Monday, April 6, 2009

ஏழைக்குச் செல்வம் கிடைத்தால்!!

எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!

ஓர் ஊரில் அடுத்தடுத்து செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவனும் குடி இருந்தார்கள். செல்வந்தரின் வீடு பெரிதாக இருந்தது. ஏழையின் வீடோ குடிசை வீடு.

ஏழைக்குச் சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்துக் கிடைக்கின்ற சிறிதளவு கூலியுடன் வீடு திரும்புவான் அவன். எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

அவன் வீட்டுக் கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும். படுத்தவுடன் நன்றாகத் தூங்கி விடுவான் அவன்.

ஆனால் செல்வந்தரோ எப்பொழுதும் பரப்புடனும், கவலையுடனும், காட்சி அளித்தார். தன் வீட்டுக் கதவுகளையும் சன்னல்களையும் மூடியே வைத்திருந்தார். திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களைத் திருடி சென்று விடுவார்களோ என்று அஞ்சினார். அதனால் அவர் இரவில் தூங்குவதே இல்லை.

ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தார் அவர். இவ்வளவு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக் இருக்க முடிய வில்லையயே என்று வருந்தினார்.

ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய வ்ரும்பினார் அவர்.

ஏழையை அழைத்த அவர், நண்பனே! நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய். உனக்கு உதவி செய்ய எண்ணுகிறேன். என்னிடன் அள்ள அள்ளக் குறையாத செல்வம் உள்ளது. அதிலிருந்து உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து" என்றார்.

செல்வந்தரிடம் நூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட ஏழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

இரவு வந்தது இந்தப் பொற்காசுகளைத் திருடர்கள் திருடிச் சென்று விடுவார்களோ என்று அச்சத்தில் வீட்டுக் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை. சிறு ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான்.

தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்.

பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தான். "ஐயா! நான் ஏழை தான். உங்கள் பொற்காசுகள் என் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்து விட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்.

35 comments :

அண்ணன் வணங்காமுடி said...

me the 1st

நட்புடன் ஜமால் said...

\\தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்.\\

நல்லது.

அப்பாவி முரு said...

//ஏழையை அழைத்த அவர்//

அந்த பணக்காரன் எங்கே இருக்கிறார்., நானும் ஏழை தான்.

வினோத் கெளதம் said...

அருமையான கதை.

அப்பாவி முரு said...

//எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்//


அந்த ஏழை தான்

நிஜமா நல்லவன்???

அப்துல்மாலிக் said...

ஹி ஹி இது படித்த கதைதான், பட் வேறுவிதமா சொல்லப்பட்டிருக்கும்

அப்துல்மாலிக் said...

பொற்காசு கிடைக்குமா? நா பத்திரமா வெச்சிக்குவேன்

அப்துல்மாலிக் said...

நீங்க என்னை டெஸ்ட் செய்ய விருப்பமா?
என்னுடைய பாங்கு அக்கொண்ட் அனுப்பட்டா?

Suresh said...

//எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்//

அவன் என்னை மாதிரி நல்லவன் :-)

கார்க்கிபவா said...

/அவன் என்னை மாதிரி நல்லவன் ://

நீங்க நல்லவன் மாதிரி சகா.. :))

கதை.. சூப்பருங்க

புதியவன் said...

//எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!//

நாங்களும் வந்து விட்டோம்...

அ.மு.செய்யது said...

அதுக்கு தான் எங்க தலைவர் சொன்னார்..

காசு கம்மியா இருந்தா நாம தான் அதுக்கு எஜமானன்.

அதிகமா இருந்தா காசு தான் நமக்கு எஜமானன்.

இது எப்படி இருக்கு ????

அ.மு.செய்யது said...

//அப்பாவி முரு said...
//ஏழையை அழைத்த அவர்//

அந்த பணக்காரன் எங்கே இருக்கிறார்., நானும் ஏழை தான்.
//

நாங்கூட தாங்கோ !!!!!

புதியவன் said...

//தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்./

மகிழ்ச்சி செல்வத்தில் மட்டுமே இல்லை...மிகவும் சரி...

நல்ல கருத்துள்ள கதை ரம்யா...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
ஹி ஹி இது படித்த கதைதான், பட் வேறுவிதமா சொல்லப்பட்டிருக்கும்
//

இது கொஞ்சம் ரீமிக்ஸ் ரேஞ்சு..

டீச்சர் சொன்னா சொன்னது தான்..மறு பேச்சு பேசப் படாது.

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான கதை.

தேவைக்கு அதிகமாக பணம் வந்தால் நிம்மதி போகும் என்பதை உணர்த்திய கதை.

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

குடந்தை அன்புமணி said...

கதை சொல்லும் நீதியை அண்ணன் ராகவன் அவர்கள் சொல்லிவி்ட்டதால் அதையே நானும் ரிப்பீ்ட்டுக்கிறேன்.

ஆளவந்தான் said...

//
எனதருமைச்
//
அவசரத்துல தப்பா படிச்சுட்டேன் :)

தமிழ் அமுதன் said...

ஒருவனுக்கு உழைப்பில்லாமல் செல்வம் சேர்ந்தாலோ,அல்லது மிக மிக அதிக அளவு
செல்வம் சேர்ந்தாலோதான் அவன் நிம்மதி இழப்பான்!

அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் செல்வந்தர் ஆக வேண்டும்!

உழைத்து செல்வம் சேர்கின்ற ஒருவனுக்கு அதை பாதுகாத்து கொள்ள தெரியும்!

கதை இந்த வடிவில் இருந்திருக்கலாம்!!!

Prabhu said...

நானும் ஏழை தானுங்கோ! ரம்யா பணக்காரின்னு யாரோ சொன்னாங்க!

நசரேயன் said...

//எனதருமைச் செல்லங்களே//
எனக்கு என்னவோ எருமை மாதிரி தெரியுது

நசரேயன் said...

//தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை. சிறு ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான்.//

நீங்க ஏன் திருட போறீங்க, அவரு பிழைச்சி போகட்டும் விடுங்க

sury siva said...

இந்தக்கதையை ஆங்கிலத்தில் ஒரு தாத்தா தன் பேரக்குழந்தைகளுக்குச்
சொல்வதை இங்கே கேளுங்கள்.
http://ceebrospark.blogspot.com
அழகான கதை.

க‌தையை முடித்த‌பின் என் பேர‌ன் கேட்கிறான்: ஏன் தாத்தா ! அவ‌ரு
அப்பா அகெள்ன்ட் வ‌ச்சிருக்கிற‌ பாங்கில‌ ஒரு அகெள்ன்ட் ஆர‌ம்பிச்சு
ப‌ண‌த்தை போட்டு வ‌ச்சிக்க‌லாமே !!

சுப்பு தாத்தா.
Stamford, CT, USA

குடுகுடுப்பை said...

காசெல்லாம் என்கிட்ட குடுத்துருங்க நீங்க சந்தோசமா இருங்க

Vishnu - விஷ்ணு said...

பேங்க பத்தி அந்த செல்வந்தர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க.பாவம் சின்னபுள்ள தனமாகவே இருக்காரு.

உழைச்ச காசுன்னா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், இருந்தாலும் திரும்ப கொண்டு வந்திரலாமுன்னு நம்பிக்கை இருக்கும்.

Poornima Saravana kumar said...

ஆஹா!!

Poornima Saravana kumar said...

கதை அருமையா இருக்கு!

Poornima Saravana kumar said...

ஆமா உங்களுக்கு யார் இந்த மாதிரி கதையை எல்லாம் சொல்லி தராங்க??

Poornima Saravana kumar said...

நான் குட்டி பாப்பாவா இருக்கும் போடு என் தாத்தா கதை சொன்னால் தான் தூங்குவேன்....அதில் கொஞ்சம் கொஞ்சம் மட்டுமே நினைவிலிருக்கிறது:(

Poornima Saravana kumar said...

30

Suresh said...

ஜமால் பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்க

வில்லன் said...

//பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தான். "ஐயா! நான் ஏழை தான். உங்கள் பொற்காசுகள் என் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்து விட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்.//

ஐய அத அப்படியே இங்கன கொண்டாந்து கொடுதுருக்க்கலாம்ள.....

JSTHEONE said...

nice story.... panam pathum seiyum adhil onru nimmathiyai kedupadhu nu sollama solliteenga nice one...

keep going

Unknown said...

ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!


அம்முனி ரம்யா .......!!! மொக்க கதைய சொல்லி ....ஓட...ஓட ... தொரத்தரையே அம்முனி....!!!


இதெல்லாம் நெம்ப தப்பு ...ஆமா சொல்லிபோட்டனாக்கும்......!!!!!



இபோ நான்கோ என பன்னிபோட்டமுன்னு இப்புடி மொக்க போட்டுருக்குற.......!!!!


எங்களயெல்லாம் பாத்தா பவமா தெரியிலயா.....???

Happy Smiles said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.

Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com