முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!
பாகம் II
==========
ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம். வெளியே நிறைய காலேஜ் பசங்க டான்ஸ் எல்லாம் ஆடினாங்க. வேடிக்கை பாத்துட்டு எங்க ரூம்க்கு போனோம். என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள். இதெல்லாம் நான் ஏற்கனவே கூறி விட்டேன். இப்போ தொடருவோம் சரியா ??
சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் ரூமிற்கு வந்தார். ரூமில் எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்ததாக கூறினார். அதற்கு அக்கா கூறினார்கள், நாங்களே இன்னும் ரூமை பார்க்கவில்லை, இருங்க குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்க்கின்றேன் என்றார்கள்.
நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன். அதற்கு அந்த மேலாளர் என்னை தலையில் இருந்து கால் வரை ஒரு மாதிரி பார்த்தார். பிறகு இங்கே எதுக்கும்மா Fan?? அதெல்லாம் இங்கே தேவையே இல்லை என்றார். என்னை ஏன் அவர் அப்படி பார்த்தார் என்று புரியவில்லை. அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன். அதற்கு மேல் Fan வேறே கேட்டதால் அந்த மேலாளர் என்னை ஒரு மாதிரிப் பார்த்திருக்காரு.
அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு. ஏனென்றால் ஒருவரும் எனக்கு சப்போர்ட்டா பேசவில்லை. அதான் அதுக்கு மேலே நான் வாயை திறக்கவே இல்லை.
எல்லாரும் படுத்துட்டாங்க. ஆனா எனக்குதான் தூக்கமே வரலை. மொத்தம் ஐந்து பெட், எல்லாம் டபுள் காட். எனக்கு என்று நான் பிடித்த இடம் கடைசி கட்டில். அதில் நானும் என் நெருங்கிய தோழியும் படுத்திருந்தோம். அவள்தான் நான் என்ன திட்டினாலும் கோவிச்சுக்க மாட்டா. என்னையை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு, நானும் எப்பவுமே அவளை கிண்டல் பண்ண மாட்டேன். மீதி எல்லாரையும் நல்லா ஓட்டுவேன். நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.
அதே போல் அன்றும் கடைசியா தான் நான் படுத்துக் கொண்டு இருந்தேன். இடம் மாற்றம் எனக்கு எப்பவும் தூக்கம் வராது. இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி. என்ன செய்ய?? எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.
நான் மட்டும் விழித்திருந்தேன். இப்போதுதான்விழித்திரு, தனித்திரு என்ற சொற்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது.
திடீரென்று ஏதோ சத்தம். என்னவென்று லைட் போட்டு பார்த்தேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள். இருவரில் ஒரு பையன் கீழே கிடந்தான். ஒருவன் மற்றொருவனை எட்டி உதைத்ததால் ஏற்பட்ட குழப்பம்.
ஆனால் உதைத்தவனோ ஒரு கேள்விக் குறியாக படுத்திருந்தான். கட்டிலில் இடமே இல்லை மற்றொருவனுக்கு. அவ்வளவு ஆக்கிரமிப்பு அவனை அடித்து எழுப்பி கீழே கிடந்தவனை கட்டிலில் படுக்க வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டோம்.
ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று அனைவரும் தூங்கி விட்டார்கள். மறுபடியும் எனக்குள் ஒரே போராட்டம். தூக்கம் வரலை.
ஜன்னல்கள் மூடி இருந்ததாலே காற்றோட்டமே இல்லாதது போலவும், மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு. அதனால் ஜன்னலை திறந்தேன் அவ்வளவுதான் ஐஸ் வந்து மேலே விழுந்தது போல் மூச்சு திணறி விட்டது. அவ்வளவு சில்! லேசாக திறந்து வைத்து விட்டு, கம்பளிப் போர்வைக்குள் புகுந்து விட்டேன். எனக்கு மட்டும் இரெண்டு கம்பளிப் போர்வை அதற்குள்ளும் ஒரே குளிர். உள்ளுக்குள் இருக்கும் எலும்புகள் கூட ஆடற மாதிரி தோன்றியது. ஐயோ! இந்த செப்டம்பரில் தெரியாமல் வந்திட்டோமே என்று என் மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டு இருந்தேன்.
இப்போது யாரோ குதித்து போல் ஒரு சத்தம், பிடி பிடி அவனை பிடிங்க என்று ஒரு அபயக் குரல். எனக்கு புரிந்துவிட்டது என்னவென்று, ஏனெனில் அந்த ஜன்னலில் கிரில் இல்லை. திறக்கும்போதே பயம்தான். ஆனாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான். அவ்வளவு தான் நான் பயந்து விட்டேன்; நாம் ஜன்னலை திறந்து வைத்தது தப்பா போச்சு எவனோ அது வழியா குதிச்சுட்டான்னு பயந்துட்டேன். இருட்டில் ஒன்றும் புரியவில்ல. அவன் எங்கு இருக்கிறான், யாரு பக்கமா நகருவான்னு கண்களை மிகவும் கூர்மையாக்கி கவனிக்க ஆரம்பித்தேன்.
இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன்.
எல்லாரும் எழுந்து விட்டார்கள், அக்கா எழுந்து லைட் போட்ட பிறகு யாரு யாருன்னு கேட்டாங்க. எல்லார் முகத்திலும் ஒரே பரபரப்பு! ஒரு பதிலும் இல்லை. அக்காவுக்கு கோவம் வந்துடுச்சு போல.
யாரு எங்கே ஒளிஞ்சி இருக்கீங்க மரியாதையா வெளியே வந்துடுங்கன்னு அக்கா சொன்னாங்க. ஆனால் யாரும் வரவில்லை. அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள். ஐயோ! அவ ரொம்ப பயப் படுவாளே உன் கூடத்தானே படுத்திருந்தாள் இப்போ எங்கே போனா? அவளை மொதல்லே தேடுங்கன்னு சொல்லிட்டு, நாங்கள் படுத்திருந்த ரூம் பக்கத்திலே சிறிய ஒரு டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது. அங்கே திருடன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு இருப்பானோ?? என்று அக்கா உடனே ஹோட்டல் மேலாளருக்கு போன் செய்தார்கள். அந்த கதவையும் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டார்கள்.
பிறகு ஒரு வழியாக எல்லாரும் நின்று கொண்டிருந்ததால் மெதுவாக நான் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தேன். அதுவரை எல்லாரும் என்னை எங்கே தேடுவது என்று விழித்துக் கொண்டிருந்தார்கள். நான் மெதுவா போய் என் தோழியின் தோள் மீது கை வைத்தேன். அவள் திருடன் திருடன் என்று அலறிக் கொண்டே கட்டிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தாள். நான் கூறுகின்றேன் நான்தான்பா உன் தோள் மீது கை வைத்தேன் என்று. அதை யாருமே காதில் போட்டு கொள்ளவில்லை. அப்புறம்தான் எங்க அக்காவிற்கு உறைத்தது போல. ஆமா நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேன்னு கேட்டாங்க. அவங்களோட எல்லாரும் என்னை அடிக்கற மாதிரி பார்த்தாங்க.
அதுக்குள்ளே விடுதி மேலாளர் வந்து விட்டார். எங்கேம்மா திருடன் என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாரு. வந்தவரு கேட்டது என்னான்னா, அப்படி எல்லாம் இங்கே யாரும் வர முடியாது அந்த அளவிற்கு செக்யூரிட்டி வச்சிருக்கோம். என்ன ஒரே ஆர்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டினாரு. அக்காவுக்கு கோவம் வந்திடிச்சு என்னாங்க இப்படி பேசறீங்க?? நானே சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்னு சொன்னாங்க. அப்போ சரிம்மா வந்த திருடன் எங்கே அப்படின்னு மேலாளர் கேட்டாரு. இல்லைங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நாங்க பார்த்தோம் என்று என் தோழி ஒருவள் பீலா விட்டாள்.
மேலாளர் சரி எங்கே காட்டுங்கள் என்றார். அக்கா அடைத்து வைத்த ரூமை காட்டினார்கள். அங்கே மெதுவா கையில் குச்சியுடன் சென்றார். அவருடன் எங்க அக்காவும் போனாங்க.
நான் எதுக்கும் இருக்கட்டும்னு ரூமின் ஒரு கோடியில் போய் நின்று கொண்டேன். வெளியே ஓடலாம்னு பார்த்தா கும்மிருட்டு. எங்கே ஓடுவது என்று தெரியவில்லை,அதான் அங்கே போய் நின்னுட்டேன்.
அந்த ரூமுக்குள்ளே போனா யாரையும் காணோம். மேலாளருக்கு ஒரே கடுப்பு. ஏம்மா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டிட்டாரு. அதான் எனக்கும் ஒன்னும் புரியலை. இருங்க யோசிக்கலாம்னு எங்க அக்கா சொன்னாங்க. அப்புறம்தான் ஆராய்ந்தார்கள், ஏன் திருடன் என்று முடிவு செய்தோமுன்னு யோசிச்சாங்க. ஆனா ஏன்னு புரியலை போல.
எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து எல்லோருடனும் சேர்ந்து பேச ஆரம்பித்தேன். அதுவரை சும்மா இருந்த தோழிகள் என்னை கண்ணகி பார்வை பார்த்தார்கள். மேலாளர் சரி எல்லாரும் எதை வச்சு திருடன்னு முடிவு பண்ணினீங்கன்னு கேட்டாரு?? அப்போதான் எல்லாருக்கும் அது உறைச்சுது.
நான் சொன்னேன் இல்லேங்க யாரோ பிடி பிடின்னு கத்தினாங்க அதான் பயந்துட்டோம்.நான் கூறியதை அந்த மேலாளர் நம்பாமல் என்னைய ஒரு மாதிரி பார்த்தார். ஏன்னா மொதல்லே நான் விட்ட உதாரிலே (Fan இல்லேன்னு சொன்னேனே)என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதான். போய்யா போன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டேன். வெளியே சிரிச்சேன்.
அப்போதான் எல்லாரும் கவனித்தோம் கட்டிலில் படுத்திருந்த ஒரு பையன் மறுபடியும் கீழே விழுந்து அப்படியே தூங்கி கொண்டிருந்தான். மற்றொருவன் கட்டிலிலேயே படுத்திருந்தான்.
பிறகுதான் என் தோழி மெதுவாக கூறினாள், இல்லேப்பா என் தம்பி கொஞ்சம் தூக்கத்திலே உளருவான் ஆனா இப்படி எல்லாம் கத்துவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை என்று மிகவும் சாதரணமாக கூறினாள். அவ்வளவுதான் எல்லாரும் அவள் மீது கொல வெறியோட பாய்ந்தோம்.
மவளே!! நாங்க உயிரை கையிலே பிடிச்சிகிட்டு எங்கே ஒளியரதுன்னு தெரியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும். நொந்து நூலாயிட்டேன் என்று சொல்லி நான்தான் அதிகமா அடிச்சுட்டேன். அப்புறமா, தம்பிங்க இரண்டு பேரையும் அடிச்சு எழுப்பிட்டோம்.
மரியாதையா உன் தம்பியைக் கூட்டிகிட்டு காலையிலே மலையை விட்டு ஏறங்கிடனும் ஆமா. அப்படின்னு கண்டிஷனா சொல்லிட்டேன். அதுக்கு அந்த தம்பி அக்கா நான் இனிமேல் அதுமாதிரி எல்லாம் கத்த மாட்டேன் என்னை அனுப்பிடாதீங்க என்று கெஞ்ச ஆரம்பிச்சான.
பாத்தா பாவமா போச்சு. சரிடா தூங்கும் போது வாயில் துணியை கட்டிக்கிட்டு தான் தூங்கனும். உன்னாலே அந்த பையன் வேறே ரொம்ப கஷ்டப் பட்டான் தெரியுமா?? அப்படின்னு சொன்னேன். இப்படிதாங்க ஒரு நாள் முடிஞ்சிபோச்சு.
பிறகு எங்க அக்கா என்னை நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே?? அடி விழுந்தா எல்லாருக்கும் விழட்டுமே அப்படி நினைச்சா நல்லா இருக்கும் இல்லையா என்றார்கள். அட போங்க அக்கா எனக்கு பயத்துலே ஒண்ணுமே புரியலை அதான்...........
96 comments :
வணக்கம் ...
///அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.//
அடடே... நம்ம உஷார் ரம்யாவா....
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.//
தயவுசெய்து ஒத்துக்கங்க ரம்யா.. உண்மைதான் ஜெயிக்குமாம்
//
அதற்கு அந்த மேலாளர் என்னை தலையில் இருந்து கால் வரை ஒரு மாதிரி பார்த்தார்
//
அந்த ஒரு மாதிரிங்கிறது.. கொலவெறியோட தானே :)
//
எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.
//
இதென்ன புதுக்கதை
நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஹய்யாஆஆஆஆ
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.//
ha ha vetkkama he he nalla comedy panringa..
லூசு ரேஞ்சுக்கு he he avarukkum therinchu pocha :-)
///லூசு ரேஞ்சுக்கு///
உண்மைகள் வெளிய வருதே. இது என்ன, சுய விளக்கமா?
/*முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!*/
theriyuthanga ka.. theriyuthu..
/*அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. */
partha udane kandu pudichitar pola ;)
/*இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன். */
Sema comedy.. :D
Nalla anubavam.. return la endha comedy yum illaya.. ithoda mudichiteengale :(
PS: indha ulavu.com ah yaaru kooptathu modhal comment poda .. yaarukume 'me the first' vaaipu tharala.. athuvum pottukala :(
நல்ல அனுபவம், நானும் ஒன்னு எழுதறேன்.
சிரிச்சு சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சு..
// ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம். //
அதாவது மாலையில் நன்றாக சாப்பிட வேண்டும் என்றால் ஊர் சுற்றவேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்.
// வெளியே நிறைய காலேஜ் பசங்க டான்ஸ் எல்லாம் ஆடினாங்க. //
ஆடினாங்களா... ஆட வைக்கப் பட்டார்களா? பக்கத்தில் யாராவது குச்சி வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தாங்களா?
// என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள். //
மைண்ட் ரீடிங்?
// இதெல்லாம் நான் ஏற்கனவே கூறி விட்டேன். இப்போ தொடருவோம் சரியா ?? //
ஓ பாகம் 2 இன்னும் ஆரம்பிக்கவேயில்லயா?
// சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் ரூமிற்கு வந்தார். ரூமில் எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்ததாக கூறினார். //
ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கு..
// என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன். //
ஓ ஊட்டியில் இருப்பதை மறந்து விட்டீர்களா?
// அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, //
அது குல்லா அப்படின்னு சொல்லக் கூடாது.. குரங்கு குல்லா அப்படின்னு சொல்லலாம்.
// அவள்தான் நான் என்ன திட்டினாலும் கோவிச்சுக்க மாட்டா. //
அது அப்படியில்லை... தூக்கத்தில் உதைத்தாலும் தாங்குவாங்க அப்படின்னு எழுதியிருக்கணும்
// என்னையை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு, நானும் எப்பவுமே அவளை கிண்டல் பண்ண மாட்டேன். மீதி எல்லாரையும் நல்லா ஓட்டுவேன்.//
இது எல்லாம் ரொம்ப அதிகம். ஓட்டுவதில் நண்பண் என்னடா, தோழி என்னடா அப்படின்னு பாட வேண்டியதுதானே..
// நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.//
ரொம்ப நல்லவங்க நீங்க..
அனுபவம் நல்லா இருக்கு, அடுத்த முறை போகும் போது சொல்லி அனுப்புங்க
:-))))))))))))))
//முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!
பாகம் II//
அதுக்கெல்லாம் பயப்படமாட்டோம்.,
இந்தா உள்ள வந்திட்டோம்!!!!!
//என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள். இதெல்லாம் நான் ஏற்கனவே கூறி விட்டேன்//
இருந்தாலும் இன்னோர் தடவ சொல்லுங்களேன்., கேக்க நல்லா இருந்துச்சு....
//நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே//
இதோ வந்திட்டேன், ரம்யாவோட FAN(விசிறி).
இனி பிரச்சனை இருக்காது...
//பிறகு இங்கே எதுக்கும்மா Fan??//
ஏய்., எங்களுக்கு, கன்னத்துல போட்டுக்க, காலில் விழ எப்பவும் எங்களுக்கு ஃபேன் வேண்டும், ஆமா!!!
//அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.//
அந்த ரெண்டாவது ஸ்வெட்டேர் யாரோடது???
பாவம் அக்கா!!!!!!!
// ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//
ரெண்டு நிமிஷம் தான் மேலயும், கீழயும் பாத்தாய்ங்க...
உடனே லூ^&^ ன்னுட்டாய்ங்க...
ஆங்ங்ங்ங்ங்ங்....
/எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு. //
அடடே... வீடியோ பண்ணுங்கப்பா...
அசிஸ்டன்ஸ் வீடியோ ப்ண்ணுகங்கப்பா...
/ஏனென்றால் ஒருவரும் எனக்கு சப்போர்ட்டா பேசவில்லை. அதான் அதுக்கு மேலே நான் வாயை திறக்கவே இல்லை.//
கவலைப்படாதீங்க ரம்யா!!!
நாங்க இருக்கோம்...
ஆனா, அந்த குழந்தை பசங்களை ஏமத்தினதுல எனக்கெல்லாம் வருத்தம் தான்,,,
//அவள்தான் நான் என்ன திட்டினாலும் கோவிச்சுக்க மாட்டா.//
அதனால தான் அவள எல்லோரும் நல்லவன்னு சொல்றாங்க....
ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்...
//மீதி எல்லாரையும் நல்லா ஓட்டுவேன்//
எல்லாத்தையும் ஓட்டுவீங்களா???
எங்க மாடு ஓட்ட்த்தெரியுமா??
ஆடு ஓட்டத்தெரியுமா?
/கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.//
அதுக்கு திருடன் தானே கவலைப்படணும்...
/இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி. என்ன செய்ய??//
அடப்பாவி, ரம்யா!!!
இதையாச்சும் அந்த குழந்தை பசங்களுக்கு கொடுக்கலாம்ல...
//இப்போதுதான் விழித்திரு, தனித்திரு என்ற சொற்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது//
செம கட்டோ..
பசித்திரு ஞாபகத்துக்கு வல்லீயே...
/ஒருவன் மற்றொருவனை எட்டி உதைத்ததால் ஏற்பட்ட குழப்பம்.//
அனேகமாக.,, அந்த (மன) பிராந்தி யாருக்குன்னுதான் சண்டையாக இருக்கம்...
//ஆனால் உதைத்தவனோ ஒரு கேள்விக் குறியாக படுத்திருந்தான்//
பரவாயில்லையே., பைய பதினஞ்சு வயசுலயே நல்லா கேள்வி கேப்பானோ?
/இடமே இல்லை மற்றொருவனுக்கு. அவ்வளவு ஆக்கிரமிப்பு //
தம்பிக்கு அரசியல் ஆர்வம் அதிகமோ???
//உள்ளுக்குள் இருக்கும் எலும்புகள் கூட ஆடற மாதிரி தோன்றியது//
பயப்புட ஒன்னுமில்லை ஜீன்ஸ் படம் பாத்ததோட பாதிப்புதான்..
/பிடி பிடி அவனை பிடிங்க என்று ஒரு அபயக் குரல்.//
அடுத்த தம்பி திரும்பவும் கீழ விழுந்துட்டானா.....
/ஆனாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான்//
கன்னாபின்னா ரிபீட்டேய்...
/ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன்.//
இதுக்குத்தான் வாழைப்பழம் கொடுக்குறா மாதிரி, போட்டோ அடுக்குற மாதிரி, குரங்கண்ணன் கூட அதிகம் பழக்கூடாது...
/அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள்//
உணமையை சொல்லுங்க, அக்கா பயந்தாங்களா??? இல்லை, இல்லை
ரம்யாவைக் காணோம்ன்னு சந்தோசப்பட்டாங்களா!!!
//நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன்.//
சரியான கேள்வி தான் ரம்யா...ஆனா அதை ஊட்டியில தான் கேட்கக் கூடாது...
//ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//
ஹா...ஹா.ஹா...
//எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.//
வெட்கம்...?
//பாத்தா பாவமா போச்சு. சரிடா தூங்கும் போது வாயில் துணியை கட்டிக்கிட்டு தான் தூங்கனும்.//
இப்படி ஒரு தண்டனையா...
ம்...நல்ல காமெடியான அனுபவம் தான்...
\\வெட்கம்...?\\
என்னாச்சி
ஏன் இந்த கேள்வி
\\வெட்கம்...?\\
என்னாச்சி
ஏன் இந்த கேள்வி
//
அதான் எனக்கே தெரியலையே!!
வாங்க வாங்க ஜமால் வணக்கம்,
என்ன நலமா??
ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம்\\
மலையில்
ஒரு
மாலை
அட நீங்களே 50 அடிச்சிக்கிட்டியளா
வெளியே நிறைய காலேஜ் பசங்க டான்ஸ் எல்லாம் ஆடினாங்க\\
அவங்கன்னா அப்படித்தான்
ஜாலியான வாழ்க்கை
//
நட்புடன் ஜமால் said...
அட நீங்களே 50 அடிச்சிக்கிட்டியளா
//
அட, நான் கூட இதை எதிர் பாக்கலை ஜமால் :)
//
ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் ...
//
வணக்கம் ஆ.ஞானசேகரன்!!
///அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.//
அடடே... நம்ம உஷார் ரம்யாவா....
//
நான் இதுலே எல்லாம் ரொம்ப உஷாரு !!
//
ஆ.ஞானசேகரன் said...
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.//
தயவுசெய்து ஒத்துக்கங்க ரம்யா.. உண்மைதான் ஜெயிக்குமாம்
//
ஆமா ஆமா நீங்க சொல்லறது நூறு சதவிகிதம் உண்மை :))
என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள்\\
மனதின் குரல் உங்களுக்கு கேட்க்குமோ!
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//
எப்படித்தான் கண்டு பிடிக்கறாய்ங்களோ !!!!
////
எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.
//
கூச்ச்ச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈ......
//நட்புடன் ஜமால் said...
என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள்\\
மனதின் குரல் உங்களுக்கு கேட்க்குமோ!
//
ரம்யா ஒரு மைண்ட் ரீடர்.
அவ்வளவுதானா... முடிஞ்சிப்போச்சா... நல்லாத்தான் ரவுசு பண்றீங்க!
http://biskothupayal.blogspot.com/
ரம்யா நேம்பே
நன்றி!
அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.
mmmmmmmm ippadi irunthum neega fan kettu iruekenga neega rompa nallavanga than pa
நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.
rompa theliva thana irkenga apparam eaan avaru ungala oru lossu mathiri pathutu ponaru
//இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி//
ஏன் மன விஸ்கியாக இருக்ககூடாதா?
ஹாய் ரம்யா,
ரெண்டு பதிவுகளும் சுவாரஸ்யம்..
நான் april fool பதிவானுக்கூட யோசிச்சேன்.. ஹி ஹி ஹீ
:) ha ha eppadi ippadi yellam
உங்க ஊட்டி பயணக்கட்டுரையைப் படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. வயிறு புண்ணானால் அதற்கு நீங்க தான் முழுப் பொறுப்பு.
//
ஆளவந்தான் said...
//
அதற்கு அந்த மேலாளர் என்னை தலையில் இருந்து கால் வரை ஒரு மாதிரி பார்த்தார்
//
அந்த ஒரு மாதிரிங்கிறது.. கொலவெறியோட தானே :)
//
இல்லே ஆளவந்தான் நான் ஏதோ எங்கிருந்தோ தப்பிச்சு வந்துட்டேன்னு பாத்தாரு.
//
ஆளவந்தான் said...
//
எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.
//
இதென்ன புதுக்கதை
//
புது கதை இல்லை, பழைய கதைதான்
நிஜம்மா ஒரே வெக்கமா போச்சு.
//
ஆ.ஞானசேகரன் said...
நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஹய்யாஆஆஆஆ
//
நீங்க எங்க அக்கா கட்ச்சியா ??
சரி சரி :))
//
Suresh said...
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு.//
ha ha vetkkama he he nalla comedy panringa..
லூசு ரேஞ்சுக்கு he he avarukkum therinchu pocha :-)
//
வாங்க சுரேஷ் ரொம்ப நன்றி !!
ஆமா சுரேஷ் ஹோட்டல்
டேமேஜருக்கு தெரிஞ்சி போச்சு :))
//
pappu said...
///லூசு ரேஞ்சுக்கு///
உண்மைகள் வெளிய வருதே. இது என்ன, சுய விளக்கமா?
//
என்ன பண்ண அப்பப்போ உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கே :)
//
kanagu said...
/*முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!*/
theriyuthanga ka.. theriyuthu..
/*அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. */
partha udane kandu pudichitar pola ;)
/*இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன். */
Sema comedy.. :D
Nalla anubavam.. return la endha comedy yum illaya.. ithoda mudichiteengale :(
PS: indha ulavu.com ah yaaru kooptathu modhal comment poda .. yaarukume 'me the first' vaaipu tharala.. athuvum pottukala :(
//
வாங்க கனகு, வந்தமைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி!!
//
வருங்கால முதல்வர் said...
நல்ல அனுபவம், நானும் ஒன்னு எழுதறேன்.
//
வாங்க முதல்வர், எழுதுங்க எழுதுங்க :)
//
இராகவன் நைஜிரியா said...
சிரிச்சு சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சு..
//
வாங்க அண்ணா சிரிங்க சிரிங்க நல்ல சிரிங்க.
உள்ளமமும், உடலும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.
//
இராகவன் நைஜிரியா said...
// நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.//
ரொம்ப நல்லவங்க நீங்க..
//
ரொம்ப நன்றி அண்ணா, ரசித்தமைக்கும்
என்னை நல்லவங்கன்னு சொன்னதுக்கும்
ஹிஹிஹிஹி!!
//
நசரேயன் said...
அனுபவம் நல்லா இருக்கு, அடுத்த முறை போகும் போது சொல்லி அனுப்புங்க
//
கண்டிப்பா சொல்லி அனுப்பறேன் நசரேயன்.
வந்து எங்களுடன் கலந்துக்கங்க :)
//
ச்சின்னப் பையன் said...
:-))))))))))))))
//
வாங்க ச்சின்னப் பையன் அண்ணா மிக்க நன்றி!
//
அப்பாவி முரு said...
//நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே//
இதோ வந்திட்டேன், ரம்யாவோட FAN(விசிறி).
இனி பிரச்சனை இருக்காது...
//
ஹா ஹா அப்படியா முரு ரொம்ப நன்றி :)
//
அப்பாவி முரு said...
//அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.//
அந்த ரெண்டாவது ஸ்வெட்டேர் யாரோடது???
பாவம் அக்கா!!!!!!!
//
இல்லே முரு அதுவும் என்னோடதுதான்
ரொம்ப குளிரிச்சா, ஊட்டியிலேயே எனக்கு இன்னொரு ஸ்வெட்டேர் வாங்கிட்டேன்.
ஹி ஹி ஹி ஹி !!
//
அப்பாவி முரு said...
/அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள்//
உணமையை சொல்லுங்க, அக்கா பயந்தாங்களா??? இல்லை, இல்லை
ரம்யாவைக் காணோம்ன்னு சந்தோசப்பட்டாங்களா!!!
//
இல்லே ரொம்ப பயந்துட்டாங்களாம் :))
//
புதியவன் said...
//நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன்.//
சரியான கேள்வி தான் ரம்யா...ஆனா அதை ஊட்டியில தான் கேட்கக் கூடாது...
//
ஆமா புதியவன், அதுவும் கொஞ்சம் தெனாவெட்டா வேறே கேட்டுபிட்டேன் :)
//
புதியவன் said...
//ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//
ஹா...ஹா.ஹா...
//
ஆமா, அப்படித்தான் பார்த்தாரு புதியவன் :)
//
அ.மு.செய்யது said...
//அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு.//
எப்படித்தான் கண்டு பிடிக்கறாய்ங்களோ !!!!
//
வாங்க வாங்க அ.மு.செய்யது நன்றி!!
//
குடந்தைஅன்புமணி said...
அவ்வளவுதானா... முடிஞ்சிப்போச்சா... நல்லாத்தான் ரவுசு பண்றீங்க!
//
வாங்க வாங்க குடந்தை அன்புமணி
நன்றி ரசித்தமைக்கு
இன்னும் நிறைய இருக்கு
ஹி ஹி ஹி !!
//
gayathri said...
அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன்.
mmmmmmmm ippadi irunthum neega fan kettu iruekenga neega rompa nallavanga than pa
//
வாங்க வாங்க காயத்ரி
நன்றி வந்தமைக்கும்.
வந்து ரசித்தமைக்கும்
மிக்க நன்றி !!
//
gayathri said...
நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.
rompa theliva thana irkenga apparam eaan avaru ungala oru lossu mathiri pathutu ponaru
//
நானு ரொம்ப தெளிவாத்தான் இருப்பேன் கயத்த்ரி :))
//
வால்பையன் said...
//இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி//
ஏன் மன விஸ்கியாக இருக்ககூடாதா?
//
இதுக்கு எனக்கு எந்த மாதிரி கமெண்ட் வரும்னு முன்னமேயே தெரியும் :))
//
பதுமை said...
ஹாய் ரம்யா,
ரெண்டு பதிவுகளும் சுவாரஸ்யம்..
நான் april fool பதிவானுக்கூட யோசிச்சேன்.. ஹி ஹி ஹீ
வாங்க புதுமை
//
வருகைக்கும், ரசனைக்கும்
மிக்க நன்றி நன்றி!!
//
தாரணி பிரியா said...
:) ha ha eppadi ippadi yellam
//
ஹா ஹா தாரிணி எல்லாம் நீங்க கொடுத்த தைரியம்தான் :))
//
விஜய் said...
உங்க ஊட்டி பயணக்கட்டுரையைப் படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. வயிறு புண்ணானால் அதற்கு நீங்க தான் முழுப் பொறுப்பு.
//
ஹா விஜய் சூப்பர், நல்லா சிரிங்க, சிரிங்க.
எல்லாரும் சிரிச்சா எஅன்க்கு ரொம்ப சந்தோஷம்தான்.
வயிறு வலிச்சா வாங்க இன்னொரு சிரிப்பு கதை போடறேன்.
அப்போ எல்லாம் சரியா போய்டும் :)
//
நட்புடன் ஜமால் said...
ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம்\\
மலையில்
ஒரு
மாலை
//
SUPER JAMAAL SUPER
நல்லாத்தான் கலக்கி இருக்கீங்க!!!
:)
Post a Comment