Wednesday, May 13, 2009

ஜில் என்று ஒரு காதல் / நான்காம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இதன் இரெண்டாம் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இதன் மூன்றாம் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.

************************************************************

பங்கேற்பவர்கள்
==============
கதாநாயகன் : ராஜா
கதாநாயகி : காஜோல்
கதாநாயகியின் தங்கை: சாரா
கதாநாயகியின் அப்பா : மனோ
கதாநாயகியின் அம்மா : கல்யாணி
வீட்டுச் செல்லம் : சின்னு
பாட்டி: மந்தாகினி
************************************************************

வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாவுக்கு மனதிற்கு ரொம்பவும் கஷ்டமா இருந்தது. இப்படி வந்தது அவமான போச்சே. நம் காதலுக்கு இப்படி ஒரு எதிரி சிம்மாசனம் போட்டு உக்காந்து இருப்பான் என்று நான் நினைக்கவே இல்லை. சரி மாலை காஜோல் கிட்டே பேசிக்கலாம்.
காஜோலை சந்திக்கும் இடத்துக்கு தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தான் ராஜா. அங்கே சோக பொம்மையாக அமர்ந்திருந்தாள் காஜோல்.

"என்னாம்மா என்னா ஆச்சு?? நான் வந்தப்புறம் உன்னை உங்க அப்பா ரொம்ப திட்டிட்டாரா. எனக்கு ரொம்ப தர்மசங்கடமா போச்சு. உங்க வீட்டுலே உங்க அப்பா மட்டும்தான் வில்லன் என்று நான் நினைச்சது தப்பா போச்சு. ஏகப்பட்ட வில்லன்ஸ் இருக்காங்க. ஏய் என்ன நான் பாட்டுக்க பேசிகிட்டே இருக்கேன். நீ என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கே. பேச மாட்டியா??" என்றான் ராஜா.

"ஒன்னும் இல்லை" இதை சொல்லும்போதே அழுதுவிடுவாள் போல் பேசினாள் காஜோல் .

"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.

"இங்கே பாரு, உனக்கு இப்போ என்ன பிரச்சனை. அதெ மொதல்லே சொன்னாதானே நான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்."

"கிழிச்சீங்க, நான் தான் வீட்டுலே வந்து பொண்ணு கேளுங்கன்னு சொன்னேன். எங்க வீட்டிலேயும் சீக்கிரம் என் கல்யாணத்தை முடிச்சிடனம்னு ஒரே வேகமா இருந்தாங்க. அதனாலே பயந்து போயி நான் வந்து சொன்னேன். நீங்க என்ன பண்ணிருக்கணும்? புத்திசாலியா உங்க அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு பொண்ணு கேட்டிருந்தா எங்க அப்பா இவ்வளவு தூரம் போயி இருப்பாரா?"

"அன்னைக்கி வந்து அவ்வளவு தூரம் என் கிட்டே சண்டை போட்டே, அதனாலேதான் நான் உடனே நீ சொன்ன சனிக்கிழமையே வந்தேன்" என்று சற்றே குரல் உயர்த்திப் பேசினான் ராஜா.

"அண்ணா சுண்டல் சாப்பிடுங்க நல்ல சூடா இருக்கு" அன்னைக்குதான் இவங்ககிட்டே விக்காமல் போனோம். இன்னைக்காவது ஒரு ஐந்து பொட்டலமாவது வித்துடனும் இந்த முடிவிற்கு வந்த சுண்டல் விற்கும் பையனின் குரலில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

"சரி ஒரு பொட்டலம் என்ன விலை?? எல்லாருக்கும் சொல்லுற விலையை எனக்கும் சொல்லக் கூடாது சரியா??"

அண்ணே எல்லாருக்கும் நான் ஒரே விலைதான் சொல்லுவேன் . ஒரு பொட்டலம் அஞ்சு ரூவா அண்ணே.

"என்ன அஞ்சு ரூபாவா? ரொம்ப அதிகமா இருக்கே?"

டேய்! ஒழுங்கா இங்கே இருந்து ஓடிப் போய்டு! இல்லைன்னா அடி விழும் உனக்கு. அன்னைக்கே உன்னை விரட்டி விட்டேன் இல்லை, இன்னைக்கு உன் தொல்லை தாங்கலைடா, நாங்க முக்கியமா பேசிகிட்டு இருக்கோம், போ! போயி வேறே எங்காவது உன் வியாபாரத்தை வச்சுக்கோ!

அவன்கிட்டே ஏம்மா கோவிச்சுக்கரே, அவனே பாவம் சுண்டல் வித்து பிழைக்கிறான். அந்த தம்பியை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. உனக்கு மனசாட்சியே இல்லையா??

ரொம்ப அதிகமா பேசாதீங்க? வந்து வீட்டுலே கலாட்ட பண்ணிட்டு இங்கே வந்தது ரொம்ப ஒழுங்கு மாதிரி ஒன்னும் நடிக்க வேணாம். நான்தான் உன் கூட ஓடி வரேன்னு சொன்னேன் இல்லையா? ஏன் என்னை அங்கேயே விட்டுட்டு போய்ட்டே??

ஐயோ அக்கா ஓடிப் போகப் போறீங்களா? வேணாம் அக்கா, இந்த அண்ணனைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. உங்களைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உங்களுக்கு செட்டு இந்த அண்ணா இல்லை அக்கா. என்றான் சுண்டல் விற்கும் பையன்.

"டேய் நீ இன்னும் இங்கே இருந்து போகலையா? நீ சுண்டல் விக்க வந்தியா இல்லே அறிவுரை வழங்க வந்தியா. மரியாதையா ஓடிப் போய்டு! இல்லே உன் சுண்டல்லே மண்ணை வாரிப் போட்டுடுவேன்!

ஐயோ ! அக்கா அந்த மாதிரி செய்திடாதீங்க, அப்புறம் எங்க மொதலாளி என்னை கடல்லே தூக்கி போட்டுடுவாரு. ஏதோ தோணிச்சு சொன்னேன், விடுவீங்களா? அதுக்குப் போயி ஏன் இப்படி ஆவேசப் படறீங்க??

டேய் என்னாடா! போலீஸ்க்கு போன் போட்டு உன்னை வந்து அள்ளிகிட்டு போகச் சொல்லவா?? எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?? தப்பு பன்னறேனோ, ஒரு ஏழைப் பையனை நான் ரொம்ப திட்டறேனோ" காஜோலின் புலம்பல் அவளுக்கே நியாயமாகப் பட்டது.

ஐயோ! அக்கா அந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க. நானே போறேன். சுண்டல் விக்கப் போனால் இங்கேயும் வில்லங்கமா?? நமக்கும் கொஞ்சம் வாயி அதிகம்தான். அவங்க சொந்த விஷயத்துலே தலையிட்டு இருக்கக்கூடாது.

"சரி ரொம்ப கோவமா இருக்கிறமாதிரி நடிக்காதே. சீக்கிரம் விஷயத்துக்கு வா. என்ன விஷயம். எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிருக்கறே?? அதே மொதல்லே சொல்லு"

"என்ன பேசறீங்க நீங்க! என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? வந்து ஒரு விஷயத்தை கச்சிதமா முடிக்க துப்பு இல்லை, என்ன இங்கே வந்து ரொம்ப அலட்டற மாதிரி இருக்கு"

"இங்கே பாரு நீ சொன்னா மாதிரி எங்க அம்மாவையும், அப்பாவையும் கூட்டிகிட்டு வரணும்னு எனக்கு தெரியலை. அதுவும் அவங்களுக்கு இந்த விஷயம் இன்னும் சொல்லலை. மொதல்லே நீ அவசரப் படுத்தினதாலேதான் உங்க வீட்டுக்கு வந்து அன்னைக்கி சின்னா பின்னமானேன் அதே மொதல்லே நீ "உணரனும்" என்றான் ராஜா.

அது சரி, நீங்க வந்த பண்ணின அலம்பல்லே எங்க அப்பா உங்களை ரொம்ப திட்டிகிட்டு இருந்தாரு. சீக்கிரம் என் திருமணத்தை முடிக்கணும்னு ஒரே ஆவேசமா இருககாரு.

"உங்க அப்பனோட ஆவேசத்தைதான் அன்னைக்கே பார்த்தேனே! உங்கப்பனுக்கு தான் வயசு ஆயிடுச்சு! உன் தங்கச்சிக்கு என்ன ஆச்சு?என்ன குதி குதிக்கறா!! கொஞ்சம் கூட மரியாதை இல்லாத குடும்பமா இருக்கு. இந்த குடும்பத்திலே பொண்ணு எடுக்க எங்க அம்மா அப்பா ஒத்துக்குவாங்களான்னு தெரியலை"

"ஆமாம் இதை இன்னும் கொஞ்ச நாள் கழித்து சொல்லுங்க. காலம் தாழ்ந்து வந்த அறிவு இது. என்னை கல்லூரியில் இருந்து தொரத்தி தொரத்தி காதலிக்கும் போது இந்த அறிவு எங்கே போச்சு? நானும் எதுவும் பேச வேணாம்னு இருக்கேன். என்னை எதையும் பேச வச்சிடாதீங்க" நம்ம குடும்பத்தைப் பற்றி ரொம்ப கேவலமா பேசறானே!! காஜோலுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.

தொடரும்.....

ரம்யா

120 comments :

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்டூ....

இராகவன் நைஜிரியா said...

// "என்னாம்மா என்னா ஆச்சு?? //

லொள்ளுன் உச்சக்கட்டம்...

இராகவன் நைஜிரியா said...

// நான் வந்தப்புறம் உன்னை உங்க அப்பா ரொம்ப திட்டிட்டாரா. //

இல்லை ரொம்ப கொஞ்சினாரு...

இராகவன் நைஜிரியா said...

// உங்க வீட்டுலே உங்க அப்பா மட்டும்தான் வில்லன் என்று நான் நினைச்சது தப்பா போச்சு. ஏகப்பட்ட வில்லன்ஸ் இருக்காங்க. //

வில்லன்ஸ் குடும்பம் என்று பட்டப் பெயர் சூட்டிவிடலாம்

இராகவன் நைஜிரியா said...

// "ஒன்னும் இல்லை" இதை சொல்லும்போதே அழுதுவிடுவாள் போல் பேசினாள் காஜோல் .//

அய்யோ பாவம். ஒன்னும் இல்லை என்று சொன்னாலே, நிறைய இருக்குன்னு அர்த்தம்.

இராகவன் நைஜிரியா said...

// புத்திசாலியா உங்க அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு பொண்ணு கேட்டிருந்தா எங்க அப்பா இவ்வளவு தூரம் போயி இருப்பாரா?" //

புத்திசாலியா? புத்திசாலியா இருந்தா காதலிச்சுருப்பாரா?

இராகவன் நைஜிரியா said...

// "அன்னைக்கி வந்து அவ்வளவு தூரம் என் கிட்டே சண்டை போட்டே, அதனாலேதான் நான் உடனே நீ சொன்ன சனிக்கிழமையே வந்தேன்" என்று சற்றே குரல் உயர்த்திப் பேசினான் ராஜா. //

சரியான கேள்வி. சண்டை போட்டு உசுப்பேத்திவிட்டுட்டு, அப்புறம் புத்தி இருக்கான்னு கேட்க வேண்டியது.

இராகவன் நைஜிரியா said...

// இன்னைக்காவது ஒரு ஐந்து பொட்டலமாவது வித்துடனும் //

ஐய்யோ பாவம். அவனுக்கு நேரம் காலம் தெரியவில்லை.

நசரேயன் said...

//காஜோலை சந்திக்கும் இடத்துக்கு தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தான் ராஜா. அங்கே சோக பொம்மையாக அமர்ந்திருந்தாள் காஜோல்.//

எடுத்துட்டு போய் மியூசியத்திலே வைக்கவா?

நசரேயன் said...

//நீ என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கே. பேச மாட்டியா??//

போடா இஞ்சி தின்ன குரங்குன்னு நினைத்து இருப்பாள்

நசரேயன் said...

//"ஒன்னும் இல்லை" இதை சொல்லும்போதே அழுதுவிடுவாள் போல் பேசினாள் காஜோல் //

கிளிசரின் முன்னாடியே போட்டு விட்டாளா!!!

RAMYA said...

நெல்லை புயலே நான் உங்களை அங்கே தேடிகிட்டு இருக்கேன்.

இப்பதான் நீங்க சரியா சிக்கினீங்க :-)

இராகவன் நைஜிரியா said...

வணக்கம் தல.. நசரேயன்

இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. வலைச்சரம் ஆசிரியர் பணி என்னாச்சு.

தல இப்படி பண்ணா மத்தவங்க என்ன செய்வாங்க சொல்லுங்க...

RAMYA said...

//
நசரேயன் said...
//"ஒன்னும் இல்லை" இதை சொல்லும்போதே அழுதுவிடுவாள் போல் பேசினாள் காஜோல் //

கிளிசரின் முன்னாடியே போட்டு விட்டாளா!!!
//

லொள்ளு லொள்ளு!!

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//நீ என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கே. பேச மாட்டியா??//

போடா இஞ்சி தின்ன குரங்குன்னு நினைத்து இருப்பாள் \

எப்படிங்க தல இதெல்லாம்

நசரேயன் said...

//"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.//

ஒருவேளை ராஜா எழிதின ப்லோக் படிச்சாளோ .. இம்புட்டு கோபப்படுகிறாள்

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
வணக்கம் தல.. நசரேயன்

இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. வலைச்சரம் ஆசிரியர் பணி என்னாச்சு.

தல இப்படி பண்ணா மத்தவங்க என்ன செய்வாங்க சொல்லுங்க...
//

அதேதான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன் நம்ம தலகிட்டே :-)

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

நெல்லை புயலே நான் உங்களை அங்கே தேடிகிட்டு இருக்கேன்.

இப்பதான் நீங்க சரியா சிக்கினீங்க :-)//

நெல்லைப் புயல் இப்ப உங்க பதிவுல மையம் கொண்டு இருக்கின்றது என நினைக்கின்றேன்.

நசரேயன் said...

//வணக்கம் தல.. நசரேயன்

இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. வலைச்சரம் ஆசிரியர் பணி என்னாச்சு.

தல இப்படி பண்ணா மத்தவங்க என்ன செய்வாங்க சொல்லுங்க...//

நேத்து கடின வேலை இன்னைக்கு பதிவு போடுறேன்

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.//

ஒருவேளை ராஜா எழிதின ப்லோக் படிச்சாளோ .. இம்புட்டு கோபப்படுகிறாள் //

தல அந்த ராஜா நீங்கதானா?

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//வணக்கம் தல.. நசரேயன்

இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. வலைச்சரம் ஆசிரியர் பணி என்னாச்சு.

தல இப்படி பண்ணா மத்தவங்க என்ன செய்வாங்க சொல்லுங்க...//

நேத்து கடின வேலை இன்னைக்கு பதிவு போடுறேன் //

மிக்க நன்றி. என்ன மாதிரி சின்ன ஆளுங்களுக்கு எல்லாம் தல பதில் சொல்கின்றார் என்பதே ரொம்ப சந்தோஷமான விசயங்க

RAMYA said...

//
நசரேயன் said...
//"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.//

ஒருவேளை ராஜா எழிதின ப்லோக் படிச்சாளோ .. இம்புட்டு கோபப்படுகிறாள்
//

இல்லே உங்க ப்லாக் கடைசியா படிச்சாளாம்.

அதான் அந்த வெள்ளையம்மா உங்களை திட்டினாங்களே
அப்புறம் தங்கமணி கூட வெள்ளையம்மா திட்டினதை குறிப்பு எடுத்தாங்களே.

அதை படிச்சுட்டுதான் இப்படி கத்த ஆரம்பிச்சிட்டாளாம் :-)

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.//

ஒருவேளை ராஜா எழிதின ப்லோக் படிச்சாளோ .. இம்புட்டு கோபப்படுகிறாள் //

இல்லீங்க... நம்ம பதிவெல்லாம் படிச்சதன் விளைவு.

நசரேயன் said...

//ஏய் என்ன நான் பாட்டுக்க பேசிகிட்டே இருக்கேன்//
ஸூஉ . அழுதுக்கிட்டு இருக்கேன் சைலன்ஸ்

இராகவன் நைஜிரியா said...

25

RAMYA said...

//
நசரேயன் said...
//வணக்கம் தல.. நசரேயன்

இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. வலைச்சரம் ஆசிரியர் பணி என்னாச்சு.

தல இப்படி பண்ணா மத்தவங்க என்ன செய்வாங்க சொல்லுங்க...//

நேத்து கடின வேலை இன்னைக்கு பதிவு போடுறேன்
//

தூங்காமே உங்க பதிவை பாக்க குத்த வெச்சி உக்காந்து இருக்கோம் நாங்க இரெண்டு பேரும்.

பதிவு போடாமே அளும்பா பண்ணறீங்க :))

இராகவன் நைஜிரியா said...

ஹையா... மீ த 25

ரொம்ப நாள் கழிச்சு தங்கச்சி ரம்யா பதிவில் 25 வது பின்னூட்டம் நானே... நானே...நானே...

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// நசரேயன் said...

//"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.//

ஒருவேளை ராஜா எழிதின ப்லோக் படிச்சாளோ .. இம்புட்டு கோபப்படுகிறாள் //

தல அந்த ராஜா நீங்கதானா?
//

தெரியாதா அவரேதான், ஹி ஹி ஹி ஹி!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

தூங்காமே உங்க பதிவை பாக்க குத்த வெச்சி உக்காந்து இருக்கோம் நாங்க இரெண்டு பேரும்.

பதிவு போடாமே அளும்பா பண்ணறீங்க :)) //

அதானே..

நசரேயன் said...

//"இங்கே பாரு, உனக்கு இப்போ என்ன பிரச்சனை. அதெ மொதல்லே சொன்னாதானே நான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்."//

ம்ம்ம்.. சென்னை அண்ணா சாலைய என் பேருக்கு எழுதி வைக்கணும் முடியுமா???

RAMYA said...

//
நசரேயன் said...
//ஏய் என்ன நான் பாட்டுக்க பேசிகிட்டே இருக்கேன்//
ஸூஉ . அழுதுக்கிட்டு இருக்கேன் சைலன்ஸ்
//

இப்படிதான் வீட்டுலே தங்கமணியை திட்டுவாராம் ராகவன் அண்ணா
இதே கொஞ்சம் கவனிங்க :)

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

தல அந்த ராஜா நீங்கதானா?

தெரியாதா அவரேதான், ஹி ஹி ஹி ஹி!! //

ஆஹா.. இப்பத்தானே புரிஞ்சது..

நசரேயன் said...

//கிழிச்சீங்க//
ஆமா..என் சட்டைய நானே கிழிப்பேன் இன்னும் கொஞ்ச நாள்ல

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//"இங்கே பாரு, உனக்கு இப்போ என்ன பிரச்சனை. அதெ மொதல்லே சொன்னாதானே நான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்."//

ம்ம்ம்.. சென்னை அண்ணா சாலைய என் பேருக்கு எழுதி வைக்கணும் முடியுமா??? //

முடிஞ்சா ராதாகிருஷ்ணன் சாலையையும் சேர்த்து எழுதிவைக்கச் சொல்லுவீங்க போலிருக்கே

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//கிழிச்சீங்க//
ஆமா..என் சட்டைய நானே கிழிப்பேன் இன்னும் கொஞ்ச நாள்ல //

அது காதலிக்க ஆரம்பிச்ச நாளில் இருந்து ஆரம்பிச்சாச்சு..

RAMYA said...

//
நசரேயன் said...
//"இங்கே பாரு, உனக்கு இப்போ என்ன பிரச்சனை. அதெ மொதல்லே சொன்னாதானே நான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்."//

ம்ம்ம்.. சென்னை அண்ணா சாலைய என் பேருக்கு எழுதி வைக்கணும் முடியுமா???
//

ராகவன் அண்ணா நெல்லை புயல் என்ன கேக்குறாரு பாருங்க
அண்ணா சாலையை எழுதி வைக்கோணுமாம் :-)

RAMYA said...

//
நசரேயன் said...
//கிழிச்சீங்க//
ஆமா..என் சட்டைய நானே கிழிப்பேன் இன்னும் கொஞ்ச நாள்ல

//

இன்னும் கிழியலையா?? அது சரி :)

நசரேயன் said...

//நான் தான் வீட்டுலே வந்து பொண்ணு கேளுங்கன்னு சொன்னேன்//

உன்னை விட வீட்டு வேலைக்காரி நல்லா இருந்தாலே முடிவை மாத்திட்டேன்

நசரேயன் said...

//எங்க வீட்டிலேயும் சீக்கிரம் என் கல்யாணத்தை முடிச்சிடனம்னு ஒரே வேகமா இருந்தாங்க.//

வேகமா எப்படி ரம்யா இருக்க முடியும் ???

RAMYA said...

//
//நான் தான் வீட்டுலே வந்து பொண்ணு கேளுங்கன்னு சொன்னேன்//

உன்னை விட வீட்டு வேலைக்காரி நல்லா இருந்தாலே முடிவை மாத்திட்டேன்
//

ஹையோ! ஹையோ! எப்படி இப்படி ஒரு மார்க்கமாவே இருக்காங்களே மக்கா!!

நசரேயன் said...

//அதனாலே பயந்து போயி நான் வந்து சொன்னேன்//
கஜோல் வீட்டு நாய்க்கு பயந்தா!!!

RAMYA said...

//
நசரேயன் said...
//எங்க வீட்டிலேயும் சீக்கிரம் என் கல்யாணத்தை முடிச்சிடனம்னு ஒரே வேகமா இருந்தாங்க.//

வேகமா எப்படி ரம்யா இருக்க முடியும் ???
//

அடிக்கடி ஜாதகம் பார்ப்பாங்க!!

வீட்டுக்கு வரவங்க கிட்டே எல்லாம்
கல்யாணத்தை பற்றியே பேசுவாங்க.

நகை வாங்குவாங்க, புடவை எல்லாம்
வாங்குவாங்க.

அதான் புயல் வேகத்துலே
எல்லாம் வேலையும் செய்தால் தானே
ராஜாவுக்கு பெரிய நாமம் போட முடியும் :))

நசரேயன் said...

//நீங்க என்ன பண்ணிருக்கணும்? புத்திசாலியா உங்க அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு பொண்ணு கேட்டிருந்தா எங்க அப்பா இவ்வளவு தூரம் போயி இருப்பாரா?" //

சென்னையிலே இருந்து புளியங்குடி தூரம் போயிருப்பாரா !!!!

RAMYA said...

//
நசரேயன் said...
//அதனாலே பயந்து போயி நான் வந்து சொன்னேன்//
கஜோல் வீட்டு நாய்க்கு பயந்தா!!!
//

இல்லே அவங்க அப்பாவுக்கு பயந்துதான் :)

நசரேயன் said...

//அன்னைக்கி வந்து அவ்வளவு தூரம் என் கிட்டே சண்டை போட்டே//
ஒரு ரெண்டு கிலே மீட்டர் தூரம் இருக்குமா!!!

ரெண்டு பெரும் போன்ல சண்டை போட்டாங்களா?

நசரேயன் said...

//அதனாலேதான் நான் உடனே நீ சொன்ன சனிக்கிழமையே வந்தேன்"//

ஆனா இப்ப சனியனை தூக்கி பனியனுகுள்ளே போட்டு நிக்குறேன்

RAMYA said...

//
//நீங்க என்ன பண்ணிருக்கணும்? புத்திசாலியா உங்க அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு பொண்ணு கேட்டிருந்தா எங்க அப்பா இவ்வளவு தூரம் போயி இருப்பாரா?" //

சென்னையிலே இருந்து புளியங்குடி தூரம் போயிருப்பாரா !!!!
//

அது சரி, இதெல்லாம் வேறேயா :))

நசரேயன் said...

//என்று சற்றே குரல் உயர்த்திப் பேசினான் ராஜா. //

ஏன் கஜோல் க்கு சரியா காது கேட்காதோ ?

RAMYA said...

//
நசரேயன் said...
//அதனாலேதான் நான் உடனே நீ சொன்ன சனிக்கிழமையே வந்தேன்"//

ஆனா இப்ப சனியனை தூக்கி பனியனுகுள்ளே போட்டு நிக்குறேன்
//

ஹா ஹா ஹா இது சூப்பரு :))

நசரேயன் said...

//"அண்ணா சுண்டல் சாப்பிடுங்க நல்ல சூடா இருக்கு"//

ராஜா : இருடா.. இவ எனக்கு சூப் கொடுத்து கிட்டு இருக்கா, அதையே இன்னும் குடிச்சு முடிக்கலை

RAMYA said...

//
நசரேயன் said...
//என்று சற்றே குரல் உயர்த்திப் பேசினான் ராஜா. //

ஏன் கஜோல் க்கு சரியா காது கேட்காதோ ?
//

ராஜாவுக்கு கோவம் வந்திடுச்சாம் :))

RAMYA said...

//
//"அண்ணா சுண்டல் சாப்பிடுங்க நல்ல சூடா இருக்கு"//

ராஜா : இருடா.. இவ எனக்கு சூப் கொடுத்து கிட்டு இருக்கா, அதையே இன்னும் குடிச்சு முடிக்கலை
//

நண்டு சூப்பா :))

நசரேயன் said...

//அன்னைக்குதான் இவங்ககிட்டே விக்காமல் போனோம். இன்னைக்காவது ஒரு ஐந்து பொட்டலமாவது வித்துடனும்//

ஆமா, இனிமேல அவன் போக்கை வாய் வரும் வரைக்கும் ஏதும் சாப்பிட மாட்டான், அதனாலே அவனக்கு பொறி கொடு

ஆளவந்தான் said...

//
வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாவுக்கு மனதிற்கு ரொம்பவும் கஷ்டமா இருந்தது.
//
இருக்காதா பின்னே..

நசரேயன் said...

//இந்த முடிவிற்கு வந்த சுண்டல் விற்கும் பையனின் குரலில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.//

அவனுக்கே நல்லாத் தெரியுது, எப்படியும் காதலன் தான் ஓட்டை ஆண்டி யாவான்னு

ஆளவந்தான் said...

//
""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க"
//
இவுக உண்மையிலேயே காதலர்கள் தானா???. “வாங்க ..போங்க”னு பேசிகிறாங்க :)

RAMYA said...

//
//அன்னைக்குதான் இவங்ககிட்டே விக்காமல் போனோம். இன்னைக்காவது ஒரு ஐந்து பொட்டலமாவது வித்துடனும்//

ஆமா, இனிமேல அவன் போக்கை வாய் வரும் வரைக்கும் ஏதும் சாப்பிட மாட்டான், அதனாலே அவனக்கு பொறி கொடு
//

இது நல்ல அறிவுரையா இருக்கே !!

நசரேயன் said...

//"சரி ஒரு பொட்டலம் என்ன விலை?? எல்லாருக்கும் சொல்லுற விலையை எனக்கும் சொல்லக் கூடாது சரியா??"//

அது என்ன கஞ்சா பொட்டலமா!!!

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாவுக்கு மனதிற்கு ரொம்பவும் கஷ்டமா இருந்தது.
//
இருக்காதா பின்னே..
//

ஹா ஹா வாங்க ஆளவந்தான். நலமா??

வேலை அதிகம் அதான் online நான் வரதே இல்லை

நசரேயன் said...

//அண்ணே எல்லாருக்கும் நான் ஒரே விலைதான் சொல்லுவேன் . ஒரு பொட்டலம் அஞ்சு ரூவா அண்ணே.//

ராஜா : உன் பொட்டலத்துக்கு சுண்ட கஞ்சி தேவலாம்

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க"
//
இவுக உண்மையிலேயே காதலர்கள் தானா???. “வாங்க ..போங்க”னு பேசிகிறாங்க :)
//

அப்பப்போ மரியாதை வரும்
அப்பப்போ மரியாதை போகும் :-)

RAMYA said...

//
நசரேயன் said...
//"சரி ஒரு பொட்டலம் என்ன விலை?? எல்லாருக்கும் சொல்லுற விலையை எனக்கும் சொல்லக் கூடாது சரியா??"//

அது என்ன கஞ்சா பொட்டலமா!!!
//

அட, பாவம் அந்த சுண்டல் பொட்டலம் :-)

ஆளவந்தான் said...

//

அப்பப்போ மரியாதை வரும்
அப்பப்போ மரியாதை போகும் :-)
//

ஓஹோ.. இது ”வரும்..ஆனா வராது “ மாதிரியா :)

நசரேயன் said...

//என்ன அஞ்சு ரூபாவா? ரொம்ப அதிகமா இருக்கே? //

கஜோல் : அஞ்சு ரூபாய்க்கே இப்படி அலட்டிகிறான், இவன்கிட்ட இருக்க அஞ்சி கோடியை எப்படி நான் அடிக்கபோறேன்னு தெரியலை.. பூலான் தேவி தாயே எனக்கு ஒரு வழி சொல்லு

ஆளவந்தான் said...

//
ஹா ஹா வாங்க ஆளவந்தான். நலமா??
//
நல்ல சுகம் :)

RAMYA said...

//
நசரேயன் said...
//அண்ணே எல்லாருக்கும் நான் ஒரே விலைதான் சொல்லுவேன் . ஒரு பொட்டலம் அஞ்சு ரூவா அண்ணே.//

ராஜா : உன் பொட்டலத்துக்கு சுண்ட கஞ்சி தேவலாம்
//

சண்ட கஞ்சி நல்ல இருக்கும் போல
சரி சீக்கிரம் அந்த ஆட்டோவை கூப்பிடுங்க.

எல்லாரும் நசரேயன் வீட்டுக்கு போலாம்.

எல்லாருக்கும் சுண்ட கஞ்சி தராராம்:)

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//

அப்பப்போ மரியாதை வரும்
அப்பப்போ மரியாதை போகும் :-)
//

ஓஹோ.. இது ”வரும்..ஆனா வராது “ மாதிரியா :)
//

ஆமா ஆமா :-)

ஆளவந்தான் said...

//
வில்லன்ஸ் குடும்பம் என்று பட்டப் பெயர் சூட்டிவிடலாம்
//
சூட்டலாம் தான்.. ஆனா வில்லியும் இருக்காங்களே :)

நசரேயன் said...

//
டேய்! ஒழுங்கா இங்கே இருந்து ஓடிப் போய்டு! இல்லைன்னா அடி விழும் உனக்கு.
//

ராஜா : நீ இப்ப ஓடலை உன்னையும் இவ அப்பன்கிட்ட பொண்ணு கேட்க அனுப்புவேன்.
சுண்டல் காரன் : இந்த அட்டு பிகருக்கே, இவ்வளவு அலும்பா

ஆளவந்தான் said...

//
\\ நசரேயன் said...

//நீ என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கே. பேச மாட்டியா??//

போடா இஞ்சி தின்ன குரங்குன்னு நினைத்து இருப்பாள் \

எப்படிங்க தல இதெல்லாம்
//

ஹிஹிஹி.. எத்தனை தடவ கேட்டிருப்போம்.. :)

ஆளவந்தான் said...

ஆஹா... நாந்தேன் 70 அடிச்சேன்

RAMYA said...

//
நசரேயன் said...
//என்ன அஞ்சு ரூபாவா? ரொம்ப அதிகமா இருக்கே? //

கஜோல் : அஞ்சு ரூபாய்க்கே இப்படி அலட்டிகிறான், இவன்கிட்ட இருக்க அஞ்சி கோடியை எப்படி நான் அடிக்கபோறேன்னு தெரியலை.. பூலான் தேவி தாயே எனக்கு ஒரு வழி சொல்லு
//

கவலைப் படாதே காஜோல், நான் எங்க நண்பர் நெல்லை புயலை துணைக்கு அழைத்து வரேன்.

எப்படியாவது அவரு அந்த ஐந்து கோடியை உனக்கு வாங்கி கொடுத்திடுவாறு :))

ஆளவந்தான் said...

//
ராஜா : நீ இப்ப ஓடலை உன்னையும் இவ அப்பன்கிட்ட பொண்ணு கேட்க அனுப்புவேன்.
//

இதை கேட்டு சுண்டல் பையன் “பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடினானமே” உன்மையா?

RAMYA said...

//
நசரேயன் said...
//
டேய்! ஒழுங்கா இங்கே இருந்து ஓடிப் போய்டு! இல்லைன்னா அடி விழும் உனக்கு.
//

ராஜா : நீ இப்ப ஓடலை உன்னையும் இவ அப்பன்கிட்ட பொண்ணு கேட்க அனுப்புவேன்.
சுண்டல் காரன் : இந்த அட்டு பிகருக்கே, இவ்வளவு அலும்பா
//

இது இதுதான் நம்ப நசரேயன் டச்
ஆளவந்தான் நல்லா பாருங்க :))

நசரேயன் said...

//அன்னைக்கே உன்னை விரட்டி விட்டேன் இல்லை, இன்னைக்கு உன் தொல்லை தாங்கலைடா, நாங்க முக்கியமா பேசிகிட்டு இருக்கோம், போ!//

இந்தியாவை யாருக்கு விக்கலாமுணா???

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
ராஜா : நீ இப்ப ஓடலை உன்னையும் இவ அப்பன்கிட்ட பொண்ணு கேட்க அனுப்புவேன்.
//

இதை கேட்டு சுண்டல் பையன் “பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடினானமே” உன்மையா?
//

ச்சே அவன் ரொம்ப சின்னபையன்பா!!

ஆளவந்தான் said...

//
இது இதுதான் நம்ப நசரேயன் டச்
ஆளவந்தான் நல்லா பாருங்க :))
//
:))))))

ஆளவந்தான் said...

//
ச்சே அவன் ரொம்ப சின்னபையன்பா!!
//

ஹெஹெஹ்.. இந்த விசயம் நம்ம ச்சின்னபையனுக்கு தெரியுமா :)

நசரேயன் said...

//போயி வேறே எங்காவது உன் வியாபாரத்தை வச்சுக்கோ!//

சு.காரன் : சரி.. சரி.. நீ கடலைய வரு.. ரெம்ப கரிய விட்டுடாதே.. நான் வித்துட்டு வாரேன்

ஆளவந்தான் said...

//
புத்திசாலியா? புத்திசாலியா இருந்தா காதலிச்சுருப்பாரா?
//
அட அதைவிடுங்க பாஸ்.. புத்திசாலியா இருந்தா .. காதலிச்ச பொன்னையே கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருப்பானா சொல்லுங்க :)

ஆளவந்தான் said...

அட.. 80ம் நாந்தேன் அடிச்சேன் :)

நசரேயன் said...

//அவன்கிட்டே ஏம்மா கோவிச்சுக்கரே, அவனே பாவம் சுண்டல் வித்து பிழைக்கிறான்.//

ஆமா.. அவன் சுண்டல் விக்குறான், ஆனா நீ சுண்டல் வறுக்கிற.. ரெண்டு பேருக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை

ஆளவந்தான் said...

//
"அண்ணா சுண்டல் சாப்பிடுங்க நல்ல சூடா இருக்கு"
//
ராஜா: சூடா இருக்கிறதெல்லாம் சாப்பிட்லாம்னா.. மொதல்ல இவளை தான் சாப்பிடனும்

நசரேயன் said...

//
அந்த தம்பியை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. உனக்கு மனசாட்சியே இல்லையா?? //
கஜோல் : அப்ப .. எனக்கு மாப்பிள, இவனை வச்சி என் தங்கச்சிக்கும் நூல் விட போறியா?
சு.காரன் : நீயே நல்லா இல்லை, உன் தங்கச்சி எப்படி இருப்பன்னு தெரியும், இவரு தான் காஞ்சி போய் இருக்காருனா, நானுமா??

ஆளவந்தான் said...

//
என்ன பேசறீங்க நீங்க! என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? வந்து ஒரு விஷயத்தை கச்சிதமா முடிக்க துப்பு இல்லை
//
ஸ்டார் மூஜிக்.. இப்பவே ட்ரைனிங் எடுத்துக்க ராஜா.. பின்னால உதவும்

நசரேயன் said...

//ரொம்ப அதிகமா பேசாதீங்க?//
எப்படியும் கல்யாணத்திருக்கு அப்புறம் அவனாலே பேச முடியாது, இப்பவாது ரெண்டு வார்த்தை பேசட்டும்

நசரேயன் said...

//வந்து வீட்டுலே கலாட்ட பண்ணிட்டு இங்கே வந்தது ரொம்ப ஒழுங்கு மாதிரி ஒன்னும் நடிக்க வேணாம்//

என்னை நடிக்க வச்சது எங்க பெரியக்கா ரம்யா

நசரேயன் said...

//
நான்தான் உன் கூட ஓடி வரேன்னு சொன்னேன் இல்லையா? ஏன் என்னை அங்கேயே விட்டுட்டு போய்ட்டே??

//

ராஜா : அங்க் .. நீ சும்மா ஓடிவந்தா நான் சிங்க் தான் அடிக்கணும், ஒழுங்கா உங்க அப்பன் சேத்து வச்சி இருக்கிற ரெண்டு கிலோ தங்கத்தையும், அந்த அரை கிலோ வைரத்தையும் எடுத்திட்டு வா உடனே ஓடிப்போகலாம்

நசரேயன் said...

//
ஐயோ அக்கா ஓடிப் போகப் போறீங்களா? //
ராஜா : அக்காவா.. உனக்கு இப்படி ஒரு தம்பி இருக்கிறதை சொல்லவே இல்லை

நசரேயன் said...

//இந்த அண்ணனைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. உங்களைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு//

சுண்டல் காரனுக்கே தெரியுது யாரு பாவமுன்னு

நசரேயன் said...

//உங்களுக்கு செட்டு இந்த அண்ணா இல்லை அக்கா. என்றான் சுண்டல் விற்கும் பையன்.//

ரூட்டை மாத்துகிறான் பையன்

நசரேயன் said...

//"டேய் நீ இன்னும் இங்கே இருந்து போகலையா? நீ சுண்டல் விக்க வந்தியா இல்லே அறிவுரை வழங்க வந்தியா. மரியாதையா ஓடிப் போய்டு! இல்லே உன் சுண்டல்லே மண்ணை வாரிப் போட்டுடுவேன்!//

சு.காரன் : உன் பிழைப்பிலே ஏற்கனவே மண்ணு அள்ளி பொட்டச்சி, அதை முதல்ல கவனி

நசரேயன் said...

//ஐயோ ! அக்கா அந்த மாதிரி செய்திடாதீங்க, அப்புறம் எங்க மொதலாளி என்னை கடல்லே தூக்கி போட்டுடுவாரு. ஏதோ தோணிச்சு சொன்னேன், விடுவீங்களா? அதுக்குப் போயி ஏன் இப்படி ஆவேசப் படறீங்க??//

கஜோல் : கடல்ல தூக்கி போட்ட கடலை வில்லு, இப்ப நான் கடலை வருக்கதை கெடுக்காதே

நசரேயன் said...

//டேய் என்னாடா! போலீஸ்க்கு போன் போட்டு உன்னை வந்து அள்ளிகிட்டு போகச் சொல்லவா?? //
என்னோடு சேத்து இவரையும் அள்ளிட்டு போவாங்க ஈவ் டீசிங்ல சரியா ?

நசரேயன் said...

//எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?? //

ம்ம்.. கொய்யாப்பழம் சாப்பிடு கோபம் குறையும்

நசரேயன் said...

//தப்பு பன்னறேனோ, ஒரு ஏழைப் பையனை நான் ரொம்ப திட்டறேனோ"//

ஒருத்தன் பிறப்பிலே..இன்னொருவன் உன்னை காதலித்தாலே ஏழை

நசரேயன் said...

//ஐயோ! அக்கா அந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க. நானே போறேன். சுண்டல் விக்கப் போனால் இங்கேயும் வில்லங்கமா?? நமக்கும் கொஞ்சம் வாயி அதிகம்தான். அவங்க சொந்த விஷயத்துலே தலையிட்டு இருக்கக்கூடாது. //

எனக்கு வாய் பேச சொல்லி குடுத்ததே ரம்யா அக்காதான்.. நீங்க எதுக்கு அவங்க வீட்டு ஒரு ஆட்டோ அனுப்புங்க

நசரேயன் said...

//சரி ரொம்ப கோவமா இருக்கிறமாதிரி நடிக்காதே. சீக்கிரம் விஷயத்துக்கு வா. என்ன விஷயம். எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிருக்கறே?? அதே மொதல்லே சொல்லு.//

அதை தான் நான் அப்பவே சொன்னேன்.. இஞ்சி தின்ன குரங்கு

நசரேயன் said...

//"என்ன பேசறீங்க நீங்க! என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? வந்து ஒரு விஷயத்தை கச்சிதமா முடிக்க துப்பு இல்லை, என்ன இங்கே வந்து ரொம்ப அலட்டற மாதிரி இருக்கு" //

இதுக்கு நானும் சுண்டலே விக்க போகலாம்

நசரேயன் said...

போயிட்டு மறுபடி வாரேன்

Prabhu said...

"உங்க அப்பனோட ஆவேசத்தைதான் அன்னைக்கே பார்த்தேனே! உங்கப்பனுக்கு தான் வயசு ஆயிடுச்சு! உன் தங்கச்சிக்கு என்ன ஆச்சு?என்ன குதி குதிக்கறா!! கொஞ்சம் கூட மரியாதை இல்லாத குடும்பமா இருக்கு. இந்த குடும்பத்திலே பொண்ணு எடுக்க எங்க அம்மா அப்பா ஒத்துக்குவாங்களான்னு தெரியலை"//////////

மைத்துனி சரியில்லாத வீட்டில பொண்ணு எடுக்கக் கூடாதுங்கிறது கொள்கை

அ.மு.செய்யது said...

அதுக்குள்ள நூறு தாண்டிடுச்சா ??

உங்க கதை வெள்ளி விழாவை நோக்கி !!!!!!!!

புதியவன் said...

//சோக பொம்மையாக அமர்ந்திருந்தாள் காஜோல்.//

“சோக பொம்மை” நல்லா ரம்யா இருக்கு இந்த வார்த்தை...

புதியவன் said...

//"கிழிச்சீங்க, நான் தான் வீட்டுலே வந்து பொண்ணு கேளுங்கன்னு சொன்னேன். //

என்ன ஒரு அவமானம்...ராஜாவுக்கு வந்த சோதனையா இது...?

புதியவன் said...

//நான்தான் உன் கூட ஓடி வரேன்னு சொன்னேன் இல்லையா? ஏன் என்னை அங்கேயே விட்டுட்டு போய்ட்டே??//

ரொம்ப தைரியமான பொண்ணுதான் கஜோல்...

புதியவன் said...

//தப்பு பன்னறேனோ, ஒரு ஏழைப் பையனை நான் ரொம்ப திட்டறேனோ" காஜோலின் புலம்பல் அவளுக்கே நியாயமாகப் பட்டது.//

நியாயமான புலம்பல் தான்...

புதியவன் said...

//நம்ம குடும்பத்தைப் பற்றி ரொம்ப கேவலமா பேசறானே!! காஜோலுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.//

குடும்பத்தை பேசினா எல்லோருக்கும் வரும் வருத்தம் இந்தபொண்ணுக்கும் இருக்கு கஜோல் ரொம்ப நல்லா பொண்ணா இருக்கும் போல...

தொடருங்க ரம்யா ஜில்லுன்னு ஒரு காதலின் அடுத்த பகுதியை...

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
//"என்ன பேசறீங்க நீங்க! என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? வந்து ஒரு விஷயத்தை கச்சிதமா முடிக்க துப்பு இல்லை, என்ன இங்கே வந்து ரொம்ப அலட்டற மாதிரி இருக்கு" //

இதுக்கு நானும் சுண்டலே விக்க போகலாம்
//

ஹா..ஹா........

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
// நான் வந்தப்புறம் உன்னை உங்க அப்பா ரொம்ப திட்டிட்டாரா. //

இல்லை ரொம்ப கொஞ்சினாரு...
//

ஊஞ்ச கட்டி ஆட்டினாரு...பாராட்டுனாரு .....

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//நான்தான் உன் கூட ஓடி வரேன்னு சொன்னேன் இல்லையா? ஏன் என்னை அங்கேயே விட்டுட்டு போய்ட்டே??//

ரொம்ப தைரியமான பொண்ணுதான் கஜோல்...
//

கஜோல் ரொம்ப தைரியமான பொண்ணு தான்..மின்சார கனவு நீங்க பாக்கலியா ?

Vijay said...

விறு விறு
சுறு சுறு
துரு துரு ;-)

sakthi said...

கதையில ஒரு லைன் பாக்கி வைக்காம
கமெண்ட்ஸ்ல ஓட்டிட்டாங்க இதுக்கும்
மேல நான் என்ன சொல்ல???

sakthi said...

பெரிய பெரிய பின்னூட்ட திலகம் முன்னால் நான் எல்லாம் ரொம்ப சாதாரணம்ங்க...
கதை அருமைங்க

நட்புடன் ஜமால் said...

நான்கு பகுதிகளையும் படித்தாயிற்று.

ரொம்ப நேர்த்தியா எழுதியிருக்கீங்க.

ரொம்ப ஹாஸ்யமாயிருக்கு.

அடுத்து தொடருக்காக காத்திருக்கின்றோம் ...

gayathri said...

நீங்க என்ன பண்ணிருக்கணும்? புத்திசாலியா உங்க அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு பொண்ணு கேட்டிருந்தா எங்க அப்பா இவ்வளவு தூரம் போயி இருப்பாரா?"

mmmmmmmmmmm athane

ponnu kekka vanganu sonna pothum periya ivanga mathiri ivangale thaniya vanthu pesit povanga intha pasangalukku konja kuda aivi illa pola pa

gayathri said...

என்னாம்மா என்னா ஆச்சு??

pathiya pa seiyarthaum senjitu enna question kekurarunu

ஆளவந்தான் said...

@gayathiri,

//
ponnu kekka vanganu sonna pothum periya ivanga mathiri ivangale thaniya vanthu pesit povanga intha pasangalukku konja kuda aivi illa pola pa
//
என்னைக்கு காதலிக்க ஆரம்பிச்சானோ..அன்னைக்கே அறிவு போச்சு’னு நாங்க் தான் ஒத்துகிட்டோம்ல

//
ஆளவந்தான் said...

//
புத்திசாலியா? புத்திசாலியா இருந்தா காதலிச்சுருப்பாரா?
//
அட அதைவிடுங்க பாஸ்.. புத்திசாலியா இருந்தா .. காதலிச்ச பொன்னையே கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருப்பானா சொல்லுங்க :)
//

Unknown said...

// ஜில் என்று ஒரு காதல் / நான்காம் பகுதி //

வந்துட்டேன்...... வந்துட்டேன்..........

// கதாநாயகியின் அம்மா : கல்யாணி //

ஓஒ.... பீர் மாமியா..... வாங்கோ........ வாங்கோ.......

// பாட்டி: மந்தாகினி //

அட.. ச்ச.... இந்த பெனாயில் கெழவி... இன்னுமும் மண்டைய போடுலையா.....

இத மொதல்ல கொசு மருந்து அடுச்சு கொள்ளுங்கப்பா... இதோட இம்ச தாங்க முடியல....

// வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாவுக்கு மனதிற்கு ரொம்பவும் கஷ்டமா இருந்தது. //

என்தம்பி ..... செருப்ப திருடீட்டு வராம போயிட்டியா.....!!!

// இப்படி வந்தது அவமான போச்சே. //

உடு தம்பி ... இதெல்லாம் உனக்கு சகஜம்தான....... ஏதோ புதுசா அவமான படுறமாதிரி பீல் பண்ணுற......

// காஜோலை சந்திக்கும் இடத்துக்கு தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தான் ராஜா. //

பங்க்சுவாளிடிய மெய்ண்டைன் பண்ணுற......??? ம்ம்.. ம்ம்ம்......

// அங்கே சோக பொம்மையாக அமர்ந்திருந்தாள் காஜோல். //

ஏன்... சுண்டல் வாங்கித்தர ஆளில்லையா.......???

// "என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்".... //

இதுல கெட்ட மொக்க வேற......

// "இங்கே பாரு, உனக்கு இப்போ என்ன பிரச்சனை. அதெ மொதல்லே சொன்னாதானே நான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்." //

அடுத்தது என்ன.... துண்ட காணாம்... துணிய காணாமின்னு அவள திரும்பிபாக்காம ஓடுவ .....

// "அண்ணா சுண்டல் சாப்பிடுங்க நல்ல சூடா இருக்கு" அன்னைக்குதான் இவங்ககிட்டே விக்காமல் போனோம். இன்னைக்காவது ஒரு ஐந்து பொட்டலமாவது வித்துடனும் இந்த முடிவிற்கு வந்த சுண்டல் விற்கும் பையனின் குரலில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. //

அடேய் தம்பி எரியர நெருப்புல எதுக்கடா மறுவடியும் என்னைய ஊத்துற....... போயிட்டு அப்பறமா வா....

// "சரி ஒரு பொட்டலம் என்ன விலை?? எல்லாருக்கும் சொல்லுற விலையை எனக்கும் சொல்லக் கூடாது சரியா??" //

ஆமாம்.... ஒர்ருவா சேத்தி சொல்லு..... பாரி வள்ளல் பரம்பர.... ஒடனே குடுத்துருவாரு.....

// "என்ன அஞ்சு ரூபாவா? ரொம்ப அதிகமா இருக்கே?" //

அடேய் மண்டைய..... !! அஞ்சு ரூவாகூட செலவு பண்ணாம ஒரு அட்டு பிகர மடக்கலாமின்னு பாக்குறியா....??? நடக்காதுடி மவனே........

// நம்ம குடும்பத்தைப் பற்றி ரொம்ப கேவலமா பேசறானே!! காஜோலுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. //

அப்போ ஆள மாத்து......

gayathri said...

ஆளவந்தான் said...
//
புத்திசாலியா? புத்திசாலியா இருந்தா காதலிச்சுருப்பாரா?
//
அட அதைவிடுங்க பாஸ்.. புத்திசாலியா இருந்தா .. காதலிச்ச பொன்னையே கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருப்பானா சொல்லுங்க :)

ellarum itha konjam note panugapa

gayathri said...

me they 120