Monday, July 20, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 2

நம் வலை நண்பர்கள் திடீர் என்று தோன்றும் கிரிக்கெட் மைதானம்!!


பங்கேற்பவர்கள்
==============
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்

விளையாடுபவர்களின் நிலைப்பாடு
================================

அம்பயர்
=======ஆஸ்திரேலியா அணியில் விளையாடுபவர்களின் நிலைப்பாடு (ஆங்கிலத்தில் எழுதினதுக்கு மன்னிக்க)

கேப்டன்: Ricky Ponting
துணை கேப்டன்:Michael Hussey

Michael Hussey (Opening batsman), Matthew Hayden (Opening batsman), Adam Gilchrist (Keeper), Michael Clarke (middle order batsman), Simon Katich (Batsman). Andrew Symonds (All Rounder), Shane Watson (All-rounder), Brad Hogg - (All Rounder), Brett Lee (Bowler), Nathan Bracken (Bowler), Stuart Clark (Bowler)


அம்பயர்
=====
Steve Buckner (West Indies)

துணை கேப்டன் மைதானத்துக்குச் செல்லுமுன் க்லௌஸ் சரியாக உள்ளாதா என்று சரி பார்க்கிறார்.

நான் லவ்டேல் மேடிகிட்டே பேசிகிட்டே திரும்பினதும்! நம்ம அ.மு.செய்யது!

ஹாய் ரம்யாக்கா!! நீங்க எப்போ வந்தீங்க?? உங்களுக்கு விவரமே தெரியாதா? வழக்காமா ஆடறவங்க இல்லாததால, புதுசா ஆட எங்களை எல்லாம் வரசொல்லிட்டாங்க!

ஆனா எங்களைப் பத்தி அவங்களுக்கு (கிரிக்கெட் வாரியம்) விவரம் தெரியாததால எல்லாரும் பயப்படறாங்க.!! அதனால ஆட்டம் ஆரம்பிக்க இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்...... இதைச் சொன்னா வெளியே கலவரமாகிப் போகும்னு எல்லாரும் பயப்படறாங்க!!

நான் பயத்துடன்.. அய்யய்யோ...! இவ்ளோ பிரச்சன இருக்கா இங்க....?

ஆமாம்க்கா! நம்ப கேப்டனுக்குகூட இன்னும் எங்களை எல்லாம் தெரியாது. இனிமேல்தான் அறிமுகப் படுத்தபோறாங்க!

ஒ அப்படியா.....??

லவ்டேல் மேடி குறுக்கிட்டு .....) அடங்கொன்னியா....... இந்த அநியாயத்த எங்க போய் சொல்றது.....!! தேனுங் அம்முனி .... நா சொன்னதுல உங்குளுக்கு நம்பிக்க இல்லியா......?? மருவுடியும் போயி அத... ஒரு கொளந்த புள்ளைகிட்ட கேக்குரீங்கோ......??

(சையதுக்கு கோபம் சூடேறுகிறது....!! மேடியை முறைக்கிறார்...!! )

மீண்டும் மேடி...!!! ஊட்டுல....... மம்....... மம் ........... சாபுட்டுகிட்டிருந்த கொளந்தைய அப்புடியே கூட்டியாந்துட்டாங்கோ அம்முனி ............. !!

வரும்போதுதேன் ரெண்டு பாக்கிட்டு டைகர் பிசுகட்ட முளுங்கீட்டு

வந்திருக்குரானுங் ........!! இன்னுமு.... எந்த நேரத்துல எந்த முட்டாய கேப்பான்னு தெரியாம நாங்களே பயுந்துகிட்டு இருக்குரோமுங்க்கோவ்....... ....!!! அங்க பாருங்... முளிக்குற முளிய......!! திருவிழாவுல பலூன திருடுன பய மாதிரி....!!!

மேடி..... சைய்யதிடம் .... ஏனுங் கொலந்தபுள்ள சார்....!! (முணுமுணுத்தல்: நேரமுடா சாமி.....) உங்குளுக்கு எத்தன பாகிட்டு பிசுகோத்து வேணு... எத்தன முட்டாய் வேணுமின்னு மொதவே சொல்லீடிங்கனா... அங்க நம்ம பய போத்தனூர் பொன்னுசாமி இருக்குரானுங் ... அவன்கிட்ட சொல்லி வாங்கியாரச் சொல்ரமுங் .....!!

வெளையாட்டு ஆரம்பிச்சதுக்கு அப்பறமா கேட்டீங்கனா ..... பொன்னுசாமி ஒரு மாதிரியான ஆளுங்க........ கலத்த புடுச்சு கடுச்சு வெச்சுபுடுவானுங்....!!! ஆமாங்.... இப்பவே சொல்லிபோட்டனுங்.....!! (சையது காதில் ரகசியமாக : இங்க பாரு தம்பி... இந்தக்காவ நம்பி பாகிட்டுல இருக்குற முட்டாய வெளியில எடுத்துராத....!! என்ன புருஞ்சுசுதா....)

என்ன மேடி ... சையது காதுல முணுமுணுக்குரிங்க....... !!!

அது ஒன்னுமில்லீங்க்கோவ்....!! இந்த அக்கா நெம்ப நல்லவிங்க.... வல்லவிங்க..... நாலெலுத்து படுச்சவிங்க..... ன்னு சொல்லி
வெச்சேனுங்.....!! நாளையிலிருந்து ... தம்பிய உங்ககிட்டயே டூசன் வரச் சொன்னனுங்கோவ்......!!!!

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மேடி...!! நான் டியூஷன் எல்லாம் எடுக்கறதில்ல.....!!!

ச்சேரிங்க்கா ....!! இந்த கொளந்த புள்ளைகிட்ட என்ன பேச்சு உங்குளுக்கு....!! நீங்க போய்... சித்த கோருங் அப்புடி.....!!!

செய்யது கடுப்பாகி! மேடி.... திஸ் இஸ் டூ மச்....!! என் பேர டேமேஜ் பண்றதே வேலையா போச்சு உங்குளுக்கு.....!!! என்னோட பிரெண்டு வணங்காமுடி வரட்டும்..... அப்பறம் கவனிச்சுக்கறேன் உங்களைய....!!!!

ஓஓஒவ்வ்.......!! இவுங்க ரெண்டு பேரும் .... பெரிய .... கோப்பெருஞ்ச்சோழரு.....பிசிராந்தையாரு.....!! இவுங்க ரெண்டு பேரும் வந்தா .... நாங்க அப்புடியே பயுந்து ஓடிப்போயிருவம்பாரு...!!

நெம்ப ஓவரா பேசுநீனா... சோப்புல இருக்குற முட்டாய புடுங்கீருவன் பாத்துக்கோ....!! அப்பறம் ... குப்பற படுத்துகிட்டு அழுதாலும் ... முட்டாய்
கெடைக்காது ...!!

சைய்யது குறுக்கிட்டு ...... வேண்டாம் நான் அப்புறம் சும்மா இருக்க மாட்டேன். என் கிட்டே வம்பு வச்சுக்காதீங்க........

தம்பி... வேண்டா... நீ ரொம்ப தம் கட்டி பேசற... இது நல்லதுக்கில்ல பாத்துக்க....!!

ராகவன் அண்ணா குரல் குறுக்கிடுகிறது.... லவ்டேல் மேடி, செய்யது இங்கே வாங்க... சீக்கிரமா வாங்க அங்கே என்ன பஞ்சாயத்து! ரம்யா நீ இன்னும் போகலையா?

ஐயோ ராகவன் அண்ணா கூப்பிடறாங்க போங்கப்பா இரெண்டு பெரும். சண்டை வேண்டாமே! ஓகே ஆல் தி பெஸ்ட். சரி அப்புறமா பார்க்கலாம்.. என்று நான் நடையை கட்டினேன் என் தோழிகளை நோக்கி...... !!!

டோணி ராகவன் அண்ணாவை நெருங்கி பேச ஆரம்பித்தார், நீங்க தானே ராகவன்?

ஆமா டோணி நான்தான் ராகவன் இங்கே என்னைத்தான் அம்பயரா நியமிச்சிருக்காங்க, உங்களுக்கு தமிழ் தெரியுமா?

எனக்கு கொன்ச்சம் கொன்ச்சம் தமிழ் தெர்யும் ராகவன். நீங்க தமிழ்லேயே சொல்லுங்க என்று தடால் அடியா டோனி ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்!

ஒ! அப்ப நல்லதா போச்சு. இது தமிழ்நாடு தமிழ் பேசினா எல்லாருக்கும் பிடிக்கும்.....குட்....

சரி இப்போ ஆடப்போரவங்களை நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தலாமா?

யா! ப்ளீஸ்...

இவர் பெயர் Mr.ஜீவன். இவர்தான் துணை கேப்டன். அருமையா ஆடும் திறமை வாய்ந்தவர் வேகப் பந்து வீச்சாளர். நிறைய விளையாடி பல முறை வெற்றியும் பெற்று,பலவிதமான பரிசுகளையும் வென்றிருக்கிறார். ரொம்ப அமைதியானவர்.

ஒ ஜீவன் வணக்கம்! வாழ்த்துக்கள்!! இந்தியாவிற்காக விளையாடப் போறீங்க. நல்லா விளையாடுங்க. உங்களை இந்த விளையாட்டு பெரிய லெவல்லே கொண்டு செல்ல வேண்டும். ஆல் தி பெஸ்ட்.

நன்றிங்க, நீங்க நல்லா தமிழ் பேசறீங்களே! உங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன். என்னை வாழ்த்தியதியத்திற்கு மிக்க மகிழ்ச்சிங்க.

ஓகே ஜீவன் வாழ்த்துக்கள்!!

இவர் பெயர் வால்பையன். இவர் சுழர் பந்து வீச்சாளர். அருமையான பௌலர். நிறைய விளையாடி இருக்கிறார். பரிசுகளும் வென்றிருக்கிறார். ரொம்ப ஜாலி டைப்.

வாட் வால்பையன்? எனக்கு புரியல, என்னா பேரு இது? ஒன் மினிட் ராகவன் இவரு பேரு என்ன? மறுபடியும் சொல்லுங்க.

அய்யய்யோ!! இவருக்கு நான் எப்படி வால்பையனோட பேர புரிய வெக்கறது!!

(லவ்டேல் மேடி குறுக்கிட்டு ரகாவன் அண்ணாவிடம் ) எச்சூஸ்மி ..........!!!! ஏனுங்ணா.....நா வேணுமுனா சார்கிட்ட கொஞ்ச வெலாவாரியா எடுத்து சொல்லுட்டுமுங்களா...??

மேடி அவுருக்கு உங்க பாஷ புரியாது....!!!

அண்ணோவ்..... என்ன இப்புடி சொல்லிபோட்டிங்கோ .....!!!! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தோணி சாரு ... நம்ம கவண்டம்பாளையத்துக்கு பொண்ணு பாக்க வந்திருந்தாரு..... அப்போ நம்ம காரமட ரங்கசாமிகிட்ட சாரு நெம்ப நேரம் நம்ப கோயம்புத்தூரு பாசையில பேசீட்டிருந்தாருங்ணோவ்......!!!

இஸ் இட்......!!!

நீங்க வேணுமின்னாலும் பாருங் ......!!!

அட... க்க்ம்ம்.... வணக்கமுங் தோணி சார் ....!!!! நா இதுக்கு முன்னாடி உங்களைய டெல்லி மீட்டிங்குல மீட் பண்ணுனது....அப்பறம் இப்பதானுங் சார் பாக்குறன் .....!!!!

வாட் .............??

(ராகவன் அண்ணா கடுப்பாகி....) யோவ் மேடி! வள..வளன்னு பேசாம ... வால் பையன இன்ரொடியூஸ் பண்ணுயா....!!!

செரிங்ணா......!!!!

சார்..... நல்லா பாத்துக்குங்க சார்........ !! இந்த காம்ப்ளக்ஸ் மண்டையன் பேருதானுங் வால் பையன்.......!!!

வால் பையன் கடுப்பாகி... யோவ் மேடி......!! உன்னோட வேலைய பாருயா..... !! நீயெல்லாம் இன்ரொடியூஸ் பன்னுலைன்னு யாருய்யா அழுதா.....!! அவருக்கு யார சொன்னாலும் விளையாடி முடியற வரைக்கும் யாரையுமே தெரியப்போறதில்ல.......!! போய் அந்தா பக்கமா நில்லு....!! நானே என்னோட பேர அவரு புரிஞ்சிக்கலைன்னு வருத்தமா இருக்கேன்....!! இதுலே நீ வேறே.....!!! உன் பேர சொன்னா மட்டும் கிட்டே வா....!!! புருஞ்சுதா.....???

லவ்டேல் மேடி கடுப்பாகி.... அடேய்..... A.....B....C...D.... மண்டையா......!! இவுரு பெரிய சல்மான்கான் மச்சா...... !! இவுருக்கு பேர கேட்டனையுமும் ..... " இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...." ன்னு பச்சக்குன்னு புருஞ்சுகோனுமா......!!!! யாருகிட்ட காட்டுற உன் டகால்டி வேலையெல்லா.....!! பிச்சுபுடுவ..... பிச்சு....!!!

இவர்களின் சண்டைகளுக்கு இடையே புகுந்து தோணி ஹே மேடி .... கூல் மேன்....!!

பாருங் சார்....!!! யென்ர நல்ல மனசு ... உங்குளுக்கு புரியுது....!!!! ஆனா.... இந்த பாப்கான் மண்டையனுக்கு மட்டு புரிய மாட்டேங்குது......!!!!

ஒரு வழியாக புரிந்து கொண்ட ஓகே .. ஓகே ...!! மேடி .... ஐ காட் யு... லீவ் திஸ் மேட்டர் ...!!.... ராகவன் சார்...........

லவ்டேல் மேடி கொஞ்சம் சும்மா இருப்பா. மீதி இருப்பவங்களை அறிமுகப் படுத்தனும்.

இவர் பெயர் Mr.நசரேயன். இவருதான் நம்ப அணியோட ஓபனிங் பேட்ச்மேன். நிறையா சிக்ஸ்சர் அடிப்பாரு. அதுதான் இவரோட தனித் திறமை. பல வெற்றிகளைக் கண்டவர், பல பரிசுகளை வென்றவர். ரொம்ப ஜாலி டைப்.

ஒ வணக்கம் நசரேயன்! ரெண்டு பேரும் கை கொடுத்துக்கறாங்க.

நன்றி Mr.டோணி

இவர் பெயர் Mr.குடுகுடுப்பை. வேகப் பந்து வீச்சாளர். நிறைய மாட்சுலே ஹாட்ரிக் அடிச்சிருக்காரு. வெற்றிகளும், பரிசுகளும் நிறைய பெற்றிருக்கிறார். ரொம்ப அமைதியானவர்.

ஒ வணக்கம் குடுகுடுப்பை! பெயரும் புது மாதிரி இருக்கு! ஆல் தி பெஸ்ட்.. உங்க பேரு உச்சரிக்க நல்லா இருக்கு.

நன்றி Mr.டோணி!

இவர் பெயர் Mr.உருப்படாதது அணிமா(ஆல் ரௌண்டர்). பந்து சுழற்றுவதிலும் பேட் சுழற்றுவதிலும் மிக வல்லவர். கை தேர்ந்த ஆட்டக்காரர். ரொம்ப ஜாலி டைப்.

வாட் இவரு பேரும் எனக்கு புரியலை. தமிழ்லே என்னா மீனிங் இவரு பேருக்கு.

அதா மேட்ச் முடிஞ்சவுடனே அவரே உங்ககிட்டே சொல்லுவாரு.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. என்னா உப்புடாத அணிம்மா!!

நன்றி Mr.டோணி.

உப்புடாத அணிம்மா இல்லே டோணி.. உருப்படாதது அணிமா!

ஓகே Mr.ராகவன் நெக்ஸ்ட்

இவர் பெயர் Mr.ஜமால்(விக்கெட் கீப்பர்). நல்ல சாதூரியமா ஆடக் கூடியவர். இவரும் ரொம்ப ஜாலி டைப்தான். கண் இமைக்கும் நேரத்தில் ரன் அவுட் பண்ணிடுவாரு. சுறு சுறுப்பான விக்கெட் கீப்பெர். இவரை பார்த்தாலே பேட்ஸ் மேன்களுக்கு கொஞ்சம் பயம்தான்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.ஜமால்!

நன்றி Mr.டோணி!!

இவர் பெயர் Mr.அப்பாவி முரு(ஆல் ரௌண்டர்). பேட் மற்றும் பந்து வீசுவதில் இவருக்கு நிகர் இவரேதான். கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் விளையாட்டு சேர்ந்த கலவைதான் இந்த அப்பாவி முரு. நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். வெற்றிகள் பல இவரை தேடி வந்திருக்கின்றன. பரிசுகளும்தான்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.அப்பாவி முரு!

நன்றி Mr.டோணி!!

இவர் பெயர் Mr.லவ்டேல் மேடி(ஆல் ரௌண்டர்). பீல்டிங் செய்வதில் இவரை அசைச்சுக்க முடியாது. குறும்பு அதிகம். ஆனா விளையாட்டுன்னு வந்திட்டா விளையாட்டுதான் முக்கியம்னு நினைப்பார். ரொம்ப ஜாலி டைப். இவரு கிட்டே பேசினீங்கன்னா பொழுது போவதே தெரியாது!

அண்ணாவ அப்படி இல்லே யோசிச்சு சொல்லுங்க...

என்ன மேடி உங்க பெயரே புதுசா இருக்கே..

எங்க அப்பத்தா வச்ச பேருங்கோவ்.. நெம்ப பயப்படாதீங்ககோவ். நாங்க நல்லா விளையாடி இந்தியா கண்டிப்பா ஜெஇச்சுடும்ங்ககோவ்.

ஆல் தி பெஸ்ட்.. Mr.லவ்டேல் மேடி!

நெம்ப நன்றிங்கோவ்.... Mr.டோணி!

இவர் பெயர் Mr.அ.மு.செய்யது - இவரும் நம்ப அணியோட ஓபனிங் பேட்ச்மேன். எங்க டீம்லே இவருதான் ரொம்ப ஜூனியர். கவாஸ்கருக்கு சச்சின் எப்படியோ அப்படி எங்களுக்கு இவரு. நல்லா கிரிக்கெட் விளையாடும் திறமை பெற்றவர். இவரோட பேட்டிங் தெரமையிலெ பந்து வீசரவங்க பயந்துதான் வீசுவாங்க. மீதி நீங்களே பாருங்களேன்.
வெற்றிகள் பல இவரை தேடி வந்திருக்கின்றன. பரிசுகளும்தான்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.அ.மு.செய்யது!

நன்றி Mr.டோணி!

இவர் பெயர் Mr.அண்ணன் வணங்காமுடி(ஆல் ரௌண்டர்). எங்கேயோ வேடிக்கை பார்க்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா பாய்ந்து பந்தை பிடிக்கரதுலேயும், பேட் பிடிக்கிற அழகுலேயும் எதிராளிங்க நிலை குலைந்து போவாங்க. கொஞ்சம் குறும்பு கொஞ்சம் ஆட்டம் கலந்த கலவை இவரு. இவரோட விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கும் பாருங்களேன். இவரும் செய்யது போலவே நம்ப அணியில் ஜூனியர் ஆட்டக்காரர். வெற்றிகளும் பரிசுகளும் இவருக்கு சர்வ சாதாரணம்.

ஒ வெரி நைஸ்! ஆல் தி பெஸ்ட்.. Mr.அண்ணன் வணங்காமுடி. உங்க பேரு கூட ரொம்ப வினோதமா இருக்கு.

நன்றி Mr.டோணி!

ராகவன் எல்லாரையும் பற்றி ரொம்ப பெருமையா அறிமுகப் படுத்திட்டீங்க. இன்னும் சிறிது நேரத்துலே ஆட்டம் ஆரம்பமாகப் போகுது. பீல்டிங் செக் பண்ணனும். மீதி அப்புறம் பேசலாம். . ..

மீண்டும் சந்திப்போம்
ரம்யா....43 comments :

லவ்டேல் மேடி said...

மீ தி பஸ்ட்டு.......

सुREஷ் कुMAர் said...

நம்மூரு பாஷ பட்டைய கெலப்புரின்களே எப்படிங்க்கா..

सुREஷ் कुMAர் said...

//
ஓஓஒவ்வ்.......!! இவுங்க ரெண்டு பேரும் .... பெரிய .... கோப்பெருஞ்ச்சோழரு.....பிசிராந்தையாரு.....!! இவுங்க ரெண்டு பேரும் வந்தா .... நாங்க அப்புடியே பயுந்து ஓடிப்போயிருவம்பாரு...!!
//

மேட்ச் ஆரமிக்கரதுக்கு முன்னமே ஆளாளுக்கு பத்தவேச்சுபோடுவிங்கபோலஇருக்கே அம்முனி..

सुREஷ் कुMAர் said...

//
சண்டை வேண்டாமே!
சரி அப்புறமா பார்க்கலாம்.. என்று நான் நடையை கட்டினேன் என் தோழிகளை நோக்கி...... !!!
//
நாரதர்வேலைய நைசா பண்ணிட்டுவந்திட்டிங்கனு சொல்லுங்க..

सुREஷ் कुMAர் said...

//
நீங்க தமிழ்லேயே சொல்லுங்க என்று தடால் அடியா டோனி ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்!
//
நல்லா பாருங்க.. பின்னாடி யாராச்சும் டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பாங்க..

सुREஷ் कुMAர் said...

//
நன்றிங்க, நீங்க நல்லா தமிழ் பேசறீங்களே! உங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன். என்னை வாழ்த்தியதியத்திற்கு மிக்க மகிழ்ச்சிங்க.
//
அப்டியே அவரையும் பிளாக் எழுத கூப்டுங்ணோவ்..

सुREஷ் कुMAர் said...

//
மீதி அப்புறம் பேசலாம். . ..மீண்டும் சந்திப்போம்
//
ஓ.. சந்திப்போமே..

सुREஷ் कुMAர் said...

ஆட்ட நாயகர்களின் அறிமுகங்கள் கலக்கல்..

சூரியன் said...

:)

சூரியன் said...

சரி எதுக்கு அம்பயர் வீரர்கள கேப்டனுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணுறாரு?

நசரேயன் said...

கிரிக்கெட் பட்டைய கிளப்புது.. தொடர் நல்லா போகுது, கும்மி அடிக்க முடியாத நிலை.. இடுகைகளில் கும்மியை கும்மவும்

அப்பாவி முரு said...

//இவர் பெயர் வால்பையன். இவர் சுழர் பந்து வீச்சாளர். அருமையான பௌலர். நிறைய விளையாடி இருக்கிறார். பரிசுகளும் வென்றிருக்கிறார். ரொம்ப ஜாலி டைப்.//

ஆமாமா, பாலை எங்க குத்துவார், எந்தப்பக்கம் திருப்புவார்ன்னு யாருக்குமே தெரியாது!!!

அப்பிடி ஒரு ஸ்பின்...

நட்புடன் ஜமால் said...

துணை கேப்டன் மைதானத்துக்குச் செல்லுமுன் க்லௌஸ் சரியாக உள்ளாதா என்று சரி பார்க்கிறார்]]

ஜீவன் அண்ணா கலுக்குறார் ...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கலக்கல்

நட்புடன் ஜமால் said...

பகுதி இரண்டு துவங்கியாச்சா ...

ஆ.ஞானசேகரன் said...

//அங்க பாருங்... முளிக்குற முளிய......!! திருவிழாவுல பலூன திருடுன பய மாதிரி....!!!//

எப்படி இப்படியெல்லாம்...

நட்புடன் ஜமால் said...

நம்ம அ.மு.செய்யது!ஹாய் ரம்யாக்கா!! நீங்க எப்போ வந்தீங்க?? உங்களுக்கு விவரமே தெரியாதா? வழக்காமா ஆடறவங்க இல்லாததால, புதுசா ஆட எங்களை எல்லாம் வரசொல்லிட்டாங்க!ஆனா எங்களைப் பத்தி அவங்களுக்கு (கிரிக்கெட் வாரியம்) விவரம் தெரியாததால எல்லாரும் பயப்படறாங்க.!! அதனால ஆட்டம் ஆரம்பிக்க இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்...... இதைச் சொன்னா வெளியே கலவரமாகிப் போகும்னு எல்லாரும் பயப்படறாங்க]]


வந்துட்டாறய்யா விபரம் சொல்ல ...

ஆ.ஞானசேகரன் said...

//இவர் பெயர் Mr.அப்பாவி முரு(ஆல் ரௌண்டர்). பேட் மற்றும் பந்து வீசுவதில் இவருக்கு நிகர் இவரேதான். //

அப்படிங்களா

ஆ.ஞானசேகரன் said...

//மீண்டும் சந்திப்போம்
ரம்யா....//

மீண்டுமா???????

'இனியவன்' என். உலகநாதன் said...

கலக்கலா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

தேனுங் அம்முனி .... நா சொன்னதுல உங்குளுக்கு நம்பிக்க இல்லியா......?? மருவுடியும் போயி அத... ஒரு கொளந்த புள்ளைகிட்ட கேக்குரீங்கோ....]]


அதெப்டீங்க உங்கள நம்புறது ... :)

ஜீவன் said...

மேட்ச் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள எதுக்கு முந்திரி கொ்ட்டையாட்டம்
ஜீவன் க்ளவுஸ் மாட்டிகிட்டு நிக்குறாரு? அதும் அவர் ஒரு பவுலர் வேற ?

ஜீவன் said...

ரொம்ப நேரம் இப்படி பேசிகிட்டே இருந்தா நானும் வாலு வும் எஸ்கேப் ஆகிடுவோம்!
நாங்க எங்க போவோம்னு எங்களுக்குத்தான் தெரியும்!!!

நட்புடன் ஜமால் said...

அங்க பாருங்... முளிக்குற முளிய......!! திருவிழாவுல பலூன திருடுன பய மாதிரி.]]


ஹா ஹா ஹா

செய்யதையா ...

நட்புடன் ஜமால் said...

நாங்க எங்க போவோம்னு எங்களுக்குத்தான் தெரியும்!!!]]


எல்லோருக்கும் தெரியும்ண்ணே!

நட்புடன் ஜமால் said...

கலத்த புடுச்சு கடுச்சு வெச்சுபுடுவானுங்..]]


செம டெரர்ராக இருக்கே

நட்புடன் ஜமால் said...

ஓஓஒவ்வ்.......!! இவுங்க ரெண்டு பேரும் .... பெரிய .... கோப்பெருஞ்ச்சோழரு.....பிசிராந்தையாரு.....!! ]]


counter அட்டாக் பலம் பலம்.

நட்புடன் ஜமால் said...

அறிமுகங்கள் டாப்பு.


பட்டைய கிளப்புங்க ...

தமிழ் பிரியன் said...

கலக்கல் ரம்யாக்கோவ்!

R.Gopi said...

//சாபுட்டுகிட்டிருந்த கொளந்தைய அப்புடியே கூட்டியாந்துட்டாங்கோ அம்முனி ............. !! வரும்போதுதேன் ரெண்டு பாக்கிட்டு டைகர் பிசுகட்ட முளுங்கீட்டு வந்திருக்குரானுங் ........!! இன்னுமு.... எந்த நேரத்துல எந்த முட்டாய கேப்பான்னு தெரியாம நாங்களே பயுந்துகிட்டு இருக்குரோமுங்க்கோவ்....... ....!!! அங்க பாருங்... முளிக்குற முளிய......!! திருவிழாவுல பலூன திருடுன பய மாதிரி//

லவ்டேல் மேடி அட் ஹிஸ் பீக்......

//ஓஓஒவ்வ்.......!! இவுங்க ரெண்டு பேரும் .... பெரிய .... கோப்பெருஞ்ச்சோழரு.....பிசிராந்தையாரு.....!! இவுங்க ரெண்டு பேரும் வந்தா .... நாங்க அப்புடியே பயுந்து ஓடிப்போயிருவம்பாரு...!! நெம்ப ஓவரா பேசுநீனா... சோப்புல இருக்குற முட்டாய புடுங்கீருவன் பாத்துக்கோ....!! அப்பறம் ... குப்பற படுத்துகிட்டு அழுதாலும் ... முட்டாய்
கெடைக்காது ..//

யக்கோவ்.......... இது அல்டிமேட்..........

//சார்..... நல்லா பாத்துக்குங்க சார்........ !! இந்த காம்ப்ளக்ஸ் மண்டையன் பேருதானுங் வால் பையன்//

ஆ....ஹா....... எவ்ளோ நாளா இந்த "கொலைவெறி"..... வால்பையன பழிவாங்கறதுக்கு...

//மீதி அப்புறம் பேசலாம். . .. மீண்டும் சந்திப்போம்//

வாங்கோ......வாங்கோ.......... சீக்கிரம் வாங்கோ.......... வீ தி வெயிட்டிங்.......

Suresh Kumar said...

கிரிக்கெட் படு சுவராஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது

வால்பையன் said...

ஜீவன் கேரக்டராவே மாறிட்டாரா!?

Vidhoosh said...

:)) நல்ல கிரிக்கெட்.

வால்பையன் said...

காம்ப்ளக்ஸ் மண்டையன்
A.....B....C...D.... மண்டையா
பாப்கான் மண்டையனுக்கு


இன்னைக்கு எனக்கு டேமேஜ் கம்மியாயிருக்கு!

நன்றி!

அ.மு.செய்யது said...

பாரபட்சமில்லாம எல்லாரும் டேமேஜ் ஆயிருக்கோம்.

லவ்டேல்மேடி லீட் ரோல் பட்டய கெளப்புது.....

போன பாகத்த விட இந்த பாகம் செம்ம ஃபாஸ்ட் பிக் அப்...........

அ.மு.செய்யது said...

//Mr.ஜீவன். இவர்தான் துணை கேப்டன். அருமையா ஆடும் திறமை வாய்ந்தவர் வேகப் பந்து வீச்சாளர்.//

ஆமா வேகப்பந்து வீச்சாளர் ஏன் கிளவுஸ் மாட்டிருக்கார் ??

ஒரு வேள இந்திய அணி தோக்குற நேரம், வெங்கடேஷ் பிரசாத் வந்து ஆடி அலப்பற பண்ணுவாரே !!

அந்த மாதிரியா ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!

S.A. நவாஸுதீன் said...

இன்னைக்கு செய்யதும், வால்பையனும் மாட்டிகிட்டாங்கலாக்கும்

RAMYA said...

அனைவருக்கு வணக்கம், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!

//
துணை கேப்டன் மைதானத்துக்குச் செல்லுமுன் க்லௌஸ் சரியாக உள்ளாதா என்று சரி பார்க்கிறார்.
//

க்லௌஸ் கொடுத்துவுடன் ககைகளுக்கு சைஸ் சரியா இருக்கான்னு செக் பண்ணி பார்க்கறாரு!

RAMYA said...

செய்யது இப்போ சநதேகம் தீர்ந்து போச்சா :))

அபுஅஃப்ஸர் said...

எப்போதான் ஆட்டத்தை ஆரம்பிக்குவாங்க‌


ந‌ல்ல‌ இன்ட்ரோட‌க்ஸ‌ன் ர‌ம்யா மேட‌ம்
க‌ல‌க்க‌லோ க‌ல‌க்ல‌க்ல‌க‌ல‌க‌க‌கா

டாஸ் போட்டாச்சா

யாரு பேட்டிங்க்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஜெகநாதன் said...

ம்ம்ம்.. அடிச்சி ஆடுங்க!!
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

எம்.எம்.அப்துல்லா said...

//அம்பயர்=======ராகவன் நைஜீரியா

//

எனக்கு இந்த செலக்‌ஷந்தான் ரொம்ப புடிச்சு இருக்கு :)