Thursday, May 28, 2009

ஜில் என்று ஒரு காதல் / ஆறாம் பகுதி!!

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

"டாக்டர் நல்லா பார்த்து சொல்லுங்க இவருக்கு என்னாச்சுன்னு. வெறும் ஜுரம்தான் திடீர்னு பார்த்தா மயக்கம் வந்திடுச்சு இவருக்கு" என்று அழமாட்டாத குறையா அம்மா!


"நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க" என்றார் டாக்டர்.
ராஜாவுக்கு ஒண்ணுமே புரியலை! "அம்மா வெளியே வாங்க. டாக்டர் முழுவதுமாக பரிசோதனை பண்ணட்டும். அதுவரை வெளியே காத்திருப்போம் வாங்க" என்று வெளியே அழைத்து வந்து விட்டான்.


டாக்டர் வெளியே வந்து "ஒன்னும் இல்லைம்மா பயப்படாதீங்க. ஜுரம் கொஞ்சம் அதிகமா இருக்கு. ஊசி போட்டிருக்கேன் நன்றாக தூங்குகிறார். பயப்பாடாதீங்க. அவரை எழுப்ப வேண்டாம். ராஜா நீ மட்டும் இங்கே இரு. அம்மாவை வீட்டுக்கு அனுப்பிவிடு" என்றார் டாக்டர்.
"இல்லை டாக்டர் நானும் இங்கேயே இருக்கேன். வீட்டுக்கு போனாலும் நிம்மதியா இருக்க முடியாது"


"சரிம்மா வாங்க இப்படி வந்து உக்காருங்க." அந்த நேரத்தில் ராஜாவின் அலைபேசி ஒலித்தது. "சொல்லும்மா, நானா நான் இங்கே மருத்துவமனையில் இருக்கின்றேன். இல்லே இல்லே எனக்கு ஒன்றும் இல்லை, அபாவுக்குதான்... இல்லே ஒண்ணும் சீரியஸ் இல்லே. ஜுரம் அதான் மருத்துவமனையில் சேர்த்திருக்கோம்"


"யாருடா போனிலே, இவ்வளவு வெவரம் சொல்லறே?"


சிறிது நேரம் கனத்த மனதுடன் வெளியே இருந்தார்கள். அப்போது ஒரு சிஸ்டர் வந்து உள்ளே வரச்சொல்லி அழைத்தார்கள்.


"உன்னோட மருமகதான் பேசறான்னா சொல்ல முடியும்? என்னோட நண்பன்மா" அம்மா இப்போ இருக்கும் நிலையில் உண்மையை சொல்லி குழப்ப வேண்டாம்.சரி வாங்கம்மா அப்பா அழைப்பதாக ஒரு சிஸ்டர் வந்து சொன்னாங்க. உள்ளே போலாம்"


அப்பா கொஞ்சம் பரவா இல்லைபோல் இருந்தார். அம்மா தான் பதறிட்டாங்க. "என்னாங்க உங்களுக்கு என்னாச்சு? எதையும் சொல்லாமல் மூடி மறைச்சே உங்களுக்கு பழக்கம் ஆயிடுச்சு"


"அம்மா அப்பா இப்போதான் கண்களை முழிச்சிருக்காரு. ஏன் இப்படி பதறிபோய் பேசறீங்க. அப்பாவுக்கு ஒண்ணும் இல்லை"


"சரியா சொன்னேடா ராஜா, எனக்கு ஒண்ணும் இல்லை. லேசா தலை சுத்திச்சு அவ்வளவுதான். நீ ஏண்டா ஊருக்கு போகலை? அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிட்டியா? எனக்கும் விடுப்பு சொல்லிட்டியா?"


"ஏங்க இப்படி மூச்சு விடாம பேசறீங்க? எல்லாம் அவன் பார்த்துக்குவான். நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ராஜா கொஞ்சம் பால் வாங்கி வா ஹார்லிக்ஸ் போட்டு தரலாம் அப்பாவுக்கு"

" சரிம்மா இதோ வாங்கிட்டு வாரேன்"

ரெண்டு நாட்கள் வேகமாக நகர்கின்றன. ஸ்ரீநிவாசன் தேறிட்டார்.


"அம்மா டாக்டர் இன்னைக்கு அப்பாவை அழைத்துப் போகச் சொல்லிட்டாரு, நீங்க எல்லாம் எடுத்து வைத்து கொண்டு தயாரா இருங்க. நான் பணம் கட்டிட்டு வந்து அழைத்தச் செல்கின்றேன்" என்றான் ராஜா.

"அப்பா நல்லபடியா வீத்துக்கு வந்தாச்சு, இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கப்பா" என்றான் ராஜா"

"சரி நீ எப்போ ஊருக்கு போறே?"



"நானாப்பா இன்னும் முடிவு பண்ணலையே? உங்களுக்கு வேறு உடல் நலம் சரி இல்லே, அதான் எப்போ போறதுன்னு ஒரே யோசனையா இருக்கு"


"அதெல்லாம் ஒன்னும் இல்லை சரியாகிப் போய்டும், இரு மானசா இங்கே வா, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நானும் நீயும் போயி அந்த பொண்ணைப் பார்த்துட்டு வரலாம்"


"இல்லைங்க என்னோட அண்ணனை வரச்சொல்லனும் இல்லையா? திடீர்னு எப்படி வரச்சொல்லறது? அடுத்த வாரம் போகலாமே?"


"வேண்டாம் அவன் வந்தா குட்டையை குழப்பிடுவான்"


"இல்லீங்க நான் அண்ணன்கிட்டே உன் பொண்ணை எங்க வீட்டு மருமகளா அனுப்புவியான்னு கேட்டுட்டேனே? இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா அண்ணா வருத்தப் படமாட்டாரா"


"நீ என் கிட்டே என்ன சொன்னே? கேட்கலாமான்னுதானே சொன்னே! அவன் கிட்டே கேட்டேபிட்டியா? அட இங்கே பாருடா உங்காம்மாவை! ரொம்ப கில்லாடியா இருக்கா! என் கிட்டே ஒன்னு சொல்லிட்டு வேறே ஒன்னு செஞ்சிருக்கா, இதெல்லாம் சரியே இல்லை!"
"இல்லைங்க இவன் திடீர்னு இந்த மாதிரி இடியை தூக்கி நம்ம தலையிலே போடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"


"சரி அதை விடு, அதே பேசிகிட்டு இருக்காதே நமக்கு நம்பளோட பையன் வாழ்க்கைதான் முக்கியம். ஒரு பையன் அவன் சந்தோசம்தான் நம்ம சந்தோஷமும் கூட. இதுலே உன் வீட்டு சொந்தம் எல்லாம் வேண்டாம், சரி விடு, அடுத்த வேலையை பார்க்கலாம். ராஜா நீ இரு நம்ப எல்லாரும் சேர்ந்தே போகலாம்"


"இல்லீங்க போகும்போது மூணு பேரா போகக் கூடாது"


"அதுசரி இது வேறேயா? இதுக்கு போயி யாரை கூட்டு சேர்க்கறது. நம்பளா பொண்ணு பார்க்க போறோம் ? ஏற்கனவே பார்த்து வச்ச பொண்ணை சும்மா பார்க்கபோறோம். அதுவும் வெறும் சம்பிராயத்துக்காக"


"இல்லேப்பா நான் என்னோட நண்பனை என்னுடன் அழைத்து வருகின்றேன். அப்போ நாலு பேரு இல்லையா?" (அப்பா நம்மளை தாக்கிட்டாரே!)


"அப்பா ஒரு சின்ன விஷயம் நம்ம எல்லாரும் புறப்படற விஷயத்தை காஜோலுக்கு போன் செய்து சொல்லிடவா?"


"எதுக்கு அப்போதான் அவங்க அப்பா நம்பளை உள்ளே விடுவானா?"


"அது இல்லேப்பா சொல்லிட்டு போறதுதானே நல்லது. அவங்க அப்பாவும் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பாரு"


"ஏங்க அவன் சொல்லறதும் சரிதான், சொல்லிடட்டும்"


"உங்க அம்மாவே சொல்லிட்டா போ இனிமேல் ஒரு பிரச்சனையும் இல்லே"


"இருங்கப்பா போனிலே சிக்னல் இல்லே, வெளியே போயி பேசிட்டு வரேன்" அப்பா இந்த சந்தோஷ செய்தியை தனியா சொன்னாதான் கொஞ்சம் நமக்கு சந்தோஷமா இருக்கும்.



"பொய் சொல்லறான் பாரு போனிலே சிக்னல் இல்லையாம். அதெப்படி திடீர்னு சிக்னல் போய்டும்?"



"அட! அதெல்லாம் கண்டுக்ககூடாது. உங்களுக்கு வெவஸ்தையே இல்லை. அவன் எதிரில் இதெல்லாம் பேசி வைக்காதீங்க"



"ஹேய் என்ன பண்ணிக்கிட்டு இருக்கே, உங்க அப்பா பக்கத்திலே இருக்காரா? கொஞ்சம் உள்ளே போய் உங்க அம்மாவுக்கு அடுப்படியிலே உதவி செய்யச் சொல்லு. எந்த நேரமும் உன்னை கவனிச்சிக்கிட்டு இருக்கறதுதான் அவரோட வேலையா?"
"இங்கேதான் இருக்காரு! போனிலே யாருன்னு கேக்கறாரு?" என்றாள் காஜோல்.
"இருக்கட்டும் நான் ஒன்னும் திருட்டுத்தனமா உங்கிட்டே பேசலைன்னு சொல்லு. தைரியமா இரு. எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை பொண்ணு கேட்டு வரதா சொல்லிட்டாங்க உங்க அப்பாகிட்டே இதை சொல்லு. அப்புறம் ஒரு விஷயம் எங்க வீட்டுலே உங்க வீட்டுக்கு வரும்போது உன்னோட தங்கச்சி அந்த ராச்சஸி வீட்லே இல்லாம பாத்துக்க. காசு கொடுத்து சினிமாவுக்கு அனுப்பி வச்சிடு. அவ இருந்தா அவ்வளவுதான். எங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப நல்லவங்க"


"அப்போ எங்க அம்மா அப்பா ரொம்ப கெட்டவங்களா? என்ன பேசறீங்க? என் தங்கச்சி இங்கேதான் இருப்பா! அவ சின்ன பிள்ளைதானே! அதை கூட உங்க வீட்டுலே புரிஞ்சிக்க மாட்டாங்களா? அதுக்காக அவளை ஒளிச்சா வைக்கமுடியும்?"


"அதுசரி ஆரம்பிச்சிடாதே தாயே! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. உன்னையும் உன்னோட மாமியார் அந்த லிஸ்ட்லே சேர்த்திடக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம்தான்"


"சரி உங்க வீட்லே சொல்லிடு, நாங்க அங்கே வந்தவுடன் போன் பண்ணறேன். சரியா?"



"சரி போன் பண்ணுங்க, நான் அப்பா அம்மாகிட்டே சொல்லிடறேன், சரி நான் வச்சிடறேன்"
"கொஞ்சம் சிரிச்சிகிட்டே இதை சொல்லக் கூடாதா? எல்லாம் என்னோட தலை விதி ஒரு கடுவன் பூனைக்கு நான் தாலிகட்டப் போறேன்" என்ன சத்தத்தையே காணோம் அடிப்பாவி அதுக்குள்ளே போனை வச்சிட்டியா" இவளை அப்புறமா கவனிச்சுக்கலாம்.





தொடரும்...
ரமயா





26 comments :

தினேஷ் said...

படிச்சாச்சு ...

सुREஷ் कुMAர் said...

மி த செகண்டு..
படிச்சுட்டு வாறன்..

Arasi Raj said...

3

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன்.. மறுபடி வாரேன்
//
நிலாவும் அம்மாவும் said...

3//

இது செல்லாது நிலா அம்மா

இராகவன் நைஜிரியா said...

படிச்சாச்சு..

தமிழிஷில் ஓட்டும் போட்டாச்சு

இராகவன் நைஜிரியா said...

// ராஜாவுக்கு ஒண்ணுமே புரியலை! //

காதலிக்க ஆரம்பிச்சிட்டால் ஒன்ணுமே புரியாதுதான்

இராகவன் நைஜிரியா said...

// "இல்லை டாக்டர் நானும் இங்கேயே இருக்கேன். வீட்டுக்கு போனாலும் நிம்மதியா இருக்க முடியாது" //

நீங்க இங்க இருந்தா நோயாளி நிம்மதியா இருக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லவில்லையா?

ஜானி வாக்கர் said...

இந்த பகுதி கொஞ்சம் வேகம் குறைவு, இருந்தாலும் அடுத்த பகுதி கூடுதல் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

அப்பாலிக்கா படிச்சிப்போட்டு வாறனுங்கோ

நட்புடன் ஜமால் said...

\\ந‌மக்கு நம்பளோட பையன் வாழ்க்கைதான் முக்கியம். ஒரு பையன் அவன் சந்தோசம்தான் நம்ம சந்தோஷமும் கூட\\


என்னோட தந்தையும் இப்படித்தான் என்னிடம் நடந்து கொண்டார்

நட்புடன் ஜமால் said...

ஜில் கொஞ்சம் கம்மி தான்

புதியவன் said...

கதையின் இந்தப் பகுதியில் செண்டிமெண்ட் அதிகம் இருக்கு...

//"உன்னோட மருமகதான் பேசறான்னா சொல்ல முடியும்? என்னோட நண்பன்மா"//

இந்த இடத்தில பொய் சொன்னா தப்பில்லை தான்...

//"கொஞ்சம் சிரிச்சிகிட்டே இதை சொல்லக் கூடாதா? எல்லாம் என்னோட தலை விதி ஒரு கடுவம் பூனைக்கு நான் தாலிகட்டப் போறேன்" //

அது என்ன ரம்யா ‘கடுவம் பூனை’ இதுவரை கேள்விப் பட்ட மாதிரி தெரியலையே...

நட்புடன் ஜமால் said...

என்னங்க 'கடுவன் பூனை' கேள்விப்படலையா


ஆமா! ஆமா!

உங்க குணத்திற்கு ஒத்துவராத தன்மை அது

kanagu said...

innum modhal 5 part padikkala.. so padichitu vandhu commenting :)

Mythees said...

கடுவன் பூனை..........?

வால்பையன் said...

மொத்தமா படிச்சிகிறேன்
இப்போ கொட்டாவி வருது!


இப்படிக்கு
உண்மையை பேசுவோர் சங்கம்!

ஆ.ஞானசேகரன் said...

முழுவதும் படித்துவிட்டு பிறகு வருகின்றேன்...

Anbu said...

காதலிக்க ஆரம்பிச்சிட்டால் ஒன்ணுமே புரியாதுதான்

அ.மு.செய்யது said...

//ஜுரம் கொஞ்சம் அதிகமா இருக்கு. ஊசி போட்டிருக்கேன் நன்றாக தூங்குகிறார்.//

வெறும் ஜூரமா ..கடைசி பதிவில் ஓவரா பில்டப்பு கொடுந்திருந்திங்க போல..

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
ஜில் கொஞ்சம் கம்மி தான்
//

ப்ரிட்ஜ்ல தான் வெச்சிருந்தாங்க..பவர் கட்டாயிடுத்து...

அ.மு.செய்யது said...

//சுரேஷ் குமார் said...
மி த செகண்டு..
படிச்சுட்டு வாறன்..
//

//நட்புடன் ஜமால் said...
அப்பாலிக்கா படிச்சிப்போட்டு வாறனுங்கோ
//


//வால்பையன் said...
மொத்தமா படிச்சிகிறேன்
இப்போ கொட்டாவி வருது!
//

//ஆ.ஞானசேகரன் said...
முழுவதும் படித்துவிட்டு பிறகு வருகின்றேன்...
//

எல்லாருமே எஸ்கேப்பா ???

நான் மட்டும் தான் முழுசா படிச்சிருக்கேனா ??

பாத்துக்கங்க டீச்சர்...

நசரேயன் said...

//"கொஞ்சம் சிரிச்சிகிட்டே இதை சொல்லக் கூடாதா? எல்லாம் என்னோட தலை விதி ஒரு கடுவன் பூனைக்கு நான் தாலிகட்டப் போறேன்" //

இவ்வளவு அவஸ்தை தேவையா ராஜாவுக்கு

Vijay said...

முதலில் மின்னல் வேகத்தில் நகர்ந்த கதை ஏன் இப்போ நத்தை மாதிரி போகுது?
கொஞ்சம் அடுத்த போடுங்க ரம்யா :-)

*இயற்கை ராஜி* said...

இந்த‌ க‌தை உங்க‌ ரேஞ்ச் ல இல்லை ர‌ம்யா...ஏதோ குறையுது....

ஆனா ந‌ல்லா இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு ரம்யா

RAMYA said...

நன்றி சூரியன்
நன்றி சுரேஷ் குமார்
நன்றி நிலாவும் அம்மாவும்
நன்றி நசரேயன்
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி சின்னக்கவுண்டர்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி புதியவன்
நன்றி kanagu
நன்றி mythees
நன்றி வால்பையன்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி Anbu
நன்றி அ.மு.செய்யது
நன்றி விஜய்
நன்றி இய‌ற்கை
நன்றி ஆ.ஞானசேகரன்