆஆஆ
\\வந்தாங்க வந்தவுடன் சில விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்\\
அது என்னா இராணுவ இரகசியம்.
//
RAD MADHAV said...
//அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.//
நம்பவே முடியல.... உங்களுக்கு தூக்கத்துல நடக்குற திறமை இருக்கா???? :-)
//
Ha ha ha super
\\இல்லேடி அப்படித்தான் பேச்சை ஆரம்பிக்கணும் இல்லையா??\\
ஆமாவா இல்லையா
\\ஓ!! ஆ-ரம்பமா?? அது சரி \\
அக்காவை வச்சு நல்ல காமெடி பண்றீங்க...
பாவம் தூக்கத்தில இருந்தவங்களுக்கு உங்க பதிவைக் காமிச்சு பைத்தியம் பிடிச்சு போச்சு...
கல்யாணத்துக்கு வீரபாண்டி பக்கம் போயிடாதீங்க..வீண் வம்பு
\\என்னாடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்க ஏதோ பேசிகிட்டே இருக்கே?? முக்கியமான் ஒரு விஷயம் அன்னைக்கி வந்த போது மறந்து விட்டேன். அதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.\\
யக்கோவ் சொல்லுக்கா சீக்கிரம்
\\இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.\\
நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய
//RAMYA said...
//
RAD MADHAV said...
//அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.//
நம்பவே முடியல.... உங்களுக்கு தூக்கத்துல நடக்குற திறமை இருக்கா???? :-)
//
Ha ha ha super//
மேட்டர் புரிஞ்சு போச்சு....
உண்மை வெளியில் வந்துவிட்டதால் வெளி வரும் ஆனந்த கொலை வெறி சிரிப்பு..... :-))
\\பத்தியா கடைசியிலே என்னையே நீ வாருரே?? பரவா இல்லையாடி??
\\
பத்தியா
பத்தி பத்தியா உங்கள பத்திதான்
\\இல்லேக்கா நான் கடைசியிலே இல்லே மொதல்லே இருந்தே உங்களை வாரிக்கிட்டு தான் இருக்கேன்\\
தலையா ...
//பாவம் தூக்கத்தில இருந்தவங்களுக்கு உங்க பதிவைக் காமிச்சு பைத்தியம் பிடிச்சு போச்சு...//
என்னங்க பயமுறுத்துறீங்க??????? :-)))
நான் வேற தெரியாம பாதி படிச்சுட்டேன். :-((
\\தனியா இருக்கியே அப்படின்னு யோசிச்சு சரி இந்த பிள்ளை கூட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்னு வந்தா நீ என்னை வச்சி காமெடியா பண்ணறே??\
தனியா இருக்க புள்ளை கிட்ட போகலாம்
ஆனா! இங்கே ஏன் போனிய
\\நான் வேற தெரியாம பாதி படிச்சுட்டேன்.\\
தெரியாம எப்படிங்க படிப்பீங்க ...
\\சேச்சே, நான் உங்களை வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலைக்கா!! சரி, சரி நான் அடங்குறேன், நீங்க இப்போ சொல்லுங்க.\\
இனிமே தானே இருக்கு ...
\\ஏய் குறுக்கே ஒன்னும் பேசக் கூடாது என்ன புரிஞ்சி போச்சா??\\
புரிஞ்சிச்சா
போயிடிச்சா
:-)))))))))
தலைப்பு அக்காவின் சோகம் என்று இருந்தால் பொருத்தமா இருந்திருக்குமோ?. ஏன்னா உங்ககிட்ட மாட்டிகிட்டது அவங்கதானே
ஏன் இந்த கொலவெறி!?!
\\ஏண்டி என்னைய போய் இப்படி டார்ச்செர் பண்ணறே ?? உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான். குறையவே இல்லை.
\\
தெரிஞ்சிடிச்சா!
\\இல்லேக்கா, போன வாரம் டாக்டர் கிட்டே போனேன், நின்னா, நடந்த மயக்கம் வருதுன்னு. டாக்டர் சொன்னாரு உடம்பு ரொம்ப அனிமிக்கா இருக்கு, நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவா எடுத்துக்கோன்னு சொன்னாரு. ஆனா என்னக்கா நீங்களும் அந்த துறைலே தானே இருக்கீங்க. நீங்க மட்டும் என்னக்கா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க??\\
அதான் மேட்டரா!
உள்ளேன்..உள்ளேன் கும்மி ஆட்டம் இருக்கா?
\\உங்க கிரகம் அந்த நேரமா பார்த்து என் கிட்டே மாட்டிடீங்க போல இருக்கு. சரி\\
ஹையோ! ஹையோ!
உண்டு நசேரயன் ஐயா!
//ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!//
இதை படிக்கிற எங்களை விடவா!!!!
//அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே//
குஸ்பு அக்காவா?
\\இல்லேடி நம்ப தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கோம்.\\
நல்ல விடயம் தான்.
குஸ்ப்புவுக்கே அக்கா!
//நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு //
ஆள் மாறாட்டம் பன்னனுமுனா உங்களை தொடர்பு கொள்ளவா?
//அவர்கள் ஊருக்கு போகிறேன் என்று கூறிவிட்டு வால்ப்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில், மாட்டியவர் ரம்யா".
இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள்.//
விட்டா போதுமுன்னு ஓடிட்டாங்க
\\அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க.\\
ரொம்ப வீரமா!
நாந்தான் அம்பது, அட்வான்ஸ் புக்கிங்.... :-)
//ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க??//
அது என்ன மாதிரி சிரிப்பு "ராம்" யா
//முதல் ரசனை வால்பையனுக்கு போகின்றது. //
ஆமா.. ஆமா "ரம்" யா வையே கேள்வி கேட்டாரு அதுக்கு தான்
நாந்தான் அம்பது:-)))))))
-1
//இரண்டாவதாகத்தான் அவர்களின் சபாஷ் எனக்கு.//
இனிமேல இப்படி மொக்கையா பதில் சொல்லக் ௬டாதுன்னு
// நட்புடன் ஜமால் said...
\\நான் வேற தெரியாம பாதி படிச்சுட்டேன்.\\
தெரியாம எப்படிங்க படிப்பீங்க ...//
ஜமால் அண்ணா, நெஞ்சுல வில்லு பாஞ்சுருச்சு.....:-)
\\ரயிலுக்கு டிக்கெட் வாங்கிடுங்க. ரயில்லே ஏறினவுடனே ரெண்டு கிலோமீட்டரில் வலது பக்கமா திரும்பி பார்த்தால், சர்ச் தெரியும். உடனே ஏறங்கிடுங்க.\\
ஏறினவுடனே எப்படி தெரியும்
//3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.//
இதுக்கு நான் அருமைனு சொல்லனுமா அறுவைன்னு சொல்லனுமா?
//ஜெயித்தது என் நண்பர்தானே. (உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) சேச்சே இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட பாட்டு. ஹி ஹி ஹி. //
எங்களுக்கு சோதனை மேல் சோதனை இதுவும் நடிகர் திலகம் பாட்டு தான்
//இப்போ வாங்க உள்ளே போகலாம். //
எங்க "ரம்" யா டாஸ்மாக் க்கா?
\\ஜமால் அண்ணா, நெஞ்சுல வில்லு பாஞ்சுருச்சு.....:-)\\
என் நெஞ்சுலையா!
//ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர்களை பார்த்தவுடன், இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன். //
அப்படியே எங்களுக்கும் அன்பு கட்டளையிடு பூலான் தேவி
//சரி வாங்க மீதியை படிக்கலாம்//
இன்னும் "ரம்" மிச்சம் இருக்கா "ரம்" யா ?
ஆஹா என்ன நடக்குது இங்கே!!
\\பேசிகிட்டே இருக்காமே தூங்கு சனியனே. எதைப் பேசினாலும் நொண்டு பேசறே!\\
ஹா ஹா ஹா
நம்ம சிரிப்பு வைத்தியர் வேற உள்ளே தான் கீறாரு
//
Syed Ahamed Navasudeen said...
தலைப்பு அக்காவின் சோகம் என்று இருந்தால் பொருத்தமா இருந்திருக்குமோ?. ஏன்னா உங்ககிட்ட மாட்டிகிட்டது அவங்கதானே
//
வாங்க வாங்க Syed Ahamed Navasudeen நாதான் அவங்க கிட்டே மாட்டிகிட்டேன்!!
\\லேசா தூங்க ஆரம்பிச்சுட்டேன்\\
புச்சாக்கீதுபா
ரெண்டாவது ரவுண்டு க்கு வாரேன்
\\"என்னங்கடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, நல்லா அழுந்த தேச்சு கழுவுங்கடி" அப்படீன்னு அமானுஷ்யக் குரல் கேட்டுச்சு. \\
ஹையோ! என்னாச்சு ரம்-ya
//
நிலாவும் அம்மாவும் said...
அக்காவை வச்சு நல்ல காமெடி பண்றீங்க...
பாவம் தூக்கத்தில இருந்தவங்களுக்கு உங்க பதிவைக் காமிச்சு பைத்தியம் பிடிச்சு போச்சு...
கல்யாணத்துக்கு வீரபாண்டி பக்கம் போயிடாதீங்க..வீண் வம்பு
//
நிலாவும் அம்மாவும்
இது உண்மையாவே நடந்தது
பாத்தீங்களா??
நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு !!
//
நட்புடன் ஜமால் said...
\\என்னாடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்க ஏதோ பேசிகிட்டே இருக்கே?? முக்கியமான் ஒரு விஷயம் அன்னைக்கி வந்த போது மறந்து விட்டேன். அதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.\\
யக்கோவ் சொல்லுக்கா சீக்கிரம்
//
hahahahahaha
//
நசரேயன் said...
உள்ளேன்..உள்ளேன் கும்மி ஆட்டம் இருக்கா?
//
அட நம்ம நெல்லை புயலு
வாங்க வாங்க!!
\\இந்த அக்கா இருப்பது நினைவிற்கு வரலை. \\
நீங்க தான் பெண் கஜினியா
//
நசரேயன் said...
//ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!//
இதை படிக்கிற எங்களை விடவா!!!!
//
நீங்க இல்லே அந்த அக்காவை சொன்னேன்!!
//
நசரேயன் said...
//அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே//
குஸ்பு அக்காவா?
//
இல்லே, இவங்க வேறே அக்கா
போன தடவையே சொன்னேன் இல்லை
மறந்துட்டீங்களா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
சந்தனமுல்லை said...
:-)))))))))
//
வாங்க வாங்க முல்லை
நல்லா இருக்கா??
எல்லாம் அனுபவம் தான்:))
//
நட்புடன் ஜமால் said...
\\இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.\\
நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய
//
ஜமால் பயந்துட்டீங்களா??
நான் அப்படித்தான் அவங்க கிட்டே சொன்னேன்!!
Aaaha... Paart -II
Jooooot!
//
நட்புடன் ஜமால் said...
\\ போங்கப்பா சிரிச்சவங்க எல்லாம் ஒன்னும் சரி இல்லை... \\
சரியா சிரிக்கலைன்னு சொல்லுதியளா
//
இல்லே இல்லே என்னைய நம்பலைன்னு சொன்னேன்!!
//
RAD MADHAV said...
//பாவம் தூக்கத்தில இருந்தவங்களுக்கு உங்க பதிவைக் காமிச்சு பைத்தியம் பிடிச்சு போச்சு...//
என்னங்க பயமுறுத்துறீங்க??????? :-)))
நான் வேற தெரியாம பாதி படிச்சுட்டேன். :-((
//
பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது.
நான் இருக்கேன். மீதியை தைரியமா படிங்க மாதவ் :)
//
சந்தனமுல்லை said...
ஏன் இந்த கொலவெறி!?!
//
இல்லே அந்த அக்கா அப்படிதான் என்னை படுத்திட்டாங்க :))
// RAMYA said...
ஆஹா என்ன நடக்குது இங்கே!!//
கடவுளே காப்பாத்து.... உங்களுக்கே தெரியலையா...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.... :-))
//
நசரேயன் said...
//நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு //
ஆள் மாறாட்டம் பன்னனுமுனா உங்களை தொடர்பு கொள்ளவா?
//
ஹையோ ஹையோ இங்கே பாருப்பா சின்ன பிள்ளை கணக்கா கேக்கறாரு!!
//
RAD MADHAV said...
// RAMYA said...
ஆஹா என்ன நடக்குது இங்கே!!//
கடவுளே காப்பாத்து.... உங்களுக்கே தெரியலையா...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.... :-))
//
பயப்படாதீங்க தைரியமா படிங்க RAD MADHAV.
////
RAD MADHAV said...
//பாவம் தூக்கத்தில இருந்தவங்களுக்கு உங்க பதிவைக் காமிச்சு பைத்தியம் பிடிச்சு போச்சு...//
என்னங்க பயமுறுத்துறீங்க??????? :-)))
நான் வேற தெரியாம பாதி படிச்சுட்டேன். :-((
//
பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது.
நான் இருக்கேன். மீதியை தைரியமா படிங்க மாதவ் :) //
இதுல ஏதாவது 'உள்குத்து' இருக்கா?:-()
//
நசரேயன் said...
//அவர்கள் ஊருக்கு போகிறேன் என்று கூறிவிட்டு வால்ப்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில், மாட்டியவர் ரம்யா".
இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள்.//
விட்டா போதுமுன்னு ஓடிட்டாங்க
//
இல்லே இல்லே, நசரேயன் நீங்க தப்பு தப்பா சொல்லறீங்க.
நல்லா இருக்குன்னு ரசிச்சுட்டு போனாங்கன்னு சொல்ல வந்தேன்.
//
நசரேயன் said...
//ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க??//
அது என்ன மாதிரி சிரிப்பு "ராம்" யா
//
போய் கண்ணாடியை பாருங்க நீங்க சிரிச்ச சிரிப்புதான் அது:))
//
நசரேயன் said...
//3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.//
இதுக்கு நான் அருமைனு சொல்லனுமா அறுவைன்னு சொல்லனுமா?
//
என்னையா கேக்கறீங்க அருமைன்னு சொன்னா என்னா குறைஞ்சா போய்டுவீங்க :))
//
RAD MADHAV said...
////
RAD MADHAV said...
//பாவம் தூக்கத்தில இருந்தவங்களுக்கு உங்க பதிவைக் காமிச்சு பைத்தியம் பிடிச்சு போச்சு...//
என்னங்க பயமுறுத்துறீங்க??????? :-)))
நான் வேற தெரியாம பாதி படிச்சுட்டேன். :-((
//
பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது.
நான் இருக்கேன். மீதியை தைரியமா படிங்க மாதவ் :) //
இதுல ஏதாவது 'உள்குத்து' இருக்கா?:-()
//
உள் குத்து இல்லே நல்லா தான் சொல்லி இருக்கேன் தைரியமா படிங்க
//
நசரேயன் said...
//இப்போ வாங்க உள்ளே போகலாம். //
எங்க "ரம்" யா டாஸ்மாக் க்கா?
//
ஹையோ ஹையோ, எப்போ பார்த்தாலும் டாஸ்மார்க் தானா??
அட்வான்ஸ் புக்கிங், நான்தான் நூறு.. :-))
பயந்தபடியே தூங்கிட்டியளா
அது எப்படிங்க
//
நட்புடன் ஜமால் said...
\\ஜமால் அண்ணா, நெஞ்சுல வில்லு பாஞ்சுருச்சு.....:-)\\
என் நெஞ்சுலையா!
//
என்னாச்சு ஜமால் ஏன் இப்படி எல்லாம் பீதியை கிளப்பறீங்க :))
//
நசரேயன் said...
//ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர்களை பார்த்தவுடன், இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன். //
அப்படியே எங்களுக்கும் அன்பு கட்டளையிடு பூலான் தேவி
//
அப்படி எல்லாம் எங்க கிட்டே இருந்து தப்பிக்க முடியாது :))
//
நசரேயன் said...
//சரி வாங்க மீதியை படிக்கலாம்//
இன்னும் "ரம்" மிச்சம் இருக்கா "ரம்" யா ?
March 24, 2009 8:05
//
Yes, Yes proceed with cheers!
//
கணினி தேசம் said...
Aaaha... Paart -II
Jooooot!
//
நன்றி கணினி தேசம் பயந்துட்டீங்களா??
என்னா மாதவ்
மாதவம் செய்து இருக்கியளோ 100க்கு
100 அடிக்க யார் யார் பதுங்குறா இங்கே
நான் நல்ல பய்யன் :-)
refresh செய்துகிட்டே இருக்காதிய
//நட்புடன் ஜமால் said...
100 அடிக்க யார் யார் பதுங்குறா இங்கே//
he he he he he
அப்ப நீங்களே 100 போடுங்க மாதவ்
100 யாரு
Jai Ho Jai Jo.....
ஹையா நான் தான் 101
சரியா வச்சனா மொய்!
//நட்புடன் ஜமால் said...
refresh செய்துகிட்டே இருக்காதிய//
தலைவா... நீங்க பெரிய கில்லாடி.... :-))
// RAMYA said...
//
நசரேயன் said...
//சரி வாங்க மீதியை படிக்கலாம்//
இன்னும் "ரம்" மிச்சம் இருக்கா "ரம்" யா ?
March 24, 2009 8:05
//
Yes, Yes proceed with cheers!//
என்ன சோகத்துக்கும் சியர்ஸ் ஆ :))
//RAD MADHAV said...
//அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க. //
தேனி கம்பம் பக்கத்துல அந்த வீரபாண்டியா???
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் இருக்குறாங்க:-)//
ஏங்க... இதுக்கு யாருமே பதில் சொல்லலேங்க?
//
RAD MADHAV said...
அட்வான்ஸ் புக்கிங், நான்தான் நூறு.. :-))
//
Congrats!!!
இப்போ வாங்க உள்ளே போகலாம்.//
ஓகே..
ரெடி, ஸ்டார்ட் மியுசிக்...
இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன்.//
இது முடிவு...
இல்லேடி அப்படித்தான் பேச்சை ஆரம்பிக்கணும் இல்லையா??//
இது ஒரு வழமையாவே போச்சு இல்ல...
இப்பிடி சொன்னா தான் உள்ள ஏதோ ஒன்னு பெருசா இருக்குன்னு அர்த்தம்...
:-)
மிகுதியை அப்புறமா படிச்சுடுறேன்...
//
RAD MADHAV said...
//RAD MADHAV said...
//அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க. //
தேனி கம்பம் பக்கத்துல அந்த வீரபாண்டியா???
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் இருக்குறாங்க:-)//
ஏங்க... இதுக்கு யாருமே பதில் சொல்லலேங்க?
//
இல்லே திருச்செந்தூர் பக்கத்திலேன்னு நினைக்கறேன்.
இன்னும் பத்திரிகை வரலை
வந்தவுடன் சொல்லறேன் மாதவ்!!
ஐயோ...ரொம்பக் கண்ணைக் கட்டுதே????
அன்புடன் அருணா
உங்கள எப்படி வச்சி சமாளிக்கிறாங்க!
நான் பரவாயில்லை போலயே!
ஒரு மனுசன் வாழ்க்கையில மொக்கை போடலாம்! ஆனா மொக்கையிலேயே வாழக்கூடாது
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வந்துட்டோமில்ல...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டோமில்ல
// ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!
//
அப்ப படிக்கிறவங்களுக்கா
// அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. //
ஓ அந்த அக்காவா.. நான் வேற அக்காவோன்னு நினைச்சேன்..
அந்த பரிதாபத்துக்குரிய அக்காவா
// என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே//
பொய்... பொய்... தூங்கற மாதிரி நடிச்சாங்க..
// இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள். //
நம்பிட்டோம்..
121 யாராச்சும் இருக்கீங்களா?
// என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே//
அப்ப குறட்டை?
\\ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க.\\
அடப்பாவிகளா...
உலைக்கு பயந்து, அடுப்புலயா விழுகிறது?
\\இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.\\
என்ன பின்னூட்டமா?
125 ரம்யா உங்களுக்காக கண்விழித்து,
பேய் உலாவும் ராத்திரி 1 மணிக்கு பின்னூடம் போடுகிறேன்.
வந்ததுக்க்கு ரம்யாவுக்கு மரியாதை பண்ணியாச்சு!
இனி பேய்களுக்கு மரியாதை பண்ணவேண்டும்,
வர்ர்ட்டா????
126
ரெண்டாம் பாகமா
அந்தக்காவை வுடவேமாட்டீங்களா
//அட நம்ப அக்காதான் இவ்வளவோ அமர்க்களம் பண்ணறாங்க. ஓ!! இவங்களுக்கு தூக்கத்திலே பேசற பழக்கம் போல இருக்கு//
தூங்கினாலும் உங்க நெனப்புதானு நினைக்கிறேன்
கடய மூடியாச்சா
சரி நானும் போய்ட்டுவாரேன்
அடபாவி மக்கா. .ஒரு பெரிய கும்மி முடிஞ்சு போச்சே :)
இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் ரம்யா :)
அக்கா:சரிடி இப்போ என்னா அதுக்கு, நான் கிளம்பறேன், கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிட்டு.
நல்லா சாப்பிட்டு வாங்க
//இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன்.//
உள்ளத்தில் நல்ல உள்ளம்..உறங்காதென்பது...( இதுவும் சிவாஜி பாட்டு தான் )
//ஏண்டி என்னைய போய் இப்படி டார்ச்செர் பண்ணறே ?? உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான். குறையவே இல்லை. //
அவங்க மனச தொறந்து சொல்லிட்டாங்க..எங்களால முடியலியே !!!!
//நட்புடன் ஜமால் said...
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க. \\
நம்புறோம்
இல்லாங்காட்டி மீள் பதிவு போட்டு நம்மளையே படிக்க வச்சிட்டாங்கன்னா
ஹையோ பயந்து வருதே !
//
அட ஆமாங்க..கொஞ்சம் உசாரா இருக்கணும் போல..
ச்சே !! நான் வரும் போது எப்பவுமே 100 அ தாண்டிடுதே..
அந்தக்காவை ஒரு வழி
பண்ணீட்டிங்களே!!!
அக்காவும் பலே கில்லாடிதான்!
தொலைக்காட்சி சீரியல் பார்த்த மாதிரி இருக்கு ரம்யா உங்கள் இருவருடைய உரையாடல்களும்...
//அக்கா: இல்லேடி நம்ப தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கோம்.
ரம்யா: அது நம்ப தம்பி இல்லே, உங்களுக்கு தம்பி, எனக்கு அண்ணா சரியா?//
மீண்டும் ரம்யாவின் குறும்பு...
அந்த அக்காவுக்கு டெட்டால், பஞ்செல்லாம் குடுத்தீங்களா? இப்படி கடிச்சுருக்கீங்க!
pAvamunga antha akka...
ippadi total damage pannitingale....
"நட்புடன் ஜமால் said...
என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க
ரொம்ப தகிரியம் தான் ..."
boss avanga summa padikkira madiri act panni iruppanga....
"நட்புடன் ஜமால் said...
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க. \\
நம்புறோம் "
jamal unga kitta intha nalla manasu thaan enakku pidichathu....
"ரம்யாவின் சோகம் - PART - II !!"
illanga..
ithu akkavin sogam thaan
natamai nameyai mathu
"அப்பாவி முரு said...
125 ரம்யா உங்களுக்காக கண்விழித்து,
பேய் உலாவும் ராத்திரி 1 மணிக்கு பின்னூடம் போடுகிறேன்.
வந்ததுக்க்கு ரம்யாவுக்கு மரியாதை பண்ணியாச்சு!
இனி பேய்களுக்கு மரியாதை பண்ணவேண்டும்,
வர்ர்ட்டா????"
erndum ontru illaiyaa???
veru veru yaa???
உங்க அக்காவை நாங்க பார்கலைன்னாலும், அவங்கள வச்சி நீங்க பண்ற காமெடி நல்லாத்தான் இருக்கு. (பாலசந்தர் படத்துல வர்ற இருமல் தாத்தா மாதிரி)
//அக்கா: ரயிலுக்கு டிக்கெட் வாங்கிடுங்க. ரயில்லே ஏறினவுடனே ரெண்டு கிலோமீட்டரில் வலது பக்கமா திரும்பி பார்த்தால், சர்ச் தெரியும். உடனே ஏறங்கிடுங்க. //
அவ்வளவு தூரம் பார்வை தெரியுமா என்ன? கண்பார்வை ரொம்ப பிரைட்தான்!
ரம்யா என்னது இது ....பயங்கரமான அனுபவமா இருக்கும் போல இருக்கே.
தூங்கவே இல்லைனு சொல்லுங்க
150
பாகம் மூன்று எப்போ?( me the 150)
just miss
//MayVee said...
"அப்பாவி முரு said...
125 ரம்யா உங்களுக்காக கண்விழித்து,
பேய் உலாவும் ராத்திரி 1 மணிக்கு பின்னூடம் போடுகிறேன்.
வந்ததுக்க்கு ரம்யாவுக்கு மரியாதை பண்ணியாச்சு!
இனி பேய்களுக்கு மரியாதை பண்ணவேண்டும்,
வர்ர்ட்டா????"
erndum ontru illaiyaa???
veru veru yaa???//
யப்பா... மேவி...
ரம்யாவைத்திட்டணும்ன்னா நேரடியா திட்டுங்க., என்னோட பின்னூட்டத்தை வச்சு திட்டாதிங்க.
அக்கா கோவிச்சுக்குவாங்க
Post a Comment