ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். வணிகத்திற்காக அவன் வெளியூர் செல்ல வேண்டி வந்தது.
பக்கத்து ஊருக்குச் சென்ற அவன், "ஐயா! நிறைய பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. உங்கள் கழுதையை இரவல் தாருங்கள். வணிகம் முடிந்து திரும்பியதும் கழுதையைத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான்.
பக்கத்து ஊர்காரனும் தன் கழுதையைத் தந்தான்.
வஞ்சகனான அந்த வணிகன் தன் கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டைகளை ஏற்றினான். பக்கத்து வீட்டுக்காரனின் கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றினான்.
தன் வேலையாளைப் பார்த்து "நான் குதிரையில் முன்னாள் செல்கிறேன். என்ன நடந்தாலும் கழுதைகளை எங்கும் நிறுத்தாதே. பக்கத்து ஊர் வந்து சேர்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
இரெண்டு கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு வேலையாள் புறப்பட்டான். உப்பு மூட்டை ஏற்றப்பட்ட கழுதை தள்ளாடித் தள்ளாடி நடந்தது. பஞ்சு மூட்டையைச் சுமந்த கழுதையோ மகிழ்ச்சியுடன் நடந்தது.
திடீரென்று வானம் இருண்டது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இரண்டு கழுதைகளும் மழையில் நனைந்து கொண்டே நடந்தன.
மூட்டைக்குள் இருந்த உப்பு மழை நீரில் கரைந்து கீழே விழுந்து கொண்டே வந்தது. ஆனால் பஞ்சு மூட்டைகளோ மழையில் நனைந்து நீரை இழுத்துக் கொண்டு எடை அதிகமாகிக் கொண்டே வந்தது.
பஞ்சு மூட்டைகளின் கனத்தைத் தாங்க முடியாமல் வணிகனின் கழுதை துடித்தது. அதனால் அடியெடுத்து வைக்கவும் முடிய வில்லை. ஆனால் வேலையாளோ அதை அடித்து விரட்டினான்.
பஞ்சு மூட்டைகளின் எடை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. முதுகு எலும்பு முறிந்த அந்தக் கழுதை அங்கேயே விழுந்து இறந்தது.
மூட்டைகள் வந்து சேரத் தாமதம் ஆவதை அறிந்தான் வணிகன். என்ன நடந்தது என்பதை அறிய குதிரையில் திரும்பினான்.
தன் கழுதை இறந்து கிடப்பதைக் கண்டான். என்ன நடந்து இருக்கும் என்பதும் அவனுக்குப் புரிந்தது.
'அடுத்தவன் கழுதை துன்பப் படட்டும். என் கழுதை மகிழ்ச்சியுடன் வர வேண்டும் என்று சூழ்ச்சி செய்தேன்! எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது'. என்று வருந்தினான் அவன்.
பின்குறிப்பு
==========
எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா??
மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நல்லவைகள் நம்மை ஓடோடி வந்தடையுமே !!
35 comments :
உள்ளேன் தாயே
நான் என்னவோ வேற குட்டிஸ் நினைச்சு புட்டேன்
//
நசரேயன் said...
நான் என்னவோ வேற குட்டிஸ் நினைச்சு புட்டேன்
//
ஹா ஹா வாங்க நெல்லை புயலே
நலமா??
நினைப்பீங்க நினைப்பீங்க :))
வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா
//
நசரேயன் said...
வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா
//
வீட்டுலே யாருப்பா நானா :))
ஆமா அந்த வணிகி நீங்களா?
//
நசரேயன் said...
வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா
//
வீட்டுலே யாருப்பா நானா :))
//
நசரேயன் said...
ஆமா அந்த வணிகி நீங்களா?
//
நான் இல்லே, அது வேறே ஆளு :))
//எனதன்பு செல்லங்களே//
இதோ வந்துட்டேன்....
உலகத்தே பிறந்த யாருமே இதுபோன்ற கழுதைகள் தான் !
நாம் தூக்கிச் செல்வது உப்பு மூட்டையா ! பஞ்சு மூட்டையா ! எனத்தெரியாமலே
தூக்கிக்கொண்டு செல்கின்றோம்.
தெரியும்போது வாழ்க்கையின் மாலை நேரம் வந்துவிடுகிறது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
இது கும்மி பதிவா??
இல்லை, தத்துவ பதிவா??
ஏன்னா, தப்பா நான் கும்மி அடிச்சிறக்கூடால்ல...
//
அப்பாவி முரு said...
//எனதன்பு செல்லங்களே//
இதோ வந்துட்டேன்....
//
ஹா ஹா வாங்க வாங்க முரு !!
//
sury said...
உலகத்தே பிறந்த யாருமே இதுபோன்ற கழுதைகள் தான் !
நாம் தூக்கிச் செல்வது உப்பு மூட்டையா ! பஞ்சு மூட்டையா ! எனத்தெரியாமலே
தூக்கிக்கொண்டு செல்கின்றோம்.
தெரியும்போது வாழ்க்கையின் மாலை நேரம் வந்துவிடுகிறது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
//
வாங்க வாங்க சுப்பு ரத்தினம்.
என் பதிவிற்கு முதல் வரவு நீங்க
வரவிற்கு நன்றி!!
//
அப்பாவி முரு said...
இது கும்மி பதிவா??
இல்லை, தத்துவ பதிவா??
ஏன்னா, தப்பா நான் கும்மி அடிச்சிறக்கூடால்ல...
//
முரு என்னா பண்ணினாலும் தப்பே இல்லை :))
//நசரேயன் said...
வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா//
அண்ணே., அண்ணியோட மெயில் ஐ.டி கிடைக்குமா?
போட்டுக்குடேய்ய்ய்ய்..
//நசரேயன் said...
வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா//
அண்ணே., அண்ணியோட மெயில் ஐ.டி கிடைக்குமா?
போட்டுக்குடேய்ய்ய்ய்..
இந்தக்கதையை எனது பேரனிடம் சொல்லி இந்தக்கதையிலிருந்து
என்னடா தெரிகிறது ? என்றேன்.
" கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்றான்.
" என்னடா ! எனக்கு ஒன்னும் புரியல்லையே ?" என்றேன்.
அதற்கு என் பேரன், " இந்த இரண்டு கழுதைகளும் ஆரம்பத்திலேயே
பேசி வைத்துக்கொண்டு, உப்பு, பஞ்சு, இரண்டையும் சமமாக,
பிரித்து ச் சுமந்தால் இந்தக் கஷ்டம் இரண்டு பேருக்குமே வந்து இருக்காது"
என்றான்.
" அது எப்படிடா கழுதைக்கு புரியும், நீ சொல்றது !" என்றேன்.
" அதான். தாத்தாவுக்கு புரியறது உனக்குப்புரியாது " என்றான்.
மீனாட்சி பாட்டி.
http://ceebrospark.blogspot.com
//
sury said...
இந்தக்கதையை எனது பேரனிடம் சொல்லி இந்தக்கதையிலிருந்து
என்னடா தெரிகிறது ? என்றேன்.
" கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்றான்.
" என்னடா ! எனக்கு ஒன்னும் புரியல்லையே ?" என்றேன்.
அதற்கு என் பேரன், " இந்த இரண்டு கழுதைகளும் ஆரம்பத்திலேயே
பேசி வைத்துக்கொண்டு, உப்பு, பஞ்சு, இரண்டையும் சமமாக,
பிரித்து ச் சுமந்தால் இந்தக் கஷ்டம் இரண்டு பேருக்குமே வந்து இருக்காது"
என்றான்.
" அது எப்படிடா கழுதைக்கு புரியும், நீ சொல்றது !" என்றேன்.
" அதான். தாத்தாவுக்கு புரியறது உனக்குப்புரியாது " என்றான்.
மீனாட்சி பாட்டி.
http://ceebrospark.blogspot.com
//
சூப்பர்!! அருமையா உங்க பேரன் சொல்லி இருக்காரு.
நல்ல அறிவான பேரன்.
அவருகிட்டே சொல்லுங்க நாளைக்கும் கதை எழுதறேன்னு நன்றி !!
Very good post and story Ramya!!
anbudan aruna
nalla padivunga
நல்ல கருத்து ரம்யா!
present teacher!
//
எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா??
//
என்னங்க அட்டூழியமா இருக்கு..?
கதைய நீங்களா சொல்லிட்டு நீங்களே எங்களுக்கு என்ன புரிஞ்சுதுன்னு சொல்லிகிறிங்க..
எங்களுக்கு என்ன புரிஞ்சுதுன்னு நாங்கதானே சொல்லணும்..?
இது மிகப்பெரிய மனித உரிமை மீறல்..
நல்லகதை, ஏற்கனவே கேட்ட கதையா இருந்தாலும் ரம்யா சொல்லும் பொழுது சுவையா இருக்கு...
25th..
nalla karuthu..
rasikkum padiya solli irukeenga ka :)
நல்ல கதை ரம்யா...சின்ன வயசுல படிச்சுருக்கேன்....இப்போ நாலு கழுதை வயசாச்சு
enna ramya, unga peranuku solra kathayelam inga poduringala?
நீயாயமா பாத்தா இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் ப்ளூ கிராசுக்கு (Blue Cross) ஒரு கால் பண்ணாம விட்டதுக்கு உங்களைதான் சுடனும்.
இரெண்டு கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு வேலையாள் புறப்பட்டான். உப்பு மூட்டை ஏற்றப்பட்ட கழுதை தள்ளாடித் தள்ளாடி நடந்தது. பஞ்சு மூட்டையைச் சுமந்த கழுதையோ மகிழ்ச்சியுடன் நடந்தது.////
நல்ல கதை! நடத்துங்க தினம் ஒரு கதையாக.
நல்ல நீதி சொல்லும் கதை :)
வாழ்த்துகள்
நீதிக்கதையா....!!!
அதுசரி!
குட்டீஸ் கார்னர் அப்படின்னு டைட்டில பார்த்ததும் நிறைய ஆர்வத்தோட வந்தேனாக்கும் !
:))))
ரொம்ப நல்ல சிறுவர் கதை!!! அடுத்தவரை இளக்காரமாகப் பார்ப்பவர் படும் நிலையும், எந்த வசவையும் எதிர்நோக்காமல் உயர்ந்து செல்லுபவரையும் இங்கே நிலைநிறுத்திக் கொண்டேன்!
சிறுவர் கதையென்றாலும் ஒவ்வொரு பெரியவருக்கும் உரிய கவிதை இது!!!
வாழ்த்துகள் ரம்யா!
//ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். வணிகத்திற்காக அவன் வெளியூர் செல்ல வேண்டி வந்தது.//
ஏக் கவுமே ..ஏக் கிஸான்...ரகு தாத்தா..
//எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா??
மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நல்லவைகள் நம்மை ஓடோடி வந்தடையுமே !!
//
நீங்க என்ன விட அதிகமா சுட்டி டிவி பாக்கறீங்க...வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல.
Post a Comment