கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் .
தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன். ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் .
அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.
உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது. விதி வலியது. யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான்.
சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்! கல்லூரி இறுதி ஆண்டு. அந்த இறுதி ஆண்டு முடிவதற்குள், வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை. கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான். அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.
எல்லாரும் சேர்ந்து கேரளா டூர் போனோம். கேரளாவில் ஒரு தோழியின் வீடு உள்ளது. அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள்.
அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம். ரொம்ப நல்ல முடிவுதான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது. தனியா போக பயம், அதனாலே ஒரு தோழியை அழைத்துக் கொண்டு போனேன். கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம். சினிமா காட்சி தோற்றுப் போய்விட்டது போங்க.
ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு. வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா? அப்படீன்னு யோசிச்சேன். என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.
ஏற்கனவே தனது கழுத்தில், கையில், காதுகளில் இருந்து பறிகொடுத்த தோழிகள் திரு திரு என்று சத்தம் போடாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நான் கை கழுவ போய் இருந்ததால் விளக்கை அணைக்கவில்லை. எங்களைப் பார்த்தவுடன் எனது தோழிக்கு கண்களில் ஒரு பிரகாசம். எப்படியும் நான் காப்பாற்றி விடுவேன் என்று. நான் எங்கே காப்பாற்றுவது! நானே கால்கள் நடுங்க அடுத்த அடி எடுத்து வைத்தால் திருடன் என் பக்கம் திரும்பி விடுவானோன்னு ஒரே பயம்.
ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள், விளக்கும் போட்டார்கள், ஆனால் ஒருவரும் அருகே வரவில்லை.
ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது. பின்னால் இருந்து கண்களை துணியால் மூடியவுடன், அந்த திருடன் ஆவேசமானான். கத்தியை காற்றில் சகட்டு மேனிக்கு வீசினான். அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன். எனது தோழிகள் இருந்த இடம் தெரிய வில்லை.
ஆனாலும் பிடியை தளர்த்த வில்லை.உள்ளூர ஒரே பயம்! ஆனாலும் அசட்டு தைரியம்தான். எங்களோட போராட்டத்தை பார்த்து இரெண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள். கட்டுவதற்கு கயறு இல்லை. ஒரு இளைஞன் தேடும் படலத்தில் ஈடுபட்டான். அருகில் ஒருவர் தலையில் துண்டு கட்டி இருந்தார், அதை கேட்டால் தர மறுத்தார். நான் அந்த துண்டை உருவச்சொல்லி அந்த துண்டை வைத்து திருடனின் கைகளை கட்டுமாறு கூறினேன். ஒரு இளைஞன் நான் கூறியதுபோல் செய்தான், மற்றொரு இளைஞனை ரயிலின் சங்கிலியை பிடித்து இழுக்கச் செய்தனர் என் தோழிகள். ரயிலு நின்னுடுச்சு. உடனே முக்கியமான நிர்வாகிகள், எங்க TTR எல்லாரும் எங்க இடத்துக்கு வந்துட்டாங்க.
ஒரு ஊரு வந்தவுடன் அங்கே அந்த திருடனை இறக்கி, எங்களையும் ரயில்லே இருக்கற போலீஸ்காரங்க போலீஸ் ஸ்டேஷன் வரை வரச்சொன்னாங்க. எனக்கு ஒரே பயமா போச்சு. ஏன்னா வீட்டுக்கு தெரியாம டூர் வந்திருக்கேன் அது முதல் பயம்! அப்புறமா போலீஸ் என்றால் அதைவிட ரொம்ப பயம். நான் எல்லாம் வரமாட்டேன் என்று அடம் பிடிச்சேன்.
அப்புறமா எல்லாரும் தைரியம் கூறி அனுப்பிவைத்தார்கள். ஆனால் திருடனோட கண்ணில் கட்டி இருக்கும் துணியை கழட்ட கூடாது. கழட்டினால் அவன் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு அப்புறம் வந்து கத்தியாலே குத்தி விடுவான் என்று ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன். அவரு சரி என்றார்.
ஸ்டேஷன் போய் எனது தோழிகளின் நகைகளை கேட்டோம். போலீஸ்காரங்க தரமாட்டோம், அவன் பையிலே நிறைய நகைகள் இருக்கு.
அதுனாலே நீங்க அப்புறமா சொல்லி அனுப்பறோம், அடையாளம் சொல்லி வாங்கி செல்லுங்கள் என்றார்கள். நாங்களும் உடனே கிளம்பிட்டோம்.
மறுபடியும் கல்லூரியில் சகஜமான வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு திகிலாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தோம்.
இரெண்டு மாதங்கள் கழித்து ஒரு அரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அழைப்பு எனது பெயருக்கு தான் வந்தது. எனக்கு ஒரே பயம், எனது தோழிகள் தைரியம் கூறி அந்த விழாவிற்கு அழைத்துச் சென்றார்கள்.
நிறைய பெரியவங்க எல்லாம் வந்திருந்தாங்க. எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது, முக்கியமான பெரியவங்க பக்கத்துலே உக்கார்ற பாக்கியம் கிடைச்சுது. எல்லாரும் எங்களையே பாக்கறமாதிரி ஒரு உணர்ச்சி. வெக்கம் வெக்கமா இருந்திச்சு.
நல்ல முறையில் வேலை செய்த போலீஸ்காரங்க, பல துறையில் வேலை செய்தவங்க, நேர்மையான முறையில் பல லட்சங்களை தனது ஆட்டோவில் வைத்து சென்ற பணத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர், இப்படி பலர். அவர்களின் நடுவே நாங்களும் ஏன் என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல செயல்களுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினார்கள். பார்த்துக் கொண்டே இருக்கும் போது இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. எல்லாரும் கைதட்ட என்னை மேடைக்கு எனது தோழிகள் புடை சூழ அழைத்துச் சென்றார்கள். பரிசும் தந்தார்கள். பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன்.
ஆனால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அக்கா என்னை பேச அழைத்தார்கள். நான் பேச மாட்டேன் என்று மறுப்பு சொல்ல எனக்கு உரிமை வழங்க வில்லை. கால்கள், கைகள் தந்தி அடிக்க மைக் முன்னால் போய் நின்றேன். நான் போய் வீர மங்கையாம். நான் சொல்லலை, அவங்க சொன்னாங்க. ஏதோ உளறி கொட்டி கிளறி மூடிட்டு வந்துட்டேன். இந்த விஷயம் சும்மா இருக்குமா? வெளியே சத்தமில்லாமல் சுத்தமாக எங்க வீட்டுக்கு தெரிந்து விட்டது. எங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. எங்க அண்ணா உடனே வந்துட்டாரு. திட்டுதான். என்ன செய்ய?? நாளிதல்லே படிக்கும் பொண்ணோட போட்டோ வந்ததுன்னா சும்மாவா??
இப்படி ஒரு கதை நடந்து முடிஞ்சும் போச்சு!!
இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!!
127 comments :
ஃபர்ஸ்டே
//
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம்.
//
“முன்னொரு காலத்தில்” என ஆரம்பிச்சிருக்கனும்
//
தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று
//
இப்போ எப்டி? தெரியலேன்னா தான் ரொம்ப கஷ்டம்
//
அமர்க்களம்தான்
//
தேங்க்ஸ் பா
//
எங்க அண்ணா உடனே வந்துட்டாரு. திட்டுதான். என்ன செய்ய??
//
ஒரு காட்டு காட்ட வேண்டியது தானே :)
”வீரமங்கை” ரம்யா வாழ்த்துக்கள் :)
Second nu
//அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன்//
ஜான்சி ரானி தான் உங்களுக்கு வோட்டு போட்டாச்சு நல்ல தெரியம் தான், ஆமா இது கணவு இல்லைல ..
சரி நம்ம கடைக்கு வந்து பார்த்துட்டு (படிக்கக்கூட வேணாம்) வோட்டா போடுங்க ;)
வாங்க ஆளவந்தான் ரொம்ப நன்றிங்கோ !!
வாங்க சுரேஷ் ரொம்ப நன்றி !!
தமிழ்மணத்துல ஒன்னு.. தமிழிஷ்ல ஒன்னு போட்டாச்சு.. கள்ள வோட்டு போட முடிஞ்சா அதையும் போட்டுடுறேன்.. கோழி ப்ரியானியும்.. குவார்ட்டரும் பார்சல் சொல்லிடுன்க
//
//அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன்//
ஜான்சி ரானி தான் உங்களுக்கு வோட்டு போட்டாச்சு நல்ல தெரியம் தான், ஆமா இது கணவு இல்லைல ..
சரி நம்ம கடைக்கு வந்து பார்த்துட்டு (படிக்கக்கூட வேணாம்) வோட்டா போடுங்க ;)
//
இது அவ்வளவும் நிஜமான நிஜம்தான்!
//
ஆளவந்தான் said...
தமிழ்மணத்துல ஒன்னு.. தமிழிஷ்ல ஒன்னு போட்டாச்சு.. கள்ள வோட்டு போட முடிஞ்சா அதையும் போட்டுடுறேன்.. கோழி ப்ரியானியும்.. குவார்ட்டரும் பார்சல் சொல்லிடுன்க
//
பார்சேல் எதுக்கு டிக்கெட் வாங்கி அனுப்புங்க நேரிலே கொண்டு வந்து கொடுக்கறேன் :-)
வேறே டிக்கெட் வாங்கிடாதீங்க :-)
// பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன். //
ஹி....ஹி....ஹி ....!! நெம்ப சரியான் முடிவுங்கோ அம்முநிங்கோவ்.....!! ( என்ன ஒரு வில்லத்தனம்...)
அருமை.......!! அப்போ உங்ககிட்ட கொஞ்சம் உஷாராத்தேன் இருக்கணும்....!!!
நீங்க மட்டும் அரசியல்ல நின்னைங்கின்னா .... எம்பட ஓட்டு உங்குளுக்குதானுங்கோ அம்முனி.....!!!!!
//
லவ்டேல் மேடி said...

வாங்க வாங்க சகோதரா, பாருங்க உங்க சகோதரி எப்படி தப்பிச்சுட்டேன்னு!
எல்லாம் உங்களோட ஆசிர்வாதம் எனக்கு அப்பவே இருந்திருக்கு போல!
உள்ளேன் பூலான் தேவி
//
கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!
//
எனக்கு கிக் கிக் தெரியும்
திக் திக் அப்படினா என்ன ரம்யா ?
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு குமுதம் படிச்சுட்கிட்டு இருந்தோம்.
சரியா ??
//தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன்//
இட ஒதுக்கீடு கிடைக்கலையோ !!!!
//ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் . //
இதை தெரியவா கல்லூரிக்கு போனீங்க ??
//அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.//
இதுமாதிரி, அதுமாதிரி !!!!
ஆடு, மாடு ன்னு சொல்லுவாங்களா ?
//உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது.//
உப்பு "ரம்" யா விற்க்கு நல்ல இருக்குமோ கேள்வி பட்டதே இல்லை "ரம்" யா !!!
//
நசரேயன் said...
//
கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!
//
எனக்கு கிக் கிக் தெரியும்
திக் திக் அப்படினா என்ன ரம்யா ?
//
இருங்க யாரையாவது கேட்டு சொல்லறேன் :)
//
யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான். //
நானும் குறித்து வைத்து கொள்கிறேன்
//
நசரேயன் said...
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு குமுதம் படிச்சுட்கிட்டு இருந்தோம்.
சரியா ??
//
அதுதான் உங்க முதல் interview நடந்துச்சே அப்பவே நான் புரிஞ்சிகிட்டேன் :))
//
நசரேயன் said...
//தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன்//
இட ஒதுக்கீடு கிடைக்கலையோ !!!!
//
கிடைச்சாலும் நான் போக மாட்டேனாக்கும் :))
//வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை.//
நல்ல வேலை அது நடக்கலை, அப்படி நடந்தா தண்ணிக்கு எங்க போக
அப்பா நம்ம நண்பர் நசரேயன் வந்துட்டாரு!
எல்லாரும் ஜோரா கை தட்டுங்க :))
//
கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான்
//
இப்படி ஊரு நாட்டை சுத்த கல்லூரிக்கு கண்டிப்பாக அவசியமே
//அதுலே நான் தான் அறுந்த வாலு.// வால் நம்பர் ஒண்ணு.
தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கு
//
நசரேயன் said...
//ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் . //
இதை தெரியவா கல்லூரிக்கு போனீங்க ??
//
வேறே என்ன செய்ய, அப்போது உங்களைத் தெரியாதே.
தெரிஞ்சிருந்தா உங்க கிட்டே ஐடியா கேட்டு இருப்பேன் இல்லே.
// RAMYA said...
வாங்க வாங்க சகோதரா, பாருங்க உங்க சகோதரி எப்படி தப்பிச்சுட்டேன்னு!
எல்லாம் உங்களோட ஆசிர்வாதம் எனக்கு அப்பவே இருந்திருக்கு போல! //
இன்னுமுமா இந்த ஊரும் , நீங்களும் என்னைய நம்ம்பிகிட்டு இருக்கீங்க..... !!!!!
இப்புடி உசுபேத்தி .... உசுபேத்தி ..... ஒடம்பு ரணகளம் ஆனதுதான் மிச்சம்.........!!!!!
ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
//இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான்.//
அப்படியா "ரம்" யா !!!!
//
நசரேயன் said...
//அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.//
இதுமாதிரி, அதுமாதிரி !!!!
ஆடு, மாடு ன்னு சொல்லுவாங்களா ?
//
ஹா ஹா இது ரொம்ப சூப்பரு :)
//
லவ்டேல் மேடி said...
// RAMYA said...
வாங்க வாங்க சகோதரா, பாருங்க உங்க சகோதரி எப்படி தப்பிச்சுட்டேன்னு!
எல்லாம் உங்களோட ஆசிர்வாதம் எனக்கு அப்பவே இருந்திருக்கு போல! //
இன்னுமுமா இந்த ஊரும் , நீங்களும் என்னைய நம்ம்பிகிட்டு இருக்கீங்க..... !!!!!
இப்புடி உசுபேத்தி .... உசுபேத்தி ..... ஒடம்பு ரணகளம் ஆனதுதான் மிச்சம்.........!!!!!
//
அதெல்லாம் ஒன்னும் இல்லை சகோதரா நான் உண்மையை தான் சொன்னேன்.
உண்மை தவிர வேறொன்றும் அறியேன் சகோதரா ஹி ஹி ஹி
//ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள். //
ரெம்ப ஆச்சர்யமா இருக்கு, உங்க மைக் active வா இருக்கும் போது தூங்கினங்கன்னா ?
//
நசரேயன் said...
//உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது.//
உப்பு "ரம்" யா விற்க்கு நல்ல இருக்குமோ கேள்வி பட்டதே இல்லை "ரம்" யா !!!
//
அட அட என்ன கேள்வி கேக்கறீங்க :))
//அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம்.//
பொது குழுவை ௬ட்டி முடிவு எடுத்துதிங்களோ !!!!
//
நசரேயன் said...
//
யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான். //
நானும் குறித்து வைத்து கொள்கிறேன்
//
எதுக்கு என்னை திட்டவா :))
//
நசரேயன் said...
//வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை.//
நல்ல வேலை அது நடக்கலை, அப்படி நடந்தா தண்ணிக்கு எங்க போக
//
ஆஹா உங்களுக்குன்னு தோணுதே :))
//அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது.//
வாய் பிஸியா இருந்தாலே கை கழுவ முடியலை அப்படித்தானே ?
//
நசரேயன் said...
//அதுலே நான் தான் அறுந்த வாலு.// வால் நம்பர் ஒண்ணு.
தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கு
//
ஹி ஹி எனக்கு தெலுங்கு தெரியும் :)
//தனியா போக பயம், அதனாலே ஒரு தோழியை அழைத்துக் கொண்டு போனேன்.//
ஏன் உங்களை பார்த்து யாரவது பயந்துடுவாங்கன்னா ?
//
நசரேயன் said...
//ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள். //
ரெம்ப ஆச்சர்யமா இருக்கு, உங்க மைக் active வா இருக்கும் போது தூங்கினங்கன்னா ?
//
நல்லா யோசிச்சு பாருங்க, அவங்க எவ்வளவு தூக்கப் பிரியர்கள் என்று!
//
நசரேயன் said...
//அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம்.//
பொது குழுவை ௬ட்டி முடிவு எடுத்துதிங்களோ !!!!
//
ஆமா ஆமா அதேதான் !!
//கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான்.//
உங்க தோழி முகத்தை கண்ணாடியிலே பார்த்து விட்டீர்களா ?
//
நசரேயன் said...
//அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது.//
வாய் பிஸியா இருந்தாலே கை கழுவ முடியலை அப்படித்தானே ?
//
இல்லே கை கழுவவே மறந்துட்டேன்பா !!
//சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம்.//
இவ்வளவு நேரமும் நம்பினமாதிரி சொல்லுறீங்க பூலான் தேவி அம்மையார்
//
நசரேயன் said...
//கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான்.//
உங்க தோழி முகத்தை கண்ணாடியிலே பார்த்து விட்டீர்களா ?
//
இல்லே பயந்துட்டோம், மேலே படிங்க அதுக்குள்ளே என்ன அவசரம்!
//// RAMYA said...
அதெல்லாம் ஒன்னும் இல்லை சகோதரா நான் உண்மையை தான் சொன்னேன்.
உண்மை தவிர வேறொன்றும் அறியேன் சகோதரா ஹி ஹி ஹி ///
இந்த ஆட்டைக்கு நா வர்லீங்கோவ்.....!! ஆள உடுங்கோவ்....!! போயிட்டு வாரமுங்கோவ்....!!!
அடங்கொன்னியா...!! கிரேட் எஸ்கேப்பு.....
//ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான்.//
அது கல்யாணி கவரிங் ன்னு தெரியாமா??
//
நசரேயன் said...
//சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம்.//
இவ்வளவு நேரமும் நம்பினமாதிரி சொல்லுறீங்க பூலான் தேவி அம்மையார்
//
ஐயோ, அப்போ நீங்க என்னை நம்பலையா ?
நீங்களே இப்படி சொன்னா எப்படி??
எல்லாம் அக்மார்க் உண்மை!
//
லவ்டேல் மேடி said...
//// RAMYA said...
அதெல்லாம் ஒன்னும் இல்லை சகோதரா நான் உண்மையை தான் சொன்னேன்.
உண்மை தவிர வேறொன்றும் அறியேன் சகோதரா ஹி ஹி ஹி ///
இந்த ஆட்டைக்கு நா வர்லீங்கோவ்.....!! ஆள உடுங்கோவ்....!! போயிட்டு வாரமுங்கோவ்....!!!
அடங்கொன்னியா...!! கிரேட் எஸ்கேப்பு.....
//
சரி, சரி போயி நல்லா தூங்குங்க சகோதரா நாளை மீதி பார்க்கலாம் :-)
//எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு//
இருட்டுல எப்படி ரம்யா கண் இருடிடுச்சு, படிக்க எனக்கே ஹார்ட் அட்டாக் வந்து விட்டது
//
நசரேயன் said...
//ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான்.//
அது கல்யாணி கவரிங் ன்னு தெரியாமா??
//
இல்லே சுத்த தங்கம்தான் !!
//வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா?//
அதானே இன்னும் எவ்வளவு கும்மி அடிக்க வேண்டிய இருக்கு,அதுக்குள்ளே பொட்டுன்னு போய்ட்டா எப்படி
வந்துட்டேன்..
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருன்வேன்.........
//
நசரேயன் said...
//எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு//
இருட்டுல எப்படி ரம்யா கண் இருடிடுச்சு, படிக்க எனக்கே ஹார்ட் அட்டாக் வந்து விட்டது
//
நாங்க தான் கை கழுவ போனோம் இல்லே அங்கே எப்படி இருட்டா இருக்கும்.
நாங்க திரும்பி வந்து செட்டில் ஆகவேண்டாம்?
// இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!! //
போட்டாச்சு... போட்டாச்சு
(ஏன் இரண்டு தடவை ... ஒன்று தமிழ் மணத்திற்கு இன்னொன்னு தமிழிஷ்க்கு)
///என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.//
அடக்காம என்ன செய்ய, திருடனை அனுப்பிச்சதே நீங்கதானே
// கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!! //
ஓ திகில கதைங்களா...
//
நசரேயன் said...
//வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா?//
அதானே இன்னும் எவ்வளவு கும்மி அடிக்க வேண்டிய இருக்கு,அதுக்குள்ளே பொட்டுன்னு போய்ட்டா எப்படி
//
அன்னைக்கு ஏதாவது ஆகி இருந்தா இன்னைக்கு இப்படி ஒரு பட்ட பேரு கிடைச்ச சந்தோசம் போயி இருக்குமே :-) சரிதானே ??
// நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். //
எல்லோரும் பாடம் படிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்.. அதென்ன இறுதியாண்டு
// எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் //
இத நீங்க சொல்லாமலே எங்களுக்குத் தெரியுமே
//
இராகவன் நைஜிரியா said...
வந்துட்டேன்..
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருன்வேன்.........
//
அண்ணா வாங்க வாங்க, நீங்க லேட்டஸ்டா வருவீங்கன்னு எனக்கு
முன்னாடியே தெரியுமே :)
//
இராகவன் நைஜிரியா said...
// இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!! //
போட்டாச்சு... போட்டாச்சு
(ஏன் இரண்டு தடவை ... ஒன்று தமிழ் மணத்திற்கு இன்னொன்னு தமிழிஷ்க்கு)
//
நன்றி அண்ணா நன்றி மிக்க நன்றி !!
// உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க. உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. //
ஓ உங்களைக் கூட அப்படி எல்லாம் திட்டுவாங்களா...
என்னா தைரியம்.. யாரும்மா அது சொல்லுங்க அடுத்த தடவை பார்க்கும் போது கவனிச்சுடறேன்
// சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்! //
இன்னும் வரவேயில்லையா...
// கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான். //
அப்படின்னா சென்னையை உண்டு இல்லைன்னு பண்னது நீங்கதானா?
//
நசரேயன் said...
///என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.//
அடக்காம என்ன செய்ய, திருடனை அனுப்பிச்சதே நீங்கதானே
//
அடப் பாவமே எப்படி ஒரு உள்குத்து வச்சி ம்ம்ம்... நடக்கட்டும் நடகட்டும் :))
//
அது கல்யாணி கவரிங் ன்னு தெரியாமா??
//
எனக்கு கல்யாணியை தெரியும் :)
// அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு. //
எங்களுக்கு நல்லா தெரியுமே...
இத வேற தம்பட்டம் அடிச்சுக்கிறீங்க.........
எப்பா இவ்வளவு தைரியசாலியா நீங்க..
பாராட்டுக்கள்..
//
இராகவன் நைஜிரியா said...
// கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!! //
ஓ திகில கதைங்களா...
//
படிங்க படிங்க அப்போதான் இந்த தங்கையோட விஷயம் நல்லா தெரியும் உங்களுக்கு.
ஹி ஹி ஹி ஹி !!
// அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். //
அங்க போயும் இதேதானா?
ஹை மீ த 75
//
இராகவன் நைஜிரியா said...
// உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க. உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. //
ஓ உங்களைக் கூட அப்படி எல்லாம் திட்டுவாங்களா...
என்னா தைரியம்.. யாரும்மா அது சொல்லுங்க அடுத்த தடவை பார்க்கும் போது கவனிச்சுடறேன்
//
என்னை என் தோழிகள் எல்லாரும் அப்படிதான் சொல்லுவாங்க!!
// மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். //
பேச கேட்கவா வேணும்... நாங்க பேசினோம் அப்படின்னு சொன்னா போதாதா.. மற்றவை நாங்க புரிஞ்சுக்கப் போகின்றோம்........
//
ஆளவந்தான் said...
//
அது கல்யாணி கவரிங் ன்னு தெரியாமா??
//
எனக்கு கல்யாணியை தெரியும் :)
//
இங்கே பாருய்யா உண்மையை போட்டு உடைச்சுட்டாறு :))
//
vinoth gowtham said...
எப்பா இவ்வளவு தைரியசாலியா நீங்க..
பாராட்டுக்கள்..
//
ரொம்ப நன்றி கெளதம். பயந்த தைரியசாலி!!
//
இராகவன் நைஜிரியா said...
// மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். //
பேச கேட்கவா வேணும்... நாங்க பேசினோம் அப்படின்னு சொன்னா போதாதா.. மற்றவை நாங்க புரிஞ்சுக்கப் போகின்றோம்........
//
சரியாச் சொன்னீங்க அண்ணா :))
ஏன் நீங்க காரட் கேட்டீங்கன்னு உங்க கடைக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சது.
//
பிரியமுடன்.........வசந்த் said...
ஏன் நீங்க காரட் கேட்டீங்கன்னு உங்க கடைக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சது.
//
ஹா ஹா சூப்பர் சீக்கிரம் எனக்கு காரட் அனுப்பி வையுங்கோ :-)
ஆவ்வ்வ்வ்வ்
அப்ப ரம்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்ட முடியாதா???
//
அப்பாவி முரு said...
ஆவ்வ்வ்வ்வ்
அப்ப ரம்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்ட முடியாதா???
//
மிரட்டலாம்..அவங்க போட்டோவை அவங்க கிட்ட காமிச்சு மிரட்டலாம் :)
//தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று.//
வெளி உலகம் தெரியாம வளர்ந்திட்டீங்க ரம்யா...
நானும் அப்படித்தான்...எனக்கும் அரசியல் அவ்வளவா தெரியாது...
//வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை.//
நல்ல ஆசை தானே...
//ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன். //
ஆஹா...உங்க வீரம் சிலிக்க வைக்குது...
//"வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. //
வாழ்த்துக்கள் வீர மங்கை ரம்யா...
உங்கள் தைரியம் பாரட்ட வைக்கிறது அந்த விநாடிகளில் நீங்கள் செய்ததுதான் சரியான முடிவு கையில் கத்தியில் கீறிய போது நீங்கள் உங்கள் கையில் பிடித்த துப்பட்டாவை விடவில்லை பாருங்கள் அதுதான் தைரியம்
எழுதுங்கள் தொடர்ந்து
ஆளவந்தான் said...
//
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம்.
//
“முன்னொரு காலத்தில்” என ஆரம்பிச்சிருக்கனும்
hahahahaha
//அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.//
அறுந்த வாலு எப்படி வால் நம்பர் ஒண்ணாக முடியும்!
பொருட்பிழை உள்ளதே!
// வால்பையன் said...
//அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.//
அறுந்த வாலு எப்படி வால் நம்பர் ஒண்ணாக முடியும்!
பொருட்பிழை உள்ளதே! //
அதுதான ..... !!! யாருப்பா அது.......!!!
ஆஅவ்வ்வ்வ்வ்............!!!!!!
//இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். //
கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும் போல!
//ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் .
//
அதென்னங்க நெருக்கமான நெருக்கம்..புதுசால்ல இருக்கு !!!
//ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் //
எங்களுக்கு உங்களைப் பற்றி தெரிந்ததும் அவ்வளவே.
//உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது. விதி வலியது. //
நாம தான் சால்ட் வைக்கிற டேபிளா பாத்து உக்காறதே இல்லனு அவுங்களுக்கு தெரியாதா ?
//அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். //
அதெப்படி வீட்டுக்குள்ளே ஊர் சுத்தினீங்க..
//ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது.//
இதுக்கு பேரு குருட்டு தைரியமா ?? இருட்டு தைரியம்.
அப்பாடி நூறு போட்டு எத்தன நாளாச்சி !!!
100 !!!!!!!
//பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன்.
//
ஏன் ??? அது அப்ப உங்களுக்கு தரலயா ??
உங்கள் அனுபவம்..ஒரு கல கல பதிவு !!!!
அசத்தல் டீச்சர் !!!
ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல செயல்களுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினார்கள். பார்த்துக் கொண்டே இருக்கும் போது இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. எல்லாரும் கைதட்ட என்னை மேடைக்கு எனது தோழிகள் புடை சூழ அழைத்துச் சென்றார்கள். பரிசும் தந்தார்கள். பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன். .
valga veeramangai
ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு. வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா? அப்படீன்னு யோசிச்சேன். என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.
gud idea
ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன்.
ayyo wat a great woman
ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது. பின்னால் இருந்து கண்களை துணியால் மூடியவுடன், அந்த திருடன் ஆவேசமானான். கத்தியை காற்றில் சகட்டு மேனிக்கு வீசினான்.
ammadi nana eruntha angeye heart ninnu erukum
இப்படி ஒரு கதை நடந்து முடிஞ்சும் போச்சு!!இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!!
pottruvom
yeppa padikum poathe kannai kattuthe
sssssssssssss
yakkavoo periya thayiriyasali than neenga yethukum 4 adi thalliye ninukrom...
valga ungal veeram menmelum nu valthikirom
valga valamudan
//
யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும்.
//
திட்டுனத மட்டுமா மறக்குரிங்க..
பல சமயம் எங்களையே மறந்துடுரின்களே..
யக்கோவ்.. என்னோட இடுகை ஒண்ணு இன்றைய யூத் ஃபுல் விகடனில் வந்திருக்கு.. :)
கலக்கல்.. சூப்பரா இருந்துச்சு..
//அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான்.//
பாராட்டப்பட வேண்டிய விடயம்.
வாழ்த்துக்கள்.
ஆஹா நான் தான் லேட்டா??
நேத்து ஊர் சுத்த போயிட்டேன்..
அதனால தான் தாமதம்..
ஹாஅ ஹா ஹா..
கலக்கலோ கலக்கல்...
எப்படி ரம்யா இப்படி எல்லாம்??
//நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். ///
இப்பவும் அதேதானே???
///எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் ///
குட் .....
///தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. ///
இத நாங்க நம்பனுமா??
தேவுடா...
//என்ன செய்யறது. விதி வலியது. யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம்.///
அதுக்கு பேரு செலக்டிவ் அம்னீஸியா
உறுதி உனக்குள் இருக்கும் வரை வீர மங்கையே விருதுகள் உனக்கு போதாது...தெளிவு உனக்குள் இருக்கும் வரை தேக்கம் உன்னை தொடராது...ஆளுமை உன்னுள் இருக்கும் வரை உன்னை அசைத்திட எவராலும் முடியாது..தீச்சுடர் உன்னுள் எரியும் வரை தீதுகள் உன்னை நெருங்காது......
கதையா? இல்ல, நிஜமா?
//
pappu said...
கதையா? இல்ல, நிஜமா?
//
நிஜக்கதை
”வீரமங்கை” ரம்யா வாழ்க!! வாழ்க!!!
அன்புடன் அருணா
//
ஜில்லென்று ஒரு காதல்!!
//
இந்த பதிவை காணவில்லை.. நான் எங்கே கமெண்டுறது??????
//
"வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே"
//
“சொந்த சரக்கு” போல தெரியுதே :)
//
காஜோல்: யாருப்பா நீ, ஏன் இங்கே வந்து விழரே, போய் கடல்லே விழு, அங்கே போயி விழுந்தாலும் யாராவது உன்னைய காப்பாத்துவாங்க.
//
உண்மை தான் அவ பக்கதுல விழுந்தா வாழ்நாளுக்கும் எந்திரிக்க முடியாது
அடேங்கப்பா....சினிமா மாதிரி இருக்கே.....ரொம்ப தைரியம் தாங்க....
Post a Comment