Monday, December 14, 2009

சமுதாயத்துக்கு ஒரு கேள்வி!!

சமுதாயம் என்பது நாமதானே! நம்மில் நான்கு பேர் சேர்ந்தால் அது சமுதாயம் சரிதானே நான் கூறுவது?

சில மாதங்களுக்கு முன் நான் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கு ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். வயது பதினைந்து இருக்கும் (அவள் பெயர் சரிதா என வைத்துக் கொள்வோம்). அவள் யாரிடமும் பேசமாட்டாள். ஆனால் நான் அந்த பெண்ணிடம் வலியப் போய் பேசுவேன். சரியா பதில் பேசமாட்டாள். என்ன சிகிச்சை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. உடன் அந்தப் பெண்ணின் சித்தப்பா இருந்தார். அவரும் ஒரே ஒரு நாள்தான் இருந்தார். இரெண்டாம் நாளில் இருந்து அவரும் இல்லை. சித்தப்பா எங்கே போனார் என்று விசாரித்தேன். ஊருக்குப் போய் இருக்கிறார், வந்திடுவார் என்று நம்பிக்கையுடன் கூறினாள். அம்மா அப்பா இல்லையா என்று கேட்டேன், எல்லாரும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தாள். காலம் அதன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.

காலக் கண்ணாடியில் அந்தப் பெண்ணின் சோகங்கள் ஏனோ தெரியவில்லை. மருத்துவர்கள் சரிதாவிற்கு அறுவை சிகிச்சை குறித்து அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதம் சரிதா அறியவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு விவரம் யாரும் தெரிவிக்கவில்லை.

அந்த நாளும் வந்தது. அதாவது சரிதாவின் அறுவை சிகிச்சைக்கு குறித்த நாள். மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து விட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கும்படி கூறினார்கள். அப்போதுதான் அவளுடன் ஒருவரும் இல்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொண்டார்கள் மருத்துவர்கள் உட்பட.

தன்னுடன் உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள். எனக்கு மிகவும் கஷ்டமா போச்சு. அனைவரும் சேர்ந்து சமாதனப் படுத்தினோம். அப்போ கூட கேட்டோம் என்ன அறுவை சிகிச்சை என்று, சரிதா கூற மறுத்து விட்டாள். விளங்காத விளக்கத்துடன் அறுவைசிகிச்சை முடிந்து வரும்வரை காத்திருந்தோம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு வேற அறைக்கு மாற்றி விட்டார்கள். அது என் அறையில் இருந்து ரெண்டு அறை தள்ளி இருந்தது. அதனால் எனக்கு சரிதாவிடம் பேச வசதியாக இருந்தது.

சரிதாவைப் பார்க்க ஒருவரும் வரவில்லை. மருத்துவமனையில் சரிதாவுடன் வார்டில் இருந்தவர்கள் மட்டுமே வருவதும் போவதுமாக இருந்தார்கள். கடைசியில் ஒரு நாள் சரிதா என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தாள்..

சரிதாவுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை, ரெண்டு தம்பிகள். உடன் பிறப்புகளுடன் மிகவும் ஒத்துமையாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த சரிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இடி போல் இறங்கியது. அதை வெளிப்படுத்த தெரியாமலே சில மாதங்களை கடத்தி இருக்கிறாள். சக மாணவிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது, தனது உடன்பிறந்தவர்களிடம் சரியாகப் பேசுவதில்லை. அவர்களே வந்து பேசினாலும் பதில் கூறுவதில்லை.

இன்னும் சில மாதங்கள் ஆனது பள்ளிக்குச் செல்வதை அறவே வெறுக்க ஆரம்பித்தாள். தோழிகள் வந்து பேசினால் கூட பதில் பேசுவது இல்லை. சரிதாவிற்குள் எப்பொழுதும் இல்லாத கூச்ச சுபாவம் ஒரு வியாதி போல் தொற்றிக் கொண்டுள்ளது.

அதை வெளியே காட்டாமல் அமைதியை ஒரு போர்வையாக்கி அதற்குள் ஒளிந்து கொண்டு சில மாதங்களை கடத்தி இருக்கிறாள்.அதுவரை சரிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வராத பெற்றோர்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் சந்தேகம் வந்திருக்கிறது. பிறகு உக்கார வச்சி விசாரித்ததில் சரிதாவால் சரியானபடி விளக்கமளிக்க முடியவில்லையாம்.

பிறகு அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே சரிதா தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்துள்ளாள். பெண்மைத் தன்மையில் இருந்து மாற்றங்கள் அவளின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருக்கிறது. சரிதாவுக்கு புரிந்து கொள்ளவே பல மாதங்கள் ஆனதாம். புரிந்தபிறகு அவள் மனதில் பயமும், கூச்சமும் கோலோச்சி இருக்கிறது. பெற்றோர்களிடம் எப்படி பகிர்ந்து கொள்வது என்று மனதிற்குள்ளேயே மருகி இருக்கிறாள். உடன் பிறந்தவர்களிடமும் எதையும் விளக்க முடியவில்லை. அவர்களும் சரிதா ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி கேட்டு அலுத்து விட்டார்களாம். இறுதியில் மருத்துவரால் சரிதாவின் நிலை உணர்த்தப் பட்டதுமருத்துவர் ஒரு மருத்துவமனை முகவரி கொடுத்து அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

ஆனால் சரிதாவின் பெற்றோர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இதனால் அந்த பதினைந்தே வயது நிறைந்த பெண்ணின் மனதில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நிலையில் அந்த கொடுமையும் நிகழ்த்தி அதிலிருந்தும் காப்பாற்றப் பட்டிருக்கிறாள். இந்த நிகழ்விற்கு பிறகு மருத்துவர் கூறிய மருத்துவமனைக்கு செல்லாமல் வேற மருத்துவமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து நான் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிராகள். மருத்துவர்களும் பரிசோத்தித்து விட்டு அவர்களால் என்ன முடியுமோ அதை செய்வதாக கூறி இருக்கிறார்கள். அதை ஒத்துக் கொண்ட சரிதாவின் பெற்றோர்கள் சரிதாவின் சித்தப்பாவை துணைக்கு வைத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். சித்தப்பாவும் அடுத்த நாள் கச்சிதமாக நழுவிவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் சரிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது.

அறுவை சிகிச்சை முடிந்து குணமான பிறகு

சரிதாவின் வீட்டிற்கு அனுப்ப பல முயற்சிகள் மேற்கொண்டனர். அனைத்தும் தோல்வியையே தழுவின. அவர்கள் கொடுத்த முகவரியும் தவறானது. சரிதாவிடம் பெற்ற முகவரியிலும் சரிதாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து கொண்டு புறப்பட்டு விட்டனர். எங்கே தேடுவது இது மருத்துவர்களின் முதல் கேள்வி. சரிதாவை என்ன செய்வது இது மருத்துவர்களின் இரெண்டாவது கேள்வி. இறுதியில் சரிதாவிடமே வேறு யாரவாது உறவினர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள்.சில முகவரிகள் சரிதாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றன. அங்கேயும் ஆட்களை அனுப்பி விசாரித்தார்கள். அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது, அவர்கள் பெண்ணை நாங்கள் எப்படி வைத்துக் கொள்வது? பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறி அனுப்பி விட்டனர். மருத்துவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

எங்கே செல்கிறாய் என்ற மருத்துவர்கள் தன்னை நோக்கி கேட்ட கேள்விக்கு அவளின் அழுகைதான் பதிலாகக் மருத்துவர் கிடைக்கப் பெற்றார்கள்.

இந்த சூழ்நிலையில் மனதளவில் மிகவும் பாதித்த சரிதா எங்கே செல்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களும் அவர்களாலான உதவிகளை செய்து வந்தார்கள்.ஆனால் சரிதாவை எவ்வளவு நாட்கள்தான் மருத்துவமனையில் வைத்திருப்பது? அவர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். பிறகு சில தொண்டு நிறுவனத்திடம் பேசி சரிதாவை அங்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே செல்ல சரிதா மறுத்து விட்டாள். மிகவும் பயமாக இருக்கிறது. யார் எப்படி எல்லாம் என்னை கிண்டல் செய்வார்களோ என்று காரணமும் கூறி அழுதாள். ஆனாலும் அனைவரும் சமாதானப் படுத்தி அந்த தொண்டு நிறுவனத்தில் சேர்த்து விட்டார்கள். இப்போ என்ன செய்கிறாள் என்று பிறகு பார்ப்போம்..

இப்போது பெற்றோர்களிடம் வருவோம்... பிறப்பில் குறை ஒன்றும் இல்லை. இடையிலே வந்த குறை. அந்த பதினைந்தே வயது நிரம்பிய பெண் என்ன பாவம் செய்தாள். எப்படி பெற்றோர்களே உங்களக்கு இது போல் செய்ய மனது வந்தது. சரிதாவின் பெற்றோர்கள் ஊரை விட்டே சென்று விட்டார்கள். அதுவும் மிகக் குறுகிய காலத்தில் ஊரை மாற்றுவது என்பது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. சரிதாவை மருத்தவனையில் சேர்த்த இடைப்பட்ட கால அவகாசத்தில் இடப் பெயர்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டுத்தான் அவர்கள் சரிதாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இது சரிதாவின் உறவினர்கள் கூறிய விளக்கங்கள். எது உண்மையோ எது பொய்யோ தெரியாது, ஆனால் இவர்களின் செய்கையால் பாதிக்கப்பட்டு நிற்கும் அந்த பெண்ணிற்கு இவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?

சரிதா மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண்ணாம். ஒவ்வொரு தேர்விலும் சரிதா வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் 90க்கும் மேலே. மேலே படிக்க ஆசைப் படுகிறாள். இதுவும் அந்த பெண் செய்த தவறோ? ஏதோ குறை வந்துவிட்டது. அதற்கு அந்த அறியாப் பெண் எப்படி காரணமாவாள். நல்லா படிக்கற பெண்தானே அவளை அவளின் விருப்பம் போல் படிக்க வைத்திருக்கலாமே!

அவளின் கூச்சத்தை நல்ல கவுன்சிலிங் முறையில் போக்கி இருக்கலாமே!ஏன் செய்யவில்லை? சரிதாவிற்கு வந்த குறைக்கு அவளை எப்படி பெற்றவர்கள் தண்டிக்கலாம்?மற்ற குழந்தைகளை நல்ல முறையில்தானே அதுவும் நகரத்தில் மிக உயரிய பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால தற்சமயம் ஊரை விட்டே சென்று விட்டார்கள். இது எப்படி நியாயமாகும்? இதற்கு விடை தெரியாமல், அந்த தொண்டு நிறுவனத்திற்கு பெரிய நன்றி கூறிவிட்டு எங்களாலான உதவிகள் செய்து விட்டு, அவளின் கண்ணீரை தற்காலிகமாக துடைத்து விட்டு வந்தோம். நாங்கள் விடை பெறும் நேரம் நெருங்கும்போது சரிதாவின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. மனம் கனத்து விட்டது....

72 comments :

நட்புடன் ஜமால் said...

நீங்க சொன்னா சரிதான்

உள்ளே போய்ட்டு வாறேன் ...

RAMYA said...

ஜமால் உங்களின் முதல் கமெண்ட் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன!

வாங்க வாங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பா!

மணிஜி said...

காலைவணக்கம் ரம்யா..

நட்புடன் ஜமால் said...

வருத்தமாத்தான் இருக்கு.

------------

எதுக்கு விட்டு போனாங்க - ஒன்றும் விளங்கல - என்ன பெற்றோரோ ...

லெமூரியன்... said...

மனதை கனக்க செய்து விட்டது ரம்யா .இந்த இடுகை.!

செந்தில் நாதன் Senthil Nathan said...

ரெம்ப கஷ்டமா இருக்கு. மிச்ச எல்லாரும் என்ன வேணா சொல்லட்டும்..பெற்றோர்கள்...அவங்க ஏன் விட்டுட்டு போனாங்க...

மத்த குழந்தைகளுக்காக அப்படினு சொல்ல முடியாது.. தாய்க்கு எல்லா குழந்தையும் ஒன்னு தான...

மனிதர்கள்...புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள்...

ராமலக்ஷ்மி said...

// மனம் கனத்து விட்டது.... //

எங்களுக்கும்தான் ரம்யா. பெற்றவர்களின் போக்கு.. இப்படியும் மனிதர்கள்:(!

Prabhu said...

அது எப்படி விட்டுட்டு போவாங்க?! மறைச்சாவது நார்மலா வாழ வைப்பாங்க இல்ல, வேற வழி இல்லைனாலும்.

Anonymous said...

பெத்தவங்களுக்கு எப்படி விட்டுட்டு போக மனம் வந்துச்சு

மணி said...

ஏதும் அறியா வயதில் பெண்ணை தவிக்க விட்டுச்சென்ற பெற்றோர் மனிதத்தன்மை அற்றவர்கள்.

தமிழ் அமுதன் said...

நம்ம வீட்டுல வளர்க்குற நாய்க்குட்டி ஒருநாள் காணாம போய்ட்டா..! அது எங்க இருக்கோ சாப்டுச்சோ இல்லயோன்னு கவலைபடுற மக்களும் இருக்காங்க..!
ஆனா ...! தான் பெத்த உயிரை இப்படி அனாதையா விட்டுட்டு ஓடிபோற அந்த பெற்றோர் என்ன வாழ்ந்துட போறாங்க ...? அந்த சபிக்கப்பட்ட வாழ்க்கை இனி அவங்களுக்கு பெரிய நரகமாத்தான் இருக்கபோகுது...!

Rajeswari said...

வருத்தமான விசயம்...

Rajeswari said...

அந்த பெற்றோர்களை நினைத்தால் அவமானமாக இருக்கிறது

அ.மு.செய்யது said...

அந்த பெண்ணுக்கு என்ன குறை ?? என்ன நடந்தது ???

நீங்கள் தெளிவாகவே எழுத வில்லை.மன்னிக்கவும்.

பதிவு சுத்தமாக புரியவில்லை. ( எனக்கு மட்டும் )

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படியும் பெற்றோர்கள் இருக்கவா செய்கின்றார்கள் என்ற ஆச்சரியமும் கோபமும் வருகிறது.

///ஜீவன் said...
ஆனா ...! தான் பெத்த உயிரை இப்படி அனாதையா விட்டுட்டு ஓடிபோற அந்த பெற்றோர் என்ன வாழ்ந்துட போறாங்க ...? அந்த சபிக்கப்பட்ட வாழ்க்கை இனி அவங்களுக்கு பெரிய நரகமாத்தான் இருக்கபோகுது...///

இதுதான் உண்மை.

///சரிதா தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்துள்ளாள். பெண்மைத் தன்மையில் இருந்து மாற்றங்கள் அவளின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருக்கிறது. ///

இதிலிருந்து ஓரளவு கணிக்கமுடிகிறது அந்த சிறுமியின் பிரச்சனை என்னவென்று. மனதுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு ரம்யா

அ.மு.செய்யது said...

ஓக்கே..உங்க விளக்கத்துக்கு பிறகு புரிஞ்சிடுச்சி ..சாரி

( அதுக்காக இப்படியா ஒரு சின்னப்பையன போன் பண்ணி திட்டுறது...அவ்வ்வ் )

க.பாலாசி said...

வருந்ததக்க நிகழ்வு...இப்படியும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்...

சந்தனமுல்லை said...

ரம்யா, நீங்க என்ன பிரச்சினைன்னு சொல்லாமலே ரொம்ப அழகா தெளிவா புரியவைச்சீங்க! தங்கள் எழுத்தின் பலம் அது! வாழ்த்துகள்!

ஆனால், அந்த பெற்றோரின் பொறுப்பின்மை அதிர்ச்சியளிக்கிறது! பிள்ளைகளை பெற்றோரின் dignity-ஆக கருதும் போக்கே இதற்கு காரணமென்று தோன்றுகிறது!!

Raju said...

:-((

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நிறையப் பேர் இப்படி இருக்கிறார்கள்.என்ன செய்வது? நல்ல இடுகை.

SUFFIX said...

பெற்றோர்கள் இப்படியும் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருப்பார்களா? அல்லது பாசம் இருந்தும் இந்த சமுதாயத்தைக் கண்டு பயமாக‌ இருக்குமோ? அவளுக்கு எந்தக் குறையாக இருக்கட்டும், பாவம் அவள் என்ன செய்வாள்?அந்தப் பெண். ஆச்சர்யமாக இருக்கிறது ரம்யா.

கலகலப்ரியா said...

கொடுமை ரம்யா..! சமுதாயத்துக்கு பயந்து... என்னவெல்லாம் பண்ணுறாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படியும் மனிதர்கள் இருக்க செய்றாங்களே, நினைக்க நினைக்க வேதனையா இருக்கு.

அண்ணாமலையான் said...

அந்த பெற்றோர்கள் மனிதர்கள் என்ற வார்த்தைக்கே தகுதி இல்லாதவர்கள்...

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற கொடுமைகள் இன்னும் பல ரூபங்களில் நடந்துகொண்டிருப்பது வேதனையே.

வால்பையன் said...

திருநங்கைகளும் பாவம் இதே மாதிரி தான் புறக்கணிக்கப்படுகிறார்கள்!

Romeoboy said...

கொடுமையிலும் கொடுமை .. அவர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?

Thamira said...

இப்போ என்ன செய்கிறாள் என்று பிறகு பார்ப்போம்..//

சொல்லாமலே முடித்துவிட்டீர்கள்.

கனமான செய்தி.

புளியங்குடி said...

இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் சமூக அக்கறை நிறைந்திருக்கிறது. ஆனாலும், இந்த இடத்தில் பெற்றோர்களைக் காட்டிலும் சமூகமே மிகக் கொடூரமானது. அந்தப் பெற்றோரைத் தேடிப்பிடித்து ஒரு கவுன்சலிங் கொடுத்தால், அந்தப் பெண்ணை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். பெற்று வளர்த்த அவர்களைவிடப் பாதுகாப்பானவர்கள் அந்தப் பெண்ணுக்கு வேறுயாரும் இருக்கவே முடியாது. ரயில்களிலும், கடை வீதிகளும் வக்கிரத்தைக் காட்டும் இந்தச் சமூக மனோநிலையை மாற்றத்தான் எல்லோரும் மெனக்கெட வேண்டும்.

ப்ரியமுடன் வசந்த் said...

சமுதாயம் கிடக்கிறது வெங்காயம்
அந்த பெற்றவர்களை பார்த்தால் தூன்னு துப்பணும்..அட போக்கா என்ன சொன்னாலும் யாரும் கேக்கப்போறதில்லை..அந்த புள்ளை இப்போ அந்த தொண்டு நிறுவனம் போலான நல் உள்ளங்களும் சமுதாயத்தில் இருப்பது மட்டுமே சின்ன ஆறுதல்...

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

என்ன செய்வது - இது மாதிரி நிகழ்வுகளும் இருக்கின்றன -

செய்யது - புரியலயா - நானும் உன் கச்சி - ஆமா

அய்யோ போன் பண்ணித் திட்டினாங்களா - எனக்குப் புரியுது நல்லாவே புரியுது

நல்வாழ்த்துகள் ரம்யா

Anonymous said...

ம்ம்ம்ம் அந்த பெண்ணின் பிரட்சனை எதாக இருந்தாலும் பெற்றவர்களே அவளை நிராதரவாக்கியது கொடுமை....பெற்றவர்கள் என்ற வார்த்தைக்கே பொருள் இல்லை....

Anonymous said...

அ.மு.செய்யது said...
ஓக்கே..உங்க விளக்கத்துக்கு பிறகு புரிஞ்சிடுச்சி ..சாரி

( அதுக்காக இப்படியா ஒரு சின்னப்பையன போன் பண்ணி திட்டுறது...அவ்வ்வ் )

நல்லவேளை நான் எஸ்கேப் நானும் உன்னை மாதிரி கமெண்ட் போட நினைத்தேன்...ஆனாலும் உன்னை திட்டிய என் தோழி வாழ்க பல்லாண்டு...

பட்டாம்பூச்சி said...

வருத்தமான விசயம் :(

RAMYA said...

//
தண்டோரா ...... said...
காலைவணக்கம் ரம்யா..
//

ம்ம்ம்.... வணக்கம் nanri தண்டோரா!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
வருத்தமாத்தான் இருக்கு.
------------
எதுக்கு விட்டு போனாங்க - ஒன்றும் விளங்கல - என்ன பெற்றோரோ ...
//

எதுக்கு எல்லாம் அவங்களுக்கு அந்த பெண்ணை வைத்து சமாளிக்க தெரியாமல் பயந்துட்டாங்க போல:(

RAMYA said...

//
லெமூரியன்... said...
மனதை கனக்க செய்து விட்டது ரம்யா .இந்த இடுகை
//

ஆமா லெமுரியின் என்னோட மனசும் ரொம்ப வேதனையை அடைந்தது அந்த பெண்ணின் நிலையைக் கண்டு:(

RAMYA said...

//
செந்தில் நாதன் said...
ரெம்ப கஷ்டமா இருக்கு. மிச்ச எல்லாரும் என்ன வேணா சொல்லட்டும்..பெற்றோர்கள்...அவங்க ஏன் விட்டுட்டு போனாங்க...

மத்த குழந்தைகளுக்காக அப்படினு சொல்ல முடியாது.. தாய்க்கு எல்லா குழந்தையும் ஒன்னு தான...

மனிதர்கள்...புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள்...
//

ஆமாம் செந்தில் நாதன் எனக்கு கூட இது புரியாத புதிர்தான் இன்றுவரை:(

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
// மனம் கனத்து விட்டது.... //

எங்களுக்கும்தான் ரம்யா. பெற்றவர்களின் போக்கு.. இப்படியும் மனிதர்கள்:(!
//

ஆமாம் சகோதரி எப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் பாருங்க நம்ம கண்ணுலே படறாங்க. பல இரவுகள் மன உளைச்சல் கண்டேன் அந்த பெண்ணின் நினைவலைகள் ஏற்படுத்திய தாக்கம்!

RAMYA said...

//
pappu said...
அது எப்படி விட்டுட்டு போவாங்க?! மறைச்சாவது நார்மலா வாழ வைப்பாங்க இல்ல, வேற வழி இல்லைனாலும்.
//

அருமையா சொல்லி இருக்கீங்க பப்பு. அவங்க ஏன் நீங்க சொன்ன கோணத்திலே யோசிக்கலைன்னு புரியல.

எனக்கும் இதுதான் மனசுலே தோணிச்சு!

RAMYA said...

//
சின்ன அம்மிணி said...
பெத்தவங்களுக்கு எப்படி விட்டுட்டு போக மனம் வந்துச்சு
//

ஆமாம் சின்ன அம்மிணி இதேதான் என்னோட மனத்துளே ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள்:(

RAMYA said...

//
மணி said...
ஏதும் அறியா வயதில் பெண்ணை தவிக்க விட்டுச்சென்ற பெற்றோர் மனிதத்தன்மை அற்றவர்கள்.
//

ஆமாம் சரியாச் சொன்னீங்க! கண்டிப்பா அவங்க தவற்றை உணரும் காலம் வெகு அருகில் இருக்கிறது பாருங்களேன்!

RAMYA said...

//
ஜீவன் said...
நம்ம வீட்டுல வளர்க்குற நாய்க்குட்டி ஒருநாள் காணாம போய்ட்டா..! அது எங்க இருக்கோ சாப்டுச்சோ இல்லயோன்னு கவலைபடுற மக்களும் இருக்காங்க..!
ஆனா ...! தான் பெத்த உயிரை இப்படி அனாதையா விட்டுட்டு ஓடிபோற அந்த பெற்றோர் என்ன வாழ்ந்துட போறாங்க ...? அந்த சபிக்கப்பட்ட வாழ்க்கை இனி அவங்களுக்கு பெரிய நரகமாத்தான் இருக்கபோகுது...!
//

உங்களோட ஆதங்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது ஜீவன். எண்ணற்ற கோபங்கள் அந்தப் பெற்றோரின் மீது எனக்கும் இருக்கிறது. நேரிலே கண்டால் கண்டிப்பா அவர்கள் மனதை மாற்றி அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கலாம் என்று இருக்கிறேன்.

RAMYA said...

//
Rajeswari said...
வருத்தமான விசயம்...
//

Rajeswari said...
அந்த பெற்றோர்களை நினைத்தால் அவமானமாக இருக்கிறது
//

ஆமாம் ரொம்ப நொந்துட்டேன் ராஜி:(

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
அந்த பெண்ணுக்கு என்ன குறை ?? என்ன நடந்தது ???

நீங்கள் தெளிவாகவே எழுத வில்லை.மன்னிக்கவும்.

பதிவு சுத்தமாக புரியவில்லை. ( எனக்கு மட்டும் )
//

தொலை பேசியில் விவரித்தவுடன் புரிந்து கொண்டதிற்கு மிக்க நன்றி செய்யது!

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படியும் பெற்றோர்கள் இருக்கவா செய்கின்றார்கள் என்ற ஆச்சரியமும் கோபமும் வருகிறது.
//

ஆமாம் S.A. நவாஸுதீன் வருத்தம்தான்:(

புரிந்து கொண்டதிற்கு நன்றி S.A. நவாஸுதீன்!

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படியும் பெற்றோர்கள் இருக்கவா செய்கின்றார்கள் என்ற ஆச்சரியமும் கோபமும் வருகிறது.
//

ஆமாம் S.A. நவாஸுதீன் வருத்தம்தான்:(

புரிந்து கொண்டதிற்கு நன்றி S.A. நவாஸுதீன்!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஓக்கே..உங்க விளக்கத்துக்கு பிறகு புரிஞ்சிடுச்சி ..சாரி

( அதுக்காக இப்படியா ஒரு சின்னப்பையன போன் பண்ணி திட்டுறது...அவ்வ்வ் )
//

ஹேய்! என்னப்பா நான் திட்டினேனா நேரே வரும் பொது இருக்கு உங்களுக்கு!

RAMYA said...

//
க.பாலாசி said...
வருந்ததக்க நிகழ்வு...இப்படியும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்...
//

ஆமாம் அதுதான் மனதிற்கு மிகவும் வேதனையான விஷயம் பாலாஜி:(

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
ரம்யா, நீங்க என்ன பிரச்சினைன்னு சொல்லாமலே ரொம்ப அழகா தெளிவா புரியவைச்சீங்க! தங்கள் எழுத்தின் பலம் அது! வாழ்த்துகள்!
//

நன்றி முல்லை. உங்களின் இந்த பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

//
ஆனால், அந்த பெற்றோரின் பொறுப்பின்மை அதிர்ச்சியளிக்கிறது! பிள்ளைகளை பெற்றோரின் dignity-ஆக கருதும் போக்கே இதற்கு காரணமென்று தோன்றுகிறது!!
//

நீங்கள் கூறி இருப்பது மிகவும் சரியே. அவர்களின் பொறுப்பற்ற தன்மைதான் மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது!

RAMYA said...

//
♠ ராஜு ♠ said...
:-((
//

வருகைக்கு நன்றி ராஜு!!

RAMYA said...

//
ஸ்ரீ said...
நிறையப் பேர் இப்படி இருக்கிறார்கள்.என்ன செய்வது? நல்ல இடுகை.
//

ஆமாம் ஸ்ரீ! உங்க வருகைக்கு மிக்க நன்றி!

RAMYA said...

//
SUFFIX said...
பெற்றோர்கள் இப்படியும் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருப்பார்களா? அல்லது பாசம் இருந்தும் இந்த சமுதாயத்தைக் கண்டு பயமாக‌ இருக்குமோ? அவளுக்கு எந்தக் குறையாக இருக்கட்டும், பாவம் அவள் என்ன செய்வாள்?அந்தப் பெண். ஆச்சர்யமாக இருக்கிறது ரம்யா.
//

அவர்களின் இந்தப் போக்குக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனா அவர்கள் செய்தது மிகவும் தவறு..

RAMYA said...

//
கலகலப்ரியா said...
கொடுமை ரம்யா..! சமுதாயத்துக்கு பயந்து... என்னவெல்லாம் பண்ணுறாங்க.
//

ஆமாம் பிரியா இதெல்லாம் நம்ம கண்ணுலே படுத்து பாருங்க அதுதான் கொடுமை:)

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
இப்படியும் மனிதர்கள் இருக்க செய்றாங்களே, நினைக்க நினைக்க வேதனையா இருக்கு.
//

ஆமாம் அமிர்தவர்ஷணி அம்மா, வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
அண்ணாமலையான் said...
அந்த பெற்றோர்கள் மனிதர்கள் என்ற வார்த்தைக்கே தகுதி இல்லாதவர்கள்...
//

வாங்க அண்ணாமலையான் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

RAMYA said...

//
" உழவன் " " Uzhavan " said...
இதுபோன்ற கொடுமைகள் இன்னும் பல ரூபங்களில் நடந்துகொண்டிருப்பது வேதனையே.
//

ஆமாம் உழவன்! நீங்க சொல்றதும் சரியே, நமக்கு தெரிந்தது கொஞ்சமே ஆனால் நம் கண்களுக்கு தெரியாமல் நடப்பது எவ்வளவோ! அதை யோசிக்கவே மிகப் பாமாக உள்ளது..

RAMYA said...

//
" உழவன் " " Uzhavan " said...
இதுபோன்ற கொடுமைகள் இன்னும் பல ரூபங்களில் நடந்துகொண்டிருப்பது வேதனையே.
//

ஆமாம் உழவன்! நீங்க சொல்றதும் சரியே, நமக்கு தெரிந்தது கொஞ்சமே ஆனால் நம் கண்களுக்கு தெரியாமல் நடப்பது எவ்வளவோ! அதை யோசிக்கவே மிகப் பாமாக உள்ளது..

RAMYA said...

//
வால்பையன் said...
திருநங்கைகளும் பாவம் இதே மாதிரி தான் புறக்கணிக்கப்படுகிறார்கள்!
//

ஆமாம் வாலு.. இது கொடுமைதான். நினைத்தாலே பயமாக உள்ளது:(

RAMYA said...

//
Romeoboy said...
கொடுமையிலும் கொடுமை .. அவர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?
//

ஆமாம் Romeoboy அடுத்த இடுகையில் விவரிக்கிறேன் :)

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
இப்போ என்ன செய்கிறாள் என்று பிறகு பார்ப்போம்..//

சொல்லாமலே முடித்துவிட்டீர்கள்.

கனமான செய்தி.
//

ஆமாம் ஆதி.. அவளின் இன்றைய நிலை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

RAMYA said...

//
புளியங்குடி said...
இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் சமூக அக்கறை நிறைந்திருக்கிறது. ஆனாலும், இந்த இடத்தில் பெற்றோர்களைக் காட்டிலும் சமூகமே மிகக் கொடூரமானது. அந்தப் பெற்றோரைத் தேடிப்பிடித்து ஒரு கவுன்சலிங் கொடுத்தால், அந்தப் பெண்ணை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். பெற்று வளர்த்த அவர்களைவிடப் பாதுகாப்பானவர்கள் அந்தப் பெண்ணுக்கு வேறுயாரும் இருக்கவே முடியாது. ரயில்களிலும், கடை வீதிகளும் வக்கிரத்தைக் காட்டும் இந்தச் சமூக மனோநிலையை மாற்றத்தான் எல்லோரும் மெனக்கெட வேண்டும்.
//

வாங்க புளியங்குடி நீங்கள் கூறி இருப்பது நூறு சதவிகிதம் உண்மை.

பெற்றோர்கள் கிடத்தல் முதல் காரியமாக நீங்கள் கூறியதைத்தான் செய்திருப்போம். ஆனால் அவங்க சிக்கலை. எப்படியோ சமாளித்தோம்.

RAMYA said...

//
பிரியமுடன்...வசந்த் said...
சமுதாயம் கிடக்கிறது வெங்காயம்
அந்த பெற்றவர்களை பார்த்தால் தூன்னு துப்பணும்..அட போக்கா என்ன சொன்னாலும் யாரும் கேக்கப்போறதில்லை..அந்த புள்ளை இப்போ அந்த தொண்டு நிறுவனம் போலான நல் உள்ளங்களும் சமுதாயத்தில் இருப்பது மட்டுமே சின்ன ஆறுதல்...
//

தம்பி உங்களுக்குதான் எவ்வளவு மன முதிர்ச்சி... சரியா சொல்லி இருக்கீங்க. நாமெல்லாம் கூட இது போல் வருகின்ற பிரிச்சனையை சமாளித்து விடுவோம் போல. ஆனால் சம்மந்தப் பட்டவர்கள் அணுகவே பயப்படுகிறார்கள். நன்றி வசந்த்.

RAMYA said...

//
cheena (சீனா) said...
அன்பின் ரம்யா

என்ன செய்வது - இது மாதிரி நிகழ்வுகளும் இருக்கின்றன -
//

ஆமாம் சீனா நிறைய இடத்திலும் நடந்து கொண்டுத்தான் உள்ளது!

//
செய்யது - புரியலயா - நானும் உன் கச்சி - ஆமா
//

எடுங்கப்பா அந்த போனை... அடுத்து ஒரு ஆளு சிக்கி இருக்காங்க:)

//
அய்யோ போன் பண்ணித் திட்டினாங்களா - எனக்குப் புரியுது நல்லாவே புரியுது
//

திட்டலை சீனா அவர்களே விளக்கமா சொன்னேன். அப்போதான் புரிஞ்சிதுன்னு ஒத்துகிட்டாரு செய்யது
நேந்கலுமாஆஆஆஆஅ....

//
நல்வாழ்த்துகள் ரம்யா
//

நன்றி சீனா!!

RAMYA said...

//
தமிழரசி said...
ம்ம்ம்ம் அந்த பெண்ணின் பிரட்சனை எதாக இருந்தாலும் பெற்றவர்களே அவளை நிராதரவாக்கியது கொடுமை....பெற்றவர்கள் என்ற வார்த்தைக்கே பொருள் இல்லை....
//

ஆமாம் சரியா சொன்னீங்க தோழி!

RAMYA said...

//
தமிழரசி said...
அ.மு.செய்யது said...
ஓக்கே..உங்க விளக்கத்துக்கு பிறகு புரிஞ்சிடுச்சி ..சாரி

( அதுக்காக இப்படியா ஒரு சின்னப்பையன போன் பண்ணி திட்டுறது...அவ்வ்வ் )

நல்லவேளை நான் எஸ்கேப் நானும் உன்னை மாதிரி கமெண்ட் போட நினைத்தேன்...ஆனாலும் உன்னை திட்டிய என் தோழி வாழ்க பல்லாண்டு...
//

இது வாழ்த்தா இல்லே வஞ்சப் புகழ்ச்சியா தமிழ் :)

அன்புடன் நான் said...

படிக்கும் போதே மனம் கனக்கிறது... பார்த்த உங்களுக்கு.....?

Anonymous said...

மனதை அழுத்துகிறது.

Anonymous said...

ஒவ்வொரு பெற்றேhர்களும் சிந்திக்க வேண்டும்.

Unknown said...

படித்த போது மனம் கனத்தது..., ஆனாலும் இது தான் நடைமுறை நிஜம் என்ன செய்வது ??? மனமாற்றம் ஏற்பட்டால் ஒழிய இதற்கு வேறு விடிவில்லை..,

நசரேயன் said...

படிச்சி பல நாள் ஆச்சி.. வருத்தப் படவேண்டிய விஷயம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ மிகக்கொடுமையான விசயம். :(