Monday, June 14, 2010

எனது ஹாஸ்டல் அனுபவம்!!

வேலைக்கு செல்லும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த போது ஏற்பட்ட பல அனுபவங்களில் இதுவும் ஒன்று.

தினம் தினம் ஒரு அனுபவம்தான். விடிந்தால் ஒரு பிரச்சனை, விடிந்து முடிந்தால் ஒரு பிரச்சனை, இதில் சில தானே நிகழ்வது, சில நமக்கே தெரியாமல் நாம் காரணமாவது. நான் எப்போதும் இரெண்டாம் ரகம்தான். என்னால்தான் பல பிரச்சனைகள் எனக்கே தெரியாமல் உருவாகிவிடும். .

உண்மையை ஒத்துக் கொள்வதில் தனி தைரியம் வேண்டும் அல்லவா? ஹா ஹா என்ன செய்ய வால் நம்பர் ஒண்ணாக இருந்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் சகஜம் தானே? சரி வாங்க என்னான்னு பார்க்கலாம்!!

நான் இருவர் தங்கி இருக்கும் அறையில் இருந்தேன். என்னுடன் இருந்த அக்கா ரொம்ப பெரியவங்க. அவங்க டீச்சரா இருந்தாங்க. எனக்கு காலை ஷிப்ட். ஏழு மணிக்கு போயிட்டு மாலை ஐந்து மணிக்கு ஷிப்ட் முடியும். மாலையில் சில சமயம் ஐந்து மணிக்கு வந்து விடுவேன். பல சமயம் அறைக்கு வர ரொம்ப நேரம் ஆகும். அன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட்டேன். அங்கே எனது விடுதியில் புதுசா சேர்ந்திருந்த சுந்தரி மிகவும் சோகமாக உக்காந்திருந்தாள். இதுதான் வில்லங்கத்திற்கு ஆரம்பம் என்று எனக்கு அப்போ தெரியாமல் போய் விட்டது.

உள்ளே நுழையும்போதே இந்த காட்சியை கவனித்து விட்டேன். இருந்தாலும் பசி என்ற அரக்கன் என்னை மிகவும் மோசமான நிலையில் தாக்கியதால் வேகம் வேகமாக டீ குடித்துவிட்டு சுந்தரியின் அருகே அமர்ந்தேன்..

"என்ன ஆச்சுங்க சுந்தரி? புதுசா வந்திருக்கீங்கல்லே! ஹாஸ்டல் வசதியா இருக்கா? சாப்பாடு நல்லா இருக்கா? " (என்ன கேள்வி சட்டுன்னு விஷயத்திற்கு வருமாறு மனது சொல்கின்றது!)

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ரம்யா, என்னோட ரூம்லே ஒரே கட்டில் தான் இருக்கு. இன்னொரு கட்டில் வர ஒரு வாரமோ இல்லை பத்து நாளோ ஆகுமாம்"...

"சரி அதுக்கு என்ன இப்போ?".

"ரூமுலே ரெண்டு பேரு தங்கி இருக்கோம்"
"சரிப்பா யாரவது ஒருத்தர் கட்டில்லே படுத்துக்கோங்க, அடுத்தவங்க கீழே படுத்துக்கோங்க, என்னப்பா இன்னும் பத்து நாள் தானே சமாளிக்க மாட்டீங்களா?"

"இதெல்லாம் பிரச்சனை இல்லே! என்னோட அறையிலே இருக்கிற கவிதா நான் ஒருத்தி இருக்கிறதை சட்டையே பண்ணாம அவ பாட்டுக்கு நேத்து ராத்திரி கட்டில் நிறைஞ்சு படுத்து தூங்கிட்டா. அதை நினைச்சாதான் ஒரே கோவமா வருது ரம்யா" என்றாள் அழமாட்டாத குறையாக.

"ஐயோ! அப்படியா செஞ்சா கவிதா? எனக்கு அவளை பத்தி அவ்வளவா தெரியாது. இருந்தாலும் உன் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு தூங்கி இருக்கலாம்" (எண்ணையை ஊத்திட்டோமோ? அப்படிதான் தெரியுது:))

"இன்னைக்கு என்ன பண்ண போறேன்னா, எனக்கும் கட்டில்லே கொஞ்சம் இடம் குடுன்னு கேக்கப் போறேன். நானும்தானே பணம் கட்டறேன். அவ மட்டும் என்ன ஜமீனா?" என்று சொல்லும் போதே கோபம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது.

"நேரம் ஆச்சு நான் வரேன்" என்று கிளம்பி போய்ட்டாங்க சுந்தரி.

இது என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தாலும் அடுத்த என்னோட வேலைகளில் கவனம் செலுத்தியதால் (வேறு என்னா சாப்பாடுதான்) சுந்தரியை அப்படியே மறந்து போனேன்.

அடுத்த நாள் மாலையில் அலுவலகத்தில் இருந்து தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தேன். அன்று சுந்தரி என்னோட அறையில் அமர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாகிப் போனது. ஏனெனில் வேலம்மாக்கா ஒருவரிடமும் பேச மாட்டாங்க. இந்தப் பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தவுடன் புரியாத புதிரானேன். டீ கோப்பையுடன் மெதுவாக சுந்தரியின் அருகே அமர்ந்தேன், மனதில் ஒரே பரபரப்பு. என்னாவா இருக்கும்? மறுபடியம் ஏதாவது பிரிச்சனையா என்று அறிவதில் ஆர்வம் அதிகமானது.

ஆனால் என்னோட அறையில் இருந்த வேலம்மாக்கா என்னைப் பார்த்து முறைத்தார்கள். நான் அதை கண்டு கொள்ளாமல் சுந்தரியின் அருகே அமர்ந்து... "என்னாச்சு பா?" என்றேன்.

"உன் கிட்டே சொன்ன மாதிரி எனக்கும் கட்டில்லே படுக்க உரிமை இருக்கு, மரியாதையா எனக்கு கொஞ்சம் இடம் விட்டு படுத்துக்கோன்னு சொன்னேன். அவளும் தள்ளி படுத்துகிட்டா. ஆனா பாதி ராத்திரி வேணும்னே என்னை உதைச்சி கீழே தள்ளிட்டா! இடுப்பிலே நல்ல அடி" என்று அழ ஆரம்பித்தாள் சுந்தரி.

"ஹையோ இதென்னா கூத்தா இருக்கு! ஆனாலும் கவிதா ரொம்ப மோசம்பா" கிளம்பும்போது என்னால் இயன்ற ஒரு சின்ன ஐடியா சொல்லி அனுப்பினேன். அதாவது ஒரே கட்டிலில் இருவரும் தலை கீழாகப் படுத்துக் கொள்ளுங்கள். அப்போது இடம் அதிகமா கிடைக்கும் என்றேன். அதற்கு சுந்தரியும் வேகமாக தலையை ஆட்டிவிட்டு சென்றார்கள். மறுபடியும் வேலம்மாக்கா என்னை பார்த்து முறைத்தார்கள்"

"சும்மாவே இருக்காமாட்டியா ரம்யா வீண் வம்பை விலை கொடுத்து வாங்குற? இதெல்லாம் நல்லதுக்கே இல்லேன்னு திட்டினாங்க"

அடுத்த நாளோ அதிகப் பிரச்சனை ஆகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டதின் விளைவு இருவர் முகத்திலும் காயங்கள். கேட்டில் நுழையும்போதே எனக்கு விஷயம் காதில் விழுந்து விட்டது. ஒரே பயம். நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.

மெதுவா என் அறைக்கு செல்ல முயன்றபோது வார்டன் அறையின் முன்னால் ஒரே சத்தம். அனைவரும் வார்டன் ரூம் வாசலில் குழுமி இருந்தார்கள். கவிதா உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாள். சுந்தரியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் கத்தியதால் விஷயம் தெரியாதவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குதான் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தது. நான் கொடுத்த ஐடியாவினால்தான் இப்படி ஆகிவிட்டது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டதாக வேலம்மாக்கா என்னிடம் கூறினார்கள். படுபாவி இன்னும் யார் யாரிடம் சொல்லி இருப்பாளோ என்று மனதில் பயம் வேறு...

மெதுவாக கூட்டம் இருக்கும் திசையில் செல்லாமல் அறையினுள்ளே அடைந்து விட்டேன். எல்லாம் முடிந்து வேலம்மாக்கா வந்தார்கள்.

"என்னாம்மா இப்படி ஒரு ஐடியா கொடுத்திட்டு போயிட்டே??"

"ஐடியா கொடுக்கத்தான் முடியும், கவிதாவை அடிக்கவா முடியும் போங்கக்கா"

"உனக்கு கொழுப்பு ஜாஸ்த்தி ஏன் வீணா இதுலே எல்லாம் தலையிடரே ஒழுங்கா உன்னோட வேலை உண்டு நீ உண்டுன்னு இருக்க மாட்டியா" இது வேலம்மாக்காவின் தரப்பு நியாயம்.

மெதுவா போய் கூட்டத்தில் கலந்து கொண்டு இருவரையும் நோட்டம் விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. ரெண்டு பேரு முகமும் வீங்கிப் போயிருந்தது எனக்கு ரொம்ப பயமா போச்சு. இந்த சண்டைக்கும், இந்த செயலுக்கும் காரணம் யாரு என்று நைசா விசாரித்தேன். காரணம் யாருக்கும் தெரியாது என்று கூறினார்கள். பிறகுதான் உயிர் வந்தது. தைரியமா சுந்தரியை என் அறைக்கு வரவழைத்து விவரம் அறிந்தேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது தங்கி இருக்கும் அறையை காலி செய்து விட்டு வேறே அறைக்கு செல்லுமாறு ஐடியா கொடுத்தேன். அதன்படி மறுபடியும் வார்டனிடம் தனக்கு வேறே அறை கேட்டு இருக்கிறாள் சுந்தரி. இப்போது அறை எதுவும் காலியாக இல்லை இரு பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த செய்தி மாலை என் காதுகளுக்கு எட்டியது. இரண்டு நாட்கள் முன்பு நான்கு பேர் தங்கும் அறையில் ஒரு பெண் காலி செய்துவிட்டு சென்று விட்டதால் அங்கு ஒரு பெட் காலியாக இருப்பது எனக்கு தெரியும். அதனால்தான் அப்படி ஒரு ஐடியா சுந்தரிக்கு கொடுத்தேன். ஆனால் ஏன் வார்டன் அப்படி கூறினார்கள் என்று புரியவில்லை. அந்த விவரத்தையும் சுந்தரியின் காதில் போட்டு வைத்தேன். ஏனெனில் கவிதா சரியான ராங்கிக்காரின்னு இன்னொரு தோழியும் என்னிடம் கூறியதால் சுந்தரியை காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக என் மனது கூறியது(இதெல்லாம் கொஞ்சம் ஓவரா ஸீன் போடறதா நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது:-)).

இந்த வெவரம் தெரிந்தவுடன் சுந்தரிக்கு மிகவும் கோவம் வந்து, அதே வேகத்துடன் வார்டன் அறைக்கு விரைந்து சென்றாள். அங்கே கவிதா தனக்கு வேறே அறை கொடுக்குமாறு விவாதம் செய்து கொண்டிருந்திருக்கிறாள், இல்லாதையும் பொல்லாததையும் வார்டனிடம் சுந்தரியை பத்தி கவிதா போட்டு கொடுத்ததை காதில் வாங்கிய சுந்தரி, அழுகையுடன் எனது அறைக்கு வந்து சேர்ந்தாள். இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த நேரத்தில் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. கவிதா அறையை காலி செய்து விட்டால் சுந்தரிக்கு பிரச்சனை இல்லை என்று முடிவெடுத்து அதை உடனே அவளிடம் கூறாமல் அமைதியாக ஒரு நாளை கடத்து ஆறப்போட்டு பிறகு யோசிப்போம் என்று கூறி சுந்தரியை அனுப்பி வைத்தேன் (இப்போதைக்கு சுந்தரிக்கு நான்தான் லீகல் அட்வைசர்.. காலத்தின் கொடுமையை பார்த்தீங்களா?).

பிறகுதான் தெரிய வந்தது, கவிதாவும், சுந்தரியும் சண்டை போடுவாங்கன்னு நாலு பேர் ரூமிலே இருக்கறவங்க பயப்பட்டதால், வார்டன் இவர்களை தவிர்த்து விட்டதாக ஒரு செய்தி எனது காதுகளுக்கு எட்டியது. தெரிந்தும் நானும் பேசாமல் இருந்து விட்டேன். எந்த தரப்பிலும் எந்த மாறுதல்கள் இல்லாததால் சுந்தரி வேறே ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள்.

இப்படி தினம் தினம் பல அனுபவங்களுடன் கடத்திய நாட்களை இப்போது அசை போட்டாலும், சில அனுபவங்கள் மனத்திற்கு கஷ்டமாக இருந்தாலும் பல அனுபவங்கள் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருக்கும்.

நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நம்மை விட்டு வெகு தூரத்தில் விலகி நிற்கும்....

ரம்யா...

67 comments :

Chitra said...

அடுத்த நாளோ அதிகப் பிரச்சனை ஆகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டதின் விளைவு இருவர் முகத்திலும் காயங்கள். கேட்டில் நுழையும்போதே எனக்கு விஷயம் காதில் விழுந்து விட்டது. ஒரே பயம். நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.

..... எப்படிங்க...... இப்படி! :-)

கவிதா | Kavitha said...

//இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள்.//

ஐ லைக் திஸ் வேலம்மாக்கா... :)

Anonymous said...

எச்சூஸ் மீ, வேலமக்கா அட்ரஸ் கிடைக்குமா?

Ŝ₤Ω..™ said...

andha sundari ponnu mela ungaluku en ipadi oru kola veri?

நட்புடன் ஜமால் said...

இது ஒரு சின்ன சாம்பிள் மாதிரி தெரியுது, இன்னும் நிறைய இருக்கும் போல ...

வேலமாக்கா ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே - அக்கான்னால நல்லவங்க தான் போல ...

அன்புடன் நான் said...

நான் பெரிசா எதிர்பார்த்தேன்.
இது சின்னபிள்ளைங்க விளையாட்டு போல இருக்குங்க. (ஏமாற்றம் தான்)

அன்புடன் நான் said...

கவிதா | Kavitha said...

//இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள்.//

ஐ லைக் திஸ் வேலம்மாக்கா... :)//

இவுங்கத்தான் அந்த கவிதாவா?

*இயற்கை ராஜி* said...

ரம்யாக்கா அப்போ உங்க பேரை ஐடியா மணி ரம்யான்னு வச்சிரலாமா

*இயற்கை ராஜி* said...

உங்கள கொண்டுபோய் அந்த ரூமல் மூணாவது ஆளா போட்டிருக்கணும்:-
))

RAMYA said...

//
Chitra said...
அடுத்த நாளோ அதிகப் பிரச்சனை ஆகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டதின் விளைவு இருவர் முகத்திலும் காயங்கள். கேட்டில் நுழையும்போதே எனக்கு விஷயம் காதில் விழுந்து விட்டது. ஒரே பயம். நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.

..... எப்படிங்க...... இப்படி! :-)
//

சித்ரா இது ஒரு சின்ன சாம்பிள்தான் இன்னும் நிறைய இருக்கு :)

மெதுவா சொல்றேன் :)

வரவிற்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா!

RAMYA said...

//
கவிதா | Kavitha said...
//இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள்.//

ஐ லைக் திஸ் வேலம்மாக்கா... :)
//

ம்ம்ம்.. கவிதா இருக்கட்டும் இருக்கட்டும் உங்களை நான் அப்புறமா கவனிச்சிக்கிறேன்:)

வரவிற்கும் கருத்துக்கும் நன்றி கவி :)

RAMYA said...

//
மயில் said...
எச்சூஸ் மீ, வேலமக்கா அட்ரஸ் கிடைக்குமா?
//

மவளே! வேலம்மாக்கா அட்ரஸ்தானே வேணும் இங்கே வா தரேன்:)

வரவிற்கு நன்றி மயிலு!

RAMYA said...

//
Ŝ₤Ω..™ said...
andha sundari ponnu mela ungaluku en ipadi oru kola veri?
//

ஹல்லோ உங்க பேரு தெரியல முதல் வரவிற்கும் உங்கள் ஆதங்கத்திற்கும் மிக்க நன்றி :)

கவிதாவுக்கு ஐடியா கொடுத்தேனாக்கும்:)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
இது ஒரு சின்ன சாம்பிள் மாதிரி தெரியுது, இன்னும் நிறைய இருக்கும் போல ...

வேலமாக்கா ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே - அக்கான்னால நல்லவங்க தான் போல ...
//

ஆமாம் ஜமால் சரியா சொன்னீங்க :)
வரவிற்கும் கருத்துக்கும் நன்றி ஜமால் :)

RAMYA said...

//
சி. கருணாகரசு said...
நான் பெரிசா எதிர்பார்த்தேன்.
இது சின்னபிள்ளைங்க விளையாட்டு போல இருக்குங்க. (ஏமாற்றம் தான்)
//

அடுத்த முறை தங்களின் ஏமாற்றம் தவிர்க்கப் படும்!

வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

RAMYA said...

//
*இயற்கை ராஜி* said...
ரம்யாக்கா அப்போ உங்க பேரை ஐடியா மணி ரம்யான்னு வச்சிரலாமா
//

ஹேய்! ராஜி நீ சொன்னா சரியா இருக்கும்பா:)

RAMYA said...

//
*இயற்கை ராஜி* said...
உங்கள கொண்டுபோய் அந்த ரூமல் மூணாவது ஆளா போட்டிருக்கணும்:-
))
//

அய்யய்யோ! என் இந்த கொலைவெறி, அடி வாங்க என் உடம்பு தாங்காதுபா:))

Jey said...

நல்லா இருங்க, யார் என்ன சொன்னலும், உங்க சேவையை மட்டும் நிருத்தாம செய்ங்க.( உள்குத்து ஏதும் இல்லீங்க)

இராகவன் நைஜிரியா said...

அப்பால வந்து கும்மி அடிச்சுக்கிறேன். ஆணி அதிகமா இருக்கு..

தமிழ் அமுதன் said...

சண்டையயும் பெருசாக்கி விட்டு நாட்டாமை வொர்க்கும் பார்த்து இருகீங்க...!

இதுல அப்பாவி போல ’ஆக்ட்டு’ வேற..!

நடத்துங்க...நடத்துங்க...!;;)

manjoorraja said...

பயங்கர டெர்ரர் ஆன ஆளா இருப்பீங்க போலெ!

RAMYA said...

//
Jey said...
நல்லா இருங்க, யார் என்ன சொன்னலும், உங்க சேவையை மட்டும் நிருத்தாம செய்ங்க.( உள்குத்து ஏதும் இல்லீங்க)
//

ஹா ஹா வாங்க ஜெய் வரவிற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி:)

உள்குத்து கண்டிப்பா இல்லே ஜெய்:) நானும் நம்பிட்டோம்லே:)

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
அப்பால வந்து கும்மி அடிச்சுக்கிறேன். ஆணி அதிகமா இருக்கு
//

ராகவன் அண்ணா வாங்க வாங்க உங்க வரவிற்காக என்னோட பதிவு கண்டிப்பா இன்னும் ஒரு மாதத்திற்கு காத்திருக்கும்:))

RAMYA said...

//
தமிழ் அமுதன் said...
சண்டையயும் பெருசாக்கி விட்டு நாட்டாமை வொர்க்கும் பார்த்து இருகீங்க...!
//

எனக்கு தெரியாமலே நான் காரணம் ஆயிட்டேன் ஜீவன்:)

//
இதுல அப்பாவி போல ’ஆக்ட்டு’ வேற..!
//

நான் எப்பவுமே அப்பாவிதானே ஜீவன்??? :))


//நடத்துங்க...நடத்துங்க...!;;)
//

நடத்தி முடிச்சிட்டோம்லே:)

RAMYA said...

//
manjoorraja said...
பயங்கர டெர்ரர் ஆன ஆளா இருப்பீங்க போலெ!
//


ஹா ஹா! manjoorraja டெர்ரர் இல்லே நான் ரொம்ப சமத்து, அப்பபோ கொஞ்சம் வாலு அவ்வளவுதான்:))

வரவிற்கு மிக்க நன்றி manjoorraja :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒவ்வொரு ஐடியாவுக்கும் எவ்வளவு கெடைச்சதுன்னு சொல்லவே இல்லையே?

வால்பையன் said...

உங்க கிட்ட ஐடியா கேட்டா ரத்தக்காவு தான் போலயே!

Ahamed irshad said...

நல்ல ஐடியாங்க....வேற என்னா சொல்றது...

RAMYA said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒவ்வொரு ஐடியாவுக்கும் எவ்வளவு கெடைச்சதுன்னு சொல்லவே இல்லையே?
//

ஆஹா இப்படி ஒன்னு இருக்கோ இது தெரியாம போச்சே பன்னிகுட்டி ராம்சாமி:))

வரவிற்கும் ஐடியா கொடுத்தமைக்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
வால்பையன் said...
உங்க கிட்ட ஐடியா கேட்டா ரத்தக்காவு தான் போலயே!
//

வாலு பயப்படாதீங்க உங்களுக்கு ஏதாவது ஐடியா வேணுங்களா:))

வரவிற்கு நன்றி வாலு!

RAMYA said...

//
அஹமது இர்ஷாத் said...
நல்ல ஐடியாங்க....வேற என்னா சொல்றது...
//

மனதார பாராட்டியமைக்கு மிக்க நன்றிங்க இதுவே போதுங்க :)

வரவிற்கும், உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி
அஹமது இர்ஷாத்!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹலோ,

மாதத்திற்கு ஒரு பதிவுதான் போடுவேன்னு ஏதாவது சபதமா???

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...


ராகவன் அண்ணா வாங்க வாங்க உங்க வரவிற்காக என்னோட பதிவு கண்டிப்பா இன்னும் ஒரு மாதத்திற்கு காத்திருக்கும்:))////

அப்படின்னா கன்ஃபர்மா, மாசத்துக்கு ஒரு பதிவு தானா??? ஏன் இப்படி?? யாருக்கிட்ட சபதம் போட்டீங்க???

( எங்கிருந்தாலும் அந்த நல்ல மனுஷன் நல்லா இருக்கனும்!! கிகிகிகீகி)

http://urupudaathathu.blogspot.com/ said...

///என்னால்தான் பல பிரச்சனைகள் எனக்கே தெரியாமல் உருவாகிவிடும். .///

இது தான் ஊருக்கே (உலகுதுக்கே )தெரியுமே என்று நான் சொல்லல, ராகவன் அண்ணன் தான் சொல்லிகிட்டு திரியுறாரு!!! ?( நாராயணா, நாராயனா)

http://urupudaathathu.blogspot.com/ said...

///நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.///

இந்த ரனகளத்திலும், அடுத்த ஐடியாவ யோசிச்சீங்களா???? என்னாத்த சொல்றது???

RAMYA said...

//
அணிமா said...
ஹலோ,

மாதத்திற்கு ஒரு பதிவுதான் போடுவேன்னு ஏதாவது சபதமா???
//

ஹேய் அணிமா எவ்வளவு நாள் ஆச்சு நீங்க என்னோட பதிவு பக்கம் வந்து
சபதம் எல்லாம் இல்லே அணிமா:)

வேலை அதிகம் அதுனாலே தான் எழுத நேரமில்லே:)

நிஜமா நல்லவன் said...

:)

RAMYA said...

//
///RAMYA said...


ராகவன் அண்ணா வாங்க வாங்க உங்க வரவிற்காக என்னோட பதிவு கண்டிப்பா இன்னும் ஒரு மாதத்திற்கு காத்திருக்கும்:))////

அப்படின்னா கன்ஃபர்மா, மாசத்துக்கு ஒரு பதிவு தானா??? ஏன் இப்படி?? யாருக்கிட்ட சபதம் போட்டீங்க???

( எங்கிருந்தாலும் அந்த நல்ல மனுஷன் நல்லா இருக்கனும்!! கிகிகிகீகி)

//

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க :)

ராகவன் அண்ணா உஷாரு உஷாரு :)

RAMYA said...

//
அணிமா said...
///என்னால்தான் பல பிரச்சனைகள் எனக்கே தெரியாமல் உருவாகிவிடும். .///

இது தான் ஊருக்கே (உலகுதுக்கே )தெரியுமே என்று நான் சொல்லல, ராகவன் அண்ணன் தான் சொல்லிகிட்டு திரியுறாரு!!! ?( நாராயணா, நாராயனா)
//

ம்ம்ம்... உள்குத்து, வெளிகுத்து, கும்மா குத்து எல்லாம் சரி சரி:)

அணிமா அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா:)

RAMYA said...

//
அணிமா said...
///நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.///

இந்த ரனகளத்திலும், அடுத்த ஐடியாவ யோசிச்சீங்களா???? என்னாத்த சொல்றது???
//

எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது போலவே நடந்து கொண்டுள்ள மாதிரி இல்லே:))

(நாராயணா நாராயணா இல்லே இதுவும் ராகவன் அண்ணா சொல்லி கொடுத்துள்ளாரா அப்படீன்னு என் சொல்லலை அணிமா:))

சிக்கிகிட்டீங்களா:))

இருங்க அண்ணா வராரு :))

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
:)
//

நீங்க நிஜமாவே ரொம்ப நல்லவரு அதான் அருமையா சிரிப்பு :))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பகிர்வு நன்று!

அந்தத் தார்மீக பொறுப்பு அவசியமானது!

Anonymous said...

கலியுக நாரதியே,
உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை,
வாழ்க உங்கள் பணி,
வளர்க உஙகளின் புகழ்!

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பகிர்வு நன்று!

அந்தத் தார்மீக பொறுப்பு அவசியமானது!
//

ஜோதிண்ணா வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

RAMYA said...

//
bharadhee said...
கலியுக நாரதியே,
உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை,
வாழ்க உங்கள் பணி,
வளர்க உஙகளின் புகழ்!
//

ஹா ஹா வாங்க bharadhee..

எல்லாம் உங்க வாழ்த்துக்கள்தான் உடன் இருக்கும் :))

வரவிற்கு மிக்க நன்றி!!

M. Azard (ADrockz) said...

யதார்த்தமான அனுபவப் பகிர்வு.. வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நல்லாவே பத்த வைச்சி இருக்கீங்க அந்த காலத்திலேயே

மணிநரேன் said...

:)

தேவன் மாயம் said...

நல்ல ஐடியா கொடுத்தீங்க!! வலையுலகப் பிரச்சினைகளுடன் உள்ளவர்கள் இங்கு அணுகவும்!!

Geetha6 said...

intresting!
God bless U.
Geetha

RAMYA said...

//
M.Azard (ADrockz) said...
யதார்த்தமான அனுபவப் பகிர்வு.. வாழ்த்துக்கள்
//

வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி M.Azard (ADrockz)!

RAMYA said...

//
sinhacity said...
வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
//

நன்றிங்க கண்டிப்பா படிக்கிறேங்க!

RAMYA said...

//
நசரேயன் said...
நல்லாவே பத்த வைச்சி இருக்கீங்க அந்த காலத்திலேயே
//

ஆஹா ஒரு மார்க்கமா இருக்கே எந்தக் காலம் சொன்னா நல்லா இருக்குமே :)

RAMYA said...

//
மணிநரேன் said...
:)
//

நன்றி மணிநரேன்!

RAMYA said...

//
தேவன் மாயம் said...
நல்ல ஐடியா கொடுத்தீங்க!! வலையுலகப் பிரச்சினைகளுடன் உள்ளவர்கள் இங்கு அணுகவும்!!
//

ஆஹா டாக்குட்டறு ஏன் ஏன் இந்த கொல வெறி என் மீது:)

RAMYA said...

//
Geetha6 said...
intresting!
God bless U.
Geetha
//

Thanks a lot Geetha! Keep Coming:)

எல் கே said...

என்னத்த சொல்ல. இதுக்குதான் இந்த அப்பாவிகளை நம்பக் கூடாது.

இராகவன் நைஜிரியா said...

// வேலைக்கு செல்லும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த போது ஏற்பட்ட பல அனுபவங்களில் இதுவும் ஒன்று. //

அப்ப காலேஜில் படிக்கிறவங்க அங்க தங்கப்பிடாதா?

இராகவன் நைஜிரியா said...

// தினம் தினம் ஒரு அனுபவம்தான். //

அனுபவம் புதுமை அப்படின்னு பாடிக்கிட்டு இருப்பீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// விடிந்தால் ஒரு பிரச்சனை, விடிந்து முடிந்தால் ஒரு பிரச்சனை,//

விடிஞ்சுரும்

இராகவன் நைஜிரியா said...

// இதில் சில தானே நிகழ்வது, சில நமக்கே தெரியாமல் நாம் காரணமாவது. //

சில நாமே வேண்டும் என்று உருவாக்குவது... இதை ஏன் சொல்லவில்லை?

இராகவன் நைஜிரியா said...

// நான் இருவர் தங்கி இருக்கும் அறையில் இருந்தேன். //

இருவர் தங்கும் அறையில் இருவராக இருந்தீங்கன்னு நல்லாவே புரிஞ்சுகிட்டோம்..

இராகவன் நைஜிரியா said...

// உண்மையை ஒத்துக் கொள்வதில் தனி தைரியம் வேண்டும் அல்லவா? //

நீங்க தைரியசாலி என்று ஒத்துக் கொள்கிரோம்..

விக்னேஷ்வரி said...

இன்று முதல் நீங்கள் ரௌடி ரம்ஸ் என எங்களால் செல்லமாக அழைக்கப்படுவீர்கள்.

kalamarudur said...

yekka ippadi ethaachum eluthikitte thaan irupeengala, onnu mattum nalla theriuthu. nee neenga vela pakkura edhathula vela odutho illayo ana unga vetti blog romba nalla oduthu vaalthukal.

சின்னபாரதி said...

ஒருநாள் நேரத்தோடு வர வாய்ப்பு கிடைச்சா அம்மாடியோ !

நல்லவேளை ஒரு பெண் மட்டும் ....
இல்லையில்லை இன்னும் இருக்கும்!?
இருக்கும்ல...

சின்னபாரதி said...

ஒருநாள் நேரத்தோடு வர வாய்ப்பு கிடைச்சா அம்மாடியோ !

நல்லவேளை ஒரு பெண் மட்டும் ....
இல்லையில்லை இன்னும் இருக்கும்!?
இருக்கும்ல...