Friday, October 2, 2009

காத்திருந்த விழிகளில் கண்ணீர் ஏனோ!!


இலவின் மென்மை
இசையின் இனிமை
மதியின் குளுமை
மனதின் வலிமை
இவற்றில் கிடைக்கும்
நெஞ்சின் நிறைவை
நித்திய சோதனையில்
சத்தியமா மறந்தாய்
காத்திருந்த கண்கள்
நேற்று வரை தோற்க
மனதின் மகிழ்ச்சி
கனவாகிப் போக
காத்திருந்த காலங்கள்
கணிதம் தெரியாமல்
காலாவதியாகிப் போனதே
நிஜம் நிழலாகையில்
கருத்தில் ஏற்பட்ட வலி
கண்ணீர் பெருக்கியதே
வலியை போக்க
மனதை மயக்க
மருந்தொன்று உண்டு
புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!!


21 comments :

kanagu said...

me the first :))))))

kanagu said...

yen ivlo soogam???

nalla irundhu akka kavithai..

athuvum,

/*புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!!*/

indha varikal arumai... :)

இராகவன் நைஜிரியா said...

மீ த செகண்ட்

குடுகுடுப்பை said...

கவிதை கவிதை
ஆக்கட்டுமா கவுஜ கவுஜ

Unknown said...

// காத்திருந்த விழிகளில் கண்ணீர் ஏனோ!! ///

ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........




// இலவின் மென்மை
இசையின் இனிமை
மதியின் குளுமை
மனதின் வலிமை //

நீங்க என்ன டி.ஆர் 'ஓட ப்ரெண்டா.... ஒரே அடுக்கு மொழியா இருக்கு........?



// காத்திருந்த காலங்கள் //

இது ஏதோ சண் டி.வி யோட சீரியல் பேரு மாதிரி இருக்கே......?




// உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!! //


ஆஅவ்வ்வ்வ்வ்.....

அக்கோவ்...... நெம்ப டச் பன்னி போட்டுருச்சு கவித......!!

நெம்ப சூப்பரு போங்கோ.....!!





டிஸ்கி : -

படத்துல அந்தம்முனி நெம்ப நேரமா அழுவாச்சியோட இருந்துது .... !! ஏனுங்கோவ் அலுவுரீங்கோன்னு கேட்டனுங்....!!

அதுக்கு அந்தம்முனி .... பந்தமெல்லாம் வேண்டா... பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமின்னு அழுவாச்சி புடிக்குது....!!

பெட்ரமாஸ் லைட்டுக்கு நானெங்கீங்கோவ் போவனுங்.....!!

அ.மு.செய்யது said...

வலியுடன் ஒரு கவிதை !!!

( எங்க வீட்டு லேண்ட் லைன்ல இருந்து உங்க இரண்டு
நம்பருக்கும் ட்ரை பண்ணிட்டே இருக்கேன்..Keep on ringing !! )

सुREஷ் कुMAர் said...

என்னாச்சு அக்கா..

இவ்ளோ வலியுடன் கவிதை..!

सुREஷ் कुMAர் said...

ஒருவேள அப்டி இருக்குமோ..

Thamira said...

:((

இராகவன் நைஜிரியா said...

// வலியை போக்கமனதை மயக்க மருந்தொன்று உண்டு புன்னகை சூடி உருண்டோடும் கண்ணீரைகானல் நீராக்கினால் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடாதோ!! //

ஆம் சரியாகச் சொன்னீர்கள். புன்னகையைச் சூடினால் எல்லாம் காணமல் போய்விடும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வலியை போக்க
மனதை மயக்க
மருந்தொன்று உண்டு //

உண்மைதான் ரம்யா. அந்த மருந்தால் வலியைப் போக்கி விடலாம்.

துபாய் ராஜா said...

/மனதை மயக்க
மருந்தொன்று உண்டு
புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!! //

மருந்திருக்கும்போது மயக்கமேன்... ??!!....

நசரேயன் said...

//வலியை போக்க
மனதை மயக்க
மருந்தொன்று உண்டு //

"ரம்" யா

ஆ.ஞானசேகரன் said...

//புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!! //

வாங்க ரம்யா... வலியோடு கவிதை கொண்டு வந்துள்ளீர்கள்?

R.Gopi said...

//காத்திருந்த கண்கள்
நேற்று வரை தோற்க
மனதின் மகிழ்ச்சி
கனவாகிப் போக
காத்திருந்த காலங்கள்
கணிதம் தெரியாமல்
காலாவதியாகிப் போனதே //

எழுத‌ற‌ப்போ உங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்த‌தோ தெரிய‌வில்லை ர‌ம்யா... ப‌டிக்க‌ற‌ச்சே என‌க்கு அழுகாச்சி, அழுகாச்சியா வ‌ருது...

//நிஜம் நிழலாகையில்
கருத்தில் ஏற்பட்ட வலி
கண்ணீர் பெருக்கியதே //

சோக‌ம் வழிந்து ஓடுகிற‌தே...

//வலியை போக்க
மனதை மயக்க
மருந்தொன்று உண்டு //

என்ன‌ அது??

//புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!! //

புன்ன‌கை பெருக‌ட்டும், சோக‌ வெள்ள‌ம் வ‌டிய‌ட்டும்...

சூப்ப‌ர் ர‌ம்யா... சோக‌த்தை ர‌சிக்க‌வில்லை... அந்த‌ த‌மிழின் ஆளுமையை ர‌சித்தேன்..

அழுகாச்சிய‌ விட்டுட்டு கொஞ்ச‌ம் "ஜோக்கிரி"யா எழுதுங்க‌...

Anonymous said...

சோகம் ஏண்டா செல்லம்....

விழி வியக்க உன் இதழ் பூக்கும் புன்னகை ஒன்று தா பெண்ணே....

அப்துல்மாலிக் said...

சோக வரிகள், but நல்லாயிருக்கு

ஈரோடு கதிர் said...

கனக்கும் கவிதை ரம்யா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்று.

வால்பையன் said...

இந்த பொண்ணுகுள்ளயும் எதோ ஒண்ணு ஒளிஞ்சிருந்துருக்கு பாரேன்!

நட்புடன் ஜமால் said...

இன்னாங்க ஆச்சி

இப்படி பிழியுது ...