Tuesday, September 1, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள் நண்பர்களே!!

நண்பர் ஜீவனின் குமார்த்தி அமிர்தவர்ஷினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
நான்தான் சொல்றேன் இல்லே என்னை போட்டோ எடுக்கறவங்க சரியா எடுக்கணும் ஆமா சொல்ப்பிட்டேன்.

எனதருமை செல்லமே! இந்த கேக் உனக்கு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா!!

என் சின்ன கண்ணம்மா! உனது இந்த மாறு வேடம் எனது நினைவைத் தூண்டும் வ.உ.சி.சிதம்பரனார் பற்றிய நினைவுகள் சில உனக்காக இங்கே!!


அமிர்தவர்ஷிணி! நீ ஏற்றிருக்கும் மாறு வேடத்திற்கு நான் கொடுக்கும் மதிப்புரை!!

செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

"தமிழ் மறை" என்று புகழப்படும் திருக்குறளுக்கு பல உரைகள் இதுவரை சிறிதும், பெரிதுமாக வந்துள்ளன. ஆனால், தற்போது முற்றிலும் புதுப்புது கருத்துக்களைத் தாங்கிய புதிய உரையாக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை வெளிவந்துள்ளது.

கடந்த 1936ல் கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி., எழுதிய உரை, 73 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்று வந்துள்ளது. தமிழ் மக்கள் செய்த தவப்பயனே ஆகும்.

தொல்காப்பியத்துக்கு முதல் உரை எழுதிய இளம்பூரணர் மீதும், திருக்குறளுக்கு முதலுரை எழுதிய மணக்குடவர் மேலும் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு.

அறப்பால், பொருட்பால், இன்பப்பால் என்று இவர் முப்பாலை வழங்குகிறார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை மூன்று அதிகாரங்களையும் இடைச்செருகல் என்று நீக்கி 130 அதிகாரங்களை வெளியிட்டுள்ளார். இடைப்பாயிரம் என்று மூன்று அதிகாரம் 30 குறளைத் தனிமைப்படுத்தி விட்டார்.

மிக விளக்கமாக மணக்குடவர் உரையை பெரும்பாலும் தழுவி, பதவுரை, அகல விருத்தியுரை, உதாரணப்பாடல்களோடு குறளை விளக்கி, இலக்கணக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்.

"ஆகுல நீர பிற" என்ற குறளில் ஆகுலம் என்பதற்கு புதுமையாக "துன்பம்" என்று விளக்கம் தந்துள்ளார்.

மகளிருக்கு நிறைகாப்பே, சிறை காப்பினும் தலையாயது என்பதை விளக்க வளையாபதி, பழமொழி பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

"அழுக்காறாமை" என்று உள்ள அதிகாரத்தை "அழக்கறாமை" என்றும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பதை நினைக்கக் "கெடும்" என்றும் மாற்றி எழுதியுள்ளார்.

கம்ப ராமாயணம், நாலடியார் போன்ற பல மேற்கோள் பாடல்களால் தன் புதுக்கருத்திற்கு மெருகூட்டியுள்ளார்.

மிகப் பெரிய இந்த வ.உ.சி., குறள் உரை தமிழ் இலக்கியத் தோட்டத்தில் பூத்த குறிஞ்சிமலர்! வ.உ.சி.,யின் ஆழமான, அகலமான தமிழறிவுக்கு மணிமகுடம் திருக்குறள் பற்றி வந்துள்ள 20 உரைகளுக்குள் இணையற்ற புதிய இடம்!


உனக்காக ஒரு சிறிய குறிப்பு அமிர்தவர்ஷினி

இந்தியாவில் விடுதலைப் போர் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பொதுக்க்கூட்டங்கள் போட்டு தலைவர்கள் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது தூத்துக்குடியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அதில் வ.உ.சிதம்பரனார் அவர்களும் கலந்து கொண்டார்.

முதலில் ஒரு தொண்டர் மிக ஆக்ரோசமாக பேசத் துவங்கினார். பேச்சின் இடையில் "வெள்ளைக்காரர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உடனே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்றார்.

இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த வ.உ.சி எழுந்தார். மைக்கின் அருகில் வந்து "மூட்டை முடிச்சுகள் நம்முடையவை. வெள்ளையர்கள் வெறுங்கையுடன்தான் வெளியேற வேண்டும்" என்றார்.

கூட்டத்தினர் இதைக் கேட்டு பலத்த ஆரவாரத்துடன் கை தட்டினார்கள். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஒவ்வொரு பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்று அறிந்து வியக்க வேண்டியிருக்கிறது.

எப்போது வ.உ.சி.சிதம்பரனார் பற்றி நினைத்தாலும் எங்கேயோ படித்த மேற் கூறியவைகள் அனைத்தும் எனது மனதில் ஓடும் சிறு எண்ண ஓட்டங்கள். அதற்கு அமிர்தவர்ஷினிக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.சகோதரியை ரசித்து பூரித்துச் சிரிக்கும் அழகான உன் சிரிப்பில் மயங்காதவர்ளும் உண்டோ!!

குவளை மலரையும்
குறிஞ்சி மலரையும்
குழைத்துச் செதுக்கிய
குலக் கொழுந்தே!
பிறந்த நாள் காணும்
எங்கள் செல்வமே
நீ நடக்கும் பாதையில்
நந்தவனம் அமையட்டும்
இறைந்து கிடக்கும்
நந்தவனத்தின் மலர்கள்
உன் மலர்பாதங்களுக்கு
பாதைகளை அமைக்கட்டும்!
உன் எண்ணங்கள் சிறக்கட்டும்
கல்வியில் சிறந்து விளங்கி
பாரதியின் கனவுப் பெண்ணாக
வளர்ந்திட வாழ்த்துகிறேன்!


அமிர்தவர்ஷினி என்ற இந்த குழந்தை நமது வலை நண்பர் ஜீவனின் குமாரத்தி. இன்று பிறந்த நாள் காணும் அமிர்தவர்ஷினியை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே!

அமிர்தவர்ஷினி நீ பாரத பூமியில் பல வியப்பூட்டும் சரித்திரம் படைத்திட வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி நீ கல்வியில் பல மைல்கற்களை கடந்து சாதிக்க எங்கள் வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி நீ தாயக மண்ணில் பல சரித்திரம் படைத்திட வாழ்த்துக்கள்!!

அமிர்தவர்ஷினி நீ வரலாறு போற்றும் நல் வாழ்வுதனைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி நீ வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ்த்தும் அன்பு வலையுலக உறவுகள்.....

அமிர்தவர்ஷிணி! இந்த மதி மயக்கும் மலர்கள் அனைத்தும் உனக்கே உனக்கு!!

பிரியமுடன்
ரம்யா.....
40 comments :

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி :)

வ.உ.சி பற்றிய தகவல் தொகுப்பு அருமை & புதுமையானதொரு பிறந்த நாள் வாழ்த்து!

நன்றி ரம்யா :)

நட்புடன் ஜமால் said...

அன்பு மருமகளுக்கு அன்பான வாழ்த்துகள்.

gayathri said...

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்

திகழ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

டக்ளஸ்... said...

வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்.

R.Gopi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி..

அமிர்தவர்ஷினி வாழ்வில் எல்லா நலமும் பெற்று, சிறப்பாக வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

வ.வு.சி..ப‌ற்றிய‌ உங்க‌ள் குறிப்பு வெகு ந‌ன்றாக‌ உள்ள‌து ர‌ம்யா... இதுதான் ர‌ம்யா ஸ்டைல்...

ஒரு பிறந்த‌ நாள் வாழ்த்து வ‌.வு.சி.யை ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளுட‌ன் விரிவாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து ர‌ம்யாவின் சிறந்த‌ எழுத்து த‌ன்மையை ப‌றைசாற்றிய‌து... அத‌ற்காக‌ உங்க‌ளுக்கு ஒரு "ஸ்பெஷ‌ல் பொக்கே" ர‌ம்யா...

அமிர்த‌வ‌ர்ஷிணி ம‌ற்றும் ர‌ம்யா இருவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள் மீண்டுமொருமுறை....

டம்பி மேவீ said...

வாழ்த்துகள்.

karunakaran said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி..

அமிர்தவர்ஷினி வாழ்வில் எல்லா நலமும் பெற்று, சிறப்பாக வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

சதீஷ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி.

KRISHNAMOORTHY.S.R said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி

harveena said...

My beloved, heariest wishes to amirthavarshini,,, god bless her with lots and lots of fun filled life, with everlasting smile and happiness,,let those happiness reflects in my brothers face also,,,god bless all ur family members,,,, cheers anna,,,(epo treat)

veena,
korangu,,,,

குடந்தை அன்புமணி said...

அமிர்தவர்ஷினிக்கு எனது மனமார்ந்த இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வாங்கு வாழ்க வளங்கள் பல பெற்று!

பிறந்தநாள் வாழ்த்துகளை வித்தியாசமாக தொகுத்த தங்களுக்கும் வாழ்த்துகள் ரம்யா அக்கா.

வால்பையன் said...

அமுதமழை பொழியும் செல்லகுட்டிக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Vidhoosh/விதூஷ் said...

:) குழந்தைக்கு வாழ்த்துக்கள்

-வித்யா

தாரணி பிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி :)

S.A. நவாஸுதீன் said...

எங்கள் தலயின் தங்க மகள் அமிர்தவரிஷினிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

அதிரை அபூபக்கர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..அமிர்தவர்ஷினி

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி!

நிஜமா நல்லவன் said...

/வ.உ.சி பற்றிய தகவல் தொகுப்பு அருமை & புதுமையானதொரு பிறந்த நாள் வாழ்த்து!

நன்றி ரம்யா :)/


ரிப்பீட்டேய்...

தமிழரசி said...

அமிர்தவர்ஷினி பேரே இனிமையில் நனைக்கிறது நம்மை ஆனால் இவளே நனைத்தது மட்டுமின்றி தன் அழகில் நம்மையும் மயக்கியிருக்கிறாள்..இளம் தேவதையே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ரம்யா சும்மா சூப்பரா கொண்டாடி விட்டாய் பிறந்த நாளை..ஆனால் பிறந்த நாள் அதுமா மெஸேஸ் சொல்றேன் பேர்வழின்னி குழந்தையை மிரட்டிட்ட போல....

துபாய் ராஜா said...

அமித்துக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்......

அ.மு.செய்யது said...

எங்கள் வாழ்த்துகளையும் இங்கு பதிவு செய்கிறோம்.

பதிவு அருமை.

SK said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி :)

ஷ‌ஃபிக்ஸ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி, அப்பப்பா வாழ்த்துக்கள், மடலாய், கவிதையாய், பூங்கொத்தாய், கேக்காய்.....கலக்கிட்டிங்க ரம்யா மேடம். உங்களுக்கும் நன்றிகள்.

கார்ல்ஸ்பெர்க் said...

Heartiest Birthday Wishes to Ammu!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழ் அமுதனின் செல்லக் குழந்தைக்கு வாழ்த்துகள்!

பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ்க!

அண்ணன் வணங்காமுடி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி :)))))

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள்

सुREஷ் कुMAர் said...

அமிர்தவர்ஷினி'க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

SanjaiGandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி. வாழ்க வளமுடன்.

//வ.உ.சி.சிதம்பரனார் //

எதுக்கு எக்ஸ்ட்ரா சி? :)

வ உ சி வேடம் சூப்பர்.. :)

க.பாலாஜி said...

வாழ்த்துக்கள்....உங்களின் செக்கிழுத்த செம்மல் பற்றிய செய்திகளுக்கும் சேர்த்து...

கார்த்திக் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்தினி :-))

kanagu said...

amirthavrshinikku pirantha naal vazthukkal :)

லவ்டேல் மேடி said...

அமித்து குட்டிமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!

மொக்கை போடாமல் அழகான பதிவு தந்த ரம்யா அக்காவுக்கு நன்றிகள்...!!

ஆ.ஞானசேகரன் said...

//அமிர்தவர்ஷினி என்ற இந்த குழந்தை நமது வலை நண்பர் ஜீவனின் குமாரத்தி. இன்று பிறந்த நாள் காணும் அமிர்தவர்ஷினியை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே! //

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி

RAMYA said...

அமிர்தவர்ஷினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி!!

ஜீவன் said...

மிக.. மிக.. சிறப்பான முறையில் பதிவிட்டதோடு சிதம்பரனார் பற்றிய பல அரிய தகவல்களை வழங்கிய ரம்யாவிற்கும் ....!!

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ..!நன்றி ...! நன்றி !!

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்