Tuesday, September 8, 2009

வழிகாட்டி யார் ???

உதவும் கரங்களா?????


சின்ன சின்ன கால்கள் எடுத்து
சிங்காரமாய் நடை பயின்று
அன்னை மடியில்
அலங்காரமாய் வீற்றிருந்து
பொங்கும் மழலையில்
ஆயிரமாயிரம் வினாயெழுப்பி
அன்னை அளித்த
விடைகளின் விபரமரியாமல்
காலத்தின் ஓட்டத்தில்
கற்று பல தேர்ந்து
கவிதையாய் வாழாமல்
ஆபத்து நிறைந்திட்ட
ஆயுதத்தை கையில் - ஏன்
எடுத்தாய் கண்ணே!!

எனக்கு கிடைத்த இந்த படத்தினை இங்கே உங்களுக்கும் பகிர்கின்றேன்.

இது வெறும் படமாக மட்டும் இருந்திட்டால் மிகவும் சந்தோஷமே!

விளம்பரத்திற்காக இருந்தால் கடுமையான கண்டனத்திற்குரியது!

ஆனால் விளையாட்டிற்கு கூட இது போல் படங்கள் எடுப்பதை தவிர்த்திருக்கலாம்!!

இந்த படம் சிரிக்க அல்ல சிந்திக்க.....

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?????

டிஸ்கி : இது என்னோட சொந்த கருத்து!



19 comments :

Jerry Eshananda said...

உதவும் கரங்கள் அல்ல, உதவா கரைகள்.

க.பாலாசி said...

//ஆபத்து நிறைந்திட்ட
ஆயுதத்தை கையில் - ஏன்
எடுத்தாய் கண்ணே!! //

வேறெதுக்கு அழிஞ்சுபோகதான்...

இதமாதிரி விளம்பரத்துக்காக படம் எடுக்கிறவன்களை நிக்கவைச்சு சுடனும்...

இராகவன் நைஜிரியா said...

இதற்கு பதில் சொல்ல எனக்கு அருகதை இருக்கா?

வால்பையன் said...

// இராகவன் நைஜிரியா said...

இதற்கு பதில் சொல்ல எனக்கு அருகதை இருக்கா?//

நான் ரிப்பீட்டி கொள்கிறேன்!

S.A. நவாஸுதீன் said...

வால்பையன் said...

// இராகவன் நைஜிரியா said...

இதற்கு பதில் சொல்ல எனக்கு அருகதை இருக்கா?//

நான் ரிப்பீட்டி கொள்கிறேன்!

நான் ரீ-ரிப்பீட்டிக்கொள்கிறேன்

அப்பாவி முரு said...

எங்கூருல புகை போடாத பிள்ளைகளே ரொம்பக் குறைவு...

ஆனா, நான் பொகை போடமட்டேம்ப்பா...(ஐ நான் நல்லவன்)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதே மாதிரி கொடுமையை நான்,கோவி.கண்ணன்,பித்தன் மூவரும் சிங்கை கொடைக்கடையில் பார்த்தோம். என்ன செய்வது.

நாங்கள் பார்த்தது,

15 வயது பொண்ணு
10 வயது பையன்
தமிழ்ப் பொண்ணு, தமிழ்ப் பையன் தான்...!
(அக்கா தம் பீ யாகக் கூட இருக்கலாம்)

இருவரும் வெண்குழல் பிடித்து ஊதிக் கொண்டிருந்தார்கள்!

என்ன கொடுமை இது?

நட்புடன் ஜமால் said...

சொந்த கருத்தல்ல


நொந்த கருத்து

பெற்றோர் செய்யும் தவறுகள் ...

Anonymous said...

நல்ல பதிவு.
பெரிய கொடுமை. பெற்றேhர்கள் சிந்திக்க வேண்டும். இது போல் படம் எடுத்தவர்களை என்னவென்று சொல்வது?

அப்துல்மாலிக் said...

நானும் பார்த்து வருந்தியதுண்டு

Thamira said...

டென்ஷனாக வேண்டாம். ஏதாவது விளையாட்டுக்காக எடுத்த படமாக இருக்கும், சிலர் ரசனை அப்படி.!

सुREஷ் कुMAர் said...

நல்ல அக்கறையான கருத்துதான்..
//
இது என்னோட சொந்த கருத்து!
//
சொந்த கருத்தா இருந்தாலும் பளிச் கருத்து..
உங்கள் சமூக அக்கரைக்கு வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால் விளையாட்டிற்கு கூட இது போல் படங்கள் எடுப்பதை தவிர்த்திருக்கலாம்!!//

கண்டிப்பாக... என்னால் பார்க்க முடியவில்லை பிடிக்கல, பிடிக்கல ,பிடிக்கல.....

பித்தனின் வாக்கு said...

வக்கிர மனங்களின் வரைமுறை இல்லா கற்பனைதான் இந்த படங்கள். பார்க்கும் குழ்ந்தைகளை தவறான ஆர்வத்தை தூண்டும் இஃப் படங்களை தடை செய்யவேண்டும்

Anonymous said...

VISHAPARITCHAI...YARAI NOVAANEN ONNUM PURIYALAI ETHAI NOKKI INTHA PAYANAM?

ஈரோடு கதிர் said...

கூல்டிரிங்ஸ் குடிக்கிற குழந்தைகளை எந்த நாதரியோ இப்படி கிராஃபிக்ஸ்ல மாத்தியிருக்குனு நினைக்கிறேன்

அ.மு.செய்யது said...

பகீரென்று இருக்கிறது படம்...அதுக்காக உணர்ச்சி வசப்பட்டு கவிதை எழுதிட்டீங்களே !!!!

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
இதற்கு பதில் சொல்ல எனக்கு அருகதை இருக்கா?

//

வாஸ்தவமான பேச்சு !!!!! இதுல பார்சல் வேற எல்லாத்துக்கும்...

மே. இசக்கிமுத்து said...

பார்க்கும் போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்குது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்க கூடாது!!