Monday, July 27, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 3

நம் வலை நண்பர்கள் ஆடும் அதிரடி கிரிக்கெட்!!
அறிமுகங்கள் ஒரு வழியாக முடிந்து அனைவரும் மைதானத்தில் குழுமினார்கள். இரெண்டு அம்பையர்களும் ஆடுகளத்தின் நிலையையும், வானிலை பற்றியும் விளக்கம் அளித்தனர். ஆடுகளம் பேட்டிங் ஆடுபவர்களுக்கு வசதியாக இருப்பதாக ஆஸ்திரேலிய அம்பையர் கூறினார். அதை நம் இந்திய அம்பையரும் ஆமோதித்தார்.

இரு அம்பையர்களும் மற்றும் இரு அணி கேப்டன்களும் ஒன்று சேர்ந்து டாஸ் போட தயார் ஆனார்கள்.இந்திய அணி கேப்டன் பூவா தலையாவில் "பூ" செலக்ட் பண்ணினார். இந்திய அணியின் அம்பையருக்கு டாஸ் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. டாஸ்சில் இந்தியா வென்றது. இந்திய அணி கேப்டன், துணை கேப்டனுடனும், அம்பையருடனும் கலந்தாலோசித்து முதலில் பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு விட்டு குடுக்கலாம் என்று முடிவிற்கு வந்தனர். இந்த முடிவை மற்ற இந்திய அணி வீரர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், பார்வையாளர்கள் எதிர்ப்பு குரல்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுபவர்கள் எல்லாருமே புதியவர்கள் கேப்டனைத் தவிர. அதனால் பேட்டிங் எடுப்பதுதான் இந்திய அணியினருக்கு நல்லது என்று குரல் கொடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி: பேட்டிங்
இந்திய அணி: பீல்டிங்

பார்வையாளர்கள் பேசுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மைதானம் பரபரப்பானது. பௌலிங் செய்ய தயாரான இந்திய அணியினர் அவரவர்களின் நிலைப்பாடை கேட்டு தெரிந்து கொண்டார்கள். ஒபனிங் பௌலர் வேகபந்து வீச்சாளர் நமது துணை கேப்டன் ஜீவன். பந்து வீச தயார் ஆனார். கேப்டன் சில நிமிடங்கள் துணை கேப்டனுடன் காதில் முணுமுணுத்தார். பிறகு அனைவரும் சரியான இடத்தில் இருக்கிறார்களா என்பதை மறுபடியும் உறுதி செய்து கொண்டு துணை கேப்டனின் பந்து வீச்சை பார்க்க நம்முடன் கேப்டனும் தயார் ஆனார்.

முதல் பந்து! பார்வையாளர்களின் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம்.

வேகமாக வீசிய ஜீவனின் பந்தில் நிலைகுலைந்து போன Michael Hussey ரன் எடுக்காமல் சமாளித்தார். அடுத்த பந்தில் கவுன்டர் அட்டாக். இந்த பந்திலும் ரன் எடுக்க முடியவில்லை. டோணிக்கு முகத்தில் லேசாக மகிழ்ச்சி தெரிந்தது. புதியவர்கள் கை கொடுத்து விட்டார்கள் என்று நிம்மதியும் முகத்தில் தெரிந்தது. மூன்றாவது பந்து வீச்சில் மைக்கேல் நான்கு ரன்கள் எடுத்து விட்டார். நான்காவது பந்தில் மைக்கேல் இடது புறத்தில் வேகமாக தட்டி (Flick) விட்டார். உருப்படாதது அணிமா அதை திறமையாக தடுத்து ஸ்டம்ப்பை குறிபார்க்கிறார் மைக்கேல் பயந்து திரும்புகிறார். ஐந்தாவது பந்து மட்டை விளிம்பில் பட்டு வால்பையனிடம் செல்கிறது. பந்தை மிக விரைவாக எடுத்து திருப்பி அடிக்கிறார். ரன் எடுப்பதற்காக ஓடுவதில் இருவருக்கும் வேற்றுமை ஏற்பட ரன்னை முழுமை செய்யாமல் அவரவர் இடத்திற்கே திரும்புகின்றனர். ஆறாவது பந்து முருவிடம் செல்கிறது. அவரும் விறு விறுப்பாக பந்தை எடுத்து கீப்பரிடம் அடிக்கிறார். அதனால் ரன் எதுவும் அடிக்காமல் கடைசி பந்தும் முடிவடைகிறது.தனது முதல் ஓவரை முடித்துக் கொண்டார் ஜீவன். ரன்(4/0)

அடுத்து களம் இறங்கியவர் வேகப் பந்து வீச்சாளர் குடுகுடுப்பை. டோணி அவர் அருகே வந்து எதிராளியின் ஆட்டம் விவரம் பற்றி கூறிச் சென்றார். சில நிமிடங்களில் குடுகுடுப்பையின் பக்கம் இருந்து அதி வேகமாகப் பறந்து வந்த பந்து ரன் எதுவும் இல்லாமல் விக்கெட் கீப்பரின் கைகளை பதம் பார்த்தது.

பாட்ஸ்மேன் Matthew Hayden சற்றே நிதானத்திற்கு வந்து யோசிக்க ஆரம்பித்தார். புதியவர்களை சாதரணமாக் நினைத்து விட்டோமே! இவ்வளவு வேகமா விளையாடறாங்க என்று ஆச்சர்யமாக வினாடிக்கும் குறைவான நேரத்தில் அம்பையரை நோட்டம் விட்டார். ரெண்டு அம்பையர்களும் பந்து வரும் திசையை நோக்கி தெளிவாக நின்று கொண்டிருந்தார்கள். ஒ முதல் பௌலர் மிரட்டி விட்டாரே, இவரும் மிரட்டுவாரோ புதியவர்களின் பெயர்கள் புது மாதிரியாகத்தான் இருக்கிறது. அடுத்து வரும் பந்தை நோக்கி தனது மட்டையை சுழற்ற ஆரம்பித்தார் Matthew Hayden.

இந்த முறை பந்து சிக்ஸ்சருக்கு அதிவேகமாகப் பறந்தது. Matthew Hayden மனதிற்குள் புது வெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகம் தொற்றிக் கொள்ள, அடுத்த பந்தை எதிர் கொள்ள தயாரானார். அடுத்த பந்து புல்டாஸ், வந்த வேகத்தில் தடுமாற்றம் Matthew Hayden னால் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளும் லவ்டேல் மேடி இடம் செல்ல தலா ஒரு ரன் வீதம் இரண்டு ரன் குவிந்தது. பீல்டிங் செம டைட். சுற்றி சுற்றி பார்த்தாலும் எல்லாரும் சும்மா வேடிக்கை பார்ப்பது போல் இருக்கிறது. ஆனால் அடித்து ஆட முடியவில்லையே என்று ஒரே சோகம் Hayden முகத்தில். இப்படியே வெந்து வெம்பியே எட்டு ரன்னுக்கு மேல் இந்த ஓவரில் அவர்களால் எடுக்க முடியவில்லை. இந்த நிலவரப்படி கேப்டன் முகத்தில் சிறிது மகிழ்ச்சி தெரிந்தது. (12/0)

அடுத்து துணை கேப்டன் ஜீவன் பந்து வீச்சுக்கு தயாரானார். பந்தை எதிர் கொள்ளபோறவர் ஆஸ்திரேலியா ஆட்டக்காரர் Michael Hussey. ஒரு முறை பீல்டிங் எப்படி இருக்கிறது என்று கணித்துக் கொண்டார். அவரின் பார்வை நமது அ.மு.செய்யது மற்றும் வணங்காமுடி பக்கம் போயிற்று. அவர்கள் சற்றே அசால்ட்டாக நிற்கின்றனரோ, இது Michael Hussey பயம். நமது ஜீவன் அதிவேகமாக ஓடிவந்து பந்தை வீசினார். இம்முறை கண்டிப்பாக அது சிக்ஸ்தான் என்ற மனநிறைவோடு Michael Hussey.

மேலே பறந்த பந்து பௌண்டரி தாண்டி போகாமல் மெதுவாக பூமியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த நமது அ.மு.செய்யதும், அண்ணன் வணங்காமுடியும் பந்தை பிடிக்க ஓடினர். ஓடிய வேகத்தில் பந்தை பிடித்தது நமது அண்ணன் வணங்காமுடி. அவர்கள் போட்ட சத்தமும் ஆட்டமும் நம்மையும் தொற்றிக் கொண்டது. அ.மு.செய்யது அவரை அப்படியே தூக்க முயற்சிக்க, அதுக்குள்ளே அம்பையர் கை விரலை மேலே தூக்கி அவுட் சிக்னல் கொடுத்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து வணங்கமுடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெளியே செல்வது ஆஸ்திரேலிய ஓபனிங் பேட்ஸ்மன் Michael Hussey, வெளியேற்றியது நமது துணை கேப்டன். அனைவரும் சேர்ந்து துணை கேப்டனை தூக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் பலம் இப்போதுதான் லேசாகப் புரிய ஆரம்பித்தது ஆஸ்திரேலியர்களுக்கு.

அடுத்து களம் இறங்குபவர் Simon Katich. ரொம்ப கஷ்டப்பட்டு பீல்டிங்கை நோட்டம் விட்டார். பிறகு பந்தை எதிர்கொள்ள தயார் ஆனார். ஆனால் அவர் மனதில் குழப்பம் இவர்கள் அனைவரும் புதியவர்கள். இவர்களிடம் நமது துவக்க ஆட்டக்காரர் அவுட் ஆகிவிட்டாரே என்றுதான். நாம் அதுபோல் ஏமாந்து விடக்கூடாது என்று மனதில் உறுதி கொண்டு ஜீவனை நோட்டம் விட்டார். ஜீவன் பந்து வீச தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். அருகில் டோணி ஏதோ பேசிக் கொண்டிருந்தார். சரி என்று தலையாட்டிவிட்டு தனது காரியத்தில் கண்ணாக அதே வேகத்துடன் இந்த முறையும் பந்தை வீசினார். பந்து வந்த வேகத்தில் பேட்ஸ்மன் மட்டையின் ஓரமாக பட்டு பின்னால் காத்திருந்த விக்கெட் கீப்பர் வெகு லாவகமாக பந்தை கேட்ச் பிடித்தார். மறுபடியும் அரங்கத்திலும் மைதானத்திலும் கரகோஷ அலைகள். இப்போது டோணி ஜீவனை அலாக்காக தூக்கி விட்டார். அனைவரும் சேர்ந்து ஜமாலை வாழ்த்தினார்கள். அரங்கத்தில் இருந்து வந்த விசில் சத்தம் விண்ணை பிளந்தது.

விபரம் அறிந்த வலை நண்பர்கள் அதிகம் பேர் குவிந்து விட்டனர். அவர்கள் செய்த ஆரவாரங்கள் நமது நண்பர்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்தது.

Matthew Hayden இவருக்கு என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை. அதற்குள் ரெண்டு விக்கெட்டா? பதறிப்போனார்கள் ஆஸ்திரிலேயர்கள்.

ஆஸ்திரேலிய கேப்டன் முகத்தில் ஈயாடவில்லை. அடுத்து யாரை அனுப்புவது என்று சற்றே குழம்பி பின் Andrew Symonds ஐ அனுப்பினார்.


எல்லார் முகத்திலும் ஒரே பரபரப்பு. இருதரப்பிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. திடீரென்று எதிர்பாராத விதத்தில் இருவர் அவுட் ஆகிவிட்டனர். ஜீவன் முகத்தில் எப்போதும் போல் அமைதியான எந்த எதிர்பார்ப்பையும் காட்டாத அக்மார்க் அமைதி. அவரைச்சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் அவருக்கு பலவிதத்திலும் ஐடியா கொடுத்த வண்ணம் இருந்தனர். அதற்குள் புது பேட்ஸ்மன் தயார் ஆகிவிட்டார். ஜீவன் நண்பர்கள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு தனது நோக்கம் ஒன்றிலேயே குறியாக இருந்தார். அதாவது கவனம் பிறழாமல் தன வேலையை கவனிப்பது. இதுதான் ஜீவனிடம் அனைவரும் கண்ட ஒரு அரிய குணம். எதற்கும் அசைந்து கொடுக்காத ஒரு அமைதி எப்போதும் அவர் முகத்திலே காணலாம்.

மூன்றாவதாக களம் இறங்கியிருக்கும் பேட்ஸ்மன் முகத்தில் எப்படியும் அவுட் ஆகாமல் நின்று விடவேண்டும் என்ற எண்ணம் முகத்தில் தெரிந்தது. ஜீவன் அதே வேகத்துடன் வருகிறார், அனைவரும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தனர். சத்தமே இல்லை. காம்பியர்கள்தான் விளையாட்டை விமர்சித்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போலவே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்தை வீசினார் ஜீவன். இம்முறை பந்து விண்ணை நோக்கி பறந்தது. அனைவரும் சிக்ஸர் எதிர்பார்த்து பந்து செல்லும் திசையை கண்களை விரட்டினார்கள். இந்த முறை பந்தை பிடித்தவர் நமது நண்பர் நசரேயன். அவர் பாய்ந்து பிடித்த வேகத்தை பார்த்ததும் அனைவரும் ஆர்ப்பரிக்க துவங்கி விட்டனர்.

இப்போதுதான் ஜீவன் முகத்தில் சந்தோஷம் அனைவரையும் நோக்கி கைகளை நீட்டியபடி ஓடி வந்தார், வந்த வேகத்தில் ஜமால் ஜீவனை அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றினார். ஜீவன் அடித்த ஹாட்ரிக். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அனைவரும் வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் இருந்தனர். நம்ப நண்பர் நசரேயன் பிடித்த கேட்ச் பலமுறை டிவியில் போட்டு காட்டியவண்ணம் இருந்தனர். பறந்துதான் பிடித்திருக்கிறார். அவரின் இந்த கேட்ச் மிகவும் பெருமையாகப் பேசப்பட்டது. நசரேயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல திசைகளிலும் இருந்து வந்தவண்ணம் இருந்தது.

இந்தியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறியபடி இருந்தனர்.

SCORE BOARD


வளரும்
ரம்யா....33 comments :

லவ்டேல் மேடி said...

சாமியோவ்.... வணக்கமுங்..... சாமியோவ்........!!


நெம்ப சந்தோசமுங் அம்முனி.... .....!!


மொதல் கும்மி நம்புளுதுங்கோவ் ....!!!!

सुREஷ் कुMAர் said...

வந்தாச்சேய்..

வால்பையன் said...

பாலுக்கு பால்!
லைவ் கமெண்ட்ரி குடுப்பதில் சந்தோஷமே! ஆனால் ஓவருக்கு ஓவர் விளம்பரம் வரணுமே ஏன் வரல!

இவண்
குப்புறபடுத்து யோசிப்போர் சங்கம்!
ஈரோடு கிளை!

sakthi said...

அருமையான கமெண்டரி ரம்யா டீச்சர்

அபுஅஃப்ஸர் said...

பந்து பை பந்து அழகான கமெண்ட்ரி

கிரிக்கெட் போர்டின் கவனம் கொஞ்சம் ரம்யா பக்கம் திரும்புமா

லவ்டேல் மேடி said...

// கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 3 //


வந்துட்டேன்....!! வந்துட்டேன்....!! வந்துட்டேன்....!!!

அபுஅஃப்ஸர் said...

//வால்பையன் said...
பாலுக்கு பால்!
லைவ் கமெண்ட்ரி குடுப்பதில் சந்தோஷமே! ஆனால் ஓவருக்கு ஓவர் விளம்பரம் வரணுமே ஏன் வரல
//

விளம்பர டீலிங்லே பயங்கர அடிதடியாம்...

லவ்டேல் மேடி said...

// அறிமுகங்கள் ஒரு வழியாக முடிந்து.. ///
ஏனுங்கோவ்.... ஒரு வழிதானுங்களா......?? ரெண்டு வழி... மூணு வழி இல்லீங்களா.......???


// அனைவரும் மைதானத்தில் குழுமினார்கள். //

தேனுங்க்கா......!! அங்கென்னோ ... வட்ட மேச மாநாடா நடக்குது.... எல்லாருமும் குழுமி கும்முறதுக்கு....!!!
// இரெண்டு அம்பையர்களும் ஆடுகளத்தின் நிலையையும், வானிலை பற்றியும் விளக்கம் அளித்தனர். //

அடங்கொன்னியா.....!! அப்போ இனி டி.வி யிலையும் வானில அறிக்கைக்கு ரமணம் சார் வரமாடாரா ....??? நம்ப அம்பயர் ரெண்டு பேருமும்தான் வருவாங்களா....??// ஆடுகளம் பேட்டிங் ஆடுபவர்களுக்கு வசதியாக இருப்பதாக ஆஸ்திரேலிய அம்பையர் கூறினார். //

ஆமாங்கோவ்....!! ஆட்ரவிங்குளுக்கு மட்டும்தேன் நெம்ப சூப்பரா இருக்குமுங்கோவ் கிரவுண்டு...!! ஆச்துரேலியா கேப்டன் அரகிரவுண்டு மண்டையன் சொல்லி போட்டாருங்கோவ்....!!


உங்க பக்கோம் யாராசி அடுத்த பிரபுதேவா இருந்தா வந்து நல்லா ஆடிபோட்டு போங் சாமியோவ்....!! ஆனா நயன்தாரா மட்டும் கேக்கூடாதுங்கோவ்.....!!!!

அபுஅஃப்ஸர் said...

//லவ்டேல் மேடி said...
// கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 3 //


வந்துட்டேன்....!! வந்துட்டேன்....!! வந்துட்டேன்....!!!
//

ஒரு பந்தை பிடித்து 4 சேவ் பண்ணிட்டீங்களாம் வாழ்த்துக்கள்

லவ்டேல் மேடி said...

// அதை நம் இந்திய அம்பையரும் ஆமோதித்தார். //
அடங்கொன்னியா.... !! இதுக்கு எதுக்குன் அம்முனி அல மோதனும்...!! பொங்கலும் ... சுண்டளுமுமா..... தாராங்கோ....!!!


// இரு அம்பையர்களும் மற்றும் இரு அணி கேப்டன்களும் ஒன்று சேர்ந்து டாஸ் ....//சேந்து டாஸ் ...... மார்க் போனாங்களா ....???!!????

அட பிஞ்சுபோன வாலு மண்டையா.. நம்பல ஏமாத்திபோட்டாங்கடா டேய் ......!!


// இந்திய அணி கேப்டன் பூவா தலையாவில் "பூ" செலக்ட் பண்ணினார். //


தேனுங்கோ அம்முனி....... " பூ " படம் பிரிண்ட் நல்லாருந்துதுங்களா .....??
// இந்திய அணியின் அம்பையருக்கு டாஸ் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. //அடங்கொன்னியா....!! ஏதோ பாரின் தரிப்பு வாய்ப்பு கெடச்சமாதிரி ஓவர் பில்டப்பு உட்டுருக்குரீங்கோ......???
// டாஸ்சில் இந்தியா வென்றது. ///


ங்க்ம்.....கும்...... !! டாசுல மட்டும்தேன் செயிக்குறது எப்பவுமே......!!!

அபுஅஃப்ஸர் said...

//ஆஸ்திரேலிய அம்பையர் கூறினார். அதை நம் இந்திய அம்பையரும் ஆமோதித்தார்//

நமக்குதான் தலையாட்டுரதே வேலையா போச்சே

லவ்டேல் மேடி said...

/// பார்வையாளர்கள் பேசுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மைதானம் பரபரப்பானது. //


அப்பொழுது ... லவ்டேல் மேடி ... சீறிப் பாய்ந்து வருகிறார்.......


" இளமை ..... இதோ..... இதோ........!!! "// பந்து வீச தயார் ஆனார். //


ஏதோ ஆம்லட் போட தயாரானார்ங்குற மாதிரி சொல்றீங்கோ....??
// கேப்டன் சில நிமிடங்கள் துணை கேப்டனுடன் காதில் முணுமுணுத்தார். //


ஆம்மங்கோவ்..... என்ன பேசுனாருனா.... " ஜீவன்ஜி..... ரம்யா பக்கம் மட்டும் பந்த வீசீராதீங்க.... அந்த அம்முனி அப்புடியே பந்த தூக்கீட்டு ஊட்டுக்கு ஓடிபோயிருமாம்.... நம்ப லவ்டேல் மேடி சொன்னார் ..... " .....!!!

/// முதல் பந்து! பார்வையாளர்களின் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம். //


யாரு கையிக்கு கெடச்சாலும் ... அப்புடியே தூக்கீட்டு ஓடிப் போயரலாமின்னா....???

// வேகமாக வீசிய ஜீவனின் பந்தில் நிலைகுலைந்து போன Michael Hussey ரன் எடுக்காமல் சமாளித்தார். //


அடங்கொன்னியா.... !! யாருகிட்ட உடுரீங்கோ .... கலர் ... கலரா ... ரீலு ...!!!

// அடுத்த பந்தில் கவுன்டர் அட்டாக். //


அடப் பாவமே .....!! தேனுங் அம்முனி..... சின்ன கவுண்டரா....
பெரிய கவுண்ட்ராங் .....??
// இந்த பந்திலும் ரன் எடுக்க முடியவில்லை. //


நம்ப முடியவில்லை........

// டோணிக்கு முகத்தில் லேசாக மகிழ்ச்சி தெரிந்தது. ///


கஷ்ட்ட காலம்.....!!!

அபுஅஃப்ஸர் said...

ஹேட்ரிக் விக்கெட் எடுத்த‌ ஜீவனுக்கு வாழ்த்துக்கள்

லவ்டேல் மேடி said...

// இந்திய அணி கேப்டன், துணை கேப்டனுடனும், அம்பையருடனும் கலந்தாலோசித்து முதலில் பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு விட்டு குடுக்கலாம் என்று முடிவிற்கு வந்தனர். //ஆமாங்கோவ்....!! பெரிய முடிவுங்கோவ்....!! அவிகவிக ஊரு கல்வெட்டுல எழுதி வெச்சுக்கோங்கோவ்....!!!


// இந்த முடிவை மற்ற இந்திய அணி வீரர்களும் ஏற்றுக் கொண்டனர். //


இல்லீங்கோவ்..... ! நானித ஏர்க்குலீங்கோவ்...!!


அட வடக்குபட்டி ராமசாமி.... அருக்கானிக்கொவ்... ....!! என்னைய
ஏமாத்தி போட்டாங்க்கோவ்....!!// ஆனால், பார்வையாளர்கள் எதிர்ப்பு குரல்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். ///


யாருகிட்ட......???


//ஆடுபவர்கள் எல்லாருமே புதியவர்கள் கேப்டனைத் தவிர. அதனால் பேட்டிங் எடுப்பதுதான் இந்திய அணியினருக்கு நல்லது என்று குரல் கொடுத்தார்கள். //கூட்டத்தோட சேந்துகிட்டு நீங்குளும் கோய்ந்தா போட்டதா ... நானுமும் பாத்துகிட்டு இருந்தனுங்க்கோவ்.....!!!// ஆஸ்திரேலிய அணி: பேட்டிங்
இந்திய அணி: பீல்டிங் //


அப்போ பவுலிங் யாருங் அம்முனி.......???

// விபரம் அறிந்த வலை நண்பர்கள் அதிகம் பேர் குவிந்து விட்டனர். அவர்கள் செய்த ஆரவாரங்கள் நமது நண்பர்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்தது. //


எப்புடீங்கோ அம்முனி...!! பின்னூட்டம் போட்டு ஊக்குவிச்சாங்களா.....?? இல்ல தமிழ்மணம் , தமிழிஷ் .... ல ஓட்டு போட்டு ஊகுவிச்சாங்களா ...??

// இந்தியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறியபடி இருந்தனர். //


என்னது.... வாழ்த்து சொல்லிகிட்டே இருந்தாகல்லா...!!
எல்லாருமும்... கஞ்சா.. கிஞ்சா... போட்டுட்டாங்களா.....???

லவ்டேல் மேடி said...

போயிட்டு வாரமுங் அம்முனிங்கோவ்....!!!


அடுத்த தொடரை எதிர்நோக்கியுள்ள ,

லவ்டேல் மேடி....

லவ்டேல் மேடி said...

// வால்பையன் said...

பாலுக்கு பால்!
லைவ் கமெண்ட்ரி குடுப்பதில் சந்தோஷமே! ஆனால் ஓவருக்கு ஓவர் விளம்பரம் வரணுமே ஏன் வரல!

இவண்
குப்புறபடுத்து யோசிப்போர் சங்கம்!
ஈரோடு கிளை! //அடேய் குவைத் மண்டையா..... !! நீ வாங்குற அஞ்சு ... பத்துக்கு ... உனக்கு எதுக்குடா விளம்பரம்.....!!

ஏதோ நம்ப ரம்யா அக்காதான் ஒரு விளம்பரத்துக்கு ... மாசத்துக்கு ஒரு தடவ போஸ்ட்டரு அடுச்சு பொறந்தநாளு கொண்டாடுது...!! நீயுமாடா....???

இவன் ............
மல்லாக்க படுத்துகிட்டு யோசிப்போர் சங்கம்!
ஈரோடு மெயின் !

லவ்டேல் மேடி said...

/// அபுஅஃப்ஸர் said...


ஒரு பந்தை பிடித்து 4 சேவ் பண்ணிட்டீங்களாம் வாழ்த்துக்கள் //
அப்பவும் .... ஒரு சேவிங்குக்கு 15 ரூவா வாகிடேனுங்கோவ்....!!! நெம்ப தேங்க்ஸ்ங்கோவ்....!!!

सुREஷ் कुMAர் said...

//
நம்ப நண்பர் நசரேயன் பிடித்த கேட்ச் பலமுறை டிவியில் போட்டு காட்டியவண்ணம் இருந்தனர்.
//
என்னைக்கினக்கா..
சொல்லிருந்தா நாங்களும் டிவில பாத்திருபோம்ல..

सुREஷ் कुMAர் said...

வர்ணனை அபாரம்..

நெஜமாவே கிரிகெட் மேட்ச்ச நேர்லபார்த்த எபெக்ட்..

அ.மு.செய்யது said...

கடைசில லகான் மாறி ஆயிருச்சே !!!!

இந்த கிரிக்கெட் படம் கஷ்ட்டப்பட்டு போட்டிருக்கீங்கன்னு தெரியுது.

அதற்காகவே பாராட்டுகள் !!!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்.. நல்ல வர்ணனை
எனக்குதான் தலை சுற்றியது...

பிரியமுடன் பிரபு said...

பாவம் கிரிக்கெட் விட்டுடுங்கோ

அப்பாவி முரு said...

எனக்கு போலிங்கும் தரலை, கேட்சும் தரலை...

என்னை புரகநிக்கிறாங்க.

கிரிக்கெட்ல தமிழனுக்கு எப்பவுமே இடமில்லையா!!!

நான் வெளிநடப்பு செய்யுறேன்.

நட்புடன் ஜமால் said...

கமெண்ட்டிங் தூள்

[[அடுத்த பந்தில் கவுன்டர் அட்டாக்.]]


அவருமா ஆட்டத்துக்கு வந்தாரு

சொல்லவேயில்லை.

நட்புடன் ஜமால் said...

படம் நல்லா முயற்சி செய்து போட்டு இருக்கீங்க.

ஹார்ட்ரிக் அடித்த நண்பர் ஜீவனுக்கு வாழ்த்துகள்!

குடுகுடுப்பை நம்ம கையை பதம் பார்த்து விட்டதால், கை வலிக்குது

அப்பாலிக்கா கண்டுக்கிறேம்மே

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம் கலக்குங்க அக்கா...

எங்க குடுகுடுப்பையை குடுகுப்பை என்று போட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அண்ணன் வணங்காமுடி said...

//அப்பாவி முரு said...
எனக்கு போலிங்கும் தரலை, கேட்சும் தரலை...

என்னை புரகநிக்கிறாங்க.

கிரிக்கெட்ல தமிழனுக்கு எப்பவுமே இடமில்லையா!!!

நான் வெளிநடப்பு செய்யுறேன். //

//ஆறாவது பந்து முருவிடம் செல்கிறது. அவரும் விறு விறுப்பாக பந்தை எடுத்து கீப்பரிடம் அடிக்கிறார். //

மூனு ஓவர்ல முப்பது பேரா பால் போடா முடியும். ரோம்ம்பதான் அவசரம்.

அண்ணன் வணங்காமுடி said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ம்ம்ம் கலக்குங்க அக்கா...

எங்க குடுகுடுப்பையை குடுகுப்பை என்று போட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

குப்பைனு போடாம இருந்தாங்களே. great எஸ்கேப்.

S.A. நவாஸுதீன் said...

கமெண்டரி சூப்பருங்கோ.

S.A. நவாஸுதீன் said...

படம் சிறப்பாக அமைய உங்களுடைய கடின உழைப்பு தெரிகிறது, பாராட்டுக்கள்

Suresh Kumar said...

மூணு ஓவரில மூணு விக்கட்டா ................ இதிலயாவது இந்திய ஜெயிக்குமா ?

ஜீவன் said...

பாலுக்கு பால் வர்ணனை நல்லா இருக்கு!

மூனு ஓவருக்கு ஒரு பதிவு ?

இது ஐம்பது ஓவர் போட்டியா ? இல்ல 20-20 போட்டியா ?

(ஆனாலும் ஜீவன் ஓவராதான் ஆடுறாரு!)

வால்பையன் said...

//(ஆனாலும் ஜீவன் ஓவராதான் ஆடுறாரு!) //

ஆடுறாரா!?
தள்ளாடுறாரா!?

கரிகிட்டா சொல்லுங்க!