Monday, May 11, 2009

ஜில் என்று ஒரு காதல் / மூன்றாம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இதன் இரெண்டாம் பாகம் படிக்காதவர்கள்
இங்கே சொடுக்கவும்.

*************************************************

பங்கேற்பவர்கள்
============

கதாநாயகன் : ராஜா
கதாநாயகி : காஜோல்
கதாநாயகியின் தங்கை: சாரா
வீட்டுச் செல்லம் : சின்னு
கதாநாயகியின் அம்மா : கல்யாணி
கதாநாயகியின் அப்பா : மனோ
பாட்டி : மந்தாஹினி

*************************************************

மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா. ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம். வேகமாக வெளியே வந்தவங்க, யாரு தம்பி, புதுசா இருக்கே! ஏன் எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க. ஆனா ஒருத்தர் மூஞ்சியும் சரி இல்லை! நம்ம கிட்டே விஷயம் என்னான்னு மனோ கண்டிப்பா சொல்லவே மாட்டான். நாம்பளே நேரா கேட்டுடலாம். யாருப்பா நீ?? உன்னை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே? என்ன விஷயம்?? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?

பாட்டி என்னை ஆசிர்வதிங்க. நான் உங்க பேத்தி காஜோலை பொண்ணு கேட்டு வந்திருக்கேன். உங்க மகன் என்னையும், என் காதலையும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரு. உங்களைப் பார்த்தால் சாட்சாத் மகாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க. நல்ல வார்த்தை சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க. உங்க மகனுக்கும் கொஞ்சம் அறிவுரை கூறுங்க என்று கூறியபடியே படார் என்று பாட்டியின் காலில் விழுந்தான் ராஜா.

பாட்டிக்கு ஒன்னும் புரியலை, என்னடா காலிலே வந்து விழரே!! பரீட்ச்சை ஏதாவது எழுதப்போறியா?? மொதல்லே சொல்லு நீ யாரு??

"கிழிஞ்சிது இவங்களுக்கு காது கேக்காதா? அடபாவமே நான் காலிலே விழுந்தது அநியாயத்துக்கு வீணா போயுடுச்சே!! கடவுளே இதென்ன சோதனை??" என்று மனதிற்குள் புலம்பல். என் பெயர் ராஜான்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.

"ஏண்டா மனோ ஏன் ஒரு மாதிரி முழிச்சிகிட்டு உக்காந்து இருக்கே? ஏதாவது பெரிய பிரச்சனையா?? அதான் எல்லாரும் சேர்ந்து பேசறீங்களா? சொல்லுடான்னா?? " என்று தன மகனைப் பார்த்து பாட்டி கேட்டாங்க.

ஆமாம்மா இது ஒரு பெரிய பிரச்சனை, நான் ஐநாசபை கூட்டி தீர்வு காணனும். வாசக் கதவை மூடி வையுங்கன்னு பல தடவை சொல்லியும் யாரும் கேக்கலை. அதான் எந்த வெவரமும் இல்லாமல் ஒன்னு வந்து உள்ளே உக்காந்து இருக்கு நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க. ஒன்னும் புரியாம ஏதாவது சொல்லி வைக்காதீங்க. குறிப்பா இதோ நிக்கறானே அவன் கிட்டே மட்டும் எதுவும் பேசவேணாம்." என்றார் மனோ

"இந்த பாருங்க அந்த பிள்ளை யாரோ எவரோ, ஒன்னும் வெவரம் தெரியாம மரியாதை இல்லாமல் பேசாதீங்க." என்ற கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா"

அம்மா உங்களுக்குத்தான் வெவரம் தெரியலை. இந்த அங்கிள் அக்காவை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாரு அப்பாகிட்டே! அது தெரியுமா உங்களுக்கு? அப்பா உங்ககிட்டே சொன்னாரு இல்லே. நீங்க அதுக்கு பேசாமே அந்த அங்கிள்க்கு பரிந்து பேசறீங்க. எனக்கு கூட இந்த அங்கிளை பார்த்தா பிடிக்கலை. நம்ப சின்னுவை நாய்ன்னு சொன்னாரு. " சரியான நேரத்துலே சரியான மாடுலேசன்னோட போட்டுக் கொடுத்துவிட்டாள் சாரா!

கொஞ்ச நேரம் வாயை மூட்ரயா? பெரியவங்க பேசும் போது உனக்கு இங்கே என்ன வேலை?? போ உள்ளே. அதிகப் பிரசங்கி. நான்தான் பேசிகிட்டு இருக்கேன் இல்லே, உனக்கு ஏன் அவ்வளவு ஆவேசம் வருது. உள்ளே போ, சொன்னா கூட போகாமல் இங்கேயே நின்னுகிட்டு ஏதாவது உளறிகிட்டே இருக்கே. போடி உள்ளே" என்றார் கோவத்துடன் கல்யாணி.

அத்தை ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க, பின்னால் இவங்களை வச்சே பல காரியங்களை சாதிச்சுக்கணும். என்று ஒரு மணகனக்கு ராஜாவுக்கு.

பாருங்கப்பா! அம்மா என்னை அந்த அங்கிள்க்கு முன்னாடி திட்டறாங்க. ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை. இப்போ எனக்கு ரொம்ப இன்சல்டா இருக்கு. சாரா அழாத குறையா அப்பாவிடம் முறை இட்டாள்

இந்த குட்டிச் சாத்தானுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா இந்த அளவுக்கு பேசும். நம்ப நன்றி சொல்லலாம்னு நினைத்ததெல்லாம் தப்பு போல இருக்கே. சரி கொஞ்சம் மிரட்டி வைக்கலாம். "ஹேய் இங்கே பாரு என்ன நானும் அப்போ இருந்து பாக்கறேன், என்னை ரொம்ப கேவலமா பேசறே? சின்ன பிள்ளையா லட்சணமா நடந்துக்கோ." அப்பா எப்ப்படியோ மச்சினிச்சியை அதட்டிடோம். அடங்கிடுமா இல்லே மறுபடியும் எதுக்குமா? குடும்பமே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு என்று மசுகுள்ளே வெடித்துக் கொண்டிருந்தான் ராஜா

"ஹல்லோ என்ன எங்க வீட்டுக்குள்ளே அத்து மீறி வந்ததும் இல்லாமல் அதிகமா பேசறே நீ." இதுக்குத்தாண்டி நான் அப்பவே சொன்னேன் வாசல் கதவை மூடி வையின்னு. கேட்டியா, பொம்பளை பிள்ளைங்களை வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனா எனக்கே அந்த அவஸ்த்தை வரும்னு எதிர் பார்க்கலை."

ஆஹா பேச்சு ரூட்டு மாறுது. இங்கே வைக்கணும் வெட்டி பேச்சுக்கு ஒரு வேட்டு. "இங்கே பாருங்க சார் நான் உங்க பொண்ணை விரும்பறேன்; உங்க பொண்ணும் என்னை விரும்புது. கல்யாணத்துக்கு சம்மதம் கேக்கத்தான் நான் இங்கே வந்து இவ்வளவு அவமானப் பட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேலே அமைதி காத்தீங்கன்னா உங்க சின்னு கூட என்னை கேவலமா பேச ஆரம்பிச்சிடும்".

"மறுபடியும் என்னை பேச வைக்காதே. எனக்கு உன்னை பிடிக்கலை. போ வெளியே" மனோ ஆவேசமா கத்தினார்.

சுத்தறது, இதுதானே இப்போதைய உங்களோட பொழுதுபோக்கு ! என்றாங்க கல்யாணி .

அப்பா நீங்க அவரைத் திட்டாதீங்க. எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுங்கோ. காஜோல் கெஞ்சுதலாகவும் அப்படியே சற்றே அழுத்தமாகவும் தெரிவித்தாள் தன் காதலை.

"பாத்தியாடி உம்பொண்ணு பேசறதை? படிக்க வைக்க அப்பா அம்மா வேணும். வேலைக்குப் போனப்புறம் நாங்க வேண்டாம்." தொண்டை அடைக்க மனோவிற்கு மேலும் கோவம் தான் அதிகமானது.

"ஏம்ப்பா மனோ! காஜோல் என்ன சொல்லுது, அவங்க அலுவலகத்திலே டூர் போறாங்களாமா? அதுக்கு உன் கிட்டே அனுமதி கேக்கராளா?" பாட்டி பிரச்சனை பாட்டிக்கு.

"ஆஹா! ஆஹஹா இது சூப்பரு. பாட்டி டமாரச்... " ராஜாவின் மனசுக்குள்ளே மத்தாப்பு!

"ஹேய் என்ன எங்க பாட்டியை செவிடுன்னு சொல்ல வரியா? அப்பா பாருங்கப்பா? மறுபடியும் ஆரம்பிச்சுட்டான். சின்னுவை அவிழ்த்து விடவாப்பா??" சாரா வெறுப்பின் உச்சிக்கே போனாள்.

"ஏய் போடி உள்ளே நீ வேறே நொய்யி நொய்யின்னுகிட்டு, அம்மா நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்க? அம்மா நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ப்ளீஸ்" மகனாகவும் மரியாதை இல்லே! அப்பனாகவும் மரியாதை இல்லை! புருஷனாகவும் மரியாதை இல்லை! "

என்ன மனோ சொல்லறே நீங்கே எல்லாம் ஒன்னும் குடிக்காமல் எனக்கு மட்டும் காப்பியா ?? எனக்கு !இப்போதான் சாப்பிட்டு வந்தேன். நீங்க எல்லாரும் வேணும்னா காப்பி குடிங்க"

எல்லாரும் கொல் என்று சிரிக்க, சின்னுவும் கத்த ஆரம்பித்தது.

ஐயோ ஐயோ, எல்லாரும் என்னை ஏன் இப்படி கொடுமைப் படுத்தறீங்க?மரியாதையா எல்லாரும் உள்ளே போங்க என்று கூறும்போதே நெஞ்சை பிடித்துக் கொண்டு உடகார்ந்தவரை பார்த்து எல்லாரும் பயந்து போனார்கள். மனோவிற்கு ஒண்ணுமே புரியலை தலை சுத்த அப்படியே நாற்காலியில் சாய ஆரம்பித்தார்.

சார் சாரி சார் என்னாலே தான் உங்களுக்கு பிரச்சனை. என்னை மன்னிச்சுடுங்க சார். எதுக்கும் சொல்லி வைப்போம், இல்லேன்னா சின்னு நம்பலை பிடுங்கி வச்சிடும். கடவுளே என்னை இப்போ கண்டிப்பா காப்பாத்து. நல்லா பொண்ணு கேக்க வந்தேன், கொடுமைடா சாமி! ராஜா பாவம் புலம்பலின் உச்சத்திற்கே போய் விட்டான்

அம்மா உங்க குடும்ப மருத்துவர் தொலைபேசி எண்களைக் கொடுங்க. மருத்துவரை வரவழைக்கலாம் என்றான் ராஜா காஜோல் அம்மாவிடம். நம்ப நல்ல நேரம்தான் மருத்துவரே போனை எடுத்து விவரம் அறிந்து உடனே வர சம்மதம் சொன்னார். அப்பா நல்ல வேளை மருத்துவர் உடனே வரேன்னு சொல்லிட்டார். இல்லேன்னா இவங்க எல்லாரும் நம்பளை அடிச்சே கொன்னுடுவாங்க போல. சின்னு பார்வையும் சரியா இல்லே. மெதுவாக காஜோலைப் பார்த்தான். பேசாம போனா கொன்னுடுவேன் என்று ஜாடை காட்டினாள்.

"என்ன ஆச்சு?? உங்களுக்கு ஒன்னும் இல்லை கொஞ்சம் ரத்தக் கொதிப்பு அதிகமா இருக்கு அவ்வளவுதான். அட இதுக்கு போய் ஏன் கண் கலங்கறீங்க." டாக்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாரு.

இல்லே டாக்டர் நான் இன்னைக்கி செய்து முடிக்க நிறைய வேலை வைத்திருந்தேன். விடிஞ்சும் விடியாம இந்த ஏழரை எங்க வீட்டுக்குள்ளே புகுந்து ஒரே ரகளை பண்ணுது. என்று கவலையுடன் டாக்டரிடம் சொன்னார் மனோ.

யாரு இவரு, ஓ இவர்தான் எனக்கு போன் பண்ணினாரா? யாரு தம்பி நீங்க?? எந்த ஊரு? இங்கே என்ன பண்ணறீங்க? இது மருத்துவரின் கேள்வி.

இங்கே பாருங்க நான் எல்லாருக்கும் பதில் சொல்லனும்னு ஒன்னும் அவசியம் இல்லே. அவருக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை இல்லையா? அப்போ நான் கிளம்பறேன். என்னைப் பார்த்தா ஏழரைன்னு சொல்லறீங்க. சரி நான் வரேன். ராஜா மனதில் வெறுமையுடன் கிளம்பினான்.

"வராதே போ!" அவ்வளவு வெறுப்பு மனோவிற்கு.

அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம். சரி வாங்க ராஜா போலாம். காஜோலின் அன்பான அழைப்பில் ஒரு கணம் தன்னை மறந்தான். அப்படியே சில விநாடிகள் தன்னை மறந்து சொக்கி நின்றான் ராஜா .

"அக்கா போகாதே இந்த அங்கிள் ரொம்ப மோசம், இவராலே அப்பாவுக்கு உடம்பு வேறே சரி இல்லே. இருக்கா! எனக்கு அழுகையா வருது." அழுகையின் உச்சத்தில் சாரா

ஏய் உன்னோட வேலையை பாரு. வாங்க போகலாம் என்றாள். அழுது அடம் பிடிக்கறது எல்லாம் அப்பாவோட நிறுத்திக்கோ. இப்போ எனக்கு வழிவிடு.

எதுவானாலும் கொஞ்சம் ஆரப் போட்டு பேசி முடிக்கலாம் காஜோல். நீயும் உங்கப்பா மாதிரி அவசரப்படாதே. உள்ளே போ காஜோல்! தம்பி இது மாதிரி விஷயம் எல்லாம் ஒரு நொடியில் பேசி தீர்க்க முடியாது. நீங்களும் அவசரப் படாதீங்க. உங்க வீட்டு பெரியவங்களை வந்து பொண்ணு கேக்கச் சொல்லுங்க. அப்போதான் எல்லாம் சரியா வரும். இப்போ நீங்க மட்டும் போயிட்டு வாங்க. பாசமா சொன்னாங்க கல்யாணி அம்மா.

என்னாடி அங்கே நின்னுகிட்டு சமரசம் பேசறயா? அவனுக்கு எல்லாம் எம்பொண்ணை கட்டி கொடுக்க முடியாது. நல்ல விதமா சொல்லி அனுப்பு. ஏய் காஜோல் போடி உள்ளே. காதலாம் காதல். வேலைக்கு போறதா சொல்லிட்டு வெட்டியா பொண்ணுங்க பின்னாடி சுத்துவானுக, அப்புறம் வந்து பொண்ணு கேப்பானாக, நாங்களும் உடனே கல்யாணம் பண்ணி வச்சிடணும். இது கொஞ்சம் கூட நியாயமா இல்லை ! அப்பாவின் குரல் அதிகமானது.

"இங்கே பாருங்க நான் கண்டிப்பா உங்க பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா நான் இழுத்துகிட்டு போய் எல்லாம் தாலி கட்ட மாட்டேன்.எங்க வீட்டிலேயும் சொல்லி அழைத்து வரேன். நீங்க ரொம்ப சத்தம் போடாம உடம்பைப் பார்த்துக்குங்க. அம்மா, பாட்டி நான் வரேன். குட்டி பிசாசு உன்க்கும் சேர்த்துத்தான் சொல்லறேன் நான் போயிட்டு அப்புறமா வரேன். அமைதியாக சொன்னான் ராஜா. காரியம் ஆகணுமே, நமக்கே பேச தெரியலை, இந்த மாமனாரை எல்லாம் எப்படி சமாளிப்பேன்னு தெரியலையே!! ராஜா பொறுமையுடன் தான் பதில்கள் சொல்லிக் கொண்டிருந்தார்

என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை நீ வந்தா சின்னு உன்னை நல்லா கடிச்சி வெச்சிடும். சாராவின் குரலில் இருந்து அவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை நன்கு அறிய முடிந்தது .

தொடரும்...
ரமயா

35 comments :

புதியவன் said...

கோடை வெயிலுக்கு இந்த கதை மனசுக்குள்ள ஜில்லுன்னு தான் இருக்கு ரம்யா...

//ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம்.//

அப்போ ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பாங்க போல...

புதியவன் said...

//பாட்டிக்கு ஒன்னும் புரியலை, என்னடா காலிலே வந்து விழரே!! பரீட்ச்சை ஏதாவது எழுதப்போறியா?? மொதல்லே சொல்லு நீ யாரு??//

மகாலக்ஷ்மி இப்படி கவுத்துட்டாங்களே...

புதியவன் said...

//"இந்த பாருங்க அந்த பிள்ளை யாரோ எவரோ, ஒன்னும் வெவரம் தெரியாம மரியாதை இல்லாமல் பேசாதீங்க." என்ற கல்யாணி "//

கதையில இந்த கேரக்ட்டர் தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

புதியவன் said...

//அப்பா நீங்க அவரைத் திட்டாதீங்க. எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுங்கோ. காஜோல் கெஞ்சுதலாகவும் அப்படியே சற்றே அழுத்தமாகவும் தெரிவித்தாள் தன் காதலை.//

ரொம்ப ஸ்ட்ராங்கான காதல் தான்...

புதியவன் said...

//பேசாம போனா கொன்னுடுவேன் என்று ஜாடை காட்டினாள்.//

ஹா...ஹா...இது வேறா...

புதியவன் said...

//"இங்கே பாருங்க நான் கண்டிப்பா உங்க பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா நான் இழுத்துகிட்டு போய் எல்லாம் தாலி கட்ட மாட்டேன்.எங்க வீட்டிலேயும் சொல்லி அழைத்து வரேன். நீங்க ரொம்ப சத்தம் போடாம உடம்பைப் பார்த்துக்குங்க.//

பையனும் நல்லவனாத் தான் இருக்கிறான்...
ரொம்ப தவிக்கவிடாம சீக்கிரம் காதலை சேர்த்து வச்சிடுங்க ரம்யா...

sakthi said...

கல்யாணி.அத்தை ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க, பின்னால் இவங்களை வச்சே பல காரியங்களை சாதிச்சுக்கணும். என்று ஒரு மணகனக்கு ராஜாவுக்கு.

nalla vivaramana hero than

sakthi said...

என்னடா காலிலே வந்து விழரே!! பரீட்ச்சை ஏதாவது எழுதப்போறியா?? மொதல்லே சொல்லு நீ யாரு??"கிழிஞ்சிது இவங்களுக்கு காது கேக்காதா? அடபாவமே நான் காலிலே விழுந்தது அநியாயத்துக்கு வீணா போயுடுச்சே!! கடவுளே இதென்ன சோதனை??

ayyo pavam arampame ippadi oru sothanai aa??

sakthi said...

.அப்பா நீங்க அவரைத் திட்டாதீங்க. எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுங்கோ. காஜோல் கெஞ்சுதலாகவும் அப்படியே சற்றே அழுத்தமாகவும் தெரிவித்தாள்

nalla thaiyriasali than

gayathri said...

adada kathai super pa

mmmmm appram unga kathaiya padicha enaku en kathai than neyapagam varuthu

sekarama rendu peraum sethu vachidinga pa

gayathri said...

அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம்

adada ippadi pesa enaku thonama pochi aniku

அப்துல்மாலிக் said...

சாரி ஒரு சில பெர்செனல் காரணங்களால் உங்க தொடரை தொட முடியாமல் போய்விட்டது

முழுதும் படித்துவிட்டு வருகிறேன்

வால்பையன் said...

பின்னூட்டங்களை காணோமே!
மக்கள் ரொம்ப பிஸியாகிட்டாங்க போல!

அ.மு.செய்யது said...

//ரொம்ப நல்லவங்கன்னு//

அப்ப‌டியே உங்க‌ள‌ மாதிரியே !!!

அ.மு.செய்யது said...

//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா//

கொஞ்ச‌ம் கொய‌ப்ப‌மா கீதே !!

அ.மு.செய்யது said...

//ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை.//

ஆனா ஸ்டோரியோட ஆங்கிள் கரெக்கிட்டா இருக்கு !!

அ.மு.செய்யது said...

//வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்.//

ஜெயா டிவில பப்லு நடத்துறாரே !! அந்த சவாலா டீச்சர் ??

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
பின்னூட்டங்களை காணோமே!
மக்கள் ரொம்ப பிஸியாகிட்டாங்க போல!
//

நாங்க இருக்கோம் தல....

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா//

கொஞ்ச‌ம் கொய‌ப்ப‌மா கீதே !!//

பாட்டிப்பா!

குடந்தை அன்புமணி said...

//gayathri said...
அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம்

adada ippadi pesa enaku thonama pochi aniku//

???

Rajeswari said...

பாவம் ஹீரோ..இப்படி அவன கக்ஷ்டப்பட விட்டுடீங்களே ரம்யா.. சரி சரி எப்படியாவது சேர்த்து வச்சுடுங்க.அவங்க வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு..

தொடரை எதிர்பார்த்து..

ரசனைக்காரி

Prabhu said...

ஹல்லோ என்ன எங்க வீட்டுக்குள்ளே அத்து மீறி வந்ததும் இல்லாமல் அதிகமா பேசறே நீ." இதுக்குத்தாண்டி நான் அப்பவே சொன்னேன் வாசல் கதவை மூடி வையின்னு. கேட்டியா, பொம்பளை பிள்ளைங்களை வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனா எனக்கே அந்த அவஸ்த்தை வரும்னு எதிர் பார்க்கலை."//////////////



லூசாப்பா நீயு!

மந்திரன் said...

என்னது கதை முழுவதும் ஒரு ஆணாதிக்க வாடை வருது .. ..

இல்லை ... நான் சொல்ல வந்தது .. அதாவது .. ஹீரோ ராஜா ..கஷ்டம் ....

முடியல ..முடியல ...
எல்லாம் அந்த நாய் படுத்துற பாடு ...

எனக்கும் நாய் என்றால் கொஞ்சம் ( நெறைய ) பயம் ...

சாரா வை கொஞ்சம் தட்டி சாரி திட்டி வைக்கவும் ...

கதையை நல்ல விதமாக முடியுங்க தாயி ....

( ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங் )

ஆளவந்தான் said...

//
ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம்.
//
நெஜமாத்தான் சொல்றியா :)

ஆளவந்தான் said...

//
கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா"
//
அதான் அம்மா

நசரேயன் said...

பதிவை முழசா படிச்சதாலே என்ன பதில் சொல்லனுமுன்னு மறந்து போச்சி

நசரேயன் said...

//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா. ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம்.//
ரெம்ப பெரிய விஷயம் தான்

நசரேயன் said...

//
என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை நீ வந்தா சின்னு உன்னை நல்லா கடிச்சி வெச்சிடும். சாராவின் குரலில் இருந்து அவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை நன்கு அறிய முடிந்தது .//
என்னைய திட்டுற மாதிரியே இருக்கு

Dr N Shalini said...

ஹாய் ரம்யா மேடம், வில் டூ லிவ்வை வந்தடைந்துவிட்டேன்:)

RAMYA said...

//
Dr. N. Shalini said...
ஹாய் ரம்யா மேடம், வில் டூ லிவ்வை வந்தடைந்துவிட்டேன்:)
//

வாங்க வாங்க உங்கள் வரவிற்கு மிக்க நன்றி!!

gayathri said...

குடந்தைஅன்புமணி said...
//gayathri said...
அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம்

adada ippadi pesa enaku thonama pochi aniku//

???



ithelam sariya papengale

gayathri said...

ஆளவந்தான் said...
//
கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா"
//
அதான் அம்மா


u mean mummy

Vijay said...

இம்புட்டு ஜாலியான காமெடியான ஒரு காதல் கதையைப் படித்ததே இல்லை.

Hats Off to you Ramya :-)

ஆளவந்தான் said...

//
gayathri said...

ஆளவந்தான் said...
//
கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா"
//
அதான் அம்மா
u mean mummy
//
No..no.. i meant Mother :)

Unknown said...

// ஜில் என்று ஒரு காதல் / மூன்றாம் பகுதி //


வந்துட்டேன்....... வந்துட்டேன்.......


// காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !! //



ஆமாங்கோவ்....!! இல்லீனா சோன்பப்புடி தீந்துபோயிருமுங்கோவ்......!!!!!



// பங்க்கீர்பவர்கள் //


இதுல இது வேறையா ......


// கதாநாயகன் : ராஜா //


யாரு அந்த பெட்ரமாஸ் தலையனா......???

// கதாநாயகி : காஜூல் //


வெளியில விசாருச்சதுல ... நெம்ப சப்ப பிகராமா .....????



// கதாநாயகியின் தங்கை: சாரா ///



ஓ சாரா.... ஓ சாரா....


நீ என்ன மாருதி ஆல்டோ கீரா....




// வீட்டுச் செல்லம் : சின்னு //


பட்டார் பன்னா.....?? ஜாம் பன்னா.....???


// கதாநாயகியின் அம்மா : கல்யாணி ///


வாங்க பீர் மாமியா.......

இது என்ன தலையில சிலேப்பி கொண்ட .....



// கதாநாயகியின் அப்பா : மனோ //



வாங்க வாஷ் பேச்சின் மண்ட மாமனாரே..........



// பாட்டி : மந்தாஹினி //


ம்ம்க்க்ம்.....!!!! பேர பாரு..... !!! சங்கூதுற வயசுல .... மந்தாஹினி........

மனசுல பெரிய நாட்டிய பேரொழி பத்திமினின்னு நெனப்பு.......




// வேகமாக வெளியே வந்தவங்க, யாரு தம்பி, புதுசா இருக்கே! //


ஏங்கெழவி ..... பழசா இருந்தா டான்ஸ் ஆடி காட்டுவியோ......???




// ஏன் எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க. //


இல்லியே ... எல்லாருமும் தனி ... தனி ... சேருல தான ஒக்காந்திக்காங்க.....!!!!




// ஆனா ஒருத்தர் மூஞ்சியும் சரி இல்லை! ///



ஓஓவ்......!!!! நீ பெரிய ஐஸ்வர்யா ராயி.....!!!! இங்க இருக்குறவங்க மூசிய பத்தி பேசுற நீயி.......!!!!



// நம்ம கிட்டே விஷயம் என்னான்னு மனோ கண்டிப்பா சொல்லவே மாட்டான். நாம்பளே நேரா கேட்டுடலாம். //


உனக்கு சோறு போடுறதே பெரிய விஷியம்....!!!!!!



// யாருப்பா நீ?? உன்னை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே? //



பாத்திருந்தா கடுச்சு வெச்சிருப்பியாக்கும்......!!!!!!


// என்ன விஷயம்?? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? //


ஸ்ஸ்... அப்பா ........ வயசான காலத்துல......... கம்முனு இரு கெழவி ......



// பாட்டி என்னை ஆசிர்வதிங்க. ///


ஓஒ... அட்ரா சக்க...... அட்ரா சக்க......



// உங்களைப் பார்த்தால் சாட்சாத் மகாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க. //



அடங்கொன்னியா..... இந்த அளவுக்கு எறங்கி வந்திட்டியே தம்பி....!!! பரவால அடுச்சுடு.......!!!



// பாட்டிக்கு ஒன்னும் புரியலை, என்னடா காலிலே வந்து விழரே!! பரீட்ச்சை ஏதாவது எழுதப்போறியா?? மொதல்லே சொல்லு நீ யாரு?? //


ஏய் கெழவி....!!!! வயசான காலத்துல உனக்கு நையாண்டி வேற.....!!!!! நல்ல துப்புகெட்ட குடும்பமடா சாமி....!!!!!



// கிழிஞ்சிது இவங்களுக்கு காது கேக்காதா? அடபாவமே நான் காலிலே விழுந்தது அநியாயத்துக்கு வீணா போயுடுச்சே!! ///


அடங்கொன்னியா...!!! அப்பரரம் எதுக்கு அத கெழவிக்கு காத்து....!!! தம்பி அதுல ஈயத்த காச்சி ஊத்து.....!!!!!




// கடவுளே இதென்ன சோதனை??" //


சத்திய சோதனை........



// என் பெயர் ராஜான்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு. //


சேரி .... ராணி ன்னு சொல்லிபோடு.....!!!! ஓஒ... தப்பா போயிருமா.......????



// "ஏண்டா மனோ ஏன் ஒரு மாதிரி முழிச்சிகிட்டு உக்காந்து இருக்கே? ஏதாவது பெரிய பிரச்சனையா?? //



ஆமாங்கோ கெழவி.....!!! உங்க தவப் புதல்வன்...... கல்லாவுல இருந்து எட்டனாவ திருடிக்கிட்டு போயி கம்பரகட்டு வாங்கி தின்னுபுட்டாராம்....!!! அதுக்குத்தான் உங்க மருமவ கொளம்பு சீவகொட்டையில அடி போட்டு நேம்பிகிட்டு இருக்குது.....



// அதான் எல்லாரும் சேர்ந்து பேசறீங்களா? சொல்லுடான்னா?? " என்று தன மகனைப் பார்த்து பாட்டி கேட்டாங்க. ///


அட...... ம்ம்ம்ம்ம்ம்ம்.....!! யாருயா இந்த பிஞ்சு போன கெழவிய இந்த லிஷ்ட்டுல சேத்துனது........!! ரம்யாக்கா.... உங்குளுக்கு மனசாட்சியே இல்லையா........??



// ஆமாம்மா இது ஒரு பெரிய பிரச்சனை, நான் ஐநாசபை கூட்டி தீர்வு காணனும். //


அடேய் பீங்கான் மண்டையா.... அந்த செத்த கெழவிக்கிட்ட உனக்கு என்னடா காமடி
வேண்டி கெடக்குது .......!!!!!



// வாசக் கதவை மூடி வையுங்கன்னு பல தடவை சொல்லியும் யாரும் கேக்கலை. //


டே தம்பி... நா அன்னைக்கே சொல்லுல ... இந்த ஆளு உன்ன நாயா விட கேவலமா நெனைப்பான்னு......!!! இப்ப பாரு.....



// " என்ற கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. //


ச்ச... ச்ச....!!! நீங்க அசிங்க அசிங்கமாகொட திட்டுங்க பீர் மாமியார்....!! நம்மப பய சொரனகெட்ட பய...!!! எதும் மனசுல வெச்சுக்க மாட்டாங்கோவ்.....!!!!



// உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. //



ஓஓவ்.....!!!! இதுல இது வேறையா.......????



// எனக்கு கூட இந்த அங்கிளை பார்த்தா பிடிக்கலை. சரியான நேரத்துலே சரியான மாடுலேசன்னோட போட்டுக் கொடுத்துவிட்டாள் சாரா! //



சாரா.... வாழ்கையில ஒரு அருமையான வீடு வேலகாறன நீ மிஸ் பண்ணுற....!!! அப்புறம் பின்னாடி நெம்ப பீல் பண்ணுவ.......!!!!


// நம்ப சின்னுவை நாய்ன்னு சொன்னாரு. " //


ஓஒ.....!!! மாப்ள சார்.... , கல்யாணத்துக்கு அப்புறம் அத .... நாயின்னு சொல்லாதீங்க..... சின்ன அம்முனி கோவிச்சுக்குவாங்க...!!! வேணுமின்னா கொரங்குன்னு சொல்லுங்க.....



// கொஞ்ச நேரம் வாயை மூட்ரயா? பெரியவங்க பேசும் போது உனக்கு இங்கே என்ன வேலை?? போ உள்ளே. அதிகப் பிரசங்கி. நான்தான் பேசிகிட்டு இருக்கேன் இல்லே, உனக்கு ஏன் அவ்வளவு ஆவேசம் வருது. உள்ளே போ, சொன்னா கூட போகாமல் இங்கேயே நின்னுகிட்டு ஏதாவது உளறிகிட்டே இருக்கே. போடி உள்ளே" என்றார் கோவத்துடன் கல்யாணி. //



அப்புடி சொல்லுங்க பீர் மாமியாரே.......!!!!!



// அத்தை ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க, பின்னால் இவங்களை வச்சே பல காரியங்களை சாதிச்சுக்கணும். என்று ஒரு மணகனக்கு ராஜாவுக்கு. //



அடேய்...!!! அடடேய்....!!! கோமுட்டி தலையா.....!!! மாமியாலையே நீ கரெக்ட் பண்ணுறியா...!!! வேணாமுடா தம்பி...... கெழவி பொல்லாதது....!!! அல்லகட்டி கடுச்சு வெச்சுபோடும்......!!!!!




// பாருங்கப்பா! அம்மா என்னை அந்த அங்கிள்க்கு முன்னாடி திட்டறாங்க. ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை. இப்போ எனக்கு ரொம்ப இன்சல்டா இருக்கு. //



எனுங்கம்முனி லாரா... ச்சு...த்து... சாரா.....!! அப்போ அந்த அங்கிளுக்கு பின்னாடி திட்டலாமா?????




// என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை நீ வந்தா சின்னு உன்னை நல்லா கடிச்சி வெச்சிடும். சாராவின் குரலில் இருந்து அவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை நன்கு அறிய முடிந்தது //




இல்லீங்கோ அம்முனி.....!!! நீங்களும் பெரிய பிசாசுதான்..............