Saturday, March 28, 2009

பொருள் தேடுவதின் பயன்!!


என் செல்வங்களே இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான கதை சொல்லப்போகிறேன்!!

ஒரு நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு நாள்தோறும் அழகாக முக சவரம் செய்து வந்தார் நாவிதர் ஒருவர்.

மகிழ்ச்சி அடைந்த அரசர் அவருக்கு நிறைய ஊதியம் தந்தார்.

ஆனால் அவரோ அரசர் தரும் பணத்தைச் சிறிதும் செலவு செய்ய வில்லை. சில ஆண்டுகளில் அவரிடம் ஏராளமான செல்வம் சேர்ந்தது. இருந்தும் அவர் நிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.

வெளியூர் சென்று திரும்பிய அவர் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குரல் "உனக்கு ஏழு குடம் தங்கம் வேண்டுமா?" என்று கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் அவர் கண்களுக்குத் தெரிய வில்ல.

அங்கிருந்து சிறிது தொலைவு நடந்தார். மீண்டும் அந்தக் குரல் "உனக்கு ஏழு குடம் தங்கம் வேண்டுமா? என்று கேட்டது.

பேராசை கொண்ட அவர், "ஆமாம் வேண்டும்" என்றார்.

"நீ கேட்ட ஏழு குடம் தங்கமும் உன் வீட்டில் இருக்கும்" என்றது அந்தக் குரல்.

மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தார் அவர். வீட்டிற்குள் ஏழு பெரிய குடங்கள் இருந்தன. ஆறு குடங்களிலும் தங்கம் முழுமையாக இருந்தது. ஒரு குடத்தில் மட்டும் சிறிது குறைவாக இருந்தது.

மறுநாள் 'வழக்கம் போல அரசருக்கு முக சவரம் செய்த அவர், "அரசே! நீங்க குடுக்கும் ஊதியம் எனக்குப் போதவில்லை" என்றார்.

"நாளையில் இருந்து இரண்டு பங்கு ஊதியம் தருகிறேன்" என்றார் அரசர்.

கூடுதலாகக் கிடைத்த ஊதியத்தையும் பொன்னாக மாற்றிக் குடத்தில் போட்டார். குடம் நிறையவில்லை.

ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் பிச்சை எடுத்துப் பொருள் ஈட்டினார். அப்படிக் கிடைத்த பணத்தையும் குடத்தில் போட்டார்.

நகர வீதி வழியாக வந்து கொண்டிருந்த அரசர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நாவிதனைக் கண்டார்.

நாவிதனை தன் அருகே அழைத்த அரசர், "உனக்கு தான் நிறைய ஊதியம் தருகிறேன். அது போதாதா?? இப்பொழுது எல்லாம் பணம் பணம் என்று அலைகிறாய். நீ படும் துன்பத்தைப் பார்த்தால் அந்த ஏழு குடம் தங்கத்தை நீ வாங்கிக் கொண்டாயா?" என்று கேட்டார்.

அதிர்ச்சி அடைந்த நாவிதர். "அரசே! ஏழு தங்கக் குடங்கள் பற்றிய செய்தி' உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்.

"அந்த தங்கக்குடங்களின் இயல்பு தெரியாமல் நீ அதை வாங்கிக் கொண்டாய். அந்த குடத்தில் தங்கத்தைப் போட்டுக் கொண்டு இருக்கலாமே தவிர அதிலிருந்து குந்து மணி அளவும் எடுக்க முடியாது. அதற்காகப் பொருள் தேடி வீணாக அழிந்து போகாதே" என்று அறிவுரை சொன்னார் அரசர்.

உண்மை உணர்ந்த அவர் காட்டிற்குச் சென்றார் குரல் கேட்ட இடத்தில் நின்று, "எனக்கு அந்தத் தங்கக் குடங்கள் வேண்டாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டில் இப்பொழுது ஏழு தங்கக் குடங்களும் இல்லை.

"எழாவது குடத்தில் தான் போட்ட தங்கமும் போய் விட்டதே. பேராசையால் உள்ளதையும் இழந்தேன்" என்று வருந்தினார் அவர்.



பின்குறிப்பு
=======
எனதருமைச் செல்லங்களே பேராசை பெரும் நஷ்டம் ஆகிவிட்டது பார்த்தீர்களா?

ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கதையும் உங்களுக்கு எதிர்காலத்திலும் நிகழ காலத்திலும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

எனது கதைகளைப் படித்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கும் அனைத்து என் செல்லங்களுக்கும் மிக்க நன்றி. எனது நன்றியை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு கூறிக் கொள்கிறேன். திங்கட் கிழமையில் இருந்து வேறு பதிவு போட முடிவு செய்திருந்தேன். ஆனால் உங்களின் மின்னஞ்சல்களால் மறுபடியும் இந்த பதிவை போடுகிறேன்.

மின்னஞ்சல்கள் அனுப்பிய செல்லங்கள்
==============================

காவியா, தமிழன், சேகர், சேது, கயல்விழி, காயத்ரி, விமல், விதுஷா, வாண்டு, விக்கி, சதா, சந்தானம், தென்றல், ஏகாம்பரம், சரசு, மிருதுளா, சாதிக், சந்திரன்.

உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப் பெண்கள் பெற எனதன்பு வாழ்த்துக்கள்!!

தேர்வு முடிந்த பின்பு உங்களின் சாதனைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். அதை நான் என் பதிவில் உங்கள் பெயருடனும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் போட்டோவுடனும் பதிவிடுகிறேன்.






26 comments :

குடந்தை அன்புமணி said...

பேராசை பெரும் நஸ்டம் என்பதை மிக அழகாக விளக்கியது உங்கள் கதை. இதுவைர படிக்காத கதை! வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

நான்தான் முதல் ஆளு! அப்பாடி, இன்னைக்குத்தான் நான் முதல் ஆளாக வந்திருக்கிறேன்.(ஞாயிற்றுக்கிழமை புண்ணியத்தில்)

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல்லவும் குழந்தைகளுக்காகவும் ஒரு தளத்தை நீங்கள் என் நடத்தக் கூடாது.. ?அதுல நாங்களும் எழுதுவோம்ல..

அப்பாவி முரு said...

நல்ல கதை ரம்யா!!!

குட்டிகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களில் பலருக்கு அவசியம் தேவையான கருத்து!!!

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம்..

நல்ல கதை.. இதுவரை நான்கேட்டதில்லை பராட்டுகள்

ஊர்சுற்றி said...

//அப்பாவி முரு said...
நல்ல கதை ரம்யா!!!

குட்டிகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களில் பலருக்கு அவசியம் தேவையான கருத்து!!!//


வழிமொழிகிறேன்.

Prabhu said...

///உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல்லவும் குழந்தைகளுக்காகவும் ஒரு தளத்தை நீங்கள் என் நடத்தக் கூடாது.. ?அதுல நாங்களும் எழுதுவோம்ல..////

இது நல்லாருக்கே! ட்ரை பண்ணிப் பாருங்க!

இராகவன் நைஜிரியா said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல்லவும் குழந்தைகளுக்காகவும் ஒரு தளத்தை நீங்கள் என் நடத்தக் கூடாது.. ?அதுல நாங்களும் எழுதுவோம்ல..//

நான் இதை ஆமோதிக்கின்றேன்

நட்புடன் ஜமால் said...

கருத்து சொல்லும் கதைகள்

அருமை

தொடரட்டும் ...

priyamudanprabu said...

///
ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று.
///

சரியாக சொன்னீங்க
புத்தரும்கூட பேராசைதான் அழிவுக்கு காரணம் என்று சொல்லியிருக்கலாம்

வேடிக்கை மனிதன் said...

இன்றைய சூல்நிலையில் குட்டிகலுக்குத் தேவையான கதையோ இல்லையோ பெரியவர்களுக்குப் மிகவும் அவசியமான கதை.
நானும் எனக்குத்தெரிந்த ஒருகதை இதிகாசத்தில் இருந்து சொல்கிறேன்.
துரியோதனன் பாண்டவர்களிடம் இருந்த செல்வங்களயும்
தன்னிடம் இருந்த செல்வங்களயும் பட்டியலிட்டு தர்மனிடம் என்னவெள்ளாம் தன்னைவிட அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப்பார்த்து தன்னிடம் அவை இல்லையே என்று துயரப்பட்டானாம்.
பாரதி தன் பாடலில் என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குத லுற்றான்னு முடிப்பார்.
துரியோதனன் என்ன ஏழையா? அவனிடம் அதிகமான செல்வங்கள் இருந்தும் பேராசையின் காரனமாக தன்னிடம் இல்லாததை எண்ணி அவன் ஏழையை போல் துயரப்பட்டானாம். வசதி அதிகம் படைத்தவர்கள் இந்தக்கதையை படித்து தங்களை திருத்திக்குவது அவசியம்.

rose said...

நல்ல கதை வாழ்த்துக்கள்

kishore said...

கதை நன்றாக இருக்கு ரம்யா ... அப்பறம் ..... எதோ சொலனும்னு நெனச்சேன்... ஆங்.. எக்கா...ஒரு எட்டு நம்ம கடை பக்கம் வந்து பாக்குறது...?

புதியவன் said...

மீண்டும் ஒரு நல்ல கருத்துள்ள கதை...

புதியவன் said...

//ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. //

ஆசையே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்றார் புத்தர்...ஆனால ஆசையில்லாமல் மனிதன் இருக்க முடியாது...ஆசை அளவோடு இருப்பது நலம்...

புதியவன் said...

//தேர்வு முடிந்த பின்பு உங்களின் சாதனைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். அதை நான் என் பதிவில் உங்கள் பெயருடனும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் போட்டோவுடனும் பதிவிடுகிறேன்.//

மாணவர்களை உற்சாகப் படுத்த நல்லதொரு முயற்சி ரம்யா...

அண்ணன் வணங்காமுடி said...

ஆன்டி ஆன்டி கதை ரொம்ப நல்லா இருக்கு.

அ.மு.செய்யது said...

//காவியா, தமிழன், சேகர், சேது, கயல்விழி, காயத்ரி, விமல், விதுஷா, வாண்டு, விக்கி, சதா, சந்தானம், தென்றல், ஏகாம்பரம், சரசு, மிருதுளா, சாதிக், சந்திரன். //

ரேடியோல விரும்பிக்கேட்ட நேயர்கள்னு ஒரு லிஸ்ட் வாசிப்பாங்களே !!!

சேம் ஃபீலிங் வருது...

அ.மு.செய்யது said...

கருத்தாழமிக்க கதைகள்...

ஒரு மார்க்கமாத்தான் போயிட்டு இருக்கீங்க..டீச்சர் !!!

நிஜமா நல்லவன் said...

முன்பே கேட்டிருந்த கதை தான் என்றாலும் மீளவும் வாசிக்க முடிந்தமைக்கு நன்றி அக்கா!

குடுகுடுப்பை said...

good one.

सुREஷ் कुMAர் said...

//
எனக்கு அந்தத் தங்கக் குடங்கள் வேண்டாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.
//

அட போங்க நாவிதன் சார்.. அந்த ஏழாவது ஓட்ட கொடத்த மட்டும் வேணான்னு சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..?

RAMYA said...

நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!

நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> கார்த்திகைப் பாண்டியன்
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> ஊர் சுற்றி
நன்றி --> pappu
நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> நட்புடன் ஜமால்
நன்றி --> பிரியமுடன் பிரபு
நன்றி --> நான் தகுதியானவனா? நன்றி --> rose
நன்றி --> KISHORE
நன்றி --> புதியவன்
நன்றி --> அண்ணன் வணங்காமுடி
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> நிஜமா நல்லவன்
நன்றி --> குடுகுடுப்பை
நன்றி --> சுரேஷ் குமார்
நன்றி --> உலவு.காம் (ulavu.com)

வால்பையன் said...

சேர் மார்கெட்லயும், நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கி காசு போட்டவங்க கதை தானே!

RAMYA said...

நன்றி வால்பையன் !!