நமது நண்பர் ஜமால் அவர்களுக்கு இந்த பாராட்டை அளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பெருமையும் அடைகின்றேன்!! 
கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை.
பல கருத்துச் செறிந்த பதிவுகளைக் நண்பர் ஜமால் கொடுத்து இருக்கிறார். அவற்றில் எல்லாம் கருத்துக்கள் பல கோலோச்சின. ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் இடுகைகளை கொடுத்து இருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும் நிமிர வைத்த இடுக்கை.. அதுதான் பத்து வரிகள் நிறைந்த பதிவு. "பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.
படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?
பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.பின்னூட்டங்கள் எப்படி இருந்தது என்ற விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை. தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா! நண்பருக்கு பின்னூட்டம் வழியாக வாரி வாரி வழங்கினார்கள் நம் சக நண்பர்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன.

வரலாறு காணாத வகையில் நம் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர நண்பர் ஜமாலை அவர்களை அன்பில் திக்கு முக்காட செய்து விட்டனர். இதைக் கண்டு திகைத்த நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன் என் நண்பனுக்கு இடுக்கை ஒன்று போட்டு அது என்றென்றும் நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.

அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.
பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!