அனைவரையும் நேரில் சந்தித்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அதே சமயத்தில் நெகிழ்ச்சியையும் கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகா. வருகை தந்தவர்கள் அனைவரும் முன்பே பழகியது போன்று தோன்றியதே அன்றி புதியவர்கள் என்ற எண்ணம் மனதில் எள்ளலவும் ஏற்படவில்லை.
எல்லாரும் ஒரே மாதிரி அன்பாகப் பேசினார்கள், அறிமுகப் படுத்திய விதமும் அருமை.
நிகழ்ச்சியை பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தொகுத்து வழங்கிய விதமும் அபாரம்.
நண்பர் கதிரின் பணி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்திருக்கிறார். நல்லதொரு ஆரம்பம் இவ்விழா என்று கூறலாம்.
சகோதரர் பழமைபேசி அவர்கள் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமை.
வலைச்சர ஆசிரியர் சீனா அவர்களும் அருமையாக பேசி எல்லோரையும் அசத்தி விட்டார்.
சகோதரி சும்ஜலா வலைப்பூவை ஜொலிக்க செய்ய பல நுணுக்கங்களையும் தனது உறையில் தெரிவித்தார்.அந்த விஷயங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஈரோட்டு நண்பர்கள் ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி இவர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கும் மேடையில் ஒரு இடம் கொடுத்து அமரச்செய்து, என்னையும் உறையாற்றச் சொன்னார்கள். மிக்க நன்றி மக்கா!
சென்னையில் இருந்து (கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, வானம்பாடி)
திருப்பூரில் இருந்து (பரிசல், வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்)
மதுரையில் இருந்து (சீனா, கார்த்திகைப்பண்டியன் ஸ்ரீதர், தேவராஜ் விட்டலன், ஜெர்ரி)
ஈரோட்டில் இருந்து (ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி)
அமீரகத்தில் இரண்டு நண்பர்கள் (செந்தில்வேலன், நாகா)
கோவையில் இருந்து (லதானந்த், பழமைபேசி, சஞ்சய் காந்தி)
கரூரில் இருந்து (இளையகவி, முனைவர் இரா.குணசீலன்)
மற்றும் வாசகர்களும் எங்களுடன் பங்கேற்றனர்.
சுவையான விருந்து, அன்பான வரவேற்பு நெகிழ்ந்து போனோம். எங்களை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துப் போன பாங்கு என்ன. ரயில் நிலையம் வந்து அழைத்துச் சென்ற பழமைபேசி அண்ணா மற்றும் சகோதரர் கதிர் உங்களுக்கு மிக்க நன்றி. எங்களுக்கு என்று தனி அறை. தேவைகள் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்கப் பட்டன. குறை ஒன்றும் இல்லை நண்பர்களே!
நாங்கள் ஊருக்கு திரும்பும் வரை எங்களை நல்ல முறையிலும் அக்கறையுடனும் கவனித்த உங்களின் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.
எங்களை சென்னைக்கு திரும்ப ரயில் நிலையத்தில் கொண்டு விட்ட நண்பர் பெயர் தெரியவில்லை. அவருக்கும் எங்களது நன்றி.
எல்லாவற்றிகும் மேலாக நாங்கள் ஈரோடு செல்ல முதல் காரணமாக இருந்த சகோதரர் வானம்பாடி அவர்கள்தான். அண்ணன் வானம்பாடி அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் பல.
வலை நண்பர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி உதவும் குணம், அன்பு செய்யும் குணம், கஷ்டத்தில் பங்கேற்கும் குணம், பாசமிக்க நேசமுள்ள குணம் வேறு யாருக்கும் வராதுங்க. பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் இவை அனைத்தும் இந்த பதிவுலகத்தில்தான் கிடைக்கும்.
என்னுடன் வர இயலாமல் வருத்ததுடன் பதிவிட்ட தோழி தமிழ் உங்களுக்குமாக சேர்த்து நாங்களே சாப்பிட்டோம். ஆனால் பாருங்க நீங்கள் வராமல் போனது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அதையும் இங்கே பதிவிடுகிறேன்.
இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிக்க உதவிய தமிழ்மணம் மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!!
அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!!
43 comments :
பெருந்துறையில் இருந்தும் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டதே.. ;-(
சரி.. எனக்கும் சேர்த்து அக்கா கலந்துகட்டிட்டு வந்துட்டிங்கல்ல.. அதுபோதும்..
ஆஹா,
அருமையான தகவல்கள்... நன்றிங்க. கலந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போனாலும், படித்து தெரிந்துகொள்ளும்போதுதான் மனம் கொஞ்சம் ஆறுதலடைகிறது.
பிரபாகர்.
பொதுவாக ஈரோட்டுகாரர்களை விருந்தோம்பலில் அடித்துக்கொள்ள முடியாது.. என்பதை மீண்டும் நிருபித்து இருக்கின்றார்கள்...
என்ஜாய் ரம்யா ஜீ
யக்கா அவங்க தமிழ் ஏன் வரலைன்னு சொல்லவா அவங்க கவிதையெழதுறத நிப்பாட்டுனது ஏன்னு கேட்டு பஸ் எல்லாம் ஆந்த்ராவுல பந்தாமே...!
இருந்தாலும் உங்களால அவங்களுக்கு சேத்து சாப்ட்ருக்க முடியாது அவ்ளோ சாப்டுவாங்க அதுலயும் சிக்கன் பிரியாணின்னா உசிர விட்ருவாங்க இல்லியா தமிழ் :)
பதிவர் சந்திப்பு பற்றி அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் தங்கச்சி ரம்யா..
பங்கேற்க முடியாத குறையை தீர்த்து வைத்து விட்டீர்கள்.
ம்ம்,வேறொரு ப்ளாக்கில் அக்கா, சுரேஷோட படத்தை பார்த்தும் நீங்களும் கலந்திருப்பீங்கன்னு நினைச்சேன். சரி தான்
பங்கேற்க இயலவில்லையே என்ற வருத்தங்கள் இருந்தாலும்
இது போன்ற பதிவுகளில் திருப்தி அடைந்து கொள்ள முடிகின்றது.
நன்றி.
கலக்கிட்டீங்க ரம்யா! :-)
சென்னையில் இருந்திருந்தால் நானும் ஈரோட்டிற்கு வர முயன்றிருப்பேன்..பரவாயில்ல விடுங்க..நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
உங்கள் பதிவு அருமை.
அக்கா, உங்களை சந்தித்தது தான் ஸ்பெஷல் ;))
தெரியாம போச்சு அக்கா .... முன்பே யாராச்சு சொல்லி இருந்த பிளான் பண்ணி நான் வர முயற்சித்து இருப்பேன்...
அக்கா ...நீங்க அங்கே இலக்கியம் பற்றி பேசுனிங்க போல் இருக்கு .......
ஈரோடு ல என்ன புத்தகம் வாங்குனிங்க ???
பிரபாகர ரிப்பீட்டிக்கிறேன்...
பிரியமுடன்...வசந்த் said...
யக்கா அவங்க தமிழ் ஏன் வரலைன்னு சொல்லவா அவங்க கவிதையெழதுறத நிப்பாட்டுனது ஏன்னு கேட்டு பஸ் எல்லாம் ஆந்த்ராவுல பந்தாமே...!
இருந்தாலும் உங்களால அவங்களுக்கு சேத்து சாப்ட்ருக்க முடியாது அவ்ளோ சாப்டுவாங்க அதுலயும் சிக்கன் பிரியாணின்னா உசிர விட்ருவாங்க இல்லியா தமிழ் :)
ஹஹ்ஹஹா.....அடப்பாவி இரு வரேன் இருக்கு உனக்கு பூஜை...
உங்கள் வருகையும் எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!
உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இதேபோல திருப்பூர் சந்திப்புக்கும் வருகை புரியவேண்டுமென்று (எப்போ - அது தலைவரைத்தான் கேட்கணும்) கே.கொ.
ரம்யா பெரும்பாலான பதிவுகள் ஈரோடு பதிவர்கள் சந்திப்பு பற்றியதாகவே இருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது நிகழ்ச்சி எத்தனை சிறப்பாக நடந்தேறியிருக்கும் என்று.. எல்லார் பதிவையும் படிக்கும் போதே உடன் இருந்த உணர்வை அடைந்தேன்...வாழ்த்துக்கள் நல்ல நட்புள்ளங்களே..
(ஆமாம் ரம்யா என் பங்கு பேக்கேஸ் நீ அப்படியே சென்னைக்கு கொண்டு போயிட்டதா தகவல்..ஹிஹிஹி சும்மா லூல்லூலாயி)
/ என்னுடன் வர இயலாமல் வருத்ததுடன் பதிவிட்ட தோழி தமிழ் உங்களுக்குமாக சேர்த்து நாங்களே சாப்பிட்டோம். //
என்னது இது. தமிழரசி உங்களை பார்சல் செய்து வரச் சொன்னால் அதையும் சாப்பிட்டு விட்டதாக கூறுகின்றீர்கள். இது நியாமா?
நல்ல சந்திப்பு. இதில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கின்றது. என்ன செய்வது. (உங்க சாப்படு குறைந்து விடும் என்பதால் வரவில்லை). நல்ல பதிவு நன்றி ரம்யா.
// ஹஹ்ஹஹா.....அடப்பாவி இரு வரேன் இருக்கு உனக்கு பூஜை... //
பூஜை முடிந்தது அதைக் கொண்டாட விருந்து போடுவீர்கள் அல்லவா தமிழ். அதுக்கு எனக்கு மறக்காமல் சொல்லி அனுப்பவும். ஹா ஹா.
உங்களின் வருகையும் பேச்சும் எங்களுக்கு மகிழ்ச்சியளித்தன. மிக்க நன்றி...
சந்திப்பைப் பற்றி மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் ரம்யா. சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
ரொம்ப சந்தோசமா இருக்கு ரம்யா. இந்த மாதிரி சந்தர்ப்பம் எனக்கு எப்போ கிடைக்கும்னு இருக்கு.
தங்கள் வருகை எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது....அன்பிற்கு நன்றி சகோதரி.....
நன்றி सुREஷ் कुMAர்
நன்றி பிரபாகர்
நன்றி துபாய் ராஜா
நன்றி jackiesekar
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி அப்பாவி முரு
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சந்தனமுல்லை
நன்றி அ.மு.செய்யது
நன்றி SanjaiGandhi™
நன்றி டம்பி மேவீ
நன்றி pappu
நன்றி தமிழரசி
நன்றி வால்பையன்
நன்றி பரிசல்காரன்
நன்றி தமிழரசி
நன்றி பித்தனின் வாக்கு
நன்றி க.பாலாசி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஆரூரன் விசுவநாதன்
அழகான பகிர்வு....
மிக்க நன்றி ரம்யா
நீங்கள் பேச வேண்டிய தலைப்பு முன் கூட்டியே சொல்ல மறந்தது என் தவறு
ஆனாலும் நிறைவாக பேசினீர்கள்
வர வர ஈரோடு உங்களுக்கு பூந்தமல்லி பக்கம் வந்துட்டாப்புல இருக்கு....-))
கடைசி தடவையும் உங்களிடம் ரொம்ப நேரம் பேச முடியலை...
இந்த முறை சந்திக்கவே முடியலை...
சித்தர்தான் போட்டு தாளிச்சுட்டு போயிட்டார்...லாஸ்ட் விசிட்டும்போது.
//வலை நண்பர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி உதவும் குணம், அன்பு செய்யும் குணம், கஷ்டத்தில் பங்கேற்கும் குணம், பாசமிக்க நேசமுள்ள குணம் வேறு யாருக்கும் வராதுங்க//
இத இததான் எதிர்ப்பார்த்தேன்...
சந்தோஷம்
அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
அழகான பதிவு.......
ரம்யா,
வாழ்த்துக்கள். சந்திப்பு குறித்த தொகுப்பு அருமை. நேரம் அனுமதித்தால் அடுத்த சந்திப்பில் பங்குபெறுகிறேன்.
ஸ்ரீ....
கற்றலின் கேட்டல் நன்று.
கலந்துக்கொள்ள முடியாத தொலைவில் இருந்ததால்...உங்களின் பகிர்வில் ஒரு நிம்மதி.
மிகச்சிறந்த சந்திப்பாக அமைந்ததாக அறிகிறேன்.
வாழ்த்துக்கள்.
கலக்கிட்டேள் போங்கோ! :)
கோயம்புத்தூர் இல் இருந்தும் எங்களுக்கு தெரியவில்லையே ?
தெரிந்திருந்தால் நானும் பங்கு ஏற்று இருப்பேன்
உணர்வு பூர்வமாக தங்களின் உரை அமைந்தது சகோதரி..
வாழ்த்துகள்
:-)))))))))))
அன்பின் ரம்யா
இடுகை சிறப்பாக இருக்கிறது - நெகிழும் மனதுடன் எழுதப்பட்ட இடுகை - அனைவர் பெயரையும் விடாமல் குறிப்பிட்டது நன்று
நல்வாழ்த்துகள் ரம்யா
நன்றி ஈரோடு கதிர்
நன்றி கும்க்கி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி அண்ணாமலையான்
நன்றி Sangkavi
நன்றி ஸ்ரீ....
நன்றி சத்ரியன்
நன்றி பீர் | Peer
நன்றி ☀நான் ஆதவன்☀
நன்றி ராசு
நன்றி நிகழ்காலத்தில்...
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி cheena (சீனா)
நல்ல பதிவு ரம்யா... வாழ்த்துகள்...
//சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டதே//
Repeatikiren....Just miss.
Ennoda native-ku vandhum ungala marupadi paaka mudiyala.Anyways enjoy panneenga illa, gud!!
தொகுப்பு நல்லாயிருந்ததுங்க.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தொகுப்பு அருமை.
மிக்க மகிழ்ச்சி.
Post a Comment