Wednesday, June 23, 2010

கோனே ஃபால்ஸ்!!

இந்த படம் நாங்க எடுக்கலை அங்கே இருந்து வாங்கி வந்தேன். ஏன்னா நாங்க சென்ற போது கொஞ்சமாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

திருக்காரிக்கரை (காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' . என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது. இங்கிருந்து கோனே ஃபால்ஸ் பயணமானோம்.

செல்லும் வழி எல்லாம் நண்பர்கள் பட்டாளம். அவர்களை பார்த்தவுடன் மனதிற்குள் ஒரே குஷியாகிப் போனது. பாருங்க குழந்தையை எவ்வளவு அழகா வச்சிக்கிட்டு இருக்காங்க.

இவர்கள் தண்ணீர் குடிக்கும் அழகை இன்றெல்லாம் ரசிக்கலாம். இந்த தண்ணீர் கோனே ஃபால்ஸ்சில் இருந்து வருகின்றது.


அம்மா தண்ணீர் அருந்தும் போது குழந்தையும் சேர்ந்து தண்ணீர் குடித்ததை காண மிகவும் அழகாக இருந்தது..

போட்டோ எடுக்கறதை பார்த்து பயந்துட்டாங்க போல. இல்லே அந்த குட்டியை தூக்கிகிட்டு வந்திடுவோம்னு மொறைக்கிறாங்க.


நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் இப்படி குளமாகிறது. அதில் எல்லாரும் குளிக்கறாங்க!!



NOTE: கோனே ஃபால்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த அருமையான சுற்றுலா தளம். சென்னையில் இருந்து சுமார் 60KM தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த புத்தூரில் இருந்து 10KM தொலைவில் அமைந்துள்ளது. நுழை வாயிலில் அழகிய வளவு அமைத்திருக்கிறார்கள். அதில் "கைலாசானாதா கோனே ஃபால்ஸ்" என்று எழுதி இருக்கும்.





12 comments :

வால்பையன் said...

சொந்தகாரங்க போட்டோவெல்லாம் நல்லாயிருக்கு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திருக்காரிக்கரை (காவேரி கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.
//


படங்கள் அருமை!

காவிரிக்கரை
காரிக்கரையாச்சா? -->சனீஸ்வர பகவான கொண்ணாந்து கரயில வச்சுட்டானுவளோ என்னவோ?

ராமகிரி ---> ஆரிய ஆதிக்கத்த உறுதிப்படுத்துது!

RAMYA said...

//
வால்பையன் said...
சொந்தகாரங்க போட்டோவெல்லாம் நல்லாயிருக்கு!
//

ஹை வாலு நன்றி, எல்லாரும்
ரசிப்பீங்கன்னுதான் போட்டோ எடுத்து வந்தேன்:)

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
திருக்காரிக்கரை (காவேரி கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.
//


படங்கள் அருமை!

காவிரிக்கரை
காரிக்கரையாச்சா? -->சனீஸ்வர பகவான கொண்ணாந்து கரயில வச்சுட்டானுவளோ என்னவோ?

ராமகிரி ---> ஆரிய ஆதிக்கத்த உறுதிப்படுத்துது!
//

ஸ்தல புராணாம் நிறைய சொன்னாங்க, கேக்கவே பிரமிப்பா இருந்திச்சு அண்ணா!

அமுதா கிருஷ்ணா said...

அந்த கால பைரவர் கோயிலுக்கு நான் போய் இருக்கிறேன். நிறைய நாய் சிலைகள் கோயில் உள்ளே இருக்கும் இல்லையா. தனியே மிக அமைதியாய் இருக்கும் இந்த கோயில். அங்கே இரண்டு குளம் இருக்குமே...ஃபோட்டோஸ் அருமை...

நட்புடன் ஜமால் said...

போட்டோஸுக்கு வழக்கமா நீங்க போடும் கமெண்ட்ஸ் ஸ்டைல் மிஸ்ஸிங்

போட்டோஸ் நல்லாயிருக்கு

Unknown said...

ஆஹா .. என்ன ஒரு அழகான பகுதி ....!! மிக்க நன்றி மகளே ...!! கூடிய விரைவில் இங்கு ஒரு கிளை ஆசிரமம் ஆரம்பித்துவிடுகிறேன் ...!!

இங்ஙனம் ஆசியுடன்,
ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ நயன்தாரானந்தா ஸ்வாமிகள்.
வசிய மலை அடிவாரம்,
துபாய் குறுக்கு சந்து,
துபாய்.

Chitra said...

Very nice pics and info.. :-)

உங்களில் ஒருவன் said...

தயவு செய்து, கோனே பால்ஸ் எங்குள்ளது, எப்படி போகவேண்டும், தங்கும் வசதி போன்றவற்றை பதிவில் போடுங்கள்

எங்களுக்கு வசதியாக இருக்கும்
நன்றி,

Anonymous said...

ஆஹா எல்லாம் அருமையா போஸ் குடுத்துருக்காங்க போட்டோவுக்கு :)

Anonymous said...

சும்மா ஊரை சுத்திட்டு வந்து போட்டா போட்டு வயித்தெரிச்சல் கெளப்பாதே

Thamira said...

நல்ல ஊர் சுத்துறீங்க மேடம். Lucky fellow.!