Wednesday, July 15, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 1

நம் வலை நண்பர்கள் திடீர் என்று தோன்றும் கிரிக்கெட் மைதானம்!!

பங்கேற்பவர்கள்
===========
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்

இவர்களுடன் விளையாடுபவர்கள்
=======================

வால்பையன், நசரேயன், குடுகுடுப்பை, உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி

அம்பயர்
=======
இராகவன்நைஜீரியா

எப்படியோ இன்னைக்கு அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்தாச்சு. நம் தோழிகள் மிகவும் அருமையான தோழிகள். ஏன்னு கேளுங்க! என்னோட நீண்ட நாள் ஆசையான நேரில் கிரிக்கெட் காண்பது என்ற ஆசையை பூர்த்தி செய்து விட்டார்கள். பத்து பேருக்கு டிக்கெட் வாங்கிட்டாங்க. பத்திலே நானும் ஒன்னு. ஒரே சந்தோஷ அலைகள் ஆர்ப்பரிக்க எப்போடா மைதானத்துக்கு போவோம்னு ஒரே கற்பனை. ஒரு வழியா எல்லாரும் ஒரு இடத்திலே சந்தித்தோம். யாருமே தாமதமாக வரலை. ஏன்னா அந்த அளவிற்கு கிரிக்கெட் மோகம் எல்லாருக்கும். அதுவும் டிக்கெட் வாங்கி பார்க்கிறதுன்னா சும்மாவா?

ஒரு முக்கியமான விஷயம் எனக்கு கிரிகெட் ரொம்ப பிடிக்கும். ரூல்ஸ் எல்லாம் கேக்கப்பிடாது :))

ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். கிரிக்கெட் மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மைதானத்தில் எல்லாரும் கும்பலா நின்று கொண்டிருந்தார்கள். நம்மவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து ஒவ்வொருவர் பெயரையும் உச்சரிக்காலாம் என்று பார்த்தால்.. அட இது யாரு நம்ம ப்லாக் நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க.

நிஜம்மாவா!! இவங்க எல்லாம் நம்ம ப்லாக் நண்பர்கள்தானா!! என்று மறுபடியும் உறுதிப் படுத்திக் கொண்டேன்.

ஆமாம்!! ஜீவன், வால்பையன், நசரேயன், உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார். அட இவரு இங்கே என்ன பண்றாரு? நாம எங்கே வந்திருக்கோம்? இவங்க எல்லாம் எப்படி ஒண்ணா இருக்காங்க? ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலே வேலை செய்யறாங்க. இங்கே எப்படி!! ஒண்ணும் புரியலையே! எப்பவுமே அப்படிதான் ஒண்ணுமே புரியாது. புரிஞ்சாதான் அதிசயம் போங்க.

சரி, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். ஆனா பாருங்க இவங்க மட்டும் எல்லாரும் ஒண்ணா வந்திருக்காங்க; என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை. ம்ம்ம் மனதில் ஒரே கோவமா வந்திச்சு. எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஏம்மா இப்படி குறுக்காலே ஓடறே, அவங்க விளையாட ஆரம்பிக்கப் போறங்கன்னு சொல்லிக் கொண்டே அங்கே இருந்த காவலாளிங்க என்னை தொடர்ந்து ஓடி வந்தாங்க. அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே. ஒரே ஓட்டாமா ஓடிட்டேன். யார் சொல்லியும் கேட்கலை. ஒரு வழியா ராகவன் அண்ணா கிட்டே போய் நின்னுட்டேன். அண்ணா எப்ப வந்தீங்க? இவங்க எல்லாம் எப்போ வந்தாங்க? ஏன் இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஏன் இந்திய அணியினர் அணிந்திருக்கும் சீருடை போட்டிருக்காங்க?

ஏம்மா இவ்வளவு வேகமா பேசறே? இரு இரு நான் எல்லாம் உனக்கு சொல்றேன். ஆனா இப்போ அதுக்கு நேரம் இல்லே. விளையாட்டு ஆரம்பமாகப் போகுது. நீ மொதல்லே உன்னோட இடத்திலே போய் உக்காரு. விளையாட்டு முடிஞ்சவுடனே பேசுவோம். போம்மா! என்று என்னை அனுப்பவதிலேயே குறியா இருந்தார்.

பக்கத்திலே நின்னு விவாதம் செய்து கொண்டிருந்த அண்ணன் வணங்காமுடி ரம்யாக்கா நாங்களே குழப்பத்துலே இருக்கோம். எந்த முடிவுக்கும் வரமுடியலை. யாரு என்ன விளையாடப் போறோம்னு தெரியலை. அதுனாலே அப்புறமா நாங்க சொல்றோம் இப்போ நீங்க கிளம்புங்கக்கா.

இல்லே அண்ணன் வணங்காமுடி! யாரு சொல்லி நீங்க எல்லோரும் விளையாடப்போறீங்க? ஒரே புரியாத புதிரா இருக்கே!

ஐயோ ரம்யாக்கா எல்லாரும் வரதுக்குள்ளே போய்டுங்க என்று சற்றே அழுத்தமாக கூறினாரு அண்ணன் வணங்காமுடி.

பக்கத்துலே நண்பர் ஜீவன் நின்னுகிட்டு இருந்தாரு. அதெல்லாம் சரி நீங்க எப்போ இங்கே வந்தீங்கன்னு நண்பர் ஜீவன் கிட்டே கேட்டேன். அதுக்கு நண்பர் ஜீவன் ரம்யா அது ஒரு பெரிய கதை இப்போ சொல்ல முடியாது, நீங்க போய் உங்க இடத்திலே உக்காருங்க. இப்போ விளையாட்டு ஆரம்பம் ஆகப்போகுது என்றார்.

அருகே நின்று கொண்டிருந்த நண்பர் வால்பையனிடம் என்னப்பா ஒரு போன் பண்ணி கூட சொல்லலை? என்று நான் கேட்க அதுக்கு வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. அப்படியே லவ்டேல் மேடியை வர்ற வழியிலே காரிலே ஏத்திகிட்டு வந்திட்டோம். இங்கே வந்து பார்த்தா கிரிக்கெட் ஆடனும்னு சொல்றாங்க. அதெல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே நிறுத்திட்டேன். பழக்கம் விட்டு போச்சுன்னு சொன்னாலும் கேக்கலை. சரி பார்க்கலாம்னு வந்துட்டோம், வந்தா இங்கே எல்லாருமே நம்ப நண்பர்கள்தான் இருக்காங்க. விவரம் கேட்க்க கூட நேரம் இல்லே. சரி விளையாடி முடிச்ச உடனே வெவரம் கேட்டுக்கலாம்னு நின்னுகிட்டு இருக்கேன். ஆமா நீங்க இங்கே எங்க? அட நான் கிரிக்கெட் பாக்க வந்தேன். இங்கே வேறே என்னா பாக்க முடியும்? சினிமாவா பார்க்க முடியும்? கேள்வி எல்லாம் சரியாதான் இருக்கு, நான் கேட்ட கேள்விக்குதான் இன்னும் யாருகிட்டே இருந்தும் பதில் வரலை.

இதன் நடுவே நம்ப நசரேயன் எங்களை கடந்து செல்கிறார். நசரேயன் நீங்க எப்போ வந்தீங்க?

ரம்யா! வணக்கம் நல்லா இருக்கீங்களா? டிக்கெட் அனுப்பி உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னாங்க, நான்தான் கிரிக்கெட் நல்லா விளையாடுவேன் இல்லையா! அதான் உடனே வந்துட்டேன்.

இங்கே பாருங்க யாரு என்னா விளையாடனம்னு இனிமேல் தான் யோசிச்சி ஒரு முடிவுக்கு வரணும். நீங்க நல்ல கேள்வியா கேட்டிருக்கீங்க. ஆனா பாருங்க பதில் சொல்ல நேரம் இல்லே.

என்னா! இனிமேல் தான் யோசிக்கப் போறீங்களா? அடபாவிங்களா? நான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கேன்.

ரம்யா! இங்கே பாருங்க எல்லாருமே காசு கொடுத்துதான் டிக்கெட் வாங்கி இருக்காங்க. ரந்து பண்ணாமே அங்கே போய் உக்காருங்க. வாங்க குடுகுடுப்பை போலாம். ரம்யா கிட்டே அப்புறமா விவரம் பேசலாம். அவங்க கோவிச்சுக்க மாட்டாங்க.

அட குடுகுடுப்பையாரே! நீங்க எப்போ வந்தீங்க? எல்லாரும் வந்திருக்கீங்க ஆனா யாரும் என் கிட்டே சொல்லவே இல்லே?

நசரேயனுக்கும் எனக்கு சேர்த்துத்தான் டிக்கெட் போட்டு அனுப்பினாங்க. அதான் அவசரமா ஓடி வந்துட்டோம். இது ஒரு நல்ல சான்ஸ் இல்லையா? அதான் உங்ககிட்டே சொல்ல நேரம் இல்லே. தப்பா நினைச்சுக்காதீங்க ரம்யா. நசரேயன் வரச்சொல்லி அவசரப் படுத்தராறு. நம்ப எல்லாருமா அப்புறமா பேசுவோம். நீங்க உங்க இடத்துக்கு போங்க. நான் போறேன்

அப்படியா? இருங்க எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ உங்களை எல்லாம் நல்லா கவனிச்சுக்கறேன்

இடையே அணிமா நீங்களுமா? ஆமாம் ரம்யா எனக்கும் டிக்கெட் அனுப்பினாங்க அதான் நானும் உடனே கிளம்பி வந்துட்டேன். எனக்கு ஆடத் தெரியும்னு ஒரு முறை ராகவன் அண்ணா கிட்டே சொல்லி இருந்தேன். அண்ணா கச்சிதாமா போட்டு கொடுத்திட்டாரு. திடீர்னு ஏற்பட்ட மாற்றம் விரிவான வெவரம் இனிமேதான் தெரியும்.

அப்படியா இருங்க அதுக்கு முன்னாடி நானே விசாரிக்கிறேன். திரும்பினால் ஜமால் அட என்னாப்பா நீங்களுமா??

என்ன ரம்யா? நீ இங்கே என்ன பண்றேப்பா? ஆட்டம் ஆரம்பமாகப் போகுது. இடத்திலே போய் உக்காருப்பா, நான் ஆட்டம் முடிந்தவுடனே பேசறேன். ஆமா அக்கா எங்கே? சுரே எங்கே? தனியாவா வந்தே?

அக்கா எல்லாம் வரலை நான்தான் என்னோட பிரண்ட்ஸ் கூட வந்தேன்.

போ போய் மொதல்லே உன்னோட இடத்திலே உக்காரு, ஏற்கனவே இங்கே ஒரே குழப்பமா இருக்கு நீ வேறே நடுவிலே குழப்பாதே.

நான் என்னாப்பா குழப்பறேன்? நீங்க எல்லாரும்தான் ப்லாக் எழுதறதை வீட்டு இங்கே வந்து குழப்பறீங்க? நாங்க எவ்வளவு காசு போட்டு டிக்கெட் வாங்கினோம் தெரியுமா?? கடைசிய்லே பார்த்தா எனக்கு இதுவரை ஒண்ணுமே புரியலை?

ஹேய், நான் அப்புறமா எல்லா விவரமும் சொல்றேன் இப்போ போய் உக்காருப்பா!

குறுக்கே நம்ப சகோதரர் முரு ரம்யா அக்கா சீக்கிரம் போங்க! அங்கே பாருங்க எங்க கேப்டன் வராரு.

யாரு உங்க கேப்டன்?

டோணி என்ன உங்களுக்கு கேப்டனைத் தெரியாதா?

ஐயோ அவருதான் கேப்டன்ன்னு தெரியும் ஆனா நீங்க எல்லாம் இருக்கீங்களே அதான் எனக்கு ஒண்ணுமே புரியலை?

அவரு ஏற்கனவே ரொம்ப கோபத்திலே இருக்காரு. நீங்க வேறே யாரு சொல்லியும் கேக்காம மைதானத்துலே வந்து நிக்கிறீங்க! அக்கா நான் அப்புறமா எல்லா வெவரமும் சொல்றேன்.

என்னாப்பா எல்லாரும் ஒரே மாதிரி பேசறீங்க? எனக்கு மொதல்லே பதில் சொல்லியாகனும் இப்போ! நீங்க எல்லாம் ஏன் இங்கே வந்தீங்க ? இதுக்கு பதில் சொல்லிடுங்க நான் போய்டறேன்.

ஐயோ அக்கா அதெல்லாம் பேச நேரம் இல்லை. அடுத்த அணியும் வந்திடுச்சு, நீங்க கிளம்புங்க என்றார் முரு

(லவ்டேல் மேடி உள்ளே என்ட்ரி ஆகிக் கொண்டிருக்கும்போது ... திடீரெண்டு ஒருவன் அருகில் வந்து.......) சார் .... வெறும் 499 ரூவாய் மட்டுமே.....!!!

(அவனை உத்து பார்த்துவிட்டு) அடேய்..... நீயா.....??? அடங்கொன்னியா.....!!!! அந்த டண்டணக்கா டி.வி யோட டிஷ் ஆண்டனா விளம்பரத்துக்கு வர்ற போண்டா வாயன்தான நீயி......!!!!

என்னது ...?? என்னோடது வெறும் 500 சேனல்......

அடங்கொ.......!! அடேய் ஹிப்போபோடமஸ் மண்டையா.. அப்புடியே அல்லகட்டி ஒதச்சனா...... காரமடைக்கு அந்தபக்கமா போய் குப்பற உளுந்துருவ பாத்துக்க........ (போண்டா வயன் தலை தெறிக்க ஓடுதல்..) ( பேசிக்கொண்டே திரும்புகையில் தீடீரெண்டு ரம்யா அக்காவை வழியில் காண்கிறார் மேடி) .

அட சாமீ ...... ரம்மியா அக்கோவ்.....!!!! நீங்ளா.....?? யென்ட்ர கண்ண யென்ட்ரனாலயே நம்ப முடியில.....!! நெசந்தானா......??? தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......???

அந்த ட்ரவுசர் மண்டையனுங்க எங்களையத்தா கூட்டீட்டு வந்தானுங்கன்னு பாத்தா.... உங்களையுமும் வெளையாடறதுக்கு கூட்டீட்டு வந்துருக்கானுங்க ........??

அட லவ்டேல் மேடி , நீங்க எல்லாம் எப்படி வந்தீங்கன்னு கேக்கறேன் யாரும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க. நீங்களாவது சொல்லுங்களேன்.

அக்கோவ்... நாங் நெம்ப பிசி...... !! டயத்த வேஸ்ட்டு பண்ணாதீங்கோ.... உங்குளுக்கு என்ன வேனுமுங்.......???

என்னது .... பிஸ்......பிஸ்ஸா.....??

ம்ம்க்கும்........ இதுல இது வேறையா.....!! பிசிங்கோவ்....... பிசி......!!

(முனுமுனுத்தல் : வெடி போட்டாகோடா கேக்காதாட்டிருக்குது......) ரம்யாக்கோவ் இப்புடி காத கொஞ்சம் கிட்ட கொண்டாங்....!!

அந்த கொடுமைய ஏனுங்கா கேக்குரீங்கோ....... !! வந்தவிங்கல்ல ஒரு ஆளைத் தவற ... எல்லாருக்குமும் கொரங்கு காசசாலும், கொசு இருமலும் வந்திருசுங்கோவ்....!!!!! அப்பறம் தலைவருங்கோ நெம்ப யோசிச்சுபாத்போட்டு..... , நம்ப ப்லாக்குதேன் நெம்ப பேமசாச்சே ......!!

ஒரு சலக்கா ... எங்கப்புச்சி தென்னந் தோப்புல இருந்து தென்ன மட்டைய பொறுக்க சொன்னத பதிவா போட்ருந்தேனுங்.....!! அத இந்த பெட்ரமாஸ் தளயனுன்க தப்பா படுச்சுபோட்டு ... நானேதோ நெம்ப பெரிய பேட்ஸ்மேன் ன்னு, நெனச்சுபோட்டு ... இங்க வெலையாட்ரதுக்கு இழுத்துகிட்டு வந்துட்டானுங்க.....!!!

எனக்கு ஒண்ணும் தெரியாது பாருங்....!! அப்பத்தேன் நம்ப வடக்பட்டி ராமசாமி சொன்னே, பக்கத்துல சும்மிங் பூல்ல நயந்தாராவோட "பில்லா" பார்ட்- 2 பட சூட்டிங்கின்னு...... அப்புடியே மட்டைய தூக்கிகிட்டு ஓடியாந்திட்டேனுங் .....!!!

ஐயோ எல்லாருக்குமே உடம்பு சரி இல்லையா? அட பாவமே! அப்போ இந்திய அணியிலே நான் யாரையும் பார்க்க முடியாதா? நான் வந்ததே அவங்களை எல்லாம் பார்க்கத்தானே? அட கொடுமையே?

அட தென்னுக்கா இப்புடி கேட்டுபோட்டீங்கோ.......??? அட நான்குளுமும் நம்ப இந்தியா டீமுக்குத்தேன் ஆட போரமுங்..... !!

உங்குளுக்கு நெம்ப டவுட்டா இருந்தா..... அங்க வடக்கோட்டுல பாருங்......., நம்ப மூலையூட்டுகார் பொண்டாட்டி அருக்கானிக்கா கோந்துட்டு இருக்குது ........ நீங்குளுமும் போய் சித்த அப்புடி கோந்துகிட்டு நாங்க எப்புடி வெலையாடுரோமின்னு பாருங்....!!!!!

சரி லவ்டேல் மேடி நான் என்னோட இடத்துக்கு போறேன். மேட்ச் முடியற வரைக்கும் இருக்கிறேன். லவ்டேல் மேடி எல்லார் கிட்டேயும் சொல்லுங்க. யாரும் என்னைய மறந்திடக் கூடாது சரியா.

அது சரி வர்ற வழியிலே வால்பையனோட உங்களையும் அள்ளிகிட்டு வந்ததா சொன்னாங்க. நீங்க ஷூட்டிங்க்ன்னு டூப் விடறீங்க...

ஹி ஹி ஹி நிசமாளுந்தான் சொல்றேங்க்கா... நீங்க வேணா நம்ப வடக்பட்டி ராமசாமிகிட்டே கேட்டு பாருங்கங்கோவ்....

எக்கா யாரோ கூப்பிடுதாக, யாரு தொ வரீனுங்க...

தொடரும்
ரம்யா........

74 comments :

அண்ணன் வணங்காமுடி said...

me the first

அண்ணன் வணங்காமுடி said...

சூப்பர், நல்ல டீம் செலேச்சன்

அண்ணன் வணங்காமுடி said...

டிக்கெட் வாங்கிட்டாங்க //

ஐயோ பாவம்

அப்பாவி முரு said...

கிரிக்கெட் தொடர் ஆரம்பமா?

நட்புடன் ஜமால் said...

padichittu vaaren

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஆமாம்!! ஜீவன், வால்பையன், நசரேயன், உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார்.//

இவுங்க அம்புட்டு பேரும் ஒரே இடத்திலா? மைதானத்த 'மைதா' ரேஞ்சுக்கு ஆக்கிடுவாங்களே

ஷ‌ஃபிக்ஸ் said...

//எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். //

ஒரே குழப்பமாயிருக்கும் வந்தவங்களுக்கு இது என்ன கிரிக்கெட்டா, இல்ல ரன்னிங் ரேஸ் நடக்கப்போவுதான்னு

Suresh Kumar said...

/ஆமாம்!! ஜீவன், வால்பையன், நசரேயன், உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார்.//

இவுங்க அம்புட்டு பேரும் ஒரே இடத்திலா? மைதானத்த 'மைதா' ரேஞ்சுக்கு ஆக்கிடுவாங்களே /////////////////////////

ரிப்பீட்டு ...........

sakthi said...

superbbbbbbbbbbbb

sakthi said...

லவ்டேல் மேடி பாஷை பக்கா

ஷ‌ஃபிக்ஸ் said...

//இங்கே வந்து பார்த்தா கிரிக்கெட் ஆடனும்னு சொல்றாங்க. அதெல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே நிறுத்திட்டேன்.//

அடடா, நீங்கள் மட்டும் தொடர்ந்து விளையாடியிருந்தால்....

sakthi said...

வால்பையன், நசரேயன், குடுகுடுப்பை, உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி

எல்லோருடைய ஆட்டமும் அருமை

ஷ‌ஃபிக்ஸ் said...

//நான் என்னாப்பா குழப்பறேன்? நீங்க எல்லாரும்தான் ப்லாக் எழுதறதை வீட்டு இங்கே வந்து குழப்பறீங்க?//

அதானே எங்கே போனாலும் தொழில கவனமா இருப்பாங்களே

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்ல கல கலன்னு இருக்கு உங்க பதிவு.

Anonymous said...

ஆஹா!

ப்லாக்கர்ஸ் கிரிக்கெட்-டா

கெட்டுச்சி போ ...

Anonymous said...

ஏனுங்கோ அம்ணீ - காசு குடுத்துப்போட்டு டிக்கெட்டு வாங்கினியல்ல, அங்கன உக்காந்து பாக்க வேண்டியது தானே

நாங்களே இங்கே வெயிலு தாங்க முடியாம இருக்கோம்

போங்க அம்ணீ அங்கன போய் குந்துங்கோ

Anonymous said...

யாருமே தாமதமாக வரலை\\


மெய்யாலுமா!

Anonymous said...

எனக்கு ஆடத் தெரியும்னு ஒரு முறை ராகவன் அண்ணா கிட்டே சொல்லி இருந்தேன்\\


எதுப்பா அணிமா ...

Anonymous said...

அடேய்..... நீயா.....??? அடங்கொன்னியா.....!!!! அந்த டண்டணக்கா டி.வி யோட டிஷ் ஆண்டனா விளம்பரத்துக்கு வர்ற போண்டா வாயன்தான நீயி......!!!! ]]


ஹா ஹா ஹா

கலக்கல்

அ.மு.செய்யது said...

ஓ அப்ப நானும் களத்துல இருக்கேனா ??

ஹைய்..ஜாலி !!!

Anonymous said...

தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......??? ]]


ஹா ஹா ஹா

கவுண்ட்டர் மணி வந்துட்டாரா

Anonymous said...

அத இந்த பெட்ரமாஸ் தளயனுன்க தப்பா படுச்சுபோட்டு]]

ஹா ஹா ஹா

யப்பா வரிக்குவரி சிரிப்பலை ...

அ.மு.செய்யது said...

// ஹிப்போபோடமஸ் மண்டையா. //

ஹா ஹா...அப்படியே லவ்டேல்..

இன்னும் நிறைய எதிர்பாக்குறோம்.

காப்பர் வயர் மண்டையா

ஸ்பீட் பிரேக்கர் மண்டையா

லேசர் டிஸ்க் மண்டையா..

அவர் ஒரு நவீன பின்மண்டைத்துவ வாதி.

Anonymous said...

அங்க வடக்கோட்டுல பாருங்......., நம்ப மூலையூட்டுகார் பொண்டாட்டி அருக்கானிக்கா கோந்துட்டு இருக்குது]]

ஆஹா! வட்டார பாச விளையாடுதுங்கோ அம்ணீ

வால்பையன் said...

//எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //


ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தருவாங்கன்னு பார்த்தா இங்கே கொண்டியாந்து விட்டுடாங்க! பக்கத்துல நம்ம லவ்டேல் மேடி வேற இருக்கார், கவுண்டமணி கையில மாட்டின செந்தில் மாதிரி ஆகப்போறேனே இன்னைக்கு!

Anonymous said...

அவர் ஒரு நவீன பின்மண்டைத்துவ வாதி.]]


இது டாப்பு ...

அ.மு.செய்யது said...

செகண்ட் ஆஃப் பொறி பறக்குது...

Anonymous said...

கலக்கல் துவக்கம்

கலை கட்டுது

எங்கட கண்ண கட்டுறதுக்கு முன்னே

சீட்ல போய் உட்கார்ந்து கமெண்ட்ரி சொல்லுங்கோ

Vidhoosh said...

இம்புட்டு பேரும் அங்கிட்டு போயி, இன்னா செய்ய போறீங்க!!! என்ன கிரிக்கெட்டா... கெட்ட காலம்டா....
enjoy

RAD MADHAV said...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரம்யா அவர்களுக்கு அனைவர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். :-)

RAD MADHAV said...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரம்யா அவர்களுக்கு அனைவர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். :-)

S.A. நவாஸுதீன் said...

ஆமா கிரௌண்ட்ல எல்லாரும் கிட்டயும் பேசுனீங்க. நம்ம செய்யது எங்க போயிருந்தார். அவர்கிட்ட கேக்களியாக்கும்

S.A. நவாஸுதீன் said...

அடேய்..... நீயா.....??? அடங்கொன்னியா.....!!!! அந்த டண்டணக்கா டி.வி யோட டிஷ் ஆண்டனா விளம்பரத்துக்கு வர்ற போண்டா வாயன்தான நீயி......!!!! என்னது ...?? என்னோடது வெறும் 500 சேனல்......அடங்கொ.......!! அடேய் ஹிப்போபோடமஸ் மண்டையா.. அப்புடியே அல்லகட்டி ஒதச்சனா...... காரமடைக்கு அந்தபக்கமா போய் குப்பற உளுந்துருவ பாத்துக்க........ (போண்டா வயன் தலை தெறிக்க ஓடுதல்..) (

யப்பா தாங்கல. ஆட்டத்துக்கு நடுவுல விளம்பரமா. சிரிச்சி வயிறு வலிக்குதுப்பா

S.A. நவாஸுதீன் said...

பிசிங்கோவ்....... பிசி......!! (முனுமுனுத்தல் : வெடி போட்டாகோடா கேக்காதாட்டிருக்குது......) ரம்யாக்கோவ் இப்புடி காத கொஞ்சம் கிட்ட கொண்டாங்....!!

Excellent, amazing, அசத்துட்டீங்க போங்க.

S.A. நவாஸுதீன் said...

நம்ப மூலையூட்டுகார் பொண்டாட்டி அருக்கானிக்கா கோந்துட்டு இருக்குது ........ நீங்குளுமும் போய் சித்த அப்புடி கோந்துகிட்டு நாங்க எப்புடி வெலையாடுரோமின்னு பாருங்....!

கலக்கல் ரம்யா.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... ஆ . . .ரம்பம்... அருமை...

இராகவன் நைஜிரியா said...

இரண்டாவது நடுவர் யார் என்று சொல்லவில்லையே...? நானே இரண்டு பக்கமும் ஓடி போய் நிற்க வேண்டுமா?

இராகவன் நைஜிரியா said...

// அதுவும் டிக்கெட் வாங்கி பார்க்கிறதுன்னா //

என்னாது இது டிக்கெட் வாங்கித்தான் எல்லோரும் பார்ப்பாங்க...

இராகவன் நைஜிரியா said...

// இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார் //

என்னாது இது வம்பு... நடுவர் ஒரு டீம் ஆளுங்க கூட ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பு பேசினார் என்றால் வம்பு வந்துச் சேரும்..

நான் அங்கு டாஸ் போட நின்னுகிட்டு இருக்கேன்... மத்தவங்க எல்லோரும் இருக்காங்க.. அவ்வளவுதான்

இராகவன் நைஜிரியா said...

// ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலே வேலை செய்யறாங்க. //

ஓவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருக்காங்க அப்படின்னு சொல்லணும்... வேலைச் செய்யறாங்கன்னு நீங்களே எப்படி முடிவு எடுத்தீங்க...

இராகவன் நைஜிரியா said...

// மனதில் ஒரே கோவமா வந்திச்சு. //

கோவம் உடல் நலத்திற்கு கேடு...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணா எப்ப வந்தீங்க? இவங்க எல்லாம் எப்போ வந்தாங்க? ஏன் இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஏன் இந்திய அணியினர் அணிந்திருக்கும் சீருடை போட்டிருக்காங்க? //

ஒரே மூச்சில் விடாம எவ்வளவு கேள்வி கேட்பீங்க... இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எந்த நடுவரால் தான் பதில் சொல்ல முடியும்...

அதுவும் நம்ம ப்ளாக் ப்ரண்ட்ஸ் விளையாடும் (?) மேட்சில் நடுவரா நான் இருக்கும் போது இப்படியா கேள்விக் கணைகளால் வறுத்தெடுப்பது?

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் நீங்க எப்போ வந்தீங்க? ரம்யா! வணக்கம் நல்லா இருக்கீங்களா? //

அப்படியா கேட்டார்... இல்லையே... பூலன் தேவி.. ரம்..யா வணக்கம் என்று கேட்டதாகத்தானே ஞாபகம்..

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...
//எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //


ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தருவாங்கன்னு பார்த்தா இங்கே கொண்டியாந்து விட்டுடாங்க! பக்கத்துல நம்ம லவ்டேல் மேடி வேற இருக்கார், கவுண்டமணி கையில மாட்டின செந்தில் மாதிரி ஆகப்போறேனே இன்னைக்கு! //

வால் பையனை இந்த மாதிரி ஏமாற்றியதற்கு அண்ணன் என்ற முறையில் என்னுடைய கண்டனங்களை பதிவு செய்கின்றேன்..

Rajeswari said...

எனக்கு கிரிக்கெட் பிடிக்காதுன்னு நினச்சு என்னய கூப்பிட்டுட்டு போகலியா...வரம்போது சாக்லேட் வாங்கிட்டு வாங்க,,இல்லாட்டி அடம் பிடிப்பேன்

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நகைச்ச்சுவை இழையோடுகிற பதிவு...!
வெளுத்து வாங்கியிருக்கீங்க...!

எந்த இடத்தைக் குறிப்பிடுவதென்று தெரியவில்லை.

மொத்தத்தில் பதிவு நன்று...!

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா

வித்தியாசமான சிந்தனை

பதிவர்களின் கிரிக்கெட் விளையாட்டு

அபுஅஃப்ஸர் said...

//மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது/

மைதானம் என்னா குடமா தண்ணீரூற்றி வழிய‌

அபுஅஃப்ஸர் said...

//எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். /

பி.டி.உஷாவுக்கு போட்டியா ரா ரா ரம்யாவா

அபுஅஃப்ஸர் said...

//அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே/

நீங்க காற்றா?

ஜீவன் said...

சின்ன வயசில இருந்து இந்திய அணியில விளையாடனும்னு இருந்த பெரிய ஆசை ரம்யா மூலமா நிறைவேற போகுது! அதும் துணை கேப்டன் வேற! என்னை எப்படி ரம்யா விளையாட வைக்க போறாங்களோ? எனக்கே ரொம்ப ஆர்வமா இருக்கு! சீக்கிரம் அடுத்தபதிவ போடுங்க ரம்யா!

ஜீவன் said...

நம்ம ராகவன் அண்ணன் அம்பயரா இருக்கும்போது நமக்கென்ன கவலை ?
அவரோட சேர்த்து நம்ம டீம்ல பன்னெண்டு பேரு!

ஜீவன் said...

கோவை பாஷை கலக்கல் ரம்யா!!!

ஜீவன் said...

/// வால்பையன் said...

//எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. /////ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தருவாங்கன்னு பார்த்தா இங்கே கொண்டியாந்து விட்டுடாங்க! ////////


ட்ரிங்க்ஸ் ப்ரேக்ல எனக்கும்,வாலு க்கும் ட்ரிங்க்ஸ்ல ''சரக்க'' மிக்ஸ் பண்ணி கொடுக்கணும் ஆமா!!!!

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்லை அடிச்சிட்டு போறவன்

ஜெகநாதன் said...

ஒரே அலும்பு, அக்கிரமம், அக்குறும்பு, நக்கலு, ​நையாண்டி, எகத்தாளம், லூட்டியாவுல்ல இருக்குது?? வாங்கக்கோவ்... நம்ம வலைப்பக்கம் ஒரு எட்டு வந்து ​போட்டு ​போங்.

சூரியன் said...

மொக்க ஆட்டம் ரெடியா ..

நடத்துங்க ..
எப்டித்தான் அத்தனை பேருக்கும் உங்கள பார்த்து இப்படி “நீ மொதல்லே உன்னோட இடத்திலே போய் உக்காரு” சொல்ல தோணுதோ .. ஒருவேளை நெத்திலே எழுதிருக்கோ ?

லவ்டேல் மேடி said...

/// கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 1 ///


ஹே........ ஹே........ வந்துட்டேன்...... வந்துட்டேன்.........

// நம் வலை நண்பர்கள் திடீர் என்று தோன்றும் கிரிக்கெட் மைதானம்!! //


அடங்கொன்னியா......!! என்ன கொடும அப்புசிங்கோ இது........// பங்கேற்பவர்கள்
===========
கேப்டன்: டோணி //அப்போ டிக்கட்டு செம " போணி " ன்னு சொல்லுங்க ....

// துணை கேப்டன்: ஜீவன் //ஐயோ.... இவுரு நெம்போ நல்லவராச்சே.... !!!

// இவர்களுடன் விளையாடுபவர்கள் //


// வால்பையன் //


இந்த எக்ஸ்டென்சன் பாக்ஸ் மண்டையனுக்கு இங்க என்ன வேல......!!!
// லவ்டேல் மேடி//அட... நம்ப பேரு........ !! நெம்ப தேங்க்ஸ்ங்க அம்முனிங்கோவ்........!!!// செய்யது //அட .... கொளந்த புள்ளைங்களும் ஆட்டத்துல இருக்குதா..... ??

எடையில ... எடையில .... பிஸ்கோத்து வேணும் ..... பப்பர் முட்டாய் வேணுமின்னு அழுகாதே.....????
// நசரேயன், குடுகுடுப்பை, உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, அண்ணன் வணங்காமுடி ///ஓஓ...... !! பி . பி..... ( அட....... பிக் பிரதர்ஸ் ....) .....!!!

// அம்பயர்
=======
இராகவன்நைஜீரியா //அப்போ ஆட்டம் நெம்ப சிறப்பா இருக்குமுங்கோவ்......!!!! கவுஜ சொல்லியே எதிரி டீம.... துன்ண்ட காணாம் ... துணிய காணாமின்னு ஓட வெச்சுபுடுவாறே....!!!// எப்படியோ இன்னைக்கு அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்தாச்சு. //அடங்கொன்னியா ..... !! என்னைக்கு போயிருக்குறீங்க....??? இன்னைக்கு மட்டும் லீவு குடுக்குறதுக்கு.....!!!

// நம் தோழிகள் மிகவும் அருமையான தோழிகள். ஏன்னு கேளுங்க! என்னோட நீண்ட நாள் ஆசையான நேரில் கிரிக்கெட் காண்பது என்ற ஆசையை பூர்த்தி செய்து விட்டார்கள். பத்து பேருக்கு டிக்கெட் வாங்கிட்டாங்க. ///அதுதான கேட்டன்.... !!!!

லவ்டேல் மேடி said...

// ஒரு வழியா எல்லாரும் ஒரு இடத்திலே சந்தித்தோம். //


நெம்ப கஷ்ட்டம்....!!!


// யாருமே தாமதமாக வரலை. //இஸ்..... இட் ....குட் நைட்...........


// ஏன்னா அந்த அளவிற்கு கிரிக்கெட் மோகம் எல்லாருக்கும். //நம்பீட்டோம்.........


/// அதுவும் டிக்கெட் வாங்கி பார்க்கிறதுன்னா சும்மாவா? //இல்லையே..... காசு குடுத்துதான.......// ஒரு முக்கியமான விஷயம் எனக்கு கிரிகெட் ரொம்ப பிடிக்கும். ரூல்ஸ் எல்லாம் கேக்கப்பிடாது :)) //
ஆமாங்கோவ்... நெம்ப முக்கியமான விஷயமுங்கோவ்..... அவிக.. அவிக ஊரு கோயில் கல்வெட்டுல எழுதி வெச்சுக்கோங்கோவ்......!!!// ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். //


ஏனுங் அம்முனி... முன்னாடியே துண்டு போட்டு வெச்சிருந்தீங்களா....??

// கிரிக்கெட் மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. //


ஏனுங் அம்முனி.... அதேன்னோ பீர்'ஆ பொங்கி வழியரதுக்கு ...........

/// மைதானத்தில் எல்லாரும் கும்பலா நின்று கொண்டிருந்தார்கள். //அட... ரம்மியாக்கோவ்..... ஓடுங்...... ஓடுங்...... பொங்கலுமும்... சுண்டலளுமும்.... தராங்கலாமா.....!!!// அட இது யாரு நம்ம ப்லாக் நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க. //அட.... கண்டுபுடுச்சுபோட்டீங்களே .....!!


// நிஜம்மாவா!! இவங்க எல்லாம் நம்ம ப்லாக் நண்பர்கள்தானா!! என்று மறுபடியும் உறுதிப் படுத்திக் கொண்டேன். //கில்லி பாத்துகிட்டீங்களா ......??

// ஆமாம்!! ஜீவன், வால்பையன், நசரேயன், உருப்படாதது அணிமா, ஜமால், அப்பாவி முரு, லவ்டேல் மேடி, செய்யது, அண்ணன் வணங்காமுடி இவங்க எல்லார் கூடவும் நம்ப ராகவன் நைஜீரியா பேசிகிட்டு இருந்தார். //


" மைக் 1 ....... மைக் 2 ......... மைக் 3 ............ ! எல்லாரும் கிச்சன் பக்கமா டைனிங் ஹால் வந்துருங்க........!!! " இதத்தான் அவுரு அவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருந்தாரு......!!!


// அட இவரு இங்கே என்ன பண்றாரு? நாம எங்கே வந்திருக்கோம்? இவங்க எல்லாம் எப்படி ஒண்ணா இருக்காங்க? //அய்யய்யோ......!!! ரம்யா அக்காவுக்கு .... டவுட்டு வந்திருச்சே..... !! இனி விஜியசாந்தி ரேஞ்சுக்க்கு தொப்பி போட்டுக்கிட்டு விசாரனைங்குற பேருல மொக்க போட ஆரம்பிச்சுருமே......!!!!

// எப்பவுமே அப்படிதான் ஒண்ணுமே புரியாது. புரிஞ்சாதான் அதிசயம் போங்க. //


ம்ம்ம்... இப்புடித்தேன்... அடிக்கடி ... கன்பாம் பன்னீரனும் ....!!!


// என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை. //அட... உங்களைத்தா கமண்டரி போஸ்டுக்கு செலக்ட் பன்னீருக்குரோமுங் அம்முனி...!!!

நீங்க பண்ணுற கம்னடரியில ( மொக்கையில ) எதிர் நாட்டு டீமு ... தெருச்சு ஓடோனும் ....!!!


// எழுந்து மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். //


அத பாத்த மைதானத்துல இருந்த வீரர்கள் ( இன்க்ளூடிங் மீ ) எல்லாம் .... அய்யய்யோ நானில்லீங்கோ.......!!! நானில்லீங்கோ.......!!! ன்னு ... கிரவுண்ட உட்டு தெருச்சு ஓட ஆரம்பிச்சுட்டாங்கலாமே.....!!!! நெசமாலுங்களா அம்முனி.....??

லவ்டேல் மேடி said...

// ஏம்மா இப்படி குறுக்காலே ஓடறே, //


அம்முனி....... அப்போ நெடுக்கால ஓடுங்கோ ......

// அங்கே இருந்த காவலாளிங்க என்னை தொடர்ந்து ஓடி வந்தாங்க. //


நம்ப முடியல ... !!

// அவங்க கைக்கு நான் சிக்கவே இல்லே. //


நீங்கதான் பி.டி . உஷாவாச்சே......

// ஒரே ஓட்டாமா ஓடிட்டேன். //


தேனுங் அம்முனி... ரெண்டு ஓட்டமா ஊடமுடியாதா.....??


/// அண்ணா எப்ப வந்தீங்க? இவங்க எல்லாம் எப்போ வந்தாங்க? ஏன் இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஏன் இந்திய அணியினர் அணிந்திருக்கும் சீருடை போட்டிருக்காங்க? //டீச்சரக்கொவ் .... நீங்க எப்போ கட்டுரை போட்டியில சேந்தீங்கோ.....???// என்று நான் கேட்க அதுக்கு வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, //


கோண ...... கோனையாத்தான ....... வந்துருப்பாங்க....!!!

// என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //
ஏண்டா ..... ஓப்பன் சோர்ஸ் மண்டையா... !! நீயென்னோ ஜல்லியா.... அள்ளி போட்டு கொண்டாரதுக்கு ............???// அப்படியே லவ்டேல் மேடியை வர்ற வழியிலே காரிலே ஏத்திகிட்டு வந்திட்டோம் //அடங்கொன்னியா.........

// இங்கே வந்து பார்த்தா கிரிக்கெட் ஆடனும்னு சொல்றாங்க. //
பின்நென்னோ ... பம்ம்பரமா ஆடனுமின்னு சொல்லுவானுங்கோ.....!!!!


// தெல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே நிறுத்திட்டேன். பழக்கம் விட்டு போச்சுன்னு சொன்னாலும் கேக்கலை. //எதைய.... சரக்கடிக்கிரதையா....?? பொருந்த பொய்ய சொல்லுடா கார்ப்பரேசன் மண்டையா ..... !!!!


போயிட்டு வாரேனுங் அம்முனிங்கோவ்......!!!!

நேசமித்ரன் said...

எப்பூடி ?
ஒரே சிரிப்புதானுங்க பதிவு முழுக்க..
கலக்குரீங்க...!

வால்பையன் said...

//ஏண்டா ..... ஓப்பன் சோர்ஸ் மண்டையா... !! நீயென்னோ ஜல்லியா.... அள்ளி போட்டு கொண்டாரதுக்கு ............???//

நான் சொல்லல!
கவுண்டமணிகிட்ட மாட்டுன செந்தில் மாதிரி ஆகப்போறேன்னு இன்னும் எம்புட்டு டேமேஜ் இருக்குதோ!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

குடுகுடுப்பை said...

எனக்கு தெரியாமலேயே நான் கிரிக்கெட் வெளாடுறேனா

सुREஷ் कुMAர் said...

யக்கோவ்.. யக்கொவ்வ்வ்வ்.. யக்கொவ்வ்வ்வ்வ்வ்வ்..
கேக்குதா.. கூட்டம் அதிகமா இருக்குல்ல.. அதான் சத்தமா கூப்டு பாத்தேன்..

டிக்கட் வாங்கிட்டு போனிங்களே.. என்னகூப்டவே இல்லை பாத்திங்களா..
எனக்கும் உங்கமேல கோவம் கோவமா வருது..

சரி சரி.. மேட்ச் எனாச்சு.. சீக்ரமா வந்து சொல்லுங்க..

सुREஷ் कुMAர் said...

இதுபோன்ற பயங்கர டெரரான சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள்..

Anonymous said...

அருமை தோழி, நல்லா சிரிச்சேன்.

லவ்டேல் மேடியன்னா பகுதி ரொம்ப நல்லாயிருந்திச்சி

வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

ஒரு வழியா டிக்கெட் கிழித்து உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். //

அதை ஏங்க கிழிக்குறீங்க.... அதென்ன சினிமா டிக்கெட்டா?

ரம்யா! இங்கே பாருங்க எல்லாருமே காசு கொடுத்துதான் டிக்கெட் வாங்கி இருக்காங்க. ரந்து பண்ணாமே அங்கே போய் உக்காருங்க. வாங்க குடுகுடுப்பை போலாம். ரம்யா கிட்டே அப்புறமா விவரம் பேசலாம். அவங்க கோவிச்சுக்க மாட்டாங்க. //

நீங்க இவ்ளோ நல்லவங்களா?

அட சாமீ ...... ரம்மியா அக்கோவ்.....!!!! நீங்ளா.....?? யென்ட்ர கண்ண யென்ட்ரனாலயே நம்ப முடியில.....!! நெசந்தானா......??? தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......??? //

கவுண்டர் பாஷை விளையாடுதுங்கோ உங்களுக்கு.

மொத்தத்தில் நல்ல கற்பனை.

R.Gopi said...

//வால்பையன் எனக்கும் யாரும் சொல்லலை நேர வந்தாங்க, என்னை காரிலே அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. //

வால் அவர்களை வெறுமே சரக்கு எதுவும் வாங்கி கொடுக்காமல் அள்ளி போட்டுக்கிட்டு வந்ததற்கு எங்கள் சங்கத்தின் சார்பாக கண்டனங்கள் (டாஸ்மாக் கபாலி).

//லவ்டேல் மேடியை வர்ற வழியிலே காரிலே ஏத்திகிட்டு வந்திட்டோம்//

நெம்ப நன்றிங்கோ.... வெளையாட்டு களை கட்டுமில்ல......

//அடேய்..... நீயா.....??? அடங்கொன்னியா.....!!!! அந்த டண்டணக்கா டி.வி யோட டிஷ் ஆண்டனா விளம்பரத்துக்கு வர்ற போண்டா வாயன்தான நீயி......!!!! //

(பின்றீங்க. ரம்யா.).......... நெசமாலுமே நம்ம லவ்டேல் மேடியே தான்......

//அடேய் ஹிப்போபோடமஸ் மண்டையா.. அப்புடியே அல்லகட்டி ஒதச்சனா...... காரமடைக்கு அந்தபக்கமா போய் குப்பற உளுந்துருவ பாத்துக்க........ (போண்டா வயன் தலை தெறிக்க ஓடுதல்..) //

நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..... சிரிப்பு அடக்க முடியல எனக்கு...... கலக்குங்க...

//நீங்ளா.....?? யென்ட்ர கண்ண யென்ட்ரனாலயே நம்ப முடியில.....!! நெசந்தானா......??? தேனுங் ரம்யாக்கோவ் வெளையாண்டுபோட்டு போவலாமின்னு வந்தீங்களா......??? அந்த ட்ரவுசர் மண்டையனுங்க எங்களையத்தா கூட்டீட்டு வந்தானுங்கன்னு பாத்தா.... உங்களையுமும் வெளையாடறதுக்கு கூட்டீட்டு வந்துருக்கானுங்க //

ஆ........ஹா....... இது அல்டிமேட்...... சூப்பர்......

//நிசமாளுந்தான் சொல்றேங்க்கா... நீங்க வேணா நம்ப வடக்பட்டி ராமசாமிகிட்டே கேட்டு பாருங்கங்கோவ்...//

கேட்டுடுவோம்......... ஏம்ப்பா வடக்குபட்டி ராமசாமி..... நேசமாலுமேவா?

பின்னி எடுத்து இருக்கீங்க........ நகைச்சுவை அருவி போல் ஓடி இருக்கு.....

அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம்......

கிருஷ்ணமூர்த்தி said...

அட ஆண்டவனே! வெறும் கீ போர்டை வச்சுகிட்டே ரத்தபூமியாக்கும் தமிழ்ப்பதிவுலகில், கையில் மட்டையும், பந்து என்கிற பெயரில் கல்லும் கொடுத்து, அதுவும் இம்பூட்டுப்பேரையும் ஒரே நேரத்தில் ஆட்றா ராமான்னு சொன்னாக்க என்னாகும்?

அது
அதுவாய்க் கிழிய
இது
இதுவாய்க் கிழிய
அதை
அவர் வாய் கிழிய
இதை
இவர் வாய் கிழிய
அப்படியே
அவரவர் வாய் கிழிய
எது எதுவோ
எப்படி எப்படியோ
எங்கெல்லாமோ கிழிய
கிழிந்தது
கிருஷ்ணகிரி!
தீராத பக்கங்களில் மாதவராஜ் தீர்க்க தரிசனத்தோடு தான் இதைச் சொல்லியிருக்கிறார்!

கார்த்திக் said...

கல்க்கல் தொடருங்க :-))

வழிப்போக்கன் said...

கல்க்கல் கற்பனை...
:)))

सुREஷ் कुMAர் said...

http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..

மகேஷ் said...

நல்லா இருந்துச்சு அக்கா!

ஈரோட்டு மாதவன் லவ்டேல் (முடியல! ) பகுதி ஜூப்பர்