Sunday, April 5, 2009

செல்லமே செல்லம்ஸ் கார்னெர் !!

நேர்மையான உழவன்!!

இன்று நான் சொல்லும் கதை உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இது ராஜா பற்றிய கதையாயிற்றே.

வீரம் மிகுந்த 'பேசராவ்' என்பவர் மராட்டிய படைத் தலைவராக இருந்தார். பக்கத்து நாட்டின் மீது பெரும் படையுடன் சென்றார். பல வெற்றிகளைக் கண்டார்.

வெற்றி பெற்ற அவர் பல நாட்கள் பயணத்திற்குப் பின் தன் நாட்டை அடைந்தார். தலை நகரத்தை அடைய இன்னும் சில நாட்கள் பயணம் தேவைப்பட்டது.

பயணத்தால் தன் வீரர்கள் களைப்பு அடைந்து இருப்பதைக் கண்டார். அருகில் இருந்த சிற்றூர் ஒன்று அவர் கண்களுக்குத் தெரிந்தது.

வீரர்களைப் பார்த்து, "நாம் இங்கேயே முகாமிட்டுத் தங்குவோம்" என்றார். அங்கே முகாம் அமைக்கப்பட்டது.

வீரர்கள் பசியுடன் இருப்பதை அறிந்தார் அவர்.

வீரர் தலைவன் ஒருவனை அழைத்து "அருகில் உள்ள ஊருக்குச் செல், நமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா, தேவையான வீரர்களை உன்னுடன் அழைத்துச் செல்" என்று கட்டளை இட்டார்.

ஐம்பது வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் வீரர் தலைவர். அவர்கள் எதிரில் உழவர் ஒருவர் வந்தார்.

அவனைப் பார்த்து வீரர் தலைவர், "இந்த ஊரிலேயே தோட்டத்துடன் நல்ல விளை நிலம் எங்கே உள்ளது?" எங்களுக்குக் காட்டு என்றார்.

உழவர் அவர்களை அழைத்துச் சென்று ஒரு நிலத்தைக் காட்டினார்.

அங்கே ஒரு பக்கம் வாழையும், தென்னையும் காய்த்துத் தொங்கின. இன்னொரு பக்கம் கரும்பும் நெல்லும் நன்றாக விளைந்து இருந்தன.

மகிழ்ச்சியுடன் வீரர் தலைவர், "வீரர்களே! வயலுக்குள் இறங்கி உங்கள் விருப்பம் போல உணவுப் பொருள்களைக் கொண்டு வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

ஆரவாரத்துடன் வீரர்கள் அந்த வயலில் இறங்கினார்கள்.

இதைக் கண்ட அந்த உழவர், "இதை விட அருமையான வயல் ஒன்று காட்டுகிறேன். எல்லாப் பழவகைகளும், கரும்பும், நெல்லும், காய்கறிகளும் அங்கே உள்ளன" என்றார்.

"இதை விட அருமையான நிலம் இருக்கிறதாம். நாம் அங்கே செல்வோம்" என்றார் வீரர் தலைவர்.

உழவரைத் தொடர்ந்து வீரர் தலைவரும், வீரர்களும் நடந்தார்கள், நெடுந்தொலைவு நடந்த பிறகு ஒரு நிலத்தைக் காட்டிய உழவர் "இதில் உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.

அந்த நிலத்தை பார்த்த வீரர் தலைவர் கடுப்பாகிப் போனார். "உழவரே! எதற்காக எங்களை இவ்வளவு தொலைவு வீணாக அழைத்து வந்தீர்? நீர் முதலில் காட்டிய நிலமே இதைவிட வளமாக இருந்ததே" என்று கோபத்துடன் கேட்டார்.

"ஐயா! நான் முதலில் காட்டியது வேறு யாருடைய நிலமோ? நீங்கள் அந்த நிலத்தில் பொருள்களை எடுத்திருந்தால் அந்த உழவனின் இழப்பிற்கு நானும் பொறுப்பு ஆவேன். இந்த நிலம் எனக்கே சொந்தமான நிலம். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். உங்கள் விருப்பம்போலப் பொருள்களை எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.

உழவரின் சொற்கள் வீரர் தலைவரின் உள்ளத்தைத் தொட்டது. அந்த நிலத்தில் எதையும் தொடாமல் திரும்பிய அவர் படைத் தலைவரிடம் நடந்ததைச் சொன்னார்.

ஒரு உழவருக்கு இருக்கும் நேர்மையான உள்ளம் தனக்கு இல்லையே என்று வருந்தினார் அவர்.

"வீரர்களே! இந்த ஊரில் எந்தப் பொருள் எடுத்தாலும் அதற்கு உரிய விலையைத் தந்து விடுங்கள்". என்று கட்டளை இட்டார் அவர்.

பின்குறிப்பு
==========
இந்த கதையும் உங்களுக்கு சிந்திக்கவும், நல்ல நெறிகள் பற்றி யோசிக்கவும் வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது.

22 comments :

அண்ணன் வணங்காமுடி said...

me the 1st

நட்புடன் ஜமால் said...

நேர்மையையும்

உழைப்பையும் உணர்த்தும்

உண்ணத கருத்துகள்

ஆயில்யன் said...

//செல்லமே செல்லம்ஸ் கார்னெர்!

:((

முன்பதிவு குட்டீஸ் கார்னருன்னு ஓடி வந்தோம் ஏமாந்தோம் ! சரி இந்த வாட்டியும் ஒரு எதிர்ப்பார்ப்போட வந்தோம் இப்பவுமா.....?????

போங்க நான் கோச்சுக்கிட்டு போறேன்!!!!

அண்ணன் வணங்காமுடி said...

கதையில font கலர் கண்ண பறிக்குது. மாத்துங்க Please. நீங்க ராமராஜனின் ரசிகையா?...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"உழவரே! எதற்காக எங்களை இவ்வளவு தொலைவு வீணாக அழைத்து வந்தீர்?//


politics?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பின்குறிப்பு
==========
இந்த கதையும் உங்களுக்கு சிந்திக்கவும், நல்ல நெறிகள் பற்றி யோசிக்கவும் வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது.//


நாங்க சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம்

ஆ.சுதா said...

ஆமாம் உண்மையிலே பிடித்திருந்தது
நேர்மை உழைப்பையும் சொல்லும் கதை.

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான கதை. அடுத்தவர் சொத்துக்கு ஆசைப் படக்கூடாது என்று சொல்வதற்கான அருமையான கதை.

இப்போதுள்ள சூழ் நிலையில் இது மாதிரியான கதைகள் குழந்தைகளுக்கு சொல்வதில்லை. அதற்கான நேரமும் யாருக்கும் கிடைப்பதில்லை.

மிக நன்றாக சொல்லியிருக்கீன்றீர்கள். வாழ்க வளமுடன்.

இராகவன் நைஜிரியா said...

// இந்த கதையும் உங்களுக்கு சிந்திக்கவும், நல்ல நெறிகள் பற்றி யோசிக்கவும் வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது. //

ஆம். உண்மைதான். சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

Suresh said...

ரம்யா நல்லா கதை சொல்றிங்க

வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

வினோத் கெளதம் said...

ரொம்ப நல்ல கதை.
Very Impressive.

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு ரம்யா...

ஆ.ஞானசேகரன் said...

//இன்று நான் சொல்லும் கதை உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இது ராஜா பற்றிய கதையாயிற்றே. ///

அடுத்த கதை ராணியை பற்றியா

ஆ.ஞானசேகரன் said...

நேர்மையை கதை மூலம்தான் சொல்லமுடியுமா? நம்ம அரசியல் தலைவர்களுக்கு ஏதாவது புரியும்படி சொல்ல முடியுமா ?

ஆ.ஞானசேகரன் said...

எப்படியோ நல்ல நல்ல கதை சொல்லுறீங்க பாராட்டுகள்

அ.மு.செய்யது said...

ஹமாம்.......????????????????


நல்ல பொருள் பொதிந்த கதை டீச்சர்...

அ.மு.செய்யது said...

//அண்ணன் வணங்காமுடி said...
கதையில font கலர் கண்ண பறிக்குது. மாத்துங்க Please. நீங்க ராமராஜனின் ரசிகையா?...
//

நானும் ரொம்ப நாளா இத சொல்லணும்னு நினைச்சேன்..

ஏங்க இப்படி ?

டவுசர் பாண்டி said...

யக்கா !! வண்டேன், அப்பால, நல்ல நல்ல கதியா, சொல்லிகீனு கீரே, ஒரே வரிலே,

"வேற பாக்கெட்ல கைய உடாதே" -

இன்னு சொல்றே, செரி, செரி இப்ப யாராவது இவ்ளோ நல்லவங்களா கீரங்களா ?? நம்ப தலில மொளகா அரிக்கெர பசண்கோ தான் கீறாங்கோ!!
அல்லாறோம் பட்சி திருந்துனா செரி தான். ( உனுக்கு இல்லாத ஒட்டா போட்டாச்சி, )

புதியவன் said...

//இன்று நான் சொல்லும் கதை உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இது ராஜா பற்றிய கதையாயிற்றே. //

ராஜா ராணி கதையெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சு...

கதையை படிக்கும் போது மீண்டும்
சிறுவர்களான உணர்வு ரம்யா...

புதியவன் said...

//"வீரர்களே! இந்த ஊரில் எந்தப் பொருள் எடுத்தாலும் அதற்கு உரிய விலையைத் தந்து விடுங்கள்". //

நல்ல நீதிக் கதை...உழைப்பின் ஊதியம் உரியவருக்கே சென்றடைய வேண்டும்...

குடந்தை அன்புமணி said...

விதவிதமாய் வித்தியாசமாய், அழகழகாய், அற்புதமாய்... கதைகள் சொல்லி அசத்துகிறீர்கள்!

kumar-annur said...

இது போன்ற சிறுவர் கதைகளை நிறைய வெளியிடுங்கள். நான் என் குழந்தைகளுக்கு சொல்வதற்கு பயன்படும்.