Sunday, December 27, 2009

சமுதாயத்திற்கு ஒரு கேள்வி - பகுதி - 2 !!



முதல் பார்ட் படிக்காதவர்கள் இங்கே படிக்கவும்!!


சரிதாவின் இன்றைய நிலை.....


சென்ற இடுகையில் சரிதாவின் பரிதாபபமான நிலையை தெளிவாகப் பார்த்தோம்.


இப்போது சரிதா என்ன செய்துக கொண்டிருக்கிறாள் தெரிந்து கொள்ளலாம் வாங்க. தொண்டு நிறுவனம் அரவணைத்து அழைத்துச் சென்ற சரிதா அங்கே ஒரு பயத்துடன்தான் அறையில் முடங்கி தனக்குத் தானே ஒரு முள் வேலி போட்டு கொண்டிருந்தாள். ஒரு வார காலம் முடிந்தவுடன் எனக்கு சரிதாவின் நினைவு வந்தது. தொண்டு நிறுவன தலைவியிடம் அனுமதி வாங்கி சென்று பார்த்தேன். என்னை பார்த்தவுடன் ஓடி வந்து பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அங்கே இருந்த ஒரு நிர்வாகி "இவள் எப்பொதும் இப்படிதான் அழுது கொண்டே இருக்கிறாள்.கொஞ்சம் ஏதாவது கூறி சமாதனப் படுத்திவிட்டு செல்லுங்கள்" என்று கூறினார்கள்.

அதே போல் சமாதானம் செய்து விட்டு கனத்த மனதுடன் விடுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனாலும் எப்போதும் சரிதாவைச் சுற்றியே என் எண்ணங்கள் இருந்து வந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வந்தேன். அப்படி ஒரு முறை பார்க்கச் செல்லும் பொது, சரிதா மிகவும் இளைத்துப் போய் இருந்தாள். என்னவென்று விசாரித்ததில் தனக்குத் தானே இட்டுக் கொண்ட தண்டனையால் அந்த இளைப்பு என தெரிந்து கொண்டேன். நன்றாக சாப்பிடுவதில்லை. உறக்கமும் இல்லை. எப்போதும் பிரிந்து போன சகோதர சகோதரிகளின் நினைவால் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன பெற்றோர்களின் நினைவோ உடன் பிறந்தவர்களின் நினைவோ மாறவில்லை அது மிகவும் கொடுமையான ஒன்றுதானே?

அவளின் மன நிலையில் எப்படி மாற்றம் கொண்டு வருவது என்று தீர சிந்தித்து அதை அந்த நிர்வாகத் தலைவியின் உதவியுடன் நிறைவேற்ற முடிவெடுத்தோம். முதலில் அந்த நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங், பிறகு அவளுடன் பழகுபவர்களுக்கு கவுன்சிலிங் இப்படி யார் யாருக்கெல்லாம் கவுன்சிலிங் தரவேண்டி இருந்ததோ அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தோம். சிரத்தை எடுத்து காரியத்தை செவ்வனே செய்து முடித்தோம். கடின உழைப்புடன் கூடிய எங்களின் சிரத்தைக்கு நல்ல பலன் கிடைத்தது.

எங்கள் முயற்சி வீண் போகவில்லை.சரிதாவின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.அதையே ஒரு நூலாகப் பிடித்துக் கொண்டு சரிதாவின் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்து விட்டோம். இதற்கு நிறைய பேரின் ஆதரவும் உதவியும் கிடைத்தது.

இப்போது சரிதாவை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாகிவிட்டது. சரிதாவும் தனது நிலை மறந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்கு பள்ளியின் நிர்வாகத்துடன் போராடி, நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, அவளின் இந்த நிலையை ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டோம். தொண்டு நிறுவனத்தின் தலைவி பொறுப்புடன் செய்த செயல்கள் சாலச் சிறந்தது.

மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாகமும் அதற்கு சம்மத்தித்து, இப்போது பிளஸ் ஒன் படித்து வருகிறாள். ஒருவருக்கும் அவளின் குறை இப்போது தெரியவில்லை. சரிதாவின் மனதிற்கு மட்டும்தான் அந்த குறை தெரியும். பள்ளி நிர்வாகத் தலைவிக்குத் தெரியும்.

சரிதாவின் உடலில் தற்சமயம் வெளியே எந்த வித மாற்றமும் தெரிய வில்லை. சில வருடங்கள் கடந்த பிறகு தெரிய வாய்ப்பு உண்டு. அது சமயம் விடுதியிலேயே படிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்வதாக தொண்டு நிறுவனத்தின் தலைவி கூறி இருக்கிறார்கள்.

சரிதாவின் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய தொண்டு நிறுவனம், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல மனங்கள் உள்ள மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த நல்ல மனம் படைத்த உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!

நல்ல முறையில் சரிதாவின் எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்!!

நல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு!!




21 comments :

கலகலப்ரியா said...

என்னோட வாழ்த்துகளும்..! great ramya..!

Romeoboy said...

நல்லது நடந்தா சரிங்க ..

Rajalakshmi Pakkirisamy said...

Great!!!

அ.மு.செய்யது said...

உங்க‌ள் முய‌ற்சிக‌ளுக்கு பாராட்டுக‌ள் ர‌ம்யா !!!

இனிமேல் செய்ய‌ப்போகும் காரிய‌ங்க‌ளுக்கும் சேர்த்து !!!

குடுகுடுப்பை said...

உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள். சரிதா வெற்றி பெற வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள். மிகப் பெருமையா இருக்குங்க.

ராமலக்ஷ்மி said...

சரிதாவின் எதிர்காலம் சிற்ப்பாக அமையட்டும். உங்களுக்கும் உங்கள் முயற்சிக்குக் கைகொடுத்த மற்ற நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

"ராமலக்ஷ்மி said...

சரிதாவின் எதிர்காலம் சிற்ப்பாக அமையட்டும். உங்களுக்கும் உங்கள் முயற்சிக்குக் கைகொடுத்த மற்ற நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்."
நானும் இதையே ரிப்பீட்டிக்கறேன்...

Anonymous said...

அந்த பெண்ணுக்காக நீ விடாமுயற்சி எடுத்து செய்த நற்செயல் பாராட்டுக்குரியது ரம்யா....பிறர் வலியை உன்னுடையாத நினைக்கும் உன் மனப்பான்மை வெறும் பாராட்டுக்குரியது மட்டுமல்ல ரம்யா அனைவரும் பயில வேண்டியதுமாகும்.....

சரிதாவின் வாழ்வு ஒளிமயமாக வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

சரிதாவிற்காக இவ்வளவு சிரமப்பட்டு - அவலை ஒரு நிலைக்குக் கொண்டு வந்த ரம்யாவின் கடும் முயற்சி பாராட்டத் தக்கது. வாழ்க - நல்வாழ்த்துகள் ரம்யா

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள் அக்கா.. சரிதா நல்லாயிருக்கனும்..:-))

S.A. நவாஸுதீன் said...

உங்களுடைய இந்த முயற்சியும் அதற்கான பலனும் ரொம்ப சந்தோசத்தை தருது ரம்யா.

மனமார்ந்த பாராட்டுக்கள்

Anonymous said...

சரிதாவுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.

ஊர்சுற்றி said...

படித்தபோது மனதில் ஒரு நெகிழ்வான அனுபவத்தை உணர முடிந்தது.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்க

உங்கள் சேவை
மேலும் தேவை

Sanjai Gandhi said...

நல்ல முறையில் சரிதாவின் எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்!!

நல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//படித்தபோது மனதில் ஒரு நெகிழ்வான அனுபவத்தை உணர முடிந்தது.//

ஆமாம்.

saravan said...

மனதை கனக்க செய்து விட்டது.
பெற்றோரே விட்டு செல்லும் அளவிற்கு
அந்த பெண்ணுக்கு என்ன குறை ??

வால்பையன் said...

நிச்சயமாக நல்ல எதிர்காலம் அமையும் என நம்புவோம்!

நசரேயன் said...

நிச்சயமாக நல்ல எதிர்காலம் அமையும்

ப்ரியமுடன் வசந்த் said...

நிறைஞ்ச மனசுக்காரிக்கா நீங்க!!!

சரிதாவுக்கு நல்ல எதிர்காலம் அமையும்...!