Tuesday, April 14, 2009

ஆதரவற்ற குழந்தைகளும் - முதியவர்களும்!!

ஆதரவைத் தேடும் ஆதரவற்றோர் குழுமி இருக்கும் சோலைகள்!!

இந்த பதிவு எனது ஐம்பதாவது பதிவு. நான் பதிவு ஆரம்பிக்கும் போது என்னுடன் எனது சகோதரியும், ஒரே ஒரு சகோதரர் மட்டும் தான் இருந்தார்கள்.

ழுத ஆரம்பித்த சிலநாட்களிலேயே ஜீவன் என்ற அருமையான மனிதரை நண்பராகக் கிடைக்கப் பெற்றேன். இதைத் தொடர்ந்து பதிவுலகில் பல நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கிடைக்கப் பெற்றேன்.

ன்று எனது ஐம்பதாவது இடுக்கைக்கிற்கு சகோதரி ராமலக்ஷ்மி மற்றும் ஜீவன் அவர்களும் இந்த இடுக்கை எழுத ஊக்கச்சக்தியாக இருந்தார்கள்.

சகோதரி ராமலக்ஷ்மி எழுதிய தொகுப்பு --> இவர்களும் நண்பர்களே...
நண்பர் திரு.ஜீவன் எழுதிய தொகுப்பு --> இறைவனின் குழந்தைகள்

ழுதச் சொன்ன எனதன்புச் சகோதரி ராமலக்ஷ்மி அவர்களுக்கு எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக்க் கொள்கின்றேன். அதே போல் திரு.ஜீவன் அவர்களுக்கும் எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சில அருமையான பிள்ளைகள் தனது பெற்றோர்களை அன்பான முறையில் கவனித்துக் கொள்கின்றார்கள். நான் ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறை கூறவில்லை. ஆதரவின்றி இதுபோல் இல்லங்களில் வசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களை மையமாக வைத்து இதை எழுதுகின்றேன்.


முதியோர் இல்லங்கள்
======================
தரவற்றோர் இல்லங்கள் பல உள்ளன, அதில் எதைச் சொல்ல. எனக்கு இது போன்ற இல்லங்களின் தொடர்பு சமீப காலமாகத்தான் என்றில்லை - சிறு வயது முதல் எனக்கு இது போன்ற இல்லங்களுடன் தொடர்பு உண்டு. நான் பாட்டியிடம்தான் வளர்ந்தேன். அவர்கள் பாட்டி என்ற அன்பை மட்டும் தான் தர முடியும் இல்லையா? அம்மா மற்றும் அப்பா என்ற அன்பை தர முடியுமா? முடியவே முடியாது!! அப்போது எங்கள் வீட்டின் அருகே ஒரு இல்லம் இருந்தது. அங்கே அடிக்கடி சென்று விடுவேன்.

அவங்களை எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். புரியாத வயது. ஆனாலும் ஏதோ ஒன்று என் மனதில் நெருடிக் கொண்டே இருக்கும். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனது எட்டு வயதில் என் மனதை அரித்த எண்ணங்கள் அவை!! நமக்காவது பாட்டி இருக்காங்க, ஆனா இவங்களுக்கு அந்த உறவு கூட இல்லையே! என்ற எனது நியாயமான கேள்விகள் தான் என்னை வாட்டி எடுத்த நினைவுகள். அடிக்கடி அங்கே சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வேன்.

என்ன உதவி?? பெருக்குவேன், துணிகள் மடித்துத் தருவேன், இல்லத்தின் மேலாளர் கடையில் சென்று ஏதாவது வாங்கி வரச் சொன்னால் அதை வாங்கித் தருவேன். அந்த வயதில் எனக்கு தெரிந்த உதவி அவ்வளவுதான்.

ப்படித்தான் எனக்கு ஆதரவற்றோர் இல்லங்கள் பழக்கமாயின. நான் வளர வளர, இவர்களின் நினைவுகளும்,சந்திப்புகளும் உரம் போட்டது போல் என்னுடனேயே வளர்ந்து வந்தன. பள்ளியில் படிக்கும் போது அந்த வயதின் பரிணாம வளர்ச்சி, கல்லூரியில் படிக்கும்போது சற்றே பகுத்து பார்க்கும் பரிணாம வளர்ச்சி. அதன் பிறகு சிறிது இடைவெளி. நானாக ஏற்படுத்திக் கொள்ளாத இடைவெளி தான் அது. நினைவுகள் மட்டும் கோலோச்சிய நாட்கள் அவை. என் நினைவுகள் மங்கிய நாட்களில்தான் நான் இவர்களை மறந்தேன் என்று கூற வேண்டும். நினைவுகள் மீண்டவுடன் அனைவரையும் சந்த்தித்த அந்த நாள் நான் மறுபடியும் புத்துணர்வை அடைந்த நாளாகும்.

பூ, காய், கனிகள் இவற்றை கிளைகள் தாங்குகின்றன. கிளைகளை மரம் தாங்குகின்றது, மரத்தை வேர்கள் தாங்குகின்றன என்றாலும் அந்த வேர்களைத் தாங்குவது யார்? இங்கே பூமித் தாய் தாங்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையே! ஆனால் நிஜ வாழ்க்கையில், இது போல் கேள்விக் குறியாய் நிற்கும் மரங்களைத் தாங்குவது யார்? இது ஒரு கேள்விதானே? விடை தெரியவில்லை தானே? இதே போல்தான் சில இடங்களில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோர்கள் "ஆதரவற்றோர்கள்" லிஸ்டில் சேர்ந்து விடுகிறார்கள்.

தரவற்றோர்கள் இல்லங்களை மறுவாழ்வு இல்லங்கள் என்றும் கூட கூறலாம். ஏனெனில், அங்கு சேர்ந்த பிறகு பலவிதமான சொந்தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் இந்த ஆதரவற்ற முதியவர்கள். அது போல் ஏற்பட்ட சொந்தங்களை தமது சொந்தங்களாகவே பாவித்து அவர்களுடன் தனது வாழ்க்கைப் பாதையையும் இணைத்து நடக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். எப்படியும் வாரம் ஒரு முறை இது போல் உள்ள இல்லங்களுக்கு சென்று விடுவேன். யாராய் இருந்தாலும் பாரபட்சம் கிடையாது. எல்லோருடனும் பேசுவேன்.

முதியவர்களிடம் கனிவாகவும், அதே நேரத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றவகையில் பேசினால்தான் அவர்கள் விரும்புவார்கள். அவர்களின் முகபாவத்த்ல் இருந்து தெரிந்து கொண்டுவிடுவேன் இவர்கள் என்ன மூடில் இருக்கின்றார்கள் என்று. இதெல்லாம் ஒரு பெருமை கிடையாதுங்க. இது போல் பலரை பார்த்து நான் பெற்ற அனுபவம் தான் காரணம். அவர்களின் மன நிலைக்கு ஏற்ப பேசுவதால் என்னை மிகவும் பிடிக்கும்.

ருகே சென்று அமர்ந்தால், எப்படி வந்தாய், பஸ் என்று கூறினால், ரொம்ப கூட்டமாய் இருந்ததா? என்று கனிவுடன் கேட்பார்கள். கொஞ்சம் களைப்போடு சென்றால் வேலை அதிகமா? இல்லை பஸ்சில் கூட்டத்தில் கஷ்டப்பட்டு வந்தாயா?? இல்லை ஒன்றும் சாப்பிடாமல் வந்தாயா என்று கனிவுடன் விசாரிப்பார்கள் . சாப்பிடவில்லை என்றால் தன்னிடம் உள்ள ஏதாவது ஒன்றை சாப்பிட தருவார்கள். அதை நாம் வாங்கி சாப்பிட்டு விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே நெகிழ்ந்து விடுவார்கள். அருகே அமர்ந்து, நாம் உண்ணுவதை ரசித்து, நம் தலை கோதி கண்களில் நீர் மல்க அமர்ந்த்திருப்பார்கள். சிலர் ஜோடியாகவும் இருப்பார்கள். சிலர் தனியாகவும் இருப்பார்கள்.

தில் என்ன பெரிய விஷயம் என்னவென்றால், அவர்களின் உறவினர்கள் இவர்களை தொடவே மாட்டார்களாம். கூட வந்திருக்கும் குழந்தைகளுக்கு அன்பாக ஏதாவது கொடுத்தால் இவர்கள் முன்னாடியே குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களாம். இதெல்லாம் கூறி கண் கலங்குவார்கள்.

வாழ்க்கையை தொலைத்த பெண்கள்
================================

தே போல் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்ற பெண்கள்- என்ன சொல்வது என்றே தெரியாது, அந்த முகத்தில் குழந்தைதனம் கூட மறைந்திருக்காது, அவர்களின் கைகளில் ஒரு குழந்தை இருக்கும்! இப்படி எல்லோருடனும் சிறிது நேரம் கழிப்பேன். சில பெண்கள் ஒருவரிடமும் பேசவே மாட்டார்கள். என்ன கேட்டாலும் அமைதிதான் காப்பார்கள். அதையும் நிர்வாகம் என்னிடம் கூறும். நிர்வாகம் அந்த பெண்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து கூறச் சொல்லுவார்கள். அதெப்படி பேசாமல் இருப்பது என்று, நான் எப்படியாவது பேச வைத்து விடுவேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், இரண்டாவது முறை சந்திக்கும் போது சென்ற முறையைவிட பேசுவது கொஞ்சம் சுலபமாகத் தெரியும்.

து போல் என் மனதிற்கு தெரிந்தால் அடுத்த நாளே அலுவலகத்தில் விடுப்பு கொடுத்து விட்டு மதியம் சென்று சந்திப்பேன்.. என்னை எதிர்பார்க்காத தருணத்தில் பார்த்துவிட்டால் என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்பார்கள். இப்படித்தான் அவர்களின் மனதில் இடம் பிடித்து, பிறகு விவரம் அறிந்து அவர்களின் பெற்றோகளிடம் சேர்க்கும் வரை எனது பங்கு இருக்கும். அப்போது அந்த பெற்றோர்கள் என்னை கனிவுடன் பார்த்து இவ்வளவு சிறிய வயதில் உனக்கு இவ்வளவு சிரமம் எங்க பொண்ணு வைத்துவிட்டதே நீ நல்லா இருப்பாய் மகளே ! என்று வாழ்த்தியவர்களும் உண்டு.

தற்கும் அவர்களை ஆசுவாசப் படுத்தி அந்த தவற்றையும் மன்னித்து விடுங்கள் என்று கூறுவேன். அந்த இடத்தில் என்னை நிறுத்தி பார்ப்பேன், மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது குற்ற உணர்வுடன் கூறுவேன், ஆனால் அவர்கள் அப்படியே எடுத்துக் கொள்ளுவார்கள். நான் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளுவார்கள். இப்படித்தான் வாழ்க்கைப் பாதை சீராகப் போய்கொண்டு இருக்கின்றது.


மழலை இல்லம்
=================


மேலே காணும் பிறந்து ஆறே நாட்களான நான் பெயர் வைத்த குழந்தை!!

மேலே காணும் குழந்தைகள் தான் நான் கூறிய AIDS என்ற அரக்கன் தாக்கிய குழந்தைகள். இது போல் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். நிர்வாகம் இதற்கு மேல் விவரம் தெரிவிக்க விரும்பவில்லை.

தரவற்றோர் இல்லம் ஒன்றில் "மழலை இல்லம்" என்று ஒரு பகுதி. அதில் இருக்கும் மழலை பட்டாளங்களுக்கு நான் மிகவும் பழக்கம். பேச தெரியாது. ஆனால் என்னை அந்த பிஞ்சு மனங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும், என்னை பார்த்தவுடன் துள்ளுவார்கள். சிரிப்பார்கள், தூக்கச் சொல்லி அடம் பிடிப்பார்கள். இதில் ஒன்றிற்கு இரண்டாகப் போட்டி வேறு. இருக்கும் எல்லாரையும் தூக்கி கொஞ்சி விட்டு படுக்க வைத்தால்தான் அடங்குவார்கள். இல்லையென்றால் அடம்தான் அதிகமாகும். அந்த குழந்தைகள் அத்தனையும் தூக்கிக் கொண்டு வந்திடலாமான்னு ஆசையா இருக்கும்.

தில் பெரிய வருத்தம் என்னவென்றால் சில குழந்தைகளுக்கு AIDS என்ற அரக்கன் தாக்கி இருக்கிறான் என்பது தான் மிகப் பெரிய சோகம். உள்ளே நுழைந்தவுடனே எல்லாம் ஓடி வந்து நம்மை கட்டிக்கொள்ளும். இதில் பல குழந்தைகளுக்கு நானும், எனது சகோதரியும் பெயர் வைத்து இருக்கின்றோம். பல குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டு வெளிநாடு சென்று விட்டன. அது போல் குழந்தைகள் அதிகம் கிடைக்கும் இடம் பஸ் நிறுத்தம்தான். இவர்களுக்கு மருத்தவர்கள் கொடுக்கச்சொல்லும் உணவு மிகவும் சிறந்ததாக இருக்கும். இப்படியும் சில குழந்தைகள் வளருகிறார்கள். உடலுக்கு போடும் சோப்பில் இருந்து உட்கொள்ளும் உணவு வரை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கொடுப்பார்கள். ஏனெனில் பிறந்தவுடன் எடுத்து வரும் குழந்தைகள்தான் இங்கே அதிகம்.

வ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனி தொட்டில்கள், ஐந்து குழந்தைகளுக்கு ஒரு பணிப்பெண். சுத்தமாக எப்போதும் வைத்திருத்தல். அருமையான நிர்வாகம். தனியாரோடதுதான். அதில் ரெண்டு குழந்தைகளை எடுத்து வந்திடலாமான்னு மனது அடம் பிடிக்கும். ஆனால் எங்க குடும்ப நண்பர் வக்கீலாக இருக்கிறார். இப்போது நல்லாத்தான் இருக்கும் காலப் போக்கில் நீ தேர்ந்தெடுத்திருக்கும் வாழ்க்கைக்கு பெரிய களங்கத்தை உண்டு பண்ணும் என்றார். அதனால் அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கிட்டேன்.

வெளியாட்கள் பல தடைகளைத் தாண்டித்தான் அந்த குழந்தைகளை சந்திக்க முடியும். வெளியில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் - ச்சான்சே இல்லே. யாரும் நேரடியாக கொடுக்க முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு! அதனால் குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கின்றன. அதே போல் தத்து எடுத்துக் கொள்ள வருபவர்களும் அவ்வளவு சுலபமாக தத்து எடுக்க முடியாது. எல்லாமே சட்டத்திற்கு உட்பட்டுதான் கொடுப்பார்கள். பிறகு அவர்கள் நல்ல முறையில் வளர்கிறார்களா என்பதையும் நிர்வாகம் பொறுப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்.

வர்களை நான் ஆதரவற்ற குழந்தைகள் என்றே கூற மாட்டேன், அவர்களுக்குத் தான் நாம் இருக்கின்றோமே என்று நிர்வாகத்திடம் கூறுவேன். இந்த இல்லத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள், விவரம் அறியாப் பருவத்திலேயே வளர்ப்புப் பெற்றோர்களை அடைந்து விட்டால், அவர்களின் வாழ்க்கையில் துன்பமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களையும் அந்த செல்வங்கள் பெறவேண்டும் என்றும் நான் எண்ணுவதுண்டு. ஆனால் அவ்வாறு ஒரு வாழ்க்கை அமையாதவர்கள், அந்த இல்லத்திலேயே வளர்வதும் உண்டு. அது போல் வளர்பவர்கள் தனது வாழ்க்கை மிகவும் சோகத்தில் இருப்பது போல் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.

வர்களுக்கு நல்ல கல்வி, நல்ல உடைகள், நேரத்திற்கு தேவையான உணவு இவற்றை கொடுத்தாலே போதும் நிர்வாகத்திற்கு மிகவும் உதவியாக இருக்குமே. அவர்களுடன் சில மணி நேரம் கழித்தால் அவர்களின் சோகம் தவிர்க்கப்படும்.

ந்த இல்லம்தான் சிறந்தது, அந்த இல்லம் தான் சிறந்தது என்று நான் எதையும் கூறமாட்டேன். எனக்கு தெரிந்த வரையில் நிறைய இல்லங்கள் புற்றீசல் போல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை நாமும் செய்து வருகின்றோம்.

இது போல் உள்ளவர்களுக்கு உதவிக் கரம் இன்னும் அதிகமானால் சந்தோஷமே. அருகில் உள்ள இல்லங்களுக்கு சென்று தன்னால் இயன்ற சிறு உதவின்னாலும் போதுமே.

னால் எவ்வளவோ செலவு செய்கின்றோம். நம்மால் முடிந்த நேரத்தில், முடிந்த பொருட்களை இந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் வாங்கிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒருநாள் முழுவதும் அவர்களுடன் கழிக்கும் சுகம் வேறு எதிலும் வராது. அந்த அருமையான உணர்வை நானும் அனுபவித்திருக்கின்றேன். என்னைப் போல் நிறைய பேர் அனுபவித்து இருப்பார்கள். அந்த சுகத்திற்கு வேறு எதுவும் ஈடு ஆகாது.

ந்த தலைப்பு பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவே இருக்காது. ஆனாலும் நான் இப்போது முடிக்கும் பகுதிக்கு வந்து விட்டேன். மற்றவைகளை அடுத்து ஒரு சந்தர்ப்பம் வரும்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

மறுபடியும் என்னை எழுதத் தூண்டிய சகோதரி ராமலக்ஷ்மிக்கும், நண்பர் ஜீவனுக்கும் நன்றி.

இப்போதெலாம் நேரடியாகவே சிலரை தேர்ந்தெடுத்து எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இல்லங்களில் இருப்பவர்களை நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வருவோம். அதே போல் சுனாமியில் சிக்கி தனித்து விடப்பட்ட குழந்தைகளை கவனித்து வருகின்றோம். அவர்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். கல்வி அறிவைக் கொடுத்தால் அவர்கள் பலரை காப்பாற்றலாம் அல்லவா??

எனது எதிர்காலத் திட்டம்
=========================

தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.

95 comments :

நட்புடன் ஜமால் said...

50க்கு வாழ்த்துகள்


எங்கள் கையும் உண்டு.

நட்புடன் ஜமால் said...

\\தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.\\

அவசியம் நாங்கள் இருப்போம்.

நட்புடன் ஜமால் said...

\\எழுதச் சொன்ன எனதன்புச் சகோதரி ராமலக்ஷ்மி அவர்களுக்கு எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக்க் கொள்கின்றேன். அதே போல் திரு.ஜீவன் அவர்களுக்கும் எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். \\

எமது நன்றிகளும் இவர்களுக்கு

இப்படி ஒரு எழுத்தாளரை அறிய தந்தமைக்கு.

Suresh said...

50 க்கு வாழ்த்துகள் தோழி :-)

Suresh said...

ஒரு அருமையான பதிவால் 50 அடித்து இருக்கிங்க ரம்யா ... வோட்டும் போட்டாச்சு தமிஷ்ல

Suresh said...

//வர்களின் உறவினர்கள் இவர்களை தொடவே மாட்டார்களாம். கூட வந்திருக்கும் குழந்தைகளுக்கு அன்பாக ஏதாவது கொடுத்தால் இவர்கள் முன்னாடியே குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களாம்/

மனசு கஷ்டம் ஆனது ஆனால் அது தானே உண்மை

Suresh said...

//இது போல் உள்ளவர்களுக்கு உதவிக் கரம் இன்னும் அதிகமானால் சந்தோஷமே. அருகில் உள்ள இல்லங்களுக்கு சென்று தன்னால் இயன்ற சிறு உதவின்னாலும் போதுமே.//

நல்ல விஷியத்தை சொல்லி இருக்கிங்க
கண்டிப்பா இன்னும் நிறையா செய்வ்வோம்

புதியவன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரம்யா...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் ரம்யா...

நாமக்கல் சிபி said...

முதலில் 50க்கு வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

50வது பதிவுக்கு வாழ்த்துகள்:)

புதியவன் said...

//அவங்களை எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். புரியாத வயது. ஆனாலும் ஏதோ ஒன்று என் மனதில் நெருடிக் கொண்டே இருக்கும். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனது எட்டு வயதில் என் மனதை அரித்த எண்ணங்கள் அவை!! நமக்காவது பாட்டி இருக்காங்க, ஆனா இவங்களுக்கு அந்த உறவு கூட இல்லையே! //

துண்டிக்கப் பட்ட உறவுகளால் தூண்டிலில் மாட்டிய மீன் போலத்தான் இவர்கள் உள்ளமும் துடித்துக் கொண்டிருக்கும்...

கார்க்கிபவா said...

முதல்ல வாழ்த்துகள சொல்லிக்கறேன் :))

தேவன் மாயம் said...

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

\எழுதச் சொன்ன எனதன்புச் சகோதரி ராமலக்ஷ்மி அவர்களுக்கு எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக்க் கொள்கின்றேன். அதே போல் திரு.ஜீவன் அவர்களுக்கும் எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.///

நல்ல நன்றி நவிலல்!!!

ஆ.ஞானசேகரன் said...

//பூ, காய், கனிகள் இவற்றை கிளைகள் தாங்குகின்றன. கிளைகளை மரம் தாங்குகின்றது, மரத்தை வேர்கள் தாங்குகின்றன என்றாலும் அந்த வேர்களைத் தாங்குவது யார்? இங்கே பூமித் தாய் தாங்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையே!//

வாவ்வ்வ்வ் நல்ல எதார்த்த நிலைகள்

தேவன் மாயம் said...

ஆனால் எவ்வளவோ செலவு செய்கின்றோம். நம்மால் முடிந்த நேரத்தில், முடிந்த பொருட்களை இந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் வாங்கிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒருநாள் முழுவதும் அவர்களுடன் கழிக்கும் சுகம் வேறு எதிலும் வராது. அந்த அருமையான உணர்வை நானும் அனுபவித்திருக்கின்றேன். என்னைப் போல் நிறைய பேர் அனுபவித்து இருப்பார்கள். அந்த சுகத்திற்கு வேறு எதுவும் ஈடு ஆகாது.///

உண்மைதான்!!

புதியவன் said...

//அதே போல் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்ற பெண்கள்- என்ன சொல்வது என்றே தெரியாது, அந்த முகத்தில் குழந்தைதனம் கூட மறைந்திருக்காது, அவர்களின் கைகளில் ஒரு குழந்தை இருக்கும்!//

சமூகத்தால் தீர்க்கப்பட வேண்டியது இந்த அபலைப் பெண்களின் அவல நிலை...

புதியவன் said...

//இதில் பெரிய வருத்தம் என்னவென்றால் சில குழந்தைகளுக்கு AIDS என்ற அரக்கன் தாக்கி இருக்கிறான் என்பது தான் மிகப் பெரிய சோகம். //

இதைப் படிக்கும் போது மனம் ரணமாகிறது...

priyamudanprabu said...

50க்கு வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

அத்தனையும் நெகிழ வைக்கின்றது.. வாழ்த்துக்கள்... தொடருங்கள் உங்கள் உதவிகளை.. எல்லொராலும் இது முடியாது..உங்களால் மீண்டும் மனம் திரந்த வாழ்த்துகளுடன் பாராட்டுகள்..

புதியவன் said...

//இவர்களை நான் ஆதரவற்ற குழந்தைகள் என்றே கூற மாட்டேன், அவர்களுக்குத் தான் நாம் இருக்கின்றோமே என்று நிர்வாகத்திடம் கூறுவேன்.//

மனம் நெகிழ்ந்தது ரம்யா...

priyamudanprabu said...

50க்கு வாழ்த்துகள்

நானெல்லாம் ட்ராவிட் மாதிரி கொஞ்சம்(!!!) லேட் ஆகும்

priyamudanprabu said...

///
//அதே போல் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்ற பெண்கள்- என்ன சொல்வது என்றே தெரியாது, அந்த முகத்தில் குழந்தைதனம் கூட மறைந்திருக்காது, அவர்களின் கைகளில் ஒரு குழந்தை இருக்கும்!//
////

இது கவனிக்க படவேண்டிய விடயம்

gayathri said...

50 க்கு வாழ்த்துகள் தோழி

gayathri said...

தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.\\

vazththukkal akka

Ungalranga said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

உங்களின் மனிதநேயம் பாராட்டுக்குரியது.

வாழ்த்துக்கள்!!

सुREஷ் कुMAர் said...

தமிழ் புத்தாண்டு மற்றும் 50க்கு வாழ்த்துகள்..

இராகவன் நைஜிரியா said...

50 வது இடுகைக்கு வாழ்த்துகள் தங்கச்சி ரம்யா.

மிக அருமையான இடுகை.

\\தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.\\

இதில் என்னையும் இணைத்துக் கொள்ள ஆசை உண்டு.

kanagu said...

50 vathu pathivirku vazhthukkal akka..

/*தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது. */

enadhu vazhuthukkal nichayamaaga undu :)

ungaladu indha pani magizhchikkuriyathu.. thodarnthu seiyunga akka.. naanum ennal mudintha udavigalai seiven :)

me the 30th :)

நாமக்கல் சிபி said...

\\தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.\\

எங்கள் ஆதரவும் வாழ்த்துமமெப்பொழுதும் உண்டு!

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள் அக்கா..

ராமலக்ஷ்மி said...

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழும் உங்களது ஐம்பதாவது பதிவும் அதே போல. வேறென்ன சொல்ல? வார்த்தைகள் எழவில்லை. உங்கள் கனவு பலிக்க எங்கள் எல்லோரது வாழ்த்துக்களும் என்றைக்கும் உங்களோடு இருக்கும்.

sakthi said...

//பூ, காய், கனிகள் இவற்றை கிளைகள் தாங்குகின்றன. கிளைகளை மரம் தாங்குகின்றது, மரத்தை வேர்கள் தாங்குகின்றன என்றாலும் அந்த வேர்களைத் தாங்குவது யார்? இங்கே பூமித் தாய் தாங்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையே!//

arumayana pathivu ramya

ராமலக்ஷ்மி said...

உங்களது இப்பதிவின் லிங்கையும் எனது பதிவுடன் இணைத்துக் கொண்டதில் பெருமையுறுகிறேன், நன்றி ரம்யா.

ஸ்ரீ.... said...

50 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடந்து எழுதுங்கள். எனது 100 ஆவது பதிவை இன்று வெளியிடுகிறேன்.

ஸ்ரீ....

வால்பையன் said...

50-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

http://urupudaathathu.blogspot.com/ said...

50க்கு வாழ்த்துகள்

வால்பையன் said...

நீங்கள் சுட்டிகாட்டிய யாவரும் வாழ்க்கையை தொலைத்த்வர்கள் அல்ல!
வாழ்க்கையில் தொலைக்கடிக்கப்பட்டவர்கள்!

எனக்கு இவர்களுடன் பெரிதாக பரிச்சியமில்லை! ஆனால் என்னால் முடிந்த செய்ய தவறிய கடமைகளை செய்ய வேண்டும் என நினைப்பேன்.

முதியவர்களுக்கு நாம் செய்வது உதவி என்று சொல்லவேண்டாம். அது அவர்கலை சிறுமை படுத்தும் வார்த்தை.
முதியவர்களுக்கு நாம் பணிவிடை செய்ய வேண்டியது நம் கடமை.

பழமைபேசி said...

உங்கள் முயற்சிகள் கை கூட வாழ்த்துகள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் எண்ணமும், எதிர்காலத்திட்டமும் ஈடேற எனது வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் எண்ணமும், எதிர்காலத்திட்டமும் ஈடேற எனது வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் 50 வது பதிவுக்கு

இன்னும் மெம்மேலும் உங்க நல்ல பதிவுகள் மக்களை சென்றடைந்து பயன்பெற வாழ்த்துக்கள்

சென்ஷி said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

Prabhu said...

//வர்களின் உறவினர்கள் இவர்களை தொடவே மாட்டார்களாம். கூட வந்திருக்கும் குழந்தைகளுக்கு அன்பாக ஏதாவது கொடுத்தால் இவர்கள் முன்னாடியே குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களாம்/
//
ஏதொ கவனிக்க முடியாம தான் இப்படி விடுறாங்கன்னு நினைச்சேன். இப்படி குப்பையில போடுற அளவு அவங்க மேல என்ன வெறுப்பு. அவங்க பசங்க அப்படி கழட்டி விட்டாத்தெரியும்.

Sanjai Gandhi said...

50வது பதிவிற்கு வாழ்த்துகள். மிக நெகிழ்ச்சியான பதிவு.

உங்கள் முயற்சிகள் கனவுகள் அனைத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

Rajeswari said...

முதலில் 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

\\தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.\\

கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேறும்..அவசியம் நாங்களும் இருப்போம்..வாழ்த்துக்கள்..

Anonymous said...

இரம்யா
இது பதிவு அல்ல பகிர்வு
பகிர்வு அல்ல பரிந்துரை
பரிந்துரை அல்ல பாசம் பாசம் அல்ல கடமை கடமை அல்ல உணர்வு உணர்வு அல்ல நேசம் நேசம் அல்ல இது உன் சுவாசம் உன் எண்ண ஓட்டதின் சுவாசம் இந்த பதிவு.இந்த நேர் கொண்ட உணர்வு ஏன் இங்கு எனக்கு இல்லை...உன் சீறிய சிந்தனை அதை செயலாற்றும் பண்பு எனக்கு எல்லாம் நீ ஒரு உதாரணம்...மனிதம் பிறப்பு இல்லை உருவாக்கம்...
முதியோர் இல்லம் அன்பு இல்லம் அபலைகள் இல்லம் இவை நாம் வளர்ந்து வருவதை கோடிடவில்லை..விழுந்து கொண்டு இருக்கிறோம் என்பதையே குறிக்கிறது..இதை ஒரு பதிவாகவே பார்க்க முடியவில்லை அப்படி ஒரு பாதிப்பு கொள்கை அற்ற கோமாளிகள் தாய்மை இல்லா பெண் உள்ளம்கள் ஆண்மை அற்ற அறிவிலிகளால் எத்தனை எத்தனை கொடுமைகள்....அறிவை இழக்காதீர் அவசர படாதீர் எல்லருக்குமே கை அளவு மனசே...வலிக்க செய்யாதீர் வாழசெய்யுங்கள்...
உனக்கு தோல் கொடுத்து தோழமை சொன்ன உன் அன்பு நெஞ்சம்களுக்கும் நன்றி...
50வது பதிவு அழவைத்து விட்டாய்
அடுத்து அடுத்து 50 100 என அர்த்தமுள்ள பதிவுகளை பதிக்க எங்கள் நெஞ்சம்களில் உன் நினைவு என்றும் உதிக்க வாழ்த்துக்கள் ரம்யா....

மங்கை said...

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. உங்கள் உணர்வுகள் போற்றத்தக்கவை.. உங்கள் ஆசை, எதிர்கால கனவு நனவாக என் மனதார்ந்த வாழ்த்துக்கள்.. இந்த உணர்வும் முனைப்பும் உங்களுக்கு உறுதுனையாக இருந்தும்

அபி அப்பா said...

50

அபி அப்பா said...

ரம்யா உன் 50 வது பதிவிலே 50 வது பின்னூட்டம் போட்டான் பாரு உன் அண்ணாத்த அங்க தான் நிக்குறான்!

எலேய் அபிஅப்பா நீ கிரேட்டுடா:-)

அப்பாவி முரு said...

50 கிடக்குது., 50...

எண்ணிக்கையில் என்ன இருக்கு.,

எல்லாமே மேலே உள்ள எழுத்தில் இருக்கு.

படிக்கவே வருத்தமா இருக்கு., அங்கே வாழ்ந்துகிட்டு இருக்காங்க...

என்ன சொல்லுறதுன்னே தெரியலை...

வேத்தியன் said...

50வது பதிவுக்கு வாழ்த்துகள் ரம்யா அக்கா...

வேத்தியன் said...

தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.//

இந்த நியாயமான ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்...

ஆயில்யன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்ம்மா :)

ராம்மோகன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

”மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?”

”வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி தான் சாரல்...

சாரலில் இணையுங்கள்...

மேலும் விவரங்களுக்கு....

http://rammohan1985.wordpress.com/2008/11/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/

SK said...

50க்கு வாழ்த்துகள்

உங்கள் நற்செயல்கள் தொடர வாழ்த்துக்கள். எங்கள் துணை எப்போதும் உண்டு.

ஆளவந்தான் said...

நெகிழ வச்சுட்டீங்க.

ஆளவந்தான் said...

50 வது பதிவுக்கும். உங்களது கருணை உள்ளத்துக்கும் வாழ்த்துக்கள் :)

ஆளவந்தான் said...

இது 60 வது பின்னூட்டம்

பாலகுமார் said...

உங்கள் முயற்சிகள் மற்றும் கனவுகள் நிச்சியம் நிறைவேறும்.
வாழ்த்துக்கள்...

sury siva said...

// முதியவர்களிடம் கனிவாகவும், அதே நேரத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றவகையில் பேசினால்தான் அவர்கள் விரும்புவார்கள். அவர்களின் முகபாவத்த்ல் இருந்து தெரிந்து கொண்டுவிடுவேன் இவர்கள் என்ன மூடில் இருக்கின்றார்கள் என்று. இதெல்லாம் ஒரு பெருமை கிடையாதுங்க. இது போல் பலரை பார்த்து நான் பெற்ற அனுபவம் தான் காரணம். அவர்களின் மன நிலைக்கு ஏற்ப பேசுவதால் என்னை மிகவும் பிடிக்கும்.
//

எங்களது ஸீப்ராஸ் பார்க்குக்கு ஒரு தொண்டு கிழவர் ( வயது 89 ) அவ்வப்பொழுது வருவார்.
சென்னையை அடுத்த ஒரு என்.ஆர்.ஐ, நிறுவனம் நடத்தும் முதியவர் இல்லத்தில் இருக்கிறார்.
அங்கே டெபாசிட் தொகை ரூ.10 லட்சம். மாதக்கட்டணம் ரூ 10 ஆயிரம். எல்லா வசதிகளும்
இருக்கின்றன . டி.வி, ஸெல், எல்லாம் இருக்கின்றன. மருத்துவ வசதிகளும் இறந்து போனால் நேர்த்திக்கடனும் செய்ய வசதிகள் இருக்கின்றன. பேசுவதற்குத் தான் ஒரு துணை இல்லை.
அவரது ஒரே மகன் அமெரிக்காவில் இருக்கிறார். மாதம் பிறந்தால் அவருக்கான் கட்டணம் செலுத்தப்பட்டு
விடுகிறது எலக்ட்ரானிக் க்ளியரன்ஸில்.

அவருடைய ஏதோ சொந்தம் என்று சொல்லி, இங்கு வரும்போது, அந்த பெஞ்சில் உட்கார்ந்திருப்பார்.
யாராவது அவருடன் பேசமாட்டார்களா என அவரது முகம் சொல்லும்.

ஒரு தரம் என்னிடம் கேட்டார். இங்கு உங்களுடன் இருப்பது யார் ? என்றார். ஒருவருமில்லை. எனது
குழந்தைகளும் வெளி நாடுகளில் தான் இருக்கின்றனர். அவர்களது உடமைகளைப்பார்த்துக்கொண்டு
நான் ஒரு வாட்ச்மேன் ஆக இருக்கிறேன், என்றேன்.

" உங்களுக்கு விருப்பமென்றால், நீங்களும் நான் இருக்கும் இல்லத்துக்கு வாருங்கள். பேசிக்கொண்டிருக்கலாம். டெபாசிட் தொகையைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதை என் பையன்
கட்டிவிடுவான் " என்றார்.

" வருகிறேன் " என்றேன். ஒரு கணம் அவர் முகம் பிரகாசித்தது.

சுப்பு ரத்தினம். ( 67 )
http://arthamullavalaipathivugal.blogspot.com

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் உங்கள் அளப்பறிய சேவைக்கும் ஐம்பதுக்கும்

குடுகுடுப்பை.

சின்னப் பையன் said...

அட்டகாசமான பதிவு. அருமையான சேவை செய்கிறீர்கள். வாழ்த்துகள் சகோதரி...

Vijay said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்:-)

உங்கள் பதிவைப் படித்து ரொம்பவே நெகிழ்ந்துவிட்டேன். முழுநேரமாக இம்மாதிரி ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகளுக்கு உதவ முடியாவிட்டாலும், சில என்.ஜி.ஓ’க்கள் மூலமாக அவ்வப்போது உதவி செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்தவுடன். இன்னும் கூட நிறைய உதவி செய்ய வேண்டும் என்ற ஆவல் வலுப்பெறுகிறது.

நிகழ்காலத்தில்... said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

காப்பகம் சம்பந்தமான பதிவு
http://arivhedeivam.blogspot.com/2009/04/blog-post_14.html
நேரமிருந்தால் படித்து பாருங்களேன்..

sarathy said...

வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் வலை(நற்)ப்பணி...

pudugaithendral said...

முத்தான பதிவாக மலர்ந்திருக்கும் 50தாவதுபதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்கண்ணன் said...

வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள்சேவை..

அண்ணன் வணங்காமுடி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்

அண்ணன் வணங்காமுடி said...

உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை. தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்

வீரசிங்கம் said...

வாழ்த்துக்கள் ரம்யா அவர்களே உங்கள் இந்த உத்விகள் அனைவரும் பின்பற்ற வேண்டும்

Unknown said...

உங்களோட ஐம்பதாவது பதிவிற்கு எம்பட வாழ்த்துக்கள்......!!! அதுவும் ஐம்பதாவது பதிவ ..... மிகவும் அருமையான பதிவா போட்டதற்கு எம்பட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!!

" வாழ்க வளமுடன்......."

பட்டாம்பூச்சி said...

நெகிழ வைக்கும் பதிவு.
உங்கள் உயர்ந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

டவுசர் பாண்டி said...

யக்கா !! ஊ பதிவுக்கு மொதல்ல எ வாய்த்து,சொம்மா பிகுலு கணக்கா, இத்தினி பதிவு போட்டியே , சூப்பர் யக்கா !

இந்த பதிவுல எதுக்குமே அசராத என்ன கூட இந்த மேட்டரு கண்ணு கலங்க வச்சிட்சிபா !! எல்லாரு நல்லா இருக்கணும் , அவுங்குளுக்கு உதவ உன்ன மேரி நேரீ பேரு வரணும் அதான், இந்த பதிவுக்கு கெடிக்கெர மருவாதி !! நீ நல்லா இருக்கணும் யக்கா. வாய்க.

KarthigaVasudevan said...

அருமையான நல்ல பதிவு ...உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ரம்யா

தத்துபித்து said...

UNGAL SEVAI THODARA VAZHTHUGAL.
ENNAL MUDINTHA UDAVI SEIGIREN

அமுதா said...

அருமையான பதிவு. உங்கள் நல்ல எண்ணம் சிறப்பாக ஈடேற வாழ்த்துகள்

Unknown said...

ஆவ்வ்....!! ஆவ்வ்....!! நீங்கோ நெம்போ நல்லவீங்கோ அம்முனி.......!!!!



ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............!!!!!!

sakthi said...

அதே போல் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்ற பெண்கள்- என்ன சொல்வது என்றே தெரியாது, அந்த முகத்தில் குழந்தைதனம் கூட மறைந்திருக்காது, அவர்களின் கைகளில் ஒரு குழந்தை இருக்கும்!

intha kodumaiku endru vidivu

sakthi said...

ரம்யா உங்கள் பதிவு பார்த்து
என் மனம் ஏனோ நெகிழ்கின்றது
ஒரு லட்சியப் பெண்ணாக உங்கள்
முகம் என் கண்ணில்

என்னால் முடிந்த உதவிகளை
கண்டிப்பாக செய்துகொண்டே
வாழ்கையில் அதிக பட்ச வலியை
காணும் இவர்களின் வாழ்வு சிறக்க‌
பிரார்திக்கிறேன்

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள்:))

விகடனில் இந்த பதிவு:0)

தாரணி பிரியா said...

50க்கு வாழ்த்துக்கள் ரம்யா

உங்க நல்ல மனதுக்கு எங்கள் ஆதரவும் இருக்கு

அ.மு.செய்யது said...

ஐம்பதாவது பதிவு வாழ்த்துக்கள்.

நெகிழ வைத்து விட்டீர்கள்.

உங்கள் எதிர்கால திட்டத்திற்கு நிச்சயம் எங்களால் ஆன உதவிகளை செய்ய விழைகிறோம்.

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.\\

அவசியம் நாங்கள் இருப்போம்.
//

சொன்னம்ல...

harveena said...

great ramya,, congrats for this golden jublie,,, expectg for diamond too,, all the best

Thamira said...

நெகிழவைத்த பதிவு.. மனப்பூர்வமான வாழ்த்துகள் 50வது பதிவுக்கு மட்டுமல்ல.. உங்கள் அழகான மனதுக்கும்.!

காமாட்சி said...

vaazththukkaL.
kamatchi.

kumar-annur said...

உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு. வாழ்த்துக்கள்.

S.Arockia Romulus said...

ஏறி பயணித்த பின் பயணிகள் ஓடங்களை ஒதுக்குமிடம்
முதியோர் இல்லம்.

biskothupayal said...

உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு.
வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் said...

நன்றி ரம்யா! நல்ல வலிமையான பதிவு! இது போன்ற இல்லங்களுக்கு நீங்கள் செய்து வரும் சேவைகள் மகத்தானது! உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும்! அதற்க்கு நம் வலையுலக நண்பர்களின் வாழ்த்துகளும் உதவிகளும் கண்டிப்பாக இருக்கும்!

RAMYA said...

வந்து வாழ்த்திய அனைத்து எனதன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி!!

RAMYA said...

நன்றி --> நட்புடன் ஜமால்
நன்றி --> சுரேஷ்
நன்றி --> புதியவன்
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> நாமக்கல் சிபி
நன்றி --> பூர்ணிமா சரண்
நன்றி --> கார்க்கி
நன்றி --> தேவா
நன்றி --> பிரியமுடன் பிரபு
நன்றி --> gayathri
நன்றி --> ரங்கன்
நன்றி --> ராமலக்ஷ்மி(எழுதத் தூண்டியதே நீங்கள்தானே)

நன்றி --> சுரேஷ் குமார்
நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> Kanagu
நன்றி --> நாமக்கல் சிபி
நன்றி --> Shakthi
நன்றி --> ஸ்ரீ
நன்றி --> வால்பையன்
நன்றி --> பழமைபேசி
நன்றி --> அபி அப்பா
நன்றி --> அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி --> உருப்புடாதது_அணிமா
நன்றி --> அபுஅஃப்ஸர்
நன்றி --> pappu
நன்றி --> Sanjay
நன்றி --> வேத்தியன்
நன்றி --> Rajeswari
நன்றி --> தமிழரசி
நன்றி --> மங்கை
நன்றி --> ஆயில்யன்
நன்றி --> ராம்மோகன்
நன்றி --> S.K.
நன்றி --> ஆளவந்தான்
நன்றி --> Balakumar
நன்றி --> Sury
நன்றி --> ச்சின்னப் பையன்
நன்றி --> விஜய்
நன்றி --> அறிவே தெய்வம்
நன்றி --> Sarathy
நன்றி --> புதுகைத் தென்றல்
நன்றி --> ஸ்ரீதர்கண்ணன்
நன்றி --> அண்ணன் வணங்காமுடி
நன்றி --> வீரசிங்கம்
நன்றி --> லவ்டேல் மேடி
நன்றி --> பட்டாம்பூச்சி
நன்றி --> டவுசர் பாண்டி.
நன்றி --> மிஸஸ்.தேவ்
நன்றி --> தத்துபித்து
நன்றி --> அமுதா
நன்றி --> Shakthi
நன்றி --> தாரணி பிரியா
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> harveena
நன்றி --> ஆதிமூலகிருஷ்ணன் (என் பதிவிற்கு முதல் வரவு)

நன்றி --> Kamatchi
நன்றி --> Kukar-Annur
நன்றி --> S.Arockia Romulus
நன்றி --> Biskothupayal
நன்றி --> ஜீவன் (இந்த பதிவு எழுத நீங்களும் ஒரு காரணம்)

Thenammai Lakshmanan said...

ராமலக்ஷ்மி said...
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழும் உங்களது ஐம்பதாவது பதிவும் அதே போல. வேறென்ன சொல்ல? வார்த்தைகள் எழவில்லை. உங்கள் கனவு பலிக்க எங்கள் எல்லோரது வாழ்த்துக்களும் என்றைக்கும் உங்களோடு இருக்கும்.

//

வேறென்ன சொல்ல ரம்யாப் பெண்ணே.. உங்கள் கனவுகள் பலிக்க வாழ்த்துக்கள்..