Thursday, March 26, 2009

எது தானம் ??

என் சக வலைப்பதிவர்களின் வீட்டுச் செல்லங்களுக்கு!!


குருச்சேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லாரும் அந்த யாகத்தின் சிறப்பையும் பெருமையையும் கண்டு வியந்து, அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர்.


யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பின் ஒரு பகுதி பொன்னாகவும், மற்ற பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது. உள்ளே நுழைந்த கீரிப்பிள்ளை யாக குண்டத்தில் இருந்த சாம்பலில் விழுந்து புரண்டது.


பின் எல்லோரையும் பார்த்து. நீங்கள் அனைவரும் பொய்யர்கள், இது யாகமே அல்ல என்று கூறியது.


கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன! இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய்? எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளி கொடுக்கப் பட்டுள்ளது என்பது உனக்கு தெரியுமா?? எல்லோரும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே! இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.


அதற்கு கீரிப்பிள்ளை கூறியது, முன்பொரு முறை சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள். பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து, அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.


ஒருமுறை அந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன.


அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலயில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத் தயாராயினர். அந்த வேலையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. பிராமணர் கதவத் திறந்தார். எதிரே விருந்தினர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.


இந்தியாவில், விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும்.


எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்பு தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும்படி உபசரித்தார்.


வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினி கிடக்கிறேன். இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது, என்று கதறினார்.


உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம், என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள், வந்திருப்பவர் விருந்தினர். வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை. அவருக்குக் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது, என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித் தன் பங்கை அந்த விருதாளிக்குக் கொடுத்தாள்.


அதை உண்ட பிறகும் விருந்தாளியின் பசி தீரவில்லை. அவர் துடித்தார்.


இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன், தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை. இதோ என் பங்கு உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தன் பங்கை அந்த விருந்தாளியிடம் கொடுத்தான்.


அப்படியும் விருந்தாளியின் பசி அடங்கவில்லை. அவர் மிகுந்த வேதனைப் பட்டார். இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது. அவர்களை வாழ்த்தி விடைபெற்றார், அந்த விருந்தாளி.


ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்.


அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள்.


அது போல் நிகழ்வுகள் எங்கேயாவது நடந்துள்ளதா என்று அறிந்தால் அதில் புரண்டு மீதி பாதி உடலையும் பொன்னாக்கி கொள்ளத்தான் ஆசைப் படுகின்றேன்.

அந்த இடம் நோக்கி அலைந்து கொண்டிருக்கின்றேன். இங்கு பெரிய யாகம் நடப்பதாகவும் ஏழைகளுக்கு தானம் செய்வதாகவும் அறிந்து இங்கு ஓடோடி வந்து உங்கள யாக குண்டத்தில் விழுந்து புரண்டேன். அந்த அந்தணர் வீட்டில் சிதறிக் கிடந்த சிறிய பார்லி மாவில் புரண்டு பாதி பொன்னான என் உடலின் மீதி பாதியும் பொன்னாக்க நினைத்துதான் இந்த காரியத்தை செய்தேன். ஆனால் நடந்தது என்ன ? என் உடல் பொன்னாக மாறவில்லை.அப்போ உங்கள் யாகம் தவறுதானே என்றது அந்த கீரிப்பிள்ளை.


அங்கு அமர்ந்திருந்தவர்கள் என்ன சொல்லுவது என்று புரியாமலும், என்ன தவறு நடந்திருக்க முடியும் என்றும் யோசிக்க ஆரம்பித்தனர்.


பின்குறிப்பு
==========
நான் எழுதும் இந்தக் கதைகள் ஏற்கனவே நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள். இந்த கதைகள் நான் எழுதக் காரணம் இருக்கின்றது. நான் சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு வலைப்பதிவு அண்ணா ஒருவரிடம் சாட்டிங்கில் பேசிக் கொண்டு இருந்தேன். மிகவும் நேரம் ஆகிவிட்டதால் அப்போது அந்த அண்ணா சொன்னாங்க ஏன்மா இன்னும்
தூங்காமல் இருக்கே. நான் வேணும்னா ஒரு கதை சொல்லாவா என்றார். நான் என் சிறு பிராயத்துக்கே சென்று விட்டேன். கதை சொன்னார் மிக அருமையான கதை.

கதை சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு தந்தையின் ஆர்வம் அவர் குரலில் தெரிந்தது. முடிக்கும் போது குழந்தைக்கு சொன்ன ஒரு முழுமையும், பெருமிதமும் அவர் குரலில் தெரிந்தது. அதன் பாதிப்புதான், இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதைகள். கதைக்காக ஏங்கும் குழந்தைகள்! அருகே இருந்தும் அவர்களுக்கு வேலைப் பளுவின் காரனமாக கதை சொல்ல முடியாத தந்தைமார்கள் மற்றும் தாய்மார்கள்!! அருகே இருந்து தன் குழந்தைகளுடன் கழிக்க முடியாமல், தொலை தூரத்தில் இருக்கும் அன்பு தந்தைகள் இவர்களின் ஏக்கத்தைப் போக்கவே இந்தக் கதைகள்.


குழந்தைகளை நினைத்து ஏங்கும் தந்தைமார்களான என் சகோதரர்களின் செல்லங்களுக்கும் இந்த அத்தை எழுதும் மிகச் சிறிய கதைதான்! இது என் கற்பனைக் கதை அல்ல. எல்லாரும் கேள்விப்பட்டு தற்சமயம் மறைந்து கொண்டிக்கும் கதைகள்தான்.


நான் இப்போது எழுதிக்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், தனித்தனியாக இந்தக் கால என் செல்லங்ககளுக்கு சொல்ல முடியாது. அதனால் இந்த பதிவின் மூலமாக சொல்லுகிறேன். என் நோக்கம் அவ்வளவுதான்.









64 comments :

நட்புடன் ஜமால் said...

தானம் என்று எது நினைக்கபடலையோ அதுவே தானம்.

gayathri said...

நட்புடன் ஜமால் said...
தானம் என்று எது நினைக்கபடலையோ அதுவே தானம்.


repettu

வேத்தியன் said...

வந்தாச்சு...

gayathri said...

anna nejama neega intha pativa padichitengla

gayathri said...

வேத்தியன் said...
வந்தாச்சு...

naangalum vanthachila

gayathri said...

apa ithu yaroda kadaiga

நட்புடன் ஜமால் said...

அழகு நடையில் சொல்யிருக்கின்றீர்கள்

குழந்தைக்கு சொல்வது போல் இருந்தாலும், அதன் கருத்து ஆழ சிந்திக்க வைக்கிறது.

இன்னும் எழுதுங்கள்

logu.. said...

mmm.. nangalum vanthachulla...

நட்புடன் ஜமால் said...

\\gayathri said...

anna nejama neega intha pativa padichitengla\\

மெய்யாலுமே படிச்சிட்டேன் ...

வேத்தியன் said...

ம்..
படிச்சு முடிச்சாச்சு...
இனி வரேன்...

நட்புடன் ஜமால் said...

\\logu.. said...

mmm.. nangalum vanthachulla...\\

ஹா ஹா ஹா


நீ வராட்டிதான் டவுட்டு

வந்துட்டியிள ...

வேத்தியன் said...

நல்ல முயற்சி...

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\gayathri said...

anna nejama neega intha pativa padichitengla\\

மெய்யாலுமே படிச்சிட்டேன் ...

nampiten

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\logu.. said...

mmm.. nangalum vanthachulla...\\

ஹா ஹா ஹா


நட்புடன் ஜமால் said...
\\logu.. said...

mmm.. nangalum vanthachulla...\\

ஹா ஹா ஹா


நீ வராட்டிதான் டவுட்டு

வந்துட்டியிள ...

நீ வராட்டிதான் டவுட்டு

வந்துட்டியிள ...


ippa ungaluku enna டவுட்டு

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

தானம் என்று எது நினைக்கபடலையோ அதுவே தானம்.//

ஆஹா...
பின்னூறியளே தல...
எப்பிடி இப்பிடில்லாம் உங்களால மட்டும்???
:-)

வேத்தியன் said...

ஜமால் அண்ணே...
என்னா தல வேகம் குறைவா இருக்கு????
:-)
வண்டிய வேகமா விடுவோமா???

logu.. said...

jamal bror..

eanna doubt sollunga clear panren..

S.A. நவாஸுதீன் said...

இங்கு தானம் மட்டுமல்ல விருந்தோம்பலும் அதன் முக்கியத்துவமும் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

ரம்யா, இந்த கதை கேட்க்கப்போகும் குழந்தைகளுக்கு ஒரு அற்புதமான இரவை கொடுத்து இருக்கிறீர்கள்.

குடந்தை அன்புமணி said...

நல்ல முயற்சிதான், வெளுத்துக்கட்டுங்க. தெரியாதவங்க அவங்க பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்க அப்பு!

அபி அப்பா said...

ரம்யா பொண்ணு உன் பின்குறிப்புக்கு என் 2 சொட்டு கண்ணீருடன் நன்றி!

உன் கதை எல்லாம் நல்லா இருக்குப்பா!

குடந்தை அன்புமணி said...

விருந்தினரை வரவேற்று உபசரித்ததெல்லாம் அந்த காலத்தோடு சரியோ என்று எண்ணத்தோன்றுகிறது டீச்சர். இந்தக்கதையை படித்ததும், நான் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

விருந்தினர் வருகை
இருப்புக்கொள்ளவில்லை
வறுமை

குடந்தை அன்புமணி said...

//அங்கு அமர்ந்திருந்தவர்கள் என்ன சொல்லுவது என்று புரியாமலும், என்ன தவறு நடந்திருக்க முடியும் என்றும் யோசிக்க ஆரம்பித்தனர்.//

அங்கு மனமுவந்து செய்தார்கள். இங்கு விளம்பரத்திற்காக செய்திருப்பார்கள். அதுதான் காரணமாக இருக்கும். ரம்யா மேடம், சரியா?

Suresh said...

enna akka nanga potta pathivu comment kku neeng reply panlaya

மோனி said...

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பதில் சரியா ரம்யா ?

நிஜமா நல்லவன் said...

உள்ளே வரலாமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ரம்யா

நல்ல கதையை பகிர்ந்தமைக்காக

மேலும் இது போன்ற கதைகளை எங்களோடு பகிருங்கள்.
உண்மையில் இந்த கதை “தானம்” பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. ஏனெனில் எனக்கே இந்தக் கதை இதுவரைக்கும் தெரியாது.

நன்றி

ஆ.ஞானசேகரன் said...

கதையைவிட கடைசி பத்தி நெஞ்சை தொட்டது.... புரிந்திருக்கும்... தொலைதூரத்தில் இருக்கும் தந்தைகளில் ஒருவன்

நிஜமா நல்லவன் said...

அக்கா உங்க பதிவுக்கு வந்து ஒரே பீலிங்க்ஸ் ஆயிடுச்சி....பகிர்வுக்கு ரொம்ப நன்றி!

புதியவன் said...

இந்தக் கதையை முன்பே படித்திருக்கிறேன் இப்போது படிக்கும் போதும் நெகிழ்வாக இருந்தது...

ஆனால்,

இது போன்ற பின் குறிப்பை இப்போது தான் படிக்கிறேன்...பகிர்ந்தமைக்கு நன்றி ரம்யா...

மாண்புமிகு பொதுஜனம் said...

அஞ்ஞாத வாசம் முடிந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா?
இந்த லிங்க்கைப் பாருங்கள்.கண்டிப்பாகச் சிரிப்பீர்கள்.
http://tamilnaduproblems.blogspot.com/2009/03/blog-post.html

http://urupudaathathu.blogspot.com/ said...

//நட்புடன் ஜமால் said...

தானம் என்று எது நினைக்கபடலையோ அதுவே தானம்.///

உண்மை தான் நண்பரே!!!

Vadielan R said...

முடிவு என்னமா கொஞ்சம் தெரிஞ்சா சொல்லேங்களேன் மண்டை வெடிச்சிரும் போல இருக்கு

நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு. சூப்பர்

தொடரட்டும் உங்கள் எழுத்து பணி

நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

கதை தெரிந்ததுதான் என்றாலும் கடைசியில் நீங்கள் சொன்ன எல்லா வார்த்தைகளுமே சத்தியம் தோழி.. நம் அடுத்த தலைமுறை கதை என்றால் என்ன என்று கேட்கும் சூழ்நிலை வந்து விடுமோ என்ற பயம் எனக்கு உண்டு.. அருமையான முயற்சி.. தொடருங்கள்..

rose said...

நிஜமா நல்லவன் said...
உள்ளே வரலாமா?


அதான் வந்துடிங்கலே

rose said...

குழந்தைகளை நினைத்து ஏங்கும்


அபு இன்னும் வரலயா உங்களுக்குத்தான் ரம்யா சொல்லிருக்காங்க‌

Prabhu said...

உங்களுக்கு குழந்தை இருக்கா? குழந்தை கதையெல்லாம் போட்டிருக்கீங்க? என் சிறுகதை பாத்தீங்களா?

அப்பாவி முரு said...

கலக்கீட்டைங்க ரம்யா!!!

உண்மையிலேயே பிரமாதமான கதை. இதைத்தான்

“There is No Free Lunch, in the World" ஆங்கிலத்தில் சொல்லுவாங்க, அதாவது இலவசம்ன்னா அதுக்கு பின்னாடி ஏதோ எதிர்பார்ப்பு இருக்கும்ன்னு அர்த்தம்.

வாழ்த்துக்கள்.

सुREஷ் कुMAர் said...

ஒரு கவிதையே..
கதை சொல்கிறது..
ஆச்சரிய குறி..(!)
(பார்த்திபன் style'a படிங்கப்பு..)

தமிழ் அமுதன் said...

நல்ல கதை ரம்யா! இப்போதான் முதன் முதலில் கேட்கிறேன் இந்த கதையை!
நமக்கு தெரியாத கதையை முதன்முதலில் கேட்கும்போது நமக்கும் ஒரு குழந்தை
உணர்வுதான் ஏற்படுகிறது!

நீங்கள் சாட்டிங்கில் கதை கேட்ட போது உங்களுக்கும் அந்த உணர்வுதான் ஏற்பட்டு இருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது!

இன்னும் நெறைய கதை சொல்லுங்க! நீங்க சொல்லுற கதை எல்லாத்தையும் சேமித்து வைச்சுக்கிறேன்! என் பொண்ணுங்களுக்கு இந்த கதை எல்லாம் புரிஞ்சுகுற வயசு வரும்போது சொல்லணும்!!!

யாருக்கும் வெட்கமில்லை said...

மிக்க நன்றி!
உங்களுக்கு முந்தய தலைமுறையை சேர்ந்த எனக்கு இந்த பதிவு என்னை சுமார் நாற்பது , நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்றுவிட்டது. தொடரட்டும் பணி. அந்த காலத்தில் தாத்தா பாட்டி சொல்லும் கதைகள் எல்லாம் தங்கள் அனுபவங்கள், நீதி கதைகள் , கடவுள் கதைகள் என கூற்வார்கள் . அது குழந்தைகளின் எதிர் காலத்திற்கு உதவியாக இருந்தது. இப்பொழுது அறுகிவிட்டது. வலை உலகத்திற்கு வாசகனாக வந்த நானும் எழுதலாம் என நினைக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்?

அ.மு.செய்யது said...

உள்ளேன் டீச்சர் ..( ப்ரவுசிங் சென்டரிலிருந்து )

அ.மு.செய்யது said...

கதை நல்லா இருந்துச்சுங்க..அடிக்கடி நீங்க ஒரு டீச்சர்ன்றது ப்ரூவ் பன்றீங்க..

நீங்க‌ ஒரு ந‌ல்லாசிரிய‌ர் விருது வாங்க‌ வாழ்த்துக்க‌ள் !!

அ.மு.செய்யது said...

//சுரேஷ் குமார் said...
ஒரு கவிதையே..
கதை சொல்கிறது..
ஆச்சரிய குறி..(!)
(பார்த்திபன் style'a படிங்கப்பு..)
//

அட‌ இது ந‌ல்லா இருக்கே !!!

அ.மு.செய்யது said...

//அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. //

தானம் ஓகே தான்..ஆனால் போரில் செஞ்சோற்றுக்கடன் அப்படின்னு ஒன்னு சொல்வாங்களே !!! அத பத்தி யாருக்காவது ஐடியா இருக்கா ?

அ.மு.செய்யது said...

வந்ததும் வந்துட்டேன்..ஒரு ஆஃப் அடிச்சிட்டு போயிட்றேனே..நம்பர் போடுறேன்.

யாரும் தப்பா நினைச்சிக்காதீங்க..நோ டைம் ஆம் இண்டியா...அதான்

அ.மு.செய்யது said...

46

அ.மு.செய்யது said...

47

அ.மு.செய்யது said...

48

அ.மு.செய்யது said...

யார்னா ஒளிஞ்சிருந்தா வெளிய வாங்க..

காக்கா எங்க பா போனாரு ?

அ.மு.செய்யது said...

ஹையா..50

Anbu said...

super akka

வால்பையன் said...

நல்லா கதை சொல்றிங்க!

தானம் பற்றி நானும் ஒரு பதிவு போடுறேன்!

நசரேயன் said...

நல்ல கருத்துள்ள கதை, அப்புறமா நானும் ரெம்ப ஏழை தான் அந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை என் பேருக்கு எழுதி கொடுத்திடுங்க

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான கதை.

கதையை நேர்த்தியாகவும், அழகாகவும் சொல்லியுள்ளீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

பின் குறிப்பு மிக அழகு..

இராகவன் நைஜிரியா said...

பின் குறிப்பு மிக அழகு..

தேவன் மாயம் said...

குழந்தைகளை நினைத்து ஏங்கும் தந்தைமார்களான என் சகோதரர்களின் செல்லங்களுக்கும் இந்த அத்தை எழுதும் மிகச் சிறிய கதைதான்! இது என் கற்பனைக் கதை அல்ல. எல்லாரும் கேள்விப்பட்டு தற்சமயம் மறைந்து கொண்டிக்கும் கதைகள்தான்.
////

வாங்க!

அத்தை!!!

வாங்க!!!

தேவன் மாயம் said...

நான் இப்போது எழுதிக்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், தனித்தனியாக இந்தக் கால என் செல்லங்ககளுக்கு சொல்ல முடியாது. அதனால் இந்த பதிவின் மூலமாக சொல்லுகிறேன். என் நோக்கம் அவ்வளவுதான்.
///

அருமையான நோக்கம்!!!

தேவன் மாயம் said...

நான் எழுதும் இந்தக் கதைகள் ஏற்கனவே நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள். இந்த கதைகள் நான் எழுதக் காரணம் இருக்கின்றது. நான் சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு வலைப்பதிவு அண்ணா ஒருவரிடம் சாட்டிங்கில் பேசிக் கொண்டு இருந்தேன். மிகவும் நேரம் ஆகிவிட்டதால் அப்போது அந்த அண்ணா சொன்னாங்க ஏன்மா இன்னும்
தூங்காமல் இருக்கே. நான் வேணும்னா ஒரு கதை சொல்லாவா என்றார். நான் என் சிறு பிராயத்துக்கே சென்று விட்டேன். கதை சொன்னார் மிக அருமையான கதை.
////

ஆஹா!!1

சாட்டிங்கினால்

ஆன பயன்!!!

தேவன் மாயம் said...

கதை யின்
நோக்கம்
மானப்பெரிது!!

ஸ்ரீதர்கண்ணன் said...

நல்லா இருக்கு சூப்பர்

மேவி... said...

arumaiyana kathai
nalla solli irukkinga....

மேவி... said...

"நட்புடன் ஜமால் said...
தானம் என்று எது நினைக்கபடலையோ அதுவே தானம்."

periya repeat........

RAMYA said...

நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

நன்றி --> நட்புடன் ஜமால்
நன்றி --> gayathri
நன்றி --> வேத்தியன்
நன்றி --> நிஜமா நல்லவன்
நன்றி --> logu..
நன்றி --> Syed Ahamed Navasudeen
நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> அபி அப்பா
நன்றி --> Suresh
நன்றி --> மோனி
நன்றி --> நிஜமா நல்லவன்
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> புதியவன்
நன்றி --> உருப்புடாதது_அணிமா
நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> Vadivelan R
நன்றி --> மாண்புமிகு பொதுஜனம்
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> கார்த்திகைப் பாண்டியன்
நன்றி --> rose
நன்றி --> pappu
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> சுரேஷ் குமார்
நன்றி --> ஜீவன்

நன்றி --> யாருக்கும் வெட்கமில்லை
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> Anbu
நன்றி --> வால்பையன்
நன்றி --> நசரேயன்
நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> thevanmayam
நன்றி --> ஸ்ரீதர்கண்ணன்
நன்றி --> MayVee said