Friday, March 27, 2009

நானா? நாமா??


எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!

இரண்டு நண்பர்கள் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வழியில் பணப்பை ஒன்று கிடப்பதை அவர்களில் ஒருவன் பார்த்தான். அதை எடுத்துத் திறந்து பார்த்தான் அவன். அதில் ஏராளமான பணம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.

உடன் இருந்த நண்பன், "ஆ! நம் நேரம் நல்ல நேரம். இல்லா விட்டால் இவ்வளவு பணம் நமக்குக் கிடைக்குமா?" என்று கேட்டான்.

"பணப்பையைக் கண்டது நான் பணப் பையை எடுத்தது நான். நமக்கு என்று ஏன் பொதுவாகச் சொல்கிறாய்? உனக்கு என்று குறிப்பிட்டுச் சொல்" என்றான் முதலாமவன்.

இரண்டாமவன் ஏதும் பேச வில்லை. இருவரும் அங்கிருந்து நடந்து சென்றார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்று இருப்பார்கள். வீரர்கள் சிலர் குதிரையில் வருவதை இருவரும் கண்டார்கள்.

அஞ்சி நடுங்கிய முதலாமவன், "அந்த வீரர்கள் பணப் பையைத் தான் தேடி வருகிறார்கள். குதிரையின் பின்னால் வரும் ஒருவன் பணப் பைக்குச் சொந்தக்காரன் போலத் தெரிகிறான். இந்தப் பணப்பையினால் நமக்குத் தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்றான்.
அதற்கு இரண்டாமவன், "இந்தப் பணப்பையைக் கண்டது நீ. எடுத்தது நீ. இப்பொழுது மட்டும் நமக்கு என்று ஏன் பொதுவாகச் சொல்கிறாய். எனக்கு என்றே சொல்" என்றான்.


பின்குறிப்பு
==========
என் அன்புச் செல்லங்களே உங்களுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருக்கும் என்று நம்புகின்றேன்.

இதன் கருத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும். நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும்.

நண்பனுக்கு துன்பம் வரும்போது விட்டுக் கொடுக்கக் கூடாது. துன்பத்திலும் தோள் கொடுக்கவேண்டும். இவைகள் தான் நாம் நட்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம்.





31 comments :

தமிழ் அமுதன் said...

///நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும். நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும////

நல்லா சொன்னிங்க ரம்யா! தொடரட்டும் உங்கள் கலக்கல் கதைகள்!!

குடந்தை அன்புமணி said...

இன்பம், துன்பம் எதுவந்தாலும் தோள் கொடுப்பவன்தான் தோழன் என்பதை அழகான கதையாக விளக்கியுள்ளீர்கள். தொடருங்கள்.

நட்புடன் ஜமால் said...

\\நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும்.
நண்பனுக்கு துன்பம் வரும்போது விட்டுக் கொடுக்கக் கூடாது. \\

அற்புதம்.

அப்பாவி முரு said...

//நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும். நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும்//

ஆமாம், வலுவிழந்து விட வேண்டும்.

ஆனால், வலுவிழக்குமா?

நிஜமா நல்லவன் said...

நல்ல கதை!

அ.மு.செய்யது said...

//எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!//

ஹைய்..டீச்சர் பாட்டி !!!!!!

அ.மு.செய்யது said...

//எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!//

ஹைய்..டீச்சர் பாட்டி !!!!!!

அ.மு.செய்யது said...

//எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!//

ஹைய்..டீச்சர் பாட்டி !!!!!!

அ.மு.செய்யது said...

//எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!//

ஹைய்..டீச்சர் பாட்டி !!!!!!

அ.மு.செய்யது said...

//எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!//

ஹைய்..டீச்சர் பாட்டி !!!!!!

அ.மு.செய்யது said...

சாரிங்க..ஜமால் பதிவிலர்ந்து இப்ப தான் வந்தேன்..சும்மா ஒரு 1600 பின்னூட்டம் தான்...

அ.மு.செய்யது said...

//நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும்.//

அழகான கருத்து...நம் வலையுலக தோழர்கள் இதற்கு சிறந்து எ.கா..

அ.மு.செய்யது said...

நீங்க எப்ப தென்கச்சி சுவாமிநாதன் ஆனிங்க..

அ.மு.செய்யது said...

//நண்பனுக்கு துன்பம் வரும்போது விட்டுக் கொடுக்கக் கூடாது. துன்பத்திலும் தோள் கொடுக்கவேண்டும். இவைகள் தான் நாம் நட்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம். //

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

மிகச் சரியாக சொன்னீர்கள்.

Rajeswari said...

நல்ல சிந்தனையான கதை ரம்யா..எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது

http://urupudaathathu.blogspot.com/ said...

வாவ் ரம்யா..

கலக்கல்

http://urupudaathathu.blogspot.com/ said...

அற்புதம்

http://urupudaathathu.blogspot.com/ said...

சின்ன வயசுல படித்தது..
தொடரட்டும் கதைப்பணி

கணினி தேசம் said...

ரம்யாக்கா.. ரம்யாக்கா..

கதை ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.. :-))

ராமலக்ஷ்மி said...

கதையும் நன்று. பின்குறிப்பும் நன்று.

தொடரட்டும் இது போன்ற நல்ல பகிர்ந்தல்கள்!

ஊர்சுற்றி said...

கருத்தில் நிறுத்த வேண்டிய கதை. நன்று நன்று.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ரம்யா டீச்சர்..
//நண்பனுக்கு துன்பம் வரும்போது விட்டுக் கொடுக்கக் கூடாது. துன்பத்திலும் தோள் கொடுக்கவேண்டும். இவைகள் தான் நாம் நட்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம். //
ஆகட்டும் நம் நட்பு

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர் இன்னும் நிறைய கதை கேட்க

RAMYA said...

நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

நன்றி --> ஜீவன்
நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> நட்புடன் ஜமால்
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> நிஜமா நல்லவன்
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> Rajeswari said
நன்றி --> உருப்புடாதது_அணிமா
நன்றி --> கணினி தேசம்
நன்றி --> ராமலக்ஷ்மி
நன்றி --> ஊர் சுற்றி
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> நசரேயன்

தாரணி பிரியா said...

வாவ் ரம்யா ஒரு ரெண்டு மூணு பதிவை மிஸ் செஞ்சுட்டு இப்பதான் படிச்சேன். சூப்பரா கதை சொல்லி இருக்கிங்க.

தாரணி பிரியா said...

தொடர்ந்து சொல்லுங்க ரம்யா.

Prabhu said...

ஹாய்,
என்ன சொல்லப் போறேன். வழக்கம் போல கலக்கிருக்கீங்க, வழக்கம் போல நல்லா இருக்குன்னு சொல்லப் போறேன்.

புதியவன் said...

//என் அன்புச் செல்லங்களே உங்களுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருக்கும் என்று நம்புகின்றேன்.//

கதை பிடிச்சிருக்கு...

புதியவன் said...

//நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும். நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும்.//

நட்பை வைத்து ஒரு கருத்துள்ள கதை...தொடர்ந்து இது போன்ற கதைகளை சொல்லுங்க ரம்யா...

RAMYA said...

நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!

நன்றி --> தாரணி பிரியா
நன்றி --> pappu
நன்றி --> புதியவன்

வால்பையன் said...

கதை குட்டியா இருக்குறதால நல்லாருக்கு!