Monday, May 4, 2009

ஜில்லென்று ஒரு காதல்!!


காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!



அறிமுகம் சற்றே தெளிந்த முகம்
=============================
கதாநாயகன்: ராஜா
கதாநாயகி: காஜோல்

கடற்கரை ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
காதலர்கள் நின்றுகொண்டும், தனிமையாக அமர்ந்து பேசிக் கொண்டும், கடல் நீரில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.

கடல் நீர் வந்து கால்களை நனைத்து விட்டு ஓடுவது பார்க்க, அனுபவிக்க மிகவும் அருமையான ரசனை மிக்க சுகமான ஒரு விருந்து. வந்து கொண்டிருந்த அலைகளின் எண்ணிக்கைதான் நம் கதாநாயகிக்கு மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது.

யாரு அனுப்பிய இந்த அலைகள்?நம்மை வந்து வருடுகிறதே. நினைக்கவே சுகமா இருக்கே!நம் காதலன் வந்தாலாவது இரெண்டு பேரும் சேர்ந்து அலைகளில் கால்களை நனைக்கலாம். பாத்து,பாத்து என் கண்கள் தான் பூத்து போய்ட்டது. ஆளையும் காணோம், தேளையும் காணோம். சரி அலைகளின் ஆர்ப்பரிப்பை ரசிக்க கிடைத்த நேரமாக நினைக்கின்றேன் இந்த நேரத்தை. ஆனாலும் அவன் வரட்டும்!!

ஆனால், அவள் யாருக்காக காத்திருந்தாளோ அவனின் வருகையோ தாமதமாகிக் கொண்டிருந்தது. அலுப்பு சலிப்பின் உச்சக் கட்டத்தில் கைக் கடிகாரத்தை பார்த்தவாறு தனியாக அமர்ந்திருந்தாள்.

காஜோல்: ரொம்ப நேரமா இங்கேயே நின்னுகிட்டு இருக்கோமே.

சுண்டல் விற்கும் தம்பிவேறு, எப்படியாவது அந்த அக்காவிடம் சுண்டல் விற்று விட வேண்டும் என்று பிடிவாதமாக அவன் மனது கூறியது. அதனால் அச்சிறுவன் சிறிதும் மனம் தளராது அக்கா அக்கா சுண்டல் என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான்.

காஜோல்: உச்சகட்ட கோபத்தில் அமர்ந்திருந்ததால் முழு கோபத்தின் வீச்சையும் அச்சிறுவன் மீது காட்டினாள். அவனை அடிக்காத குறைதான்.திடீரென்று எதிர் திசையில் தன் காதலன் ஓடி வருவது தெரிந்தது. அவன்தான் என்று உறுதி செய்து கொண்டாள். வரட்டும் எவ்வளவு நேரமா இங்கே உக்காந்து இருக்கோம். இவனுக்கு நல்லா தண்ணி காட்டனும். "வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே" என்று கருவிக் கொண்டிருந்தாள்.

ராஜா:ஓடி வந்தவன் அவளின் அருகே விழுந்தான். அவ்வளவு வேகமா ஓடி வந்ததை உணர்த்தத்தான் அப்படி ஒரு நடிப்பு.

காஜோல்: யாருப்பா நீ, ஏன் இங்கே வந்து விழரே, போய் கடல்லே விழு, அங்கே போயி விழுந்தாலும் யாராவது உன்னைய காப்பாத்துவாங்க.

ராஜா: ஏய் என்னாப்பா ரொம்ப கோவமா? ஒரு மாதிரி பேசறே? நான் எவ்வளவு வேகமா ஓடி வந்தேன் தெரியுமா?? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமே பேசறே ?

காஜோல்: டேய் ரொம்ப பேசாதே, எனக்கு வர்ற கோவத்துலே அப்படியே உன் கழுத்தை நெரிச்சுடுவேன். நீ பேசாதே என் கிட்டே.

ராஜா: இங்கே பாரும்மா நான் ஒன்னும் உன்னைய காக்க வைக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இல்லே, ரொம்ப கஷ்டப்பட்டுதான் வந்திருக்கேன்.

காஜோல்: நீ என் கிட்டே பேசாதே, ஆமா சொல்லிட்டேன், நீ என் கிட்டே பேசாதே.

ராஜா: ஆமா, நான் வந்ததில் இருந்தே உன்னைய கவனிக்கறேன், நீ ஏன் சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டே இருக்கே ? உனக்கு ஏதாவது உடம்பு சரி இல்லையா?? டாக்டர் கிட்டே போகலாமா??
காஜோல்: டேய் என்ன என்னை லூசுன்னு சொல்லறியா?? நீ தாமதமா வந்ததும் இல்லாமே என்ன பேசிகிட்டு இருக்கே!!இப்படி எல்லாம் பேசினா எல்லாம் சரியா போய்டுமா?

ராஜா: இங்கே பாரு நான் அப்பவே சொல்லிட்டேன், எனக்கு பல பிரச்சனை, ரொம்ப கஷ்டப்பட்டுதான் இங்கே வந்திருக்கேன். அத மொதல்லே தெரிஞ்சிக்கோ.

காஜோல்: என்னா கஷ்டம்? நான் இங்கே எவ்வளவு நேரமா உக்காந்து இருக்கேன். எவ்வளவு பேரு போனாங்க!எவ்வளவு பேரு இப்போ இருக்காங்கன்னு எனக்கு தெரியும். அந்த அளவுக்கு நான் இங்கே உக்காந்து இருக்கேன்.

ராஜா: நீ ஏனம்மா இதெல்லாம் கணக்கு எடுக்கறே?? வந்தா வந்த வேலையை மட்டும் தான் பார்க்கணும்.

காஜோல்: வேணாம்!! எனக்கு வெறியே வருது, அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.

ராஜா: என்ன செய்வேன்னு உனக்கே தெரியாதுதானே, அதுக்கு ஏன் இப்படி கண்ணை எல்லாம் பெரிசாக்கிட்டு, மூஞ்சியை கோணிகிட்டு கத்தறே? சாதரணமா சொல்லேன்.

காஜோல்: என்னா நான் கத்தறேனா? நானோ ரொம்ப மன அழுத்ததோட உக்காந்திருக்கேன். கொஞ்சம் கூட என்னான்னு அத யோசிக்காம, என்னையே நீங்க கிண்டல் பண்ணறீங்களா??

ராஜா: இல்லேம்மா நீ எங்கே என்னைய பேச விட்டே? என்னை பார்த்ததுமே தான் ஆரம்பிச்சிட்டியே? சரி சரி, சொல்லு என்ன பிரச்சனை உனக்கு??

காஜோல்: எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாரு. அதை சொல்லத்தான் இங்கே உங்களை வரச்சொன்னேன்.

ராஜா: நல்ல விஷயம் தானே, அதை போயி ஏன் எப்படி மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு சொல்லறே?

காஜோல்: வேணாம் என்னை கொலை பண்ண வச்சிடாதீங்க. நான் ரொம்ப கோபமா இருக்கேன். ஆமா சொல்லிட்டேன். இது உங்களுக்கு நல்லதே இல்லை.

ராஜா: சரி சரி வெவரம் சொல்லு. மாப்பிள்ளை எந்த ஊரு, என்ன படிச்சிருக்காரு, எங்கே வேலைப் பாக்கறாரு. எல்லா வெவரமும் கொஞ்சம் சொல்லு.

காஜோல்: இப்போ நீங்க என்ன கேள்வி கேக்கறீங்க? மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாருன்னு தானே சொன்னேன். அதுக்குள்ளே மாப்பிள்ளை வெவெரம் கேக்கறீங்க. இது கொஞ்சம் அதிகமான கேள்வியா படலை உங்களுக்கு ??

ராஜா:இல்லேம்மா ஏதாவது குறிப்பிட்டு போட்டோ காட்டி இருந்தாருன்னா அவரு கிட்டேயே போயி பேசலாம்னு நினைச்சேன் அவ்வளவுதான்.

காஜோல்:அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. மொதல்லே நீங்க எங்க அப்பாவை தைரியமா வந்து பாருங்க. அப்புறம் மீதி எல்லாம் பேசிக்கலாம்.

ராஜா:என்னா உங்க அப்பாவை வந்து நான் பாக்கணுமா? சரியாபோச்சு, உங்க அப்பாவை பார்த்தாலே எனக்கு பயந்து வருது. அவரு மீசையும், போட்டுக்கற துணியும் ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லையே.

காஜோல்: இங்கே பாருங்க இதெல்லாம் நல்லாவே இல்லை. நீங்கதான் என்னை சுத்தி சுத்தி வந்து காதல் அது இது என்றெல்லாம் கூறி என் மனதை மாற்றிவிட்டு. இப்போ எங்க அப்பாவை வந்து சந்திக்க மாட்டேன்ன்னு சொன்னா என்னா அர்த்தம்? இதெல்லாம் கொஞ்சம் கூட சரியா இல்லே. மரியாதையா நாளைக்கு சனிக்கிழமைதான். எங்கப்பா எங்கேயும் வெளியே போக மாட்டாரு. நீங்க வரீங்க.

ராஜா:ஏம்மா சனிக்கிழமைன்னா உங்கப்பா வெளியே போகமாட்டாரா? அதுசரி அவருக்கே சனியை பார்த்து பயமா? சரி சரி முட்டைகண்ணை போட்டுக்கிட்டு முழிக்காதே. நான் நாளைக்கு காலையிலே சரியா பத்து மணிக்கு வரேன். உங்கப்பனை ஒரே இடத்திலேயே இருக்கச் சொல்லு.

காஜோல்: இங்கே பாருங்க தேவை இல்லாமே எங்கப்பாவை மரியாதை இல்லாமே பேசாதீங்க, எனக்கு கெட்ட கோபம் வரும், எங்கப்பா கிட்டே கச்சிதமா நம்ம கதை மட்டும் பேசி முடிக்கணும் சரியா??

ராஜா:நீயே அசந்திடுவே பாரு, நான் பேசப்போற பேச்சுலே அவரு அந்த பையனையே உனக்கு முடிச்சுருவாரு.

காஜோல்:சரி, இதுக்கு மேலே நான் உங்கிட்டே பேசற மாதிரி இல்லே. நான் கிளம்பறேன். நான் இல்லாமல் போனாதான் என் அருமை உனக்கு தெரியும்.

ராஜா:சரி சரி, விடு ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன். அதே போயி தப்பா நினைச்சுட்டியே நாளைக்கு வரேன் திருமணத்தை பேசி முடிச்சுடலாம்.


தொடரும்....
ரம்யா




41 comments :

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்டூ...

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கல...

படிச்சுட்டூ வந்துடறேன்.

இராகவன் நைஜிரியா said...

// "வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே" என்று கருவிக் கொண்டிருந்தாள்.//

இனிமேத்தான் மாட்டனுமா...

அய்யோ பாவம்...

இராகவன் நைஜிரியா said...

// ராஜா:நீயே அசந்திடுவே பாரு, நான் பேசப்போற பேச்சுலே அவரு அந்த பையனையே உனக்கு முடிச்சுருவாரு. //

மனசுல ஆசைப் பாரு...

ஆளவந்தான் said...

//
"வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே"
//

“சொந்த சரக்கு” போல தெரியுதே :)

ஆளவந்தான் said...

//
காஜோல்: யாருப்பா நீ, ஏன் இங்கே வந்து விழரே, போய் கடல்லே விழு, அங்கே போயி விழுந்தாலும் யாராவது உன்னைய காப்பாத்துவாங்க.
//
உண்மை தான் அவ பக்கதுல விழுந்தா வாழ்நாளுக்கும் எந்திரிக்க முடியாது

ஆளவந்தான் said...

//
ராஜா:என்னா உங்க அப்பாவை வந்து நான் பாக்கணுமா? சரியாபோச்சு, உங்க அப்பாவை பார்த்தாலே எனக்கு பயந்து வருது. அவரு மீசையும், போட்டுக்கற துணியும் ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லையே.
//

கேலி பண்ற மாப்பிள்ளை கிடைக்க மாமனார் குடுத்து வச்சிருக்கனும்..

ஓவர் டூ ச்சின்ன பையன்..

ஆளவந்தான் said...

//
இராகவன் நைஜிரியா said...
// "வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே" என்று கருவிக் கொண்டிருந்தாள்.//
இனிமேத்தான் மாட்டனுமா...
அய்யோ பாவம்...
//

இக்கருத்தை கன்னாபின்னாவென ரிப்பீட்டுகிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

// "வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே" என்று கருவிக் கொண்டிருந்தாள்.//

இனிமேத்தான் மாட்டனுமா...
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

மெய்யாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உண்மை..............

நசரேயன் said...

உள்ளேன் பூலான் தேவி

நசரேயன் said...

என்ன சொந்த கதையா?

நசரேயன் said...

கும்மி அடிக்க மறுபடி வாரேன்

அப்பாவி முரு said...

//காஜோல்: டேய் என்ன என்னை லூசுன்னு சொல்லறியா?? //

aamaannaa aamaa, illainnaa illai

புதியவன் said...

//ஜில்லென்று ஒரு காதல்!!//

தலைப்பை பார்த்ததும் மனசுக்குள்ள குளிரடிக்குது...

புதியவன் said...

//ஆளையும் காணோம், தேளையும் காணோம்.//

இங்கே தேள் எதுக்கு ரம்யா...?

புதியவன் said...

//அச்சிறுவன் சிறிதும் மனம் தளராது அக்கா அக்கா சுண்டல் என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான்.//

என்ன ஒரு விடா முயற்சி...

புதியவன் said...

//இவனுக்கு நல்லா தண்ணி காட்டனும். "வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே" என்று கருவிக் கொண்டிருந்தாள்.//

ஐயோ பாவம் அந்த ஹீரோ...

புதியவன் said...

கதாநாயாகனும் கதாநாயகி இப்படித்தான்
பேசிக்கொள்வார்களா...

ரொம்ப நல்லா இருக்கு உரையாடல்கள்
அனைத்தும்...நகைச்சுவையோடு
ஒரு நல்ல காதல் காட்சி பார்தது போல் இருக்கிறது,

தொடருங்க ரம்யா காத்திருக்கிறோம்...

தேவன் மாயம் said...

ரம்யா!
தொடர்கதையா?

தேவன் மாயம் said...

"வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே"-- இது ரம்யா ப்ராண்ட்

"உழவன்" "Uzhavan" said...

நல்லா எழுதியிருக்கீங்க.. பாராட்டுக்கள்.
சில இடங்கள்ல மட்டும் பேச்சு வழக்குல எழுதியிருக்கீங்க.. எல்லா இடத்துலயும் ஒரே மதிரி எழுதுனா நல்லாருக்கும்.
இந்த சுண்டல் விக்கிற பையனையும் ஒரு பாத்திரமா கொண்டுவந்து, ரெண்டுபேருக்கும் கொஞ்சம் காமடி டயலாக் குடுத்திருக்கலாம்.

வால்பையன் said...

இது என்ன லவ்ஸ்டோரியா!

தொடரும்னு வேற இருக்கே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கிபவா said...

ரைட்டு..ஜுட்டு

Suresh said...

ஜில்லு தான்

பட்டாம்பூச்சி said...

தொடருங்க ரம்யா. பாராட்டுக்கள்.
:)

Vijay said...

வாவ் நீங்களும் கதை சொல்ல அரம்பிச்சிட்டீங்களா? கதை நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க. அசத்துங்க :-)

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்கு ரம்யா மேடம். ஜிலு ஜிலு காதல் தொடரோ... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம். (தொடர் கதை சீசன் போல... நான்கூட ஒரு மினிதொடர் எழுதிவிட்டு நிமிர்ந்தா... நீங்க போடுறீ்ங்க!)

http://urupudaathathu.blogspot.com/ said...

உண்மையிலே ஜில்லுன்னுதான் இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

அடுத்த பாகத்துக்கு வையிட்டிங்

http://urupudaathathu.blogspot.com/ said...

முன்னாடி சின்ன( என்னை போன்ற) பசங்களுக்கு சொன்னீங்க..
இப்போ ( ர்ர்ராகவன் அண்ணன் , ஆளவந்தான், அப்பவி முரு, வசந்த், நசரேயன், புதியவன், வால்பையன், கார்க்கி, தேவன்மயம், உழவன், விஜய், அன்புமனி போன்ற) பெரியவங்களுக்கு சொல்ரீங்களா??

அ.மு.செய்யது said...

கஜோல் கடற்கரை சுண்டல்னு பார்த்ததும் மின்சார கனவோனு ஒரு நிமிசம் தப்பா நினைச்சிட்டேன்.

ராஜான்ற பேர தேவான்னு மாத்துங்க டீச்சர் !!!

அ.மு.செய்யது said...

நாடகம் எழுதிட்டீங்க..

எப்ப மேடையேத்த போறீங்க..புரொடியூசர் நம்ம அதிரைக்காரர் தான ?

அ.மு.செய்யது said...

//ஆளவந்தான் said...
//
காஜோல்: யாருப்பா நீ, ஏன் இங்கே வந்து விழரே, போய் கடல்லே விழு, அங்கே போயி விழுந்தாலும் யாராவது உன்னைய காப்பாத்துவாங்க.
//
உண்மை தான் அவ பக்கதுல விழுந்தா வாழ்நாளுக்கும் எந்திரிக்க முடியாது
//

i like this statement !!!

Prabhu said...

எனி ஓன் எக்ஸ்பீரியன்ஸ்?

Unknown said...

// ஜில்லென்று ஒரு காதல்!! //


அப்போ எனக்கு ஜில்லுனு ஒரு ஜிகர்தண்டா......!!!!!



// காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !! ///


ஆமாங்கோவ்....!!! இல்லீனா மசால்பூரி ஆரி போயிருமுங்கோவ் ...!!!!!!




/// கதாநாயகன்: ராஜா
கதாநாயகி: காஜோல் //


பேரு பொருத்தம் செரியில்லையே ..... !! ஒன்னு வடக்க ... இநோன்னு தெக்கையால்ல இருக்குது ....!!

சம் திங் பண்டமெண்டலி ராங் ....!!!!



/// கடற்கரை ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. //


சுனாமியா ...????


// காதலர்கள் நின்றுகொண்டும், தனிமையாக அமர்ந்து பேசிக் கொண்டும், கடல் நீரில் விளையாடிக் கொண்டும் இருந்தனர். //


நல்ல சுச்சுவேசன் .....!!! ஆ... ஐ .... சிலேப்பி கொண்ட........!!!!



/// கடல் நீர் வந்து கால்களை நனைத்து விட்டு ஓடுவது பார்க்க, அனுபவிக்க மிகவும் அருமையான ரசனை மிக்க சுகமான ஒரு விருந்து. //


என்னது.......!!!!! விருந்தா....??? பிரியாணியா...? எந்த கட்சிகாரங்கோ........????



///வந்து கொண்டிருந்த அலைகளின் எண்ணிக்கைதான் நம் கதாநாயகிக்கு மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. //



ஓஓவ்வ்வ்வ்...!! அப்போ..... ஷீ ஈஸ் எலிஜிபில் பார் விசியகாந்த் கட்சி......!!! பிகாஸ் .... அங்க சேரனுமின்னா .. அவுரு மாதிரியே எல்லா விசியத்திலும் கணக்கு எடுக்க தெரிஞ்சிருக்கொனும்......!!!!!



/// யாரு அனுப்பிய இந்த அலைகள்?நம்மை வந்து வருடுகிறதே. நினைக்கவே சுகமா இருக்கே! ///


அட... நம்ம வடக்குபட்டி ராமசாமிங்கோ அம்முனி.....!!!!! அவுருதாங்கோ அனுபிசசாறு .......!!!!!!!




// நம் காதலன் வந்தாலாவது இரெண்டு பேரும் சேர்ந்து அலைகளில் கால்களை நனைக்கலாம். //

ஓஓவ்வ்வ்வ்....!!! ஆமாம்... ரெண்டு பேரும் ... ஜலத்துல .... நன்னா கால அலம்பிண்டு...... !!!!!!!!



// பாத்து,பாத்து என் கண்கள் தான் பூத்து போய்ட்டது. //



கிலோ தென்னோ வெளைங்கோ அம்முனி ........?????



// அலுப்பு சலிப்பின் உச்சக் கட்டத்தில் கைக் கடிகாரத்தை பார்த்தவாறு தனியாக அமர்ந்திருந்தாள் //


அட.....ச்ச .... இந்த மேட்டரு எனக்கு தெரியாம போச்சே....!!!! இல்லீனா நானாவது கம்பெனி க்கு சித்த நேரம் கடல போட்டுருப்பெனுங்கோவ்....!!!!

சத்திய சோதனை......!!!!



/// காஜோல்: ரொம்ப நேரமா இங்கேயே நின்னுகிட்டு இருக்கோமே. ///


சேரி சித்த நேரம் ஒக்காருங்கோ அம்முனி..........!!!!



// சுண்டல் விற்கும் தம்பிவேறு, எப்படியாவது அந்த அக்காவிடம் சுண்டல் விற்று விட வேண்டும் என்று பிடிவாதமாக அவன் மனது கூறியது. அதனால் அச்சிறுவன் சிறிதும் மனம் தளராது அக்கா அக்கா சுண்டல் என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். ///


யாருக்கு தெரியும்.......!!! ( தனியா ஒரு பொண்ணு இருந்தா ... சுண்டல் விக்குற வாண்டு பசங்ககோட உடமாட்டானுங்கலாட்ட .........!!!! )



// காஜோல்: டேய் ரொம்ப பேசாதே, எனக்கு வர்ற கோவத்துலே அப்படியே உன் கழுத்தை நெரிச்சுடுவேன். நீ பேசாதே என் கிட்டே.


காஜோல்: நீ என் கிட்டே பேசாதே, ஆமா சொல்லிட்டேன், நீ என் கிட்டே பேசாதே. //


இந்த அம்முனி கஞ்சா.... கிஞ்சா... போட்டுருச்ச்சா.... ??? சிக்குன ரெக்காடு மாதிரி சொன்னதையே ... திருப்பி... திருப்பி ... சொல்லுது.....!!!!


...............................................................................................................................................................................................................................................................................

ஆஹா....!!! ஓஹோ..!!!



பேஷ்.....!!! பேஷ்....!!!



சான்ஸ் இல்ல....!!!



நெம்ப சூப்பர்.....!!!!



அருமையான காதல் கதை....!!!!!



வாழ்த்துக்கள்.....!!!!!!!




// தொடரும்....
ரம்யா ///


அய்யய்யோ .....!!!! அய்யய்யோ .....!!!! ஓடுங்க...... ஓடுங்க....!!

ஆர்வா said...

அடுதத பார்ட் எப்போ?

Mythees said...

எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா

வாழ்த்தி யாச்சு ......

RAMYA said...

நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> ஆளவந்தான்
நன்றி --> பிரியமுடன்........வசந்த்
நன்றி --> நசரேயன்
நன்றி --> அப்பாவி முரு
நன்றி --> புதியவன்
நன்றி --> thevanmayam
நன்றி --> " உழவன் " " Uzhavan "
நன்றி --> வால்பையன்
நன்றி --> கார்க்கி
நன்றி --> Suresh
நன்றி --> பட்டாம்பூச்சி
நன்றி --> விஜய்
நன்றி --> குடந்தைஅன்புமணி
நன்றி --> உருப்புடாதது_அணிமா
நன்றி --> அ.மு.செய்யது
நன்றி --> pappu
நன்றி --> Manikandavel
நன்றி --> mythees

RAMYA said...

லவ்டேல் மேடி, வாங்க வாங்க சகோதரா.

உங்க நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நீங்க சகோதரி ராமலக்ஷ்மி எழுதி இருந்த மாதேஷ் என்று எனக்கு தெரியாது.

உங்க வலைப் பதிவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

சரி இப்போ விஷயத்திற்கு வருவோம், நான் தொடர்
கதை எழுதி கிட்டு இருக்கேன் இல்லையா?

நீங்க படிச்சுதான் ஆகணும். ஒன்னும் தப்பிக்க முடியாது சகோதரா :))

VISA said...

nalla ezhuthiyirukireerkal. adutha pathivukaay kaathirukiren

Chitra said...

காஜோல்: என்னா கஷ்டம்? நான் இங்கே எவ்வளவு நேரமா உக்காந்து இருக்கேன். எவ்வளவு பேரு போனாங்க!எவ்வளவு பேரு இப்போ இருக்காங்கன்னு எனக்கு தெரியும். அந்த அளவுக்கு நான் இங்கே உக்காந்து இருக்கேன். .............. இதான் மணி "கணக்கா" காத்திருப்பது. நல்ல பதிவு!