Wednesday, September 16, 2009

செய்யாதீங்க! செய்யாதீங்க! செய்யாதீங்க! தயவுசெய்து இது போல் எப்போதும் செய்யாதீங்க!!

செல்போன் - மின்சாரம் - விளைவிக்கும் பரிதாபம்!!

சில தினங்களுக்கு முன் ஒரு இளைஞன் தன்னோட மொபைல் போனை தனது இல்லத்தில் சார்ஜ் செய்திருக்கின்றார். அதுசமயம் போனில் அழைப்பு வந்திருக்கிறது. சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.பேச ஆரம்பித்த சில வினாடிகளில் செல் போனில் செருகிவைத்திருக்கும் வொயர் வழியாக மின்சாரம் தாக்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் அதி வேகமாக தூக்கி எறியப்பட்டிருக்கிறான். சத்தம் கேட்டு இளைஞனின் பெற்றோர்கள் அறைக்கு ஓடி வந்திருக்கின்றார்கள். அப்போது கைகள் வெந்த நிலையில், ரொம்ப பலகீனமான இதயத்துடிப்புடன் அவர்களின் செல்ல மகன் மயக்க நிலையில் விழுந்து கிடப்பதை பார்த்தனர்.

மயக்க நிலையில் இருந்த இளைஞனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். நிலை குலைந்துபோன பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற யாரால் இயலும்?

எது எப்படியோ இப்போது நம்மால் கண்டிப்பாக உணரமுடிகிறது. மொபைல் போனால் உயிரே பறிக்கப் படுகின்றது என்றால், நாமும் கொஞ்சம் உஷாரா இருப்பதில் தவறு இல்லையே?இந்த நவ நாகரிக உலகத்தில் செல் போன் இல்லாதவர்கள் என்று கணக்கெடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம் அவர்களின் எண்ணிக்கையை.

அதன் அவசியமும் அத்தியாவசியாமான ஒன்றாகிவிட்டது. கையில் கடிகாரம் கட்டுவது எவ்வளவு அவசியம்? காலில் செருப்பு அணிவது எவ்வளவு அவசியம்? அது போல்தான் கைபேசி வைத்துக் கொள்வதும் அவ்வளவு அவசியம் என்று. அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக மொபைல் போனை அங்கீகாரம் அளித்து நாம் அதை கையிலே எடுத்துச் செல்கின்றோம்.

அதே சமயம் அதை எப்படி உபயோகப் படுத்துவது என்பதிலும் வகை தொகை உள்ளது. அதை நாம் கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதற்கு மேலே கூறிய சம்பவம் ஒரு நல்ல உதாரணம். எனது நண்பர்கள் பலர் இது போல் செய்வார்கள். பார்க்கும்போதே எனக்கு கோவம் வரும். சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

நான் பெற்ற செய்தி, இதை படித்தவுடன் துடித்துவிட்டேன். ஏனெனில் எனது நண்பர்கள் பலர் இதுபோல் ப்ளக்கை சொருகி விட்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை.

இந்த விவரம் தெரியாதவர்கள், மேலே உள்ள படத்தினை பார்த்துவிட்டு மிகவும் உஷாராக இருக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இது போல் செய்யாதவர்கள் தப்பித்தவர்கள் கணக்கில்.

இது போல் செய்பவர்ககள்............ தவிர்ப்பது நல்லது.

டிஸ்கி: அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது எண்ணங்களின் பரிமாற்றங்கள் அவ்வளவுதான்....
70 comments :

gayathri said...

hey rompa panulla pathivu pa

naanum oru sila nerangalil ippadi than seiven

ini seiya matten

nanri Ramya ungal pakirvukku

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல நோக்கம்!

gayathri said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:(

enna ithu chinna pulla thanama azarthu

kanna thodachikanga

கதிர் - ஈரோடு said...

ஏற்கனவே அறிந்த செய்திதான் என்றாலும், இன்னும் இந்த முட்டாள் தனத்தை சில சமயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

gayathri said...
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:(

enna ithu chinna pulla thanama azarthu

kanna thodachikanga//

நன்றி!

நான் தான் கடைக்கு முதல் ஆள் அப்படின்னு வந்தா, நீங்க முன்னாடி நிக்கிறியளே!

:)

sriram said...

http://urbanlegends.about.com/library/bl_cell_phone_electrocuted.htm

இதயும் கொஞ்சம் படியுங்களேன்.
எனக்கு தெரிந்த கொஞ்சூண்டு Electrical Engineering படி 110 அல்லது 220 வோல்ட் AC மின்சாரம் charger க்குள் சென்று வெளிவருவது 5 V DC current with 890 mA (என்னுடைய Nokia charger specification). இந்த அளவு மின்சாரத்தை நம் உடம்பு கண்டிப்பாகத் தாங்கும். 3 அல்லது 4 பேட்டரியை (1.5 V) series ல் connect செய்து + ல் ஒரு வயரையும் - ல் ஒரு வயரையும் வைத்து தொட்டுப்பாருங்கள், ஒன்றும் ஆகாது, அந்த வயர்களின் நுனியை நாக்கில் வைத்துப்பாருங்கள், கரண்டை உணர்வீர்கள்.
original charger உபயோகித்தால் பயம் இல்லை என்பது என் கருத்து.

வேணா ஒண்ணு செய்யலாம், charge செய்யும் போது Speaker phone இல் பேசலாம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பயர் சேப்டி கோர்ஸ் போவும் போது எனக்கு இதைப் பிரசண்ட் பண்ணுனாங்க.

நான் அப்ப பிரசண்ட் ஆகி இருந்ததால எனக்கு ஞாபகம் இருக்கு.

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

original charger உபயோகித்தால் பயம் இல்லை என்பது என் கருத்து.

//
சோனி மடி கணினி சார்ஜர் கூட முன்பு வெடித்ததாகச் சொல்கிறார்களே. அதனால் இங்கு பிராண்டும் அடிபட்டுப் போகிறது.

எந்த புத்துல எந்த பாம்புன்னு தெரியாது.

நிலாமதி said...

பயனுள்ள பதிவு உங்களுக்கு என் நன்றிகள். திருந்துபவர்கள் திருந்தட்டும்.
நட்புடன் நிலாமதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதயும் கொஞ்சம் படியுங்களேன்.
எனக்கு தெரிந்த கொஞ்சூண்டு Electrical Engineering படி 110 அல்லது 220 வோல்ட் AC மின்சாரம் charger க்குள் சென்று வெளிவருவது 5 V DC current with 890 mA (என்னுடைய Nokia charger specification). இந்த அளவு மின்சாரத்தை நம் உடம்பு கண்டிப்பாகத் தாங்கும். 3 அல்லது 4 பேட்டரியை (1.5 V) series ல் connect செய்து + ல் ஒரு வயரையும் - ல் ஒரு வயரையும் வைத்து தொட்டுப்பாருங்கள், ஒன்றும் ஆகாது, அந்த வயர்களின் நுனியை நாக்கில் வைத்துப்பாருங்கள், கரண்டை உணர்வீர்கள்.
original charger உபயோகித்தால் பயம் இல்லை என்பது என் கருத்து.
//

ஏன் இன்புட் ஏ.சி அவுட்புட்டுடன் சார்ட் ஆகி டி.சி 5வோல்டுக்குப் பதில் 230வோல்ட் ஏ.சி வந்தால் என்ன செய்ய முடியும்? நம்மையே புகைத்து விடக்கூடும், நாக்கில் எடுத்து வைத்தால்...!

ஜீவன் said...

நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பயனுள்ள பதிவு..!!

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு

நல்ல விழிப்புணர்வு

நன்றி.

குடுகுடுப்பை said...

ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுதான்.

ராமலக்ஷ்மி said...

அலட்சியப் படுத்தக் கூடாத விஷயம். இதன் ஆபத்து குறித்து ஒரு வருடம் முன்னர் sms fwd செய்யப் பட்டு வந்தது. இந்த சம்பவம் அதை உறுதி செய்திருப்பது ஆழ்ந்த அனுதாபத்துக்குரியது. எச்சரிக்கைக்கு நன்றி ரம்யா.

kanagu said...

ithu enaku therinthum innum ipadiye than seithu kondu irukkeren...

seekeram maara vendum..

seithi pakirvirku nandri akka :))

கோமதி அரசு said...

அவசியமான நல்ல பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

அப்பாவி முரு said...

மின்னேற்றம் ஆகிக்கொண்டிருக்கும் மடிகணிணியை பயன்படுத்தலாமா? கூடாதா?:(

Vijay said...

மிகவும் பயனுள்ள பதிவு :-)

\\அப்பாவி முரு said...

மின்னேற்றம் ஆகிக்கொண்டிருக்கும் மடிகணிணியை பயன்படுத்தலாமா? கூடாதா?
\\

பயன்படுத்தலாம். ஆனால் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும். அது ஒரு தட்டையான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி

ஹைதை போயிட்டு வந்தாச்சா!?

ஆதிமூலகிருஷ்ணன் said...

பயம் தரும் பதிவு ரம்யா. செய்பவர்கள் திருந்தட்டும்.!

सुREஷ் कुMAர் said...

//
சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
//
யக்கா..

சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எப்டிகா பேசுறது.. அப்படிஒரு வசதி மொபைல் போன்ல இருக்கா என்ன..

(சீரியஸ் இடுகைக்கு இப்டி பின்னூட்டம் போட்டா வீட்டுக்கு ஆட்டோ வருமா என்ன..)

सुREஷ் कुMAர் said...

//
ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
//
அய்யய்யோ.. பலதடவ நானும் இப்டி சார்ஜ் போட்டு விட்டுட்டு பேசிட்டு இருக்கேனே..

இனிமே கண்டிப்பா மாட்டேன்பா..

सुREஷ் कुMAர் said...

//
எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை.
//
உங்களின் அன்பான, பண்பான, நல்ல உள்ளத்தின் நல்லெண்ணத்துக்கு நன்றிகள் பல..

கண்டிப்பாக உசாராக இருப்பேன்கா..

sanjeevi said...

நண்பருக்கு வணக்கம்,
படத்தோட போட்ட பதிவு .....
மனதில் பதிந்துவிட்டது !!
மிக்க நன்றி!!

सुREஷ் कुMAர் said...

//
அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம்.
//
அன்புடன் நல்லது சொல்லும் உங்களை தவறாக நினைக்கமுடியுமா..

இந்த டிஸ்கி போட்டிருப்பதைதான் தவறாக நினைக்கிறோம்..

sanjeevi said...

சகோதரிக்கு வணக்கம்,
படத்தோட போட்ட பதிவு .....
மனதில் பதிந்துவிட்டது !!
மிக்க நன்றி!!

venkat said...

தெரிந்தே தப்பு செய்கிறோம்.
உபயோகமான தகவல் நன்றி

நசரேயன் said...

நீங்க வைத்த வெடி குண்டு மாதிரியே இருக்கு

R.Gopi said...

ர‌ம்யா

ந‌ல்ல‌ நோக்க‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒரு அற்புத‌மான‌ ப‌திவு... இது நிறைய‌ பெய‌ரை சென்ற‌டைய‌ வேண்டும்...

//அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது எண்ணங்களின் பரிமாற்றங்கள் அவ்வளவுதான்....//

அதைப்போல் நினைத்து சொல்ப‌வ‌ர்க‌ள், பேசுப‌வ‌ர்க‌ள் அறிவிலிக‌ள்...

வாழ்த்துக்க‌ள் ர‌ம்யா... மீண்டுமொருமுறை ந‌ல்ல‌ ப‌திவிற்காக‌...

பித்தன் said...

very good, i am also doing like this. hereafter i will stop this habit. thanks for you.

குடந்தை அன்புமணி said...

இதுபோல் சில தடவை நானும் செய்திருக்கிறேன். இனிமே... ப்டத்தைப் பார்த்த பிறகும் செய்வேனா என்ன...?

மிகவும் பய(முறுத்தும்)னுள்ள இடுகை. நன்றி தோழி...

தாரணி பிரியா said...

நல்ல பகிர்வு

நல்ல விழிப்புணர்வு

நன்றி

நாரத முனி said...

பதிவுக்கு மிக்க நன்றி.. .இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்றும், பாதிக்க பட்ட அந்த நபரின் பெயரும் தெரிவிக்க இயலுமா?

புதுகைத் தென்றல் said...

thanks

மாதேவி said...

பயனுள்ள பதிவு.

அனைவர்க்கும் வேண்டும் ஜாக்கிரதை.

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

எச்சரிக்கைக்கு நன்றி ரம்யா.
அவசியமான நல்ல பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

सुREஷ் कुMAர் said...

ரம்யா அக்கா..
150'ku அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

RAMYA said...

//

gayathri said...
hey rompa panulla pathivu pa

naanum oru sila nerangalil ippadi than seiven

ini seiya matten

nanri Ramya ungal pakirvukku
//

நன்றி காயத்திரி :)

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல நோக்கம்!
//

நன்றி ஜோதிண்ணா!

RAMYA said...

//
கதிர் - ஈரோடு said...
ஏற்கனவே அறிந்த செய்திதான் என்றாலும், இன்னும் இந்த முட்டாள் தனத்தை சில சமயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
//

தெரிந்திருந்தும் தொடர்வது தவறு இல்லையா கதிர்?

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
gayathri said...
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:(

enna ithu chinna pulla thanama azarthu

kanna thodachikanga//

நன்றி!

நான் தான் கடைக்கு முதல் ஆள் அப்படின்னு வந்தா, நீங்க முன்னாடி நிக்கிறியளே!

:)
//

அடுத்த முறை ட்ரை பண்ணுங்க!

RAMYA said...

//
sriram said...
http://urbanlegends.about.com/library/bl_cell_phone_electrocuted.htm

இதயும் கொஞ்சம் படியுங்களேன்.
எனக்கு தெரிந்த கொஞ்சூண்டு Electrical Engineering படி 110 அல்லது 220 வோல்ட் AC மின்சாரம் charger க்குள் சென்று வெளிவருவது 5 V DC current with 890 mA (என்னுடைய Nokia charger specification). இந்த அளவு மின்சாரத்தை நம் உடம்பு கண்டிப்பாகத் தாங்கும். 3 அல்லது 4 பேட்டரியை (1.5 V) series ல் connect செய்து + ல் ஒரு வயரையும் - ல் ஒரு வயரையும் வைத்து தொட்டுப்பாருங்கள், ஒன்றும் ஆகாது, அந்த வயர்களின் நுனியை நாக்கில் வைத்துப்பாருங்கள், கரண்டை உணர்வீர்கள்.
original charger உபயோகித்தால் பயம் இல்லை என்பது என் கருத்து.

வேணா ஒண்ணு செய்யலாம், charge செய்யும் போது Speaker phone இல் பேசலாம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

நன்றி Sriram!!

RAMYA said...

//
நிலாமதி said...
பயனுள்ள பதிவு உங்களுக்கு என் நன்றிகள். திருந்துபவர்கள் திருந்தட்டும்.
நட்புடன் நிலாமதி.
//

வாங்க நிலாமதி!!
கருத்துக்கு நன்றி நிலாமதி !!

RAMYA said...

//
ஜீவன் said...
நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பயனுள்ள பதிவு..!!
//

நன்றி ஜீவன்!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு
நல்ல விழிப்புணர்வு
நன்றி.
//

நன்றி ஜமால்!!

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுதான்.
//

ஆமாம் குடுகுடுப்பை!!
நன்றி குடுகுடுப்பை!!

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
அலட்சியப் படுத்தக் கூடாத விஷயம். இதன் ஆபத்து குறித்து ஒரு வருடம் முன்னர் sms fwd செய்யப் பட்டு வந்தது. இந்த சம்பவம் அதை உறுதி செய்திருப்பது ஆழ்ந்த அனுதாபத்துக்குரியது. எச்சரிக்கைக்கு நன்றி ரம்யா.
//

நிறைய பேர் இது போல் செய்கிறார்கள்.

தெரிந்தே தவறு செய்கிறார்கள் இல்லையா??

அது பொறுக்காமல்தான் இந்த இடுகை இட்டேன். நன்றி சகோதரி!

RAMYA said...

//
kanagu said...
ithu enaku therinthum innum ipadiye than seithu kondu irukkeren...

seekeram maara vendum..

seithi pakirvirku nandri akka :))
//

சீக்கிரம் மாற முயற்சிக்கவும் சகோ!

RAMYA said...

//
கோமதி அரசு said...
அவசியமான நல்ல பதிவு.

பகிர்வுக்கு நன்றி.
//

நன்றி கோமதி அரசு
கருத்துக்கும் நன்றி கோமதி அரசு!

RAMYA said...

//
அப்பாவி முரு said...
மின்னேற்றம் ஆகிக்கொண்டிருக்கும் மடிகணிணியை பயன்படுத்தலாமா? கூடாதா?
//

நண்பர் விஜய் சொன்ன பதில்தான் நானும் சொல்ல விளைவது முரு!

RAMYA said...

//
Vijay said...
மிகவும் பயனுள்ள பதிவு :-)

\\அப்பாவி முரு said...

மின்னேற்றம் ஆகிக்கொண்டிருக்கும் மடிகணிணியை பயன்படுத்தலாமா? கூடாதா?
\\

பயன்படுத்தலாம். ஆனால் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும். அது ஒரு தட்டையான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.
//

கருத்துக்கும், விளக்கத்துக்கும் நன்றி விஜய்!

RAMYA said...

//
வால்பையன் said...
தகவலுக்கு நன்றி
ஹைதை போயிட்டு வந்தாச்சா!?
//

நன்றி வாலு!

தைதை மட்டும் இல்லை அதற்கப்புறம்
பெங்களூர் கூட போயிட்டு வந்திட்டேன்!

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
பயம் தரும் பதிவு ரம்யா. செய்பவர்கள் திருந்தட்டும்.!
//

கண்டிப்பா ஆதி!

திருந்தியே ஆக வேண்டும்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி!

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
//
யக்கா..

சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எப்டிகா பேசுறது.. அப்படிஒரு வசதி மொபைல் போன்ல இருக்கா என்ன..

(சீரியஸ் இடுகைக்கு இப்டி பின்னூட்டம் போட்டா வீட்டுக்கு ஆட்டோ வருமா என்ன..)
//

தம்பி ஆட்டோ மட்டும் வராது
என்னோட கண்ணுக்கு என்னென்ன
தென்படுதோ அவ்வளவையும் அனுப்புவேன் :-)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
//
அய்யய்யோ.. பலதடவ நானும் இப்டி சார்ஜ் போட்டு விட்டுட்டு பேசிட்டு இருக்கேனே..

இனிமே கண்டிப்பா மாட்டேன்பா..
//

ஒழுங்கா சுவிச்சை ஆப் பண்ணிட்டு பேசணும்.

அதான் நல்ல பிள்ளைக்கு அழகு :)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை.
//
உங்களின் அன்பான, பண்பான, நல்ல உள்ளத்தின் நல்லெண்ணத்துக்கு நன்றிகள் பல..

கண்டிப்பாக உசாராக இருப்பேன்கா..
//

நன்றி சுரேஷ் உஷாராக இருப்பேன்னு சொன்னதிற்கு!

RAMYA said...

//
sanjeevi said...
சகோதரிக்கு வணக்கம்,
படத்தோட போட்ட பதிவு .....
மனதில் பதிந்துவிட்டது !!
மிக்க நன்றி!!
//

முதல் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி sanjeevi!

RAMYA said...

//
venkat said...
தெரிந்தே தப்பு செய்கிறோம்.
உபயோகமான தகவல் நன்றி
//

நன்றி வெங்கட்!
உங்கள் கருத்துக்கும் நன்றி வெங்கட்!

RAMYA said...

//
நசரேயன் said...
நீங்க வைத்த வெடி குண்டு மாதிரியே இருக்கு
//

நீங்க செஞ்சி கொடுத்தீங்களே அதையா சொல்றீங்க :)

RAMYA said...

//
R.Gopi said...
ர‌ம்யா

ந‌ல்ல‌ நோக்க‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒரு அற்புத‌மான‌ ப‌திவு... இது நிறைய‌ பெய‌ரை சென்ற‌டைய‌ வேண்டும்...

//அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது எண்ணங்களின் பரிமாற்றங்கள் அவ்வளவுதான்....//

அதைப்போல் நினைத்து சொல்ப‌வ‌ர்க‌ள், பேசுப‌வ‌ர்க‌ள் அறிவிலிக‌ள்...

வாழ்த்துக்க‌ள் ர‌ம்யா... மீண்டுமொருமுறை ந‌ல்ல‌ ப‌திவிற்காக‌...
//

நன்றி gopi!

கருத்துக்கும் உங்கள் புரிதலுக்கும் மிக்க நன்றி gopi!!

RAMYA said...

//
பித்தன் said...
very good, i am also doing like this. hereafter i will stop this habit. thanks for you.
//

நன்றி பித்தன் அவர்களே!
இனிமேல் அப்படி செய்ய மாட்டீங்க!

RAMYA said...

//
குடந்தை அன்புமணி said...
இதுபோல் சில தடவை நானும் செய்திருக்கிறேன். இனிமே... ப்டத்தைப் பார்த்த பிறகும் செய்வேனா என்ன...?

மிகவும் பய(முறுத்தும்)னுள்ள இடுகை. நன்றி தோழி...
//

நன்றி குடந்தை அன்புமணி!!

RAMYA said...

//
தாரணி பிரியா said...
நல்ல பகிர்வு

நல்ல விழிப்புணர்வு

நன்றி
//

நன்றி தாரணி பிரியா!!

RAMYA said...

//
நாரத முனி said...
பதிவுக்கு மிக்க நன்றி.. .இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்றும், பாதிக்க பட்ட அந்த நபரின் பெயரும் தெரிவிக்க இயலுமா?
//

முதல் வருகைக்கு மிக்க நன்றி நாரத முனி!

எனக்கு கிடைத்த செய்தி இது!

RAMYA said...

//
புதுகைத் தென்றல் said...
thanks
//

மிக்க நன்றி புதுகைத் தென்றல்!

RAMYA said...

//
மாதேவி said...
பயனுள்ள பதிவு.

அனைவர்க்கும் வேண்டும் ஜாக்கிரதை.
//

மிக்க நன்றி மாதேவி!!

RAMYA said...

//
வைகரைதென்றல் (vaigaraithenral ) said...
எச்சரிக்கைக்கு நன்றி ரம்யா.
அவசியமான நல்ல பதிவு.

பகிர்வுக்கு நன்றி.
//

நன்றி வைகரைதென்றல்!!

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
ரம்யா அக்கா..
150'ku அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
//

மிக்க நன்றி सुREஷ் कुMAர்!!

கண்ணகி said...

செய்யாதீங்க..செய்யாதீங்க....

அய்யோ....இன்மேல் செய்யமாட்டேன்.